Sunday, April 26, 2020

தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தவிருப்பது உண்மையா? கவிஞர் தணிகை

கேள்விப் பட்டதெல்லாம் உண்மையாக இருந்தால்: கவிஞர் தணிகை
Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி ...


நேற்று நண்பர் ஆசியாநெட் செய்தியாக வந்திருந்த ஒரு செய்தியை எனக்கு கட்புலன்செவி சமூக ஊடகம் வழியே அனுப்பி இருந்தார்.
அதில் தமிழக முதல்வர் மதுக்கடைகளுக்கு நிரந்தரமாக குட் பை சொல்ல திட்டத்தில் இருப்பதாகவும், அதனால் மது ஆலைகளின் பெரும்பான்மையான முதலாளிமார்களாக இருக்கும் தி.மு.கவினர்க்கு செக் வைக்கப் போவதாகவும் அந்த வருவாய் இழப்புக்கு  தனியார் கல்லூரி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தமது வருவாயில் இருந்து 30 சதவீதம் அரசுக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் அவைகூட அதிகம் தி.மு.க சார்ந்தவரிடமே இருக்கிறது என்பதும் திட்டமிட்டிருப்பதாகவும் அப்படி செய்யும் கட்டத்தில் அந்த ஒரு கல் மூன்று மாங்காய் அடிப்பது வாயிலாக மக்கள் இடம் நல்ல பேர் வாங்கி தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சிகளுக்கு பொருளாதார அடி கொடுக்கப்படும் என்றும் அந்த செய்தி சாராம்சம் சொல்லி உள்ள நிலையில்

அதைக் கண்டு வெலவெலத்துப் போன தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்றோர் இந்த கொரானா அலை முடிந்ததும் முழுமையான மதுவிலக்கு கோரி இவர்களாகவே போராட்டம் ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்தி சொல்லி இருக்கிறது.

இப்படி எல்லாம் ஆகும்போது எங்களைப் போன்ற மதுவிலக்கப் போராளிகளுக்கு ஒரு நல்லது நடக்கிறது அது முழுமையான மதுவிலக்கு மாநிலத்தில் நடைபெறுவது மட்டுமே...

ஆனால் மத்திய அரசு பிரதமரிடம் பல மாநிலங்களில் இருந்து மதுக்கடைகளுக்கு திறக்கச் சொல்லி அனுமதி கோராலாம் என மற்ற மாநிலங்களிலிருந்து முயற்சிப்பதாகவும் செய்தி இருக்கும் போதூ இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விகளும் எழாமலும் இல்லை

மேலும் ஜோஸ்யக்காரர்கள் ஸ்டாலினா, ரஜினிகாந்தா முதல்வராக வாய்ப்பு என்று பார்க்கும் போது ரஜினிகாந்துக்கே வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியதாக இந்த மாற்றி மாற்றி ஒரு நிலை இல்லாமல் செய்தி தந்து வரும் ஊடகங்களை எந்த அளவு நம்பலாம் இந்த செய்திகள் உறுதியாகுமா என்பதெல்லாம் காலப் போக்கில் இருந்துதான் பார்க்க வேண்டும்...

இதெல்லாம் பிரதமரிடமும், உள் துறை மந்திரியிடமும் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கும் போல் இருக்கிறதே தமிழக முதல்வரின் அடுத்த அடி அப்படி இருந்தால் அது சுவாரஸ்யமான அரசியல் மூவ்...அரசியல் களத்தில். களம் ருசிகரமாகி விடும்...

இவர்கள் ரஜினிகாந்த், ஸ்டாலின் இருவருக்கும் தான் போட்டி என்றால் தமிழக தற்போதைய முதல்வர் அதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா அதற்கென்று அவருக்கென்று சில பணிகளையும் செய்வார்தானே...அதில் மத்திய அரசின் கலவையும் ரஜினிகாந்தும் இருப்பார்களா அல்லது மறுபடியும் இவரோ துணை முதல்வரோ வருவதற்கு முயற்சிப்பார்களா என்பதெல்லாம் ஆவலுடன் பார்க்கப் பட வேண்டிய விடயங்களாக இன்னும் ஓராண்டுக்குள் காணக் கிடைக்கும் காட்சிகளாக இருக்கலாம்.
Why did we choose the Srivilliputtur temple in Gopuram as an ...
எப்படிப் பார்த்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்க்கு வரும் காலம் மிகவும் கடுமையான போராட்டக் காலமாகவே இருக்கும் போலிருக்கிறது.
Vanakkam Hand Clipart
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment