எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பார்வைக்கு பல கோணங்கள் உண்டு. காவல் துறைக்கு மக்களை அடிக்க உரிமை இல்லை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியதே அவர்களின் பணி என சட்டத்தில் உள்ளதை பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் போன்றோர் கடந்த வாரத்தில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வலியுறுத்தி பேசுகின்றனர்.144 தடை உத்தரவை மீறுவார் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மறுபடியும் விட்டு விடுகிற நிலை தானே இப்போது வேறு என்ன செய்ய இயலும்...ஏப்ரல் 30 வரை விடுதலையாகும் நபர்களைக் கூட விடுதலை செய்யக் கூடாது என்ற நிலை இருப்பதாகவும் கேள்வி...
அப்படி இருக்கும் போது எப்போதோ ஊடகத்தில் வெளியிடப்பட்டு பழதாகிப் போன ஒரு காட்சி அதில் ஒரு இளைஞன் காவலர் ஒருவரை ஏன் அடித்தாய் என கன்னத்தில் ஓங்கி அடிக்கிறான். இதை எல்லாம் தொடர்ந்து பங்கிட்டு அந்த இளைஞரை பழி வாங்கும் வரை கொண்டு செல்ல ஊடகத்தை பயன்படுத்துங்கள் என்கிறார் ஒரு நண்பர் அல்ல பல நண்பர்கள் அடங்கிய குழுவினர். அந்த இளைஞர் பக்கம் அதிகம் எண்ணிக்கையினர் இருந்திருப்பர் எனவே நிலை அப்படி. அதுவே காவலர் எண்ணிக்கை சற்று கூடியிருந்தாலும் அந்தக் காவலர் தனியாக அல்லாமல் வேறு காவலர் உடன் இருந்திருந்தாலும் அந்த நிலை எப்படி இருந்திருக்கும் என அதையும் சிந்திக்கலாம் நண்பர்கள்...பொதுவாகவே நமது நாட்டில் எண்ணிக்கையினர் அதிகமாக இருக்கும் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது. எண்ணிக்கையினர் குறைவானால் நியாயம் அந்தப் பக்கம் இல்லாததாகி விடுகிறது.
அந்த சம்பவம் முன் என்ன, பின் என்ன எதற்காக அப்படி நடந்திருக்கும் நடந்தது என்பதெல்லாம் எவருக்கும் அதில் தெரியுமளவு விளக்கமில்லை....
சரி நிலை இப்படி இருக்க எது சரி எது தவறு எனத் தெரியாமலேயே பல எடுத்துக் காட்டுகள் இப்படித்தான் இருக்கும் படத்தின் ட்ரையிலர் டீசர் காட்சிகள் பிரமாதமாக இருந்து படம் எடுபடாமல் இருப்பது போல.எது நன்றாக இருக்கிறதோ இல்லையோ இந்த தொ(ல்)லைக்காட்சிகளின் தொடர்களிலிருந்து வீட்டம்மணிகளுக்கு விடுதலை மாறாக ஒரு அம்மணி எப்போதிந்த நிலை தீரும் சமையல் செய்து மாளவில்லை வேலை செய்து முடியவில்லை என அதற்கும் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் உறுதிப் படுத்தப் படாத 98% பதிவுகளை திரும்பி திரும்ப் பகிர்ந்துகொண்டு பாடாய்ப் படுத்துகிறீர். உண்மை எவை உண்மையற்றவை எவை என்பதற்கெல்லாம் ஒரு அளவுகோல் கொண்டு அதன் பின் எந்த பதிவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
நடிப்பது எந்த ரகம் நடப்பது எந்த உயரம் என்பதெல்லாம் சாதாரண மக்கள் இன்னும் உணரத் தலைப்படவே இல்லை எம்.ஜி.ஆர் பட்டுக் கோட்டையின் பாட்டு தான் எனது பதவி என்கிற நாற்காலியின் ஒரு கால் என்றதாக செய்தி உண்டு. நடிகரை விட்டு விட்டு ஆக்க பூர்வமான சிந்தனைச் செயல்பாட்டாளரை அடையாளம் கண்டு அந்த வழி நடக்க முயலுங்கள்...
ஊடகச் சுரண்டல் பற்றி 90 வாக்கில் இந்து என்.ராம், பன்னீர் செல்வம், ஞானி, ஆசியாநெட் சசிக்குமார் போன்றோருடன் சென்னை தோன்போஸ்கோ செய்தி நிறுவனத்தில் 3 நாள் பணிமனையில் பங்கு பெற்ற சுதந்திரமான பத்திரிகையாளர் என்ற முறையிலும், 11 சிறு தமிழ் நூல்களுக்கு சொந்தக்காரர் என்ற முறையிலும் மறைந்த மாமேதை அப்துல் கலாம் உடன் வார்த்தையாடியவன் என்ற முறையிலும் இந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவையில் பேசியவன் என்ற தகுதியிலும், இன்குலாப் என்னும் வழி மாறாத தடம் பிறழாத கவிஞர்களுடன் கவியரங்கில் பங்கேற்றவன் என்ற முறையிலும்
சோ ராமசாமி கூட பீப்பிள்ஸ் யூனியன் பார் சிவில் லிபர்ட்டீஸ் என்ற இயக்கம் நடத்தி நாடு தழுவிய அளவில் ஆங்கிலத்தில் செய்தி ஏடு வெளியிட்ட போது அதிலும் உறுப்பினராக இருந்த காலம் எல்லாம் உண்டு. அப்போது அதன் தலைவராக தார்க்குண்டே என்னும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி இருந்ததாக நினைவு... மேலும் பல்லாண்டுகளாக சில வலைப்பூக்களை உலகளாவிய அளவில் நடத்தி வரும் சுதந்திரமான எழுத்தாளர் என்ற முறையிலும் சிலவற்றை சுட்டிக் காட்டி எழுத தகுதியும் தரமும் இருப்பதாக நம்பியதால் மட்டுமே நான் குறிப்பிட்ட்டேன் இது போன்ற விடலைத் தனமான சிறு பிள்ளைத் தனமான பதிவுகளை எல்லாம் பகிர்ந்து ஊடகத்தை கேவலப்படுத்தாதீர் என்று...
காவல் துறையில் நானும் பல உச்ச நிலையில் இருந்த காவல் துறை தலைவர்களுடனும் தொடர்பில் இருந்த அனுபவங்கள் எல்லாம் இருப்பினும் அது நிலை குறைந்து கீழ் இறங்க இறங்க களப்பணியாற்றுவோர் சில நேரங்களில் உயர் நிலையில் இருப்பாரின் கட்டளைகளை நிறைவேற்றும் கைப்பாவகளாகவே செயல்பட நேரும். இராணுவத்தார் போல...
எது சரி எது தவறு என்ற கேள்வி எல்லாம் கேட்டு அவர்கள் துப்பாக்கி ஏந்த முடியாது குண்டாந்தடியும் ஏந்தி ஓங்கி அடிக்க முடியாது...சாலையில் செல்லும் சராசரிகளும் வாயில் குண்டு பாய்ந்த கல்லூரி மாணவியும் அவர்களுக்கு ஒன்றுதான். சொன்ன வேலையைச் செய்தோம் என...
இதில் எல்லாம் எது சரி எது தவறு என சிந்தித்துப் பார்க்க வேண்டுமானால் நண்பர்களே நீங்கள் அரசியல் சாசனம், அடிப்படைச் சட்டம் எல்லாம் சென்று பார்த்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்...அரசு மதுக்கடைகள் வேண்டாம் எனப் போராடிய கல்லூரி மாணவர்கள் கல் எடுத்து அடித்தார்கள் கடையை உண்மைதான் அவர்களை காவலரும் அடித்து துரத்தினார்கள் உண்மைதான்... அதில் எது சரி. இரண்டுமே சரிதானே. அதன் பின் ஏன் அது போல வன்முறை எல்லாம் நடக்கிறது யோசியுங்கள்...நள்ளிரவுக்கும் மேல் முதல்வர் தாமாகவே ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்து கவலைப்படதீங்க கண்ணு ஒரு தொலைபேசி எண் தருகிறேன் தொடர்பு கொள்ளுங்கள் பயம் வேண்டாம் முதல்வர் சொல்லியதாகச் சொல்லுங்கள் என உதவியதை எல்லாம் பெரிது படுத்தி செய்தி ஆக்குங்கள் தவறு இல்லை...செய்தி ஊடகம் நேர்மறை செய்திகளில் வளரும். எதிர்மறைச் செய்திகளில் தளரும்... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற இருந்த கூட்டம் அரசை வாழ்த்தியா இருக்கும் அதையும் நினைவில் கொள்ளுங்கள்...
மக்களுக்கு கெடுதல் தான் ஆனால் இதற்கு எதிராக நாங்கள் அரசுப் பணியில் இருப்பார் இது கொள்கை முடிவு என்பதால் இதற்கு எதிராக மதுவுக்கு எதிராக கையொப்பம் இட எப்படி அய்யா முடியும் என சிலை கடத்தல் வழக்கில் எல்லைகளைத் தொட்ட மதிப்பு மிகு பொன் மாணிக்க வேல் முதல் வீரப்பன் வழக்கை முடிவுக்கு கொணர்ந்த விஜய்குமார் வரை நிறைய காவல் துறைத் தலைவர்களை நானும் சந்தித்து பேசி உரையாடியது உண்டு.
அதெல்லாம் வேறு. என்னால் காவல் துறையில் பயன்பெற்ற காவலர் பதவி உயர்வு பெற்றோரும் உண்டு.மேலும் மலை வாழ் மக்களை தவறைச் செய்யத் தூண்டி அதற்காக மாமூல் கட்டியாக வேண்டும் என்று கண்டித்த காவலர்களும் திருத்தம் பெற்று பெற்றவற்றை திரும்பிக் கொடுத்த அனுபவங்களுக்கு நடுநாயகமாக விளங்கியதும் உண்டு. இது போல காவல் துறைக்கும் எனக்கும் நிறைய பகிர்ந்து கொள்ளும் நட்பான நடைமுறைகள் உண்டு... இது எனக்கு ஒன்றும் பிடிக்காத துறையும் அல்ல நண்பரே...
ஆனால் ஒரு காவலர் ஒரு இளைஞரிடம் அடி வாங்குவதை நீங்கள் அதுவும் இந்த நேரத்தில் பரப்புவதால் என்ன சாதித்து விட முடியும் என நினைக்கிறீர்...?
சில செய்திகள் வெளி வருவதை விட வராமல் விட்டு விடுவது நல்ல விளைவுகளைத் தரும்...
உங்களுக்கு நாட்டு நடப்பு என்ன எப்படி எல்லாம் இருந்தால் சிறந்த விளைவுகள் ஏற்படும் என்பதை எல்லாம் நாட்டின் மிக உச்ச நிலையில் இருந்த
நீங்கள் கேரள கவர்னராகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் முதல் இப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும் ரஞ்சன் கோகாய் வரை நடந்த நாட்டு நடப்புகளை எல்லாம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தாம் ஒருக்கட்டத்தில் குடியரசுத் தலைவரையே பதவிப் பிரமாணம் செய்ய வைப்பவர்கள்...
எழுத இவ்வளவே முடியும்
நேரில் விவாதிக்கும் போது இன்னும் நிறைய பேசி விளக்க முடியும் என நம்புகிறேன்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:
Post a Comment