Monday, April 20, 2020

நெஞ்சு பொறுக்குதிலையே: கவிஞர் தணிகை

நெஞ்சு பொறுக்குதிலையே: கவிஞர் தணிகை

Study guide: The communist manifesto | Liberation School

இன்னும்கூடா ஆயிலாவே இருக்கிறீர்களேயடா என்று அன்றைய மொழியில் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். ஆனால் பயணம் வெகு தூரம் வந்த பின்னே அப்படிக் கேட்பதற்கெல்லாம் நமக்கு மனமில்லை. ஏன் எனில் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கிறதே....அந்தக் கல்லூரி வாழ்வில் எனக்கு கிடைத்த கசப்பிலும் ஆறாத இரணத்திலும் நல்ல துணை என்றால் அது செம்பண்ணன், விடியல் குகன்,அழகிரி,பாலு,ஆறுச்சாமி, என்னை அழகிரி  மகன் மணத்துக்கு வந்தபோது தனது வீட்டில் இடமளித்த அன்புச் சகோதரன் வேலுச்சாமி,இளங்கோவன் வணிகவியல்;மற்றும் எந்திரவியல் இளங்கோவன், ஞானசேகரன், நாச்சிமுத்து,நாராயணமூர்த்தி, திருமூர்த்தி,கிரிதரன்,லகர், போன்ற பெயர் குறிப்பிடாமல் விடுபட்டுள்ள‌ பலருடையது.

 நாகச் சந்திரன் நல்ல பண்பட்ட மனிதராய் தாம் படித்ததை அனுபவிக்க அனைவர்க்கும் தந்து வருகிறார் நல்ல முன்னேற்றம். திருச்செங்கோடு சேகர் தம்பதியர் என்னை உபசரித்த உணவின் மணம் இன்னும் என் கையில் இருக்கிறது...அப்போது நாமக்கல் ஒரு விடியல்   கூட்டத்துக்கு போகும் வழியில் அவர் என்னை அழைத்துக் கொண்டார்.
என்னை தனது சகோதர நண்பராக நினைத்த எனது சீனியர் மணிமாறன், ஜூனியர் ரமேஷ் இப்படி நிறைய நபர்களை சொல்லிக் கொண்டே போக முடியும்
karlmarx hashtag on Twitter
நான் தினைத்துணையாம் நன்றி  செயினும் பனைத் துணையாய்க் கொள்வார் பயன் தெரிவார் என்ற குறளுக்கேற்ப அன்று அழகிரியின் மணம் முடித்து காலையில் தனியாகப் புறப்பட்ட எனக்கு ராமலிங்கம் சற்று தூரம் காரில் கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் விட்டது கூட இன்னும் நினைவில் இருக்கிறது . யாரது பாலு அந்த லெஜிபில், என்னை தெரிந்து கொள்ள நினைத்தார் ஆனால் அது யாரென்று எனக்குத்  தெரியவில்லை... எல்லாம் எனக்கு காமராசரையும் அவரது வார்த்தைகளையும் நினைவூட்டி இருக்கிறார்கள்.

  அந்தக் கல்வி நிறுவனத்துக்கும் எனக்குமான தொடர்பை எனது " நேசமுடன் ஒரு நினைவதுவாகி " என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன் இப்போதல்ல அப்போதே அந்த நூல் வெளியான ஆண்டு:2009. அதில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன் நான் அந்த ஒலிபெருக்கி யுனிட்டை பாலமலை என்ற மழைவாழ் மக்களின் தேவைக்காக ஒரு போராட்டக் களத்தில் 1981ல் இருந்து வைத்திருந்ததை 1986ல் இளைஞர்களுக்கு தானமாக வழங்கி அதை அந்த ஊரின் ஒரு ஊராட்சித் துணைத் தலைவர் ஊராட்சி ஒலிபரப்பின் நிகழ்வை தனது வீட்டுக்கு என தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்ததை மாற்றி ஊருக்கே பயன்படுத்தியதை. (Note Page no: 108,109.)

மேலும் எனது  அந்த செயலுக்கான கல்லூரியின் பார்வையிலான நீதியை தண்டனையை எங்களுக்கு கல்லூரி வழங்கி அந்தக் கடைசி மூன்று மாதம் வீட்டில் இருக்க செய்து நேரடியாக வந்து தேர்வை எழுதச் சொல்லியது போன்ற, தந்தையை அழைத்து வந்து கல்லூரியில் சந்தித்த போது நடத்திய விதம், ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றி விட்டது. அது மட்டுமல்ல ரூபாய் ஆயிரம் அபராதத்தையும் கட்டி இருந்தது எங்கள் குடும்பம். அப்போதும் நாங்கள் எங்கள் சுயநலத்துக்காக இயங்க வில்லை இப்போதும் அது போன்று எங்கள் சுயநலம் என்ற ஒரேநோக்கத்துக்காக இயங்குவதில்லை.

எப்போதும்...அப்படித்தான்...ஆனால் அதற்காக நாங்கள் ஒருபோதும் எவருக்கும் சளைத்த பிற்போக்கான வாழ்வை வாழவில்லை சொல்லப்  போனால் இந்த நாட்டின் பிற்போக்கில் கடைத்தட்டில் அடித்தள மக்களுக்கு என்ன எம்மால் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பிணி பல பெற்று இயலாமையின் பிடியில் இன்னும் இருந்த போதும் எங்களது இயக்கம் என்னும் ஓய்ந்தபாடில்லை நின்று விட்டது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவில் சென்று கொண்டுதான் இருக்கிறது. ஒரு அடையாளம் இருக்கிறது.

மேலும் மேலும் பேசிக்கொண்டே இருந்தால் அந்தளவு தரம் நாமும் தாழ்ந்தவராகவே ஆகிவிடுவோம் என ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டேன்...நான் ஒருவர் தெரிவித்த செய்திக்கு பலர் அங்கிருந்து விதண்டாவாதம் செய்ய ஆரம்பித்தனர்....
Valluvar kottam- Thiruvalluvar | Erasmus blog Chennai, India
நான் இலக்கியம் படித்தது, வள்ளுவம் படித்தது, காந்தியம் படித்தது, கம்யூனிசம் படித்தது, ஜி.கி(75 நூல்களில் பெரும்பாலும் படித்து முடிந்தது இந்த எனது நாட்கள் பெரும்பாலும் அதற்கு நேரம் கிடைக்க வில்லையே என்றேங்கிக் கிடந்தது இப்போது படிக்க வாய்த்தது) படித்து வருவது நாடெங்கும் அலைந்து திரிந்து செய்த சேவை இப்போதும் செய்து கொண்டிருப்பது  எல்லாம் இவர்களுடன் சேர்ந்து கேலிக்கிடமாகி விடும் போலிருந்தது...

ஒரு பொதுக் கருப்பொருள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தனிப்பட்ட மனிதர்களை விமர்சிப்பதும் தாம் தாம் ஏதோ எல்லாவற்றுக்கும் அத்தாரிட்டி போல கமென்ட் அடிப்பதும் எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது என்பது அனைவராலும் உணரப்பட வேண்டியது. அரைக் கால் சட்டை போட்டுக் கொண்டு  பொது இடங்களில் புழங்குவதும் மது நுகர்வோராய் இருப்போரையும் எனது தோழமை என்று ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதே இல்லை...

அதில் ஒரு மனிதர் எவ்வளவு தூற்ற வேண்டுமோ அது போன்ற வார்த்தைகளால் மஞ்சள் பத்திரிகை, பாகிஸ்தான் தீவிரவாத தொடர்பாளர் அந்த தலைவரும், அந்த பத்திரிகையாளரும் இப்படித்தான் அப்படித்தான் என நான் என்னக் குறிப்பிட்டாலும் உச்ச பட்ச வார்த்தைகளாலே தகுதியில்லா வார்த்தைகளால் வார்த்தையாடிக் கொண்டிருந்தார் அவரது தகுதி அவ்வளவுதான் என்பதாக....

எனக்குத் தெரிந்த முறை என்னவெனில் எதை ஒன்றைப் பற்றியும் சொல்லப் புகுமுன் அதை நன்கு அறிந்திருக்க வேண்டும் அல்லது அதை அறிந்து கொள்ள முயற்சியாவது செய்திருக்க வேண்டும்....அப்படிப் பார்த்தால் கம்யூனிசம் என்றால் என்ன என படித்திருந்தால் அதைப் பற்றிய பரிமாணம் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தால் அதைப்பற்றி எல்லாம் கேவலமாக பேசவே வழி இல்லை...
Abraham Lincoln - Quotes, Facts & Assassination - Biography
அனுபவங்கள் செறிவானவை அவை ஒவ்வொருவர்க்கும் ஒருவாறு இருக்கும் என்பது இயல்புதான் ஆனால் வார்த்தைகளால் எகிறி அடித்து தொடர்பில்லாமல் கெக்கலி கொட்டி வரும் இயல்பு மாற்றிக் கொள்ள வேண்டியது.இல்லையேல் காலம் மாற்றும்...

சொந்தச் சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் என வரும் பாரதி பாடல் இங்கு எனக்கு ஆறுதல் தருகிறது

1. நெஞ்சிலுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே
   வாய்ச் சொல்லில் வீரரடி...
2. கூட்டத்திற் கூடி நின்று கூவிப்  பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே
   நாளில் மறப்பாரடி...
3. சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாகுமோ? கிளியே
   அலிகளுக் கின்பமுண்டோ?
4. கண்களிரண்டிருந்தும் காணுந் திறமையற்ற பெண்களின் கூட்டமடி...கிளியே
   பேசிப் பயனென்னடீ..
5. யந்திரச் சாலையென்பர் எங்கள் துணிகளென்பர் மந்திரத்தாலேயெங்கும் ..கிளியே
   மாங்கனி வீழ்வதுண்டோ?
6. உப்பென்றும் சீனியென்றும் உள் நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி ...கிளியே
   செய்வதறியாரடீ...
7. தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் நாவினாற் சொல்வதல்லால்...கிளியே
   நம்புதலற்றாரடீ..
8. மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைக்‍.. கிளியே
   பேணியிருந்தாரடீ.
9. தேவி கோயிலிற்சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென்றெண்ணிக் ...கிளியே
   அஞ்சிக் கிடந்தாரடீ.
10. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடீ...கிளியே
    ஊமைச் சனங்களடீ.
11. ஊக்கமும் உள்வலியும் உன்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும்...கிளியே
    வாழத் தகுதியுண்டோ?
12. மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க்குலத்தினில்...கிளியே
    இருக்க நிலைமையுண்டோ?
13. சிந்தையிற் கள் விரும்பிச் சிவ சிவ வென்பது போல் வந்தே மாதரமென்பார்...கிளியே
    மனதிலதனைக் கொள்ளார்...
14. பழமை பழமையென்று பாலனை போலன்றிப் பழமை இருந்த நிலை..கிளியே
    பாமர ரேதறிவார்?
15. நாட்டிலவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத் தேட்டில் விருப்புங்கொண்டே ...கிளியே
    சிறுமையடைவாரடீ.
16. சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை யிரங்காரடீ...கிளியே
     செம்மை மறந்தாரடீ...
17. பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் ...கிளியே
    சோம்பிக் கிடப்பாரடீ.
18. தாயை கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் வாயைத் திறந்து சும்மா...கிளியே
    வந்தேமாதரமென்பார்...

குறைகளை சொல்வதென்பது சரி செய்து கொள்வதற்காகத்தான்...கோவையின் பாரளுமன்ற உறுப்பினர், மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் போன்றோர் எல்லாம் கம்யூனிஸ்ட்களே அவர்கள் எல்லாம் கூட இந்த தருணத்தில் எப்படி ஒரு இளைஞரை கேடு கெட்ட எண்ணத்தால் படாத பாடு படுத்தி இரயில் முன் பாய்ந்து இறக்க வைத்தார்கள் என்பதை எழுதியதை எல்லாம் மறந்து விட முடியாது, நெல்லூர் மருத்துவருக்கு நேர்ந்த அவதி அவரது மரணத்தையும் அவமானப்படுத்திய விதம் எல்லாம் விழிப்புணர்வில்லா மாக்கள் கூட்டத்தால் நிகழ்ந்த அவஸ்தை எல்லாம் வெளிப்படுத்தியவை ஊடகம் தான்.

ஊடகச் சுரண்டல் எல்லாம் இருக்கிறதுதான் எல்லாத் துறைகளிலும் இருப்பது போல. ஆனால் அதற்காக ஊடகமே எல்லாமே ஒரே விதம் தான் என்று கொள்வதும் சொல்வதும் அது பற்றி  வந்திருந்த செய்தி பற்றி குறிப்பிடவே கூடாது என்பதெல்லாம் எந்த முறைமைகளில் வருவது...அப்படிப் பட்ட சர்வாதிகாரத் தனம் எவருக்கும் கிடையாதே...என்னை எல்லாம் தடைப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்ல அப்படி என்னதான் நீங்கள் செய்துவிட்டீர்...நீங்கள் எல்லாம் சொன்னால் என் போன்றோர் எல்லாம் கேட்டே ஆக வேண்டும் என நினைக்கிறீர்களா? ...நண்பர்களே...தோழர்களே....சரியான நபர் இல்லை ...இல்லை எனில் நேரடியாக ஒரு வாதப் பிரதிவாத தளத்திற்கே கூட ஏற்பாடு செய்யலாம்...ஆனால் அந்த அளவு நாகரீகமாக நீங்கள் வார்த்தையாடவில்லை என்பதுதான் இங்கு கருவே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தப் பதிவை
விடியல் குகன்
செம்பண்ணன்
போன்ற உண்மையான நட்புக்கு சமர்ப்பிக்கிறேன்... அவர்களுக்கு எழுதியதாகவே கொள்கிறேன்..
மறுபடியும் சொல்கிறேன்:
400 QUOTES BY KARL MARX [PAGE - 6] | A-Z Quotes

கம்யூனிசம் என்பது பற்றி தெரியவில்லை எனில் கார்ல் மார்க்ஸ் மூலதனம் அல்லது டாஸ் கேப்பிட்டல் படிக்கவும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின், வாழ்க்கை வரலாறு பயிலவும் காந்தியைப் பற்றி முழுதும் தெரியவேண்டும் எனில் 60000 முதல் 80000 பக்கங்களும் படிக்க முயற்சிக்கவும் ஜெ.கெ படிக்க வேண்டுமெனில் 75 வெளியீடுகள் இப்படி பலவற்றையும் படித்தறிந்து விட்டு ஒரே வார்த்தையில் கமென்ட் செய்யலாம்...
GandhiJi Father of Nation - Posts | Facebook
சுருக்கமாகச் சொல்லுங்கள் கம்யூனிஸம் என்றால் என்ன அது பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் என்ன சொல்லலாம் என்று கார்ல் மார்க்ஸ் இடம் கேட்டபோது: தனியார் சொத்துரிமையை ஒழிப்பது என்றே சொன்னார்...
 அது எதற்கு அப்படிச் சொல்லப்பட்டது எனில் அப்போதுதான் உலகின் அனைத்து மாந்தர்க்கும் உணவும் குடிநீரும் குறைந்த பட்சம் கிடைக்கும் என்பதற்காகத்தான்...





 




No comments:

Post a Comment