1. 30 % எம்.பி, எம்.எல்.ஏ சம்பளம் மட்டுமல்ல முழு சம்பளத்தையுமே தராமல் அரசு செய்ய வேண்டும்
அப்போதுதான் எவர் எல்லாம் சேவை செய்ய வந்தார் எனத் தெரியும். அவர்களில் தாம் 70%க்கும் மேற்பட்டார் கோடீஸ்வரர் என்பதுதான் தெரிந்து போன செய்தி என்று அரசே சொல்கிறதே அப்புறம் என்ன எதற்கு அவர்களுக்கு மாத ஊதியம் இன்ன பிற இதர படிகள்...அதே நேரம் உண்மையாகவே மக்கள் பணி சேவை செய்ய வந்திருக்கும் பொருளாதார மக்கள் பிரதிநிதிகளையும் கைவிட்டு விடவும் கூடாது.
2. தொகுதிக்கு செலவு செய்வதை, அல்லது அந்த தொகுதி நிதியை அந்தந்த தொகுதிக்கே செலவு செய்வதை தடை செய்யக் கூடாது. அல்லது அந்தந்த மாநில நிதிக்கே கொடுத்து விட வேண்டும்.
3. இவை அல்லாது தொகுதி மேம்பாட்டு நிதியையும் பிடித்துக் கொண்டு, சம்பளத்தையும் பிடித்தம் செய்தபடி ஒன்றிய அரசு தமது விருப்பப் படி அல்லது தனி மனித விருப்பப் படி இறைத்துச் செல்வது சரியானதல்ல...
4. எங்கு தீவிரமாக பிரச்சனை இருக்கிறதோ அங்கே அதிகமாகவும் மற்ற இடங்களுக்கு மிதமாகவும் கொடுப்பதை விட்டு விட்டு நிதியை ஒரு பக்கமாக இருந்து திரட்டி விட்டு பிரச்சனை தீவிரம் இல்லாத பகுதி மாநிலங்களுக்கு அள்ளி விடுவது ஒன்றிய அரசல்ல...ஓரவஞ்சனை அரசு...
5. சரியான தாய் மனப்பான்மை என்பது சாதாரண நாட்களில் ஏழ்மை மாநிலங்களுக்கு அதன் வளர்ச்சிக்கு அதிகமாகவும் வளர்ந்த மாநிலங்களுக்கு குறைவானதாகவும் இருக்கலாம். ஆனால் இப்படி அபாயகரமான சூழ்நிலை நிலவும்போது அதை எல்லாம் பார்க்காமல் எங்கு அதிக பாதிப்பு இருக்கிறதோ அங்கே தான் கவனம் அதிகம் செலுத்தப் பட வேண்டும்
இவை அல்லாமல் தான் தோன்றித்தனமாக நிதியை இறைப்பது வரும் காலத்துக்கு மிகவும் சோதனையை விளைவித்து நாட்டுக்கே பெரும் கேடுகளை விளைவிக்கும்....
ரஷியாவுக்கு கொடுக்கிறோம், ஸ்ரீ லங்காவுக்கு பரிசளிக்கிறோம் அமெரிக்காவுக்கு அளக்கிறோம் என்பதெல்லாம் ஒரு கட்டத்தில் உள் நாட்டில் உள்ளார்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:
Post a Comment