Tuesday, April 14, 2020

அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை


25+ Best Tamil New Year Wishes And Memes - Tamil Memes

தமிழக அரசின் தலைமை அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லி அமல் படுத்தி இருந்தது இன்னும் மாறாதிருப்பதால் இந்த தமிழ்ப் புத்தாண்டு என எடுத்துக் கொண்டு இந்த தமிழ்ப் புத்தாண்டு மிகவும் அரிய தமிழ்ப் புத்தாண்டாக இருப்பதால் அனைவர்க்கும் வாழ்த்தை தெரிவிப்பதில் மகிழ்வடைய வேண்டியிருக்கிறது அது எப்போது எப்படியாக இருந்தாலும் உயிரோடு இருந்து உயிரோடு இருக்கும் அனைவர்க்கும் இனியாவது உயிர் பயம் போகட்டும் வரும் நாளெல்லாம் நன்மையே விளையட்டும் என்ற நோக்கத்தில் வாழ்த்தை பரிமாறிக் கொள்கிறோம்.

வாழ்க்கை என்றாலே நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லாமே கலந்துதான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் ஏன் இது போன்ற விழாக்களில் வாழ்த்தை பரிமாறிக் கொள்ள வேண்டி இருக்கிறது என்றால் ஒரு ஆறுதல் இனியேனும் நல்லவை நடக்காதா நடக்கட்டுமே என்ற ஒரு நம்பிக்கை பிறக்கட்டுமே என்ற ஆதங்கத்தில் தான். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்களே என்பது போல. தை மாதமே சூரியன் சற்று பூமியின் பார்வையில் வடக்கு நகர்ந்து உத்திராயணம் என உதிப்பது அறுவடை நாள் எனச் சொல்வது , ஆடி முடிந்து ஆவணி வாக்கில் தட்சிணாயணம் என தெற்கு நோக்கி நகர்வது 12 மாதங்களில் அந்த 6 மாதம் அப்படி என்றும் இந்த ஆறு மாதம் இப்படி என்றும் கணக்கு உண்டு.
Tirukkuṛaḷ - Wikiwand
தை முதல் நாள் தாம் தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாற்றியும் வைத்துப் பார்த்தாகிவிட்டது என்றாலும் அவரை முதல்வராக கடைசியில் விடவில்லை இந்த மக்கள்  எங்கே மறுபடியும் வந்தால் தமது முதல் கையெழுத்தை மதுவிலக்குக்காக போட்டு மதுக்கடைகளை இல்லாமல் செய்துவிடுவாரோ என்று இவர்தான் மதுக்கடைகள் வரக் காரணமே என்ற அரசியல் வார்த்தைகள் சொல்லப்பட்டாலும் இறப்பு வரும் அது மிக அருகே வரும் என்று தெரிந்தவுடன் மனிதர்கள் மாறி தங்களால் முடிந்ததை செய்து விட்டு நல்லதை செய்து நல்ல பேர் எடுத்து மறைய வேண்டும் என்பதெல்லாம் இயல்புதானே...
krishna veni (krishna1223veni) on Pinterest
எது எப்படியோ இந்த ஆண்டை சார்வரி வருடப் பிறப்பு என தமிழ்ப் பஞ்சாங்கம் சொல்கிறது...பஞ்சாங்கத்தில் சொல்லியபடிதான் இருக்கிறது...வைரஸ் காய்ச்சல் இருக்கும் என்றெல்லாம் இருந்ததை ஏற்கெனவே முன்பே குறிப்பிடப்பட்டிருந்தது என்ற செய்தி எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
File:MarinaBeach Kambar statue (close-up) 2Feb2013.jpg - Wikimedia ...
இது சார்வரி வருடம்...60 வருடத்தை திருப்பி திருப்பி இவர்கள் சுழற்றுவார்கள்... அதில் மறுபடியும் 34 ஆவது ஆண்டாக சார்வரி வருகிறது ஆங்கில கணக்குக்கு 2020 ‍ 2021,கலியுகாதி 5122, திருவள்ளுவராண்டு : 2051 2052 திருவள்ளுவராண்டையே நமது தமிழ்ப் புத்தாண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தமிழ் சொல்வோரும் உண்டு...

சார்வரி ஆண்டுப் பலன்:
சார்வரி யாண்ட தனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயாற் றிரிவார்கள் மாரியில்லை
பூமிவிளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவாரியம்பு

சார்வரி ஆண்டில் எல்லா சாதி உயிர்களுமே
குளிர் சார்ந்த நோயற் திரிவார்கள் மழையில்லை
பூமி விளைச்சல் இல்லாமல் மனிதர்களும் மற்ற உயிர்களும்
இன்பமின்றி பாதுகாப்பின்றி சாவார்கள் என்பதைச் சொல்லு
Tamil literature - Wikipedia
இது தான் நமது தமிழ் அறிவுக்கு எட்டிய வகையில் அந்தப் பாடலுக்கான தெளிவுரையாக இருக்கிறது. பஞ்சாங்கத்தில் சங்கராந்தி புலி மேல் அவதரித்துள்ளதாகவும்  27 நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் ஆயில்யம் வரை 9 நட்சத்திரத்துக்கு உத்தம பலன்களும், அடுத்த மகம் முதல் கேட்டை வரை 9 நட்சத்திரத்துக்கு மத்திமமான பலனும் கடைசி 9 நட்சத்திரத்துக்கு மூலம் முதல் ரேவதி வரை அசுப பலன்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது...

Sampath Speaking" - the thoughts of an Insurer from ...
No.NameName (English)Gregorian YearNo.NameName (English)Gregorian Year
01.பிரபவPrabhava1987–198831.ஹேவிளம்பிHevilambi2017–2018
02.விபவVibhava1988–198932.விளம்பிVilambi2018–2019
03.சுக்லSukla1989–199033.விகாரிVikari2019–2020
04.பிரமோதூதPramodoota1990–1991
34.சார்வரிSarvari2020–2021
05.பிரசோற்பத்திPrachorpaththi1991–199235.பிலவPlava2021–2022
06.ஆங்கீரசAangirasa1992–199336.சுபகிருதுSubakrith2022–2023
07.ஸ்ரீமுகSrimukha1993–199437.சோபகிருதுSobakrith2023–2024
08.பவBhava1994–199538.குரோதிKrodhi2024–2025
09.யுவYuva1995–199639.விசுவாசுவVisuvaasuva2025–2026
10.தாதுDhaatu1996–199740.பரபாவParabhaava2026–2027
11.ஈஸ்வரEesvara1997–199841.பிலவங்கPlavanga2027–2028
12.வெகுதானியVehudhanya1998–199942.கீலகKeelaka2028–2029
13.பிரமாதிPramathi1999–200043.சௌமியSaumya2029–2030
14.விக்கிரமVikrama2000–200144.சாதாரணSadharana2030–2031
15.விஷுVishu2001–200245.விரோதகிருதுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுChitrabaanu2002–200346.பரிதாபிParidhaabi2032–2033
17.சுபானுSubhaanu2003–200447.பிரமாதீசPramaadhisa2033–2034
18.தாரணDhaarana2004–200548.ஆனந்தAanandha2034–2035
19.பார்த்திபPaarthiba2005–200649.ராட்சசRakshasa2035–2036
20.வியViya2006–200750.நளNala2036–2037
21.சர்வசித்துSarvajith2007–200851.பிங்களPingala2037–2038
22.சர்வதாரிSarvadhari2008–200952.காளயுக்திKalayukthi2038–2039
23.விரோதிVirodhi2009–201053.சித்தார்த்திSiddharthi2039–2040
24.விக்ருதிVikruthi2010–201154.ரௌத்திரிRaudhri2040–2041
25.கரKara2011–201255.துன்மதிDunmathi2041–2042
26.நந்தனNandhana2012–201356.துந்துபிDhundubhi2042–2043
27.விஜயVijaya2013–201457.ருத்ரோத்காரிRudhrodhgaari2043–2044
28.ஜயJaya2014–201558.ரக்தாட்சிRaktakshi2044–2045
29.மன்மதManmatha2015–201659.குரோதனKrodhana2045–2046
30.துன்முகிDhunmuki2016–201760.அட்சயAkshaya2046–2047
சித்திரைக் கனி என்று கனி வர்க்கங்களை எடுத்து வைத்து அந்த ஆண்டை வரவேற்கும் பழக்கமும் உண்டு. அந்த மேசை மீது திருவள்ளுவர், கம்பர்,இளங்கோ, அவ்வையார், பாரதி போன்ற மாபெரும் தமிழ்ப் புலவர்களின் படங்களை எடுத்து வைத்துப் பார்த்ததும் இந்த ஆண்டின் எங்கள் வீட்டுச் சிறப்பாக கொள்கிறோம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment