Wednesday, April 15, 2020

தீபக் குப்தா உச்ச நீதிமன்ற நிதிபதியின் ஞானம்: கவிஞர் தணிகை

தீபக்  குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஞானம்: கவிஞர் தணிகை

Supreme Court judge Deepak Gupta says criticism of government ...
தீபக்  குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆமதாபாத் ஒரு நிகழ்வில் நீதிபதியாக இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனாக இந்தியனாக இருந்து இதை சொல்கிறேன் என இந்திய ராணுவத்தையும், நீதிமன்றங்களையும் விமர்சிப்பது தவறாகாது அது மேலும் அந்த அமைப்புகளை Dசெழுமைப்படுத்த உதவும் என்று வெளிப்படையாக திறம்பட பேசியுள்ளார்.

இந்த கொரொனா அலையில் இது போற்றப்பட மறந்த நிலை காணப்படுகிறது. உண்மையில் இது போன்ற கருத்துகள் வரவேற்கத் தக்கவை. அதுவும் ஒரு  தலைமை நீதிமன்ற நீதிபதியில் வழியாக வருவதை பாராட்டாமல் இருக்கவே கூடாது.

இந்தியா போன்ற மிகவும் பெரிய ஜனநாயக நாட்டில் நிர்வாகம், நீதி, பாதுகாப்பு பற்றி எல்லாம் இன்னும் மிகவும் தொலை தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எவராவது எழுதி விட்டாலோ, பேசிவிட்டாலோ உடனே அவர் தேசத் துரோகியாக கருதப்படுவதும்,அவர்
எதிரியாக பார்க்கப்படுவதும்  உடனே அவர் வேண்டாத தீண்டத் தகாத தீட்டாக கருதப்படுவதும் போன்ற நிகழ்வுகள்  நிறைய உண்டு.

அதை எல்லாம் தவறு என்றும் , பேச்சுரிமை, எழுத்துரிமை, அடிப்படை உரிமைகள் அனைவர்க்கும் உண்டு என்பது ஜனநாயக அமைப்புகளுக்கு அடங்கியது அது மேலும் ஜனநாயக அமைப்பை நல்லதாக்கும் என்றும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

எனக்கும் கூட அது போன்ற நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இராணுவம், நீதிமன்றம், நிர்வாகத் துறைகள், காவல் துறை போன்றவற்றை பொது சேவை செய்வார் நாட்டின் தன்னார்வலர்கள் கடந்து சென்றாக வேண்டிய கட்டாயம் உண்டு அவர்கள் உண்மையாக தங்களது சேவைப்பணியைச் செய்தால். அது சில நேரம் அரசின் அமைப்புகளுக்கு உதவிகரமாகவும் குளிர்ந்த மனநிலையையும் அளிக்கும் சில நேரங்களில் சில சம்பவங்களில் மாறுபட்ட நெருடல்களை எல்லாம் விளைக்கும்.  அதற்காக அந்த சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பாதிக்கப்படவும் கூடாது. அவர்கள் உரிமை, உடமை, குடும்பம், உயிர் ஆகியவையும் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நமது அரசில் அதன் துறைகளில் இருப்பதாகத் தெரியவிலை அதைப் புரிந்து நடந்து கொள்ளும் மக்களும் இல்லை.

நாட்டின் மிகவும் முக்கியமான அடிப்படை அமைப்புமுறைகளை நிறுவுவதில் ஏராளமான போலித்தனம் இலஞ்ச லாவண்யங்கள்,குற்றங்கள், புதைந்து கிடக்கிறது  இதை எல்லாம் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் புரிந்து உணர்ந்து தெரிந்து நடந்து கொள்ளும் போதுதான் சிறிது அளவாவது முன்னேற்றப் படிகளில் ஏற முடிந்து நிர்வாகம் மேம்படும். மக்களுக்கும் நல்லது மலரும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


ட்ரான்ஸ்:சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை

trance-movie-poster

2020 பிப்ரவரியில் வெளியான ட்ரான்ஸ் என்னும் மலையாளப் படம் நேற்றுப் பார்த்தேன். கொஞ்சம் பொறுமையிருந்தால் அனுபவித்துப் பார்க்கலாம். படம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து கொச்சி, மும்பை ஐரோப்பிய நாடான நெதர்லாந்து  வரை சென்று முடிகிறது. நமது கௌதம் வாசுதேவ மேனன் இயக்குனர் இதற்கு முக்கிய வில்லன் பாத்திரம்...

மிகவும் அருமையாக எப்படி யேசுவின் பேர் சொல்லி  சில இயக்கங்கள் போலித்தனமாக பெரும் வருவாய் ஈட்டுகின்றன எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. நான் கடவுள் படத்தில் எப்படி பிச்சைக்காரர்களைப் பின்னி ஒரு கூட்டம் மிகவும் கேவலமாக இயக்குகிறதோ இந்தப் படத்திலும் அதுதான் ஆனால் நாசூக்காக வெகு அழகாக பார்வைக்கு உறுத்தாத வகையில் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.

நஸ்ரியாவும் அவரது கணவர் பாசிலும் அருமையாக் வாழ்ந்துள்ளனர் படத்தில் முக்கியமாக. படம் 35 கோடியில் எடுக்கப் பட்டதாக சொல்லப்பட்டுள்ளது ஆனால் அதை விட பிரமிப்பூட்டும்படியாக நிறைய செலவில் எடுக்கப்பட்டதான தோற்றத்தைக் கொடுத்துள்ளது.  ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் நாயகன் தமது பங்களிப்பை செய்து இருக்கிறார். அவ்வளவு இயல்பாக எல்லாம் இருக்கிறது படம் என்று தெரியாமல் நான் மூழ்கிப் போய்விடுகிறோம்.
அனால் 170 நிமிடம் ஒதுக்கியாக வேண்டும். அதை இதை எல்லாம் செய்து கொண்டு பார்க்கக் கூடாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment