தந்தை 65 வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். எனது வயது அப்போது சற்றேறக் குறைய 24. அவர் விட்டுச் சென்ற வீட்டுப் பொறுப்புகள் தாமாக என்னிடம் வந்தன. அவரது இறப்புச் சான்றிதழுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகினேன். ஏன் இவ்வளவு அவசரப் படுகிறீர் என்றார்கள்...நான் ஏதும் பதில் பேசவில்லை
ஏன் எனில் உரிய முறையில் இறப்பை பதிவு செய்து அவர்கள் சொன்னபடி 15 நாள் கழித்து 16 வது நாளில் தான் சென்றிருந்தேன். எனக்கு எதையுமே சரியாக துல்லியமாக செய்வது பிடிக்கும்.
நான் சொல்வது நடந்த ஆண்டு 1986... December அதன் பிறகு தான் நான் சொல்லும் கதை ஆரம்பிக்கிறது.
உரிய ஆவணங்களை எல்லாம் இணைத்து ஊராட்சி மன்றத்திடம் விண்ணப்பித்தேன் எனது தந்தை பேரில் இருந்த வீட்டை சொத்து வரியை அல்லது வீட்டு வரியை தாய் பேருக்கு மாற்றிக் கொடுங்கள் எனக் கோரினேன் உரிய இணைப்புகளில் எல்லா அரசு ஆவணங்களும் இணைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினேன்.
நிர்வாக அலுவலர் வாங்கி வைத்துக் கொண்டார். சென்று பிறகு வாருங்கள் என்றார். அதன் பின் சென்று பார்த்தேன் அவரைப் பார்க்கும் போதெல்லாம் கேட்டேன். நல்விளைவு ஏதும் ஏற்படவே இல்லை. காலம் சுமார் ஒன்னரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கும். நிலை அப்படியே இருக்க இனி வீட்டு வரி, குடி நீர் கட்டணம் கட்டமாட்டேன் என ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
உடனே கடுமையான தகராறு. அலுவலகத்திலிருந்து பலரும் வந்து எங்கள் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என பயமுறுத்த ஆரம்பித்தனர். உடனே மௌனமாக நான் உரிய வரிகளை கட்டணத்தை செலுத்தி விட்டேன்.
அதன் பின் நிலையை விளக்கி எனது தாய் எழுதியதாக அப்போதைய முதல்வர் ஜெ அவர்களுக்கு மாநில முதல்வர் மக்கள் குறை தீர்க்கும் பிரிவுக்கு விளக்கமாக அப்போது ஆங்கிலத்தில் தான் எழுதினேன். தாயின் கை இடது கைப் பெரு விரல் குறியீட்டுடன்.
கொஞ்ச காலம் கழித்து பதில் வந்தது. அதன் பின் கேள்விப் பட்டேன் அந்த நிர்வாக அலுவலர் அவருடைய ஓய்வு பெறவேண்டிய கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப் பட்டார் என...அப்போதெல்லாம் அப்படி ஒரு வழக்கம் இருந்தது இப்போது அந்த வழக்கம் இருக்கிறதா என்பது குறித்து திட்டவட்டமாக எனக்குத் தெரியவில்லை
அதன் பின் அரசின் பதிலுடன் அலுவலகம் சென்றேன் அங்கே ஒரு புதிய நிர்வாக அலுவலர் இருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன் அதெல்லாம் ஏதுமே பேச வேண்டாம் சார், ஒன்றும் கேட்க வேண்டாம் உரிய கட்டணத்தை செலுத்துங்கள் எல்லாம் மாற்றித் தருகிறோம் என வீட்டு வரி, குடிநீர்க் கட்ட்ண மாறுதல் எல்லாம் செய்து எனது தாயின் பேருக்கு இரசீதளித்து உரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டார்கள்....அங்கே எனது வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்ற ஒரு நபரையும் அந்த அலுவலகத்தில் காணோம் அனைவருமே வேறு ஊருக்கு மாறுதல் செய்யப் பட்டிருந்ததாகவும் செய்தி வழி கேள்விப்பட்டேன். என்னிடம் அழைத்து இத்தனைக்கும் விசாரணை என்ற பேரில் அரசு எதையுமே கேட்டதாக எனது நினைவில் இல்லை.
அதில் முக்கியமாக அந்த குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என மிரட்டிய அந்த ஒரு ஈசன் பெயருடைய நபர் என்னை அவரது வாழ்நாளிலும் அவர் ஓய்வு பெறும் வரையிலும் என்னைக் காணும்போதெல்லாம் மறக்காமல் உரிய மரியாதை அளித்து வந்தார்.அவர் இத்தனைக்கும் அந்த ஊராட்சி மன்றம் அலுவலகம் அமைந்திருந்த ஊர்க்காரர்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
எனக்கு அப்போது திருமணமாகவில்லை. நானும் தாயும் மட்டுமே எங்களது பழைய ஓட்டு வீட்டில் இருந்தோம் இன்னும் அதில் தான் இருக்கிறேன் அது வேறு... நான் தாய்க்கு அவ்வளவு வேலைப்பளு கொடுக்கக் கூடாது என துணி துவைக்கும் எந்திரம், குளிரூட்டும் எந்திரம், பாத்திரம் கழுவும் எந்திரம், காய்கறி தேங்காய் போன்றவை சுலபமாக நறுக்க எட்டு வேலையை செய்யும் ஒரே எந்திரம் இப்படி ஓரளவு எந்திரமயமாக்கி தாயின் வேலைப் பளுவைக் குறைக்கத் தீர்மானித்திருந்தேன். ஏன் எனில் ஏற்கெனவே அவர்கள் பெரிய குடும்பத்தில் நொந்து போன வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதாலும் அவரை அப்போதே முதுமை எட்டி விட்டதாலும்.
அப்போது த.நா.மி.வ வின் மின்சாரம் போதுமான அளவு எங்களுக்கும் எங்கள் சுற்றுப் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டில் உள்ள குளிர் சாதனப் பெட்டிக்கே மின்சாரம் போதுமான அளவு கிட்டாமல் ஸ்டெபிலைசர் அடித்துக் கொண்டே இருக்க...என்னடா எந்த மின் உபகரணமுமே வேலை செய்ய மறுக்கிறதே என்று சோதித்துப் பார்த்தால் 220 வோல்ட் முதல் 230 வோல்ட் வரை வரவேண்டிய மின் அழுத்தம் 140 முதல் 160 வோல்ட் என்றே வந்து கொண்டிருந்தது. அதிகபட்சம் மீறிப் போனால் 170 வரை கிடைத்திருக்கலாம். அது 1990லிருந்து 1995 வாக்கில் அதன் பிறகுவாழ்க்கை வெகு தூரம்நடந்திருந்த காரணத்தால் என்னால் இந்த எண்ணிக்கை குறிப்புகளை தோராயமாகவே தர முடிகிறது.
உடனே அது பற்றி உதவி மின் செயற் பொறியாளர் அலுவலகத்துக்கு எழுத்து மூலம் புகார் செய்தேன். அந்த அலுவலகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் அந்த அலுவலகத்தை எமது ஊரிலேயே போராடி தக்கவைத்து அரசிடமிருந்து 1 ரூ பெற்றுக் கொண்டு ( அதற்கு வாடகை பெறலாம் என ஊரில் ட்ரஸ்ட் போட்டு ஊர் முன்னணியாளர்கள் முயன்ற கதையும் அதை எமது நண்பர்கள் குழுவினர் உயர் நீதிமன்ற வழக்கு வரை சென்று அந்த ஊருக்குப் பொதுவான இடத்தை கட்டடத்தை ஊருக்குப் பொதுவான பணத்தில் கட்டியதை அரசுக்கும் மக்களுக்கும் பொதுவாக பயன்படுத்த முயன்று அந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை எங்கள் ஊருக்குள்ளேயே தக்க வைத்த கதை அதுவும் உண்மைக் கதைதான் ஆனால் அது வேறு அதை வேறு ஒரு வாய்ப்பு ஏற்படும்போது பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்)
அந்தப் புகாரை மேலிடத்திற்கு அதாவது கண்காணிப்பு பொறியாளர் வரை கொண்டு சென்று விட்டதால் வேறு வழியின்றி எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் வீடு மட்டுமல்ல எங்கள் வீடுகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அளந்து பார்த்து மின் அழுத்தம் மிகக் குறைவாக நான் முன் சொன்னது போல 140 முதல் 160 வரை வருவதாகவும் அதிக பட்சம் 170 போன்ற அளவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தி எங்கள் கையொப்பங்கள் அடங்கிய புகார் மனுவுக்கு மதிப்பளித்து உறுதியளித்து ஆவன செய்வதாக சென்றார்கள்....
ஆனால் ஊர் பெரிதாகிவிட்டது. அதற்கு இன்னும் ஒரு ட்ரான்ஸ்பார்மர் போட்டாக வேண்டும் அதை மேலிடத்தில் தெரியப்படுத்தி இருக்கிறோம். அது மெதுவாகவே நடக்கும் என்ற கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதற்கு நாங்கள் என்ன செய்வது என்ற கேள்விக்கு அந்த விடயத்தில் ஒரு முனைப்பாளராக நான் இருப்பதைக் கருதி என்னை அழைத்து நீங்கள் வேண்டுமானல் ஒரு முனை வீட்டுக்கான மின்சாரத்தை மும்முனை மின்சார இணைப்பாக மாற்றிக் கொள்ளுங்கள் தற்போதைக்கு உடனடியாக இதுதான் தீர்வு என்றார்கள்.
நானும் வேறு வழியில்லாததால் மின்பணி தெரிந்த ஒரு உதவியாளரை வைத்து இணைப்பை எல்லாம் மும்முனைக்கு மாற்றி செலவு செய்து ஒயரிங் எல்லாம் முடித்து த.நா.மி.வா வுக்கு எனக்கு நீங்கள் அறிவுரை செய்தபடி மும்முனை இணைப்பை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தேன்.
இதன் பின் தான் கதை ஆரம்பிக்கிறது கவனியுங்கள்: எனக்கு சில பேர் எல்லாம் மறந்து விட்டது சில பேர் நினைவில் உள்ளது ஆனால் பேர் எல்லாம் வேண்டாம் குறிப்பிடுவதால் ஒரு பயனும் இல்லை என்றே நினைக்கிறேன்
நான் அனுப்பிய ஒரு நண்பர் அவரேதான் எனக்கு ஒயரிங் செய்து முடித்தவர் அவர் அப்போது குடும்ப நண்பராகவும் இருந்தார் நான் பல்வேறுபட்ட அலுவல்களில் இருந்தேன் அப்போது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்ட அலுவலராகவும் இருந்து பல்வேறு பணிகளில் பல நூறு கிராமங்களுக்கு முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன் எனவே தேவைப்பட்டால் அவசியமானால் ஒழிய நேரடியாக எங்கும் போவதில்லை எல்லாம் கடிதம் மற்றும் தொலைபேசி வழித் தொடர்புதான்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அந்த ஒயரிங் மற்றும் எல்லாம் பார்த்து விட்டு சென்று விட்ட மின் கம்பி வடப் பணியாளர் எல்லாம் சரி என்ற பின்னே ஒரு வணிக உதவியாளர் மற்றும் வணிக ஆய்வாளர் என்று நினைக்கிறேன் இருவரும் நினைவுக்கு எட்டிய வரையில் ரூபாய் 200 ஐ இலஞ்சமாகக் கேட்டு அந்த நபரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அவர் வந்து சொல்லியதும் எனக்கு அது பற்றி வேறுபட்ட கருத்து இருந்தது. நான் இலஞ்ச ஊழலுக்கு கடுமையான எதிரிடைப் போராட்டக்காரனாக இருந்த போதும், அவர்களே இந்த மும்முனைப்பை பெற்றுக் கொள்ளுங்கள் பிரச்சனை தீரட்டும் என்று சொல்லி விட்டு அதற்கும் கூட என்னிடமே இலஞ்சம் பெற்று விட்டார்களே என மேலிடத்துக்கு உரியவர்க்கெல்லாம் எழுதி விட்டேன் அவர்கள் பேர் நாள் விவரம் எல்லாம் உள்ளடக்கி.
விடயம் சூடு பிடித்துக் கொண்டது. அந்த உதவி இயக்க மின் பொறியாளர் ஆரம்பத்தில் என் மேல் மிக்க கோபம் கொண்டதுடன் யார் இந்த ஆள் இவர் என்ன கவுன்சிலரா இவர் என்ன இதை எல்லாம் கேட்கிறார் என்று உள்ளூர் வார்டு கவுன்சிலரை எல்லாம் கேட்டு தமது கோபத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் ஒரு பக்கத்து ஊர்க்கார மின் பணி ஒப்பந்ததாரரை அனுப்பி ஏதாவது செய்து புகாரை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்றுக் கோரினார்கள்
நான் மசியவில்லை. அதன் பின் எனக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. எனது மின்சாரப் பிரச்சினை தீர்ந்தது என்றாலும் வேறு ஒரு விசாரணை அலுவலர் நியமிக்கப் பட்டார். அவர் மற்றொரு ஊரான ஜலகண்டாபுரத்திலிருந்து உதவி மின் பொறியாளர் அந்தஸ்தில் இருந்தார். மின்வாரியத்திலிருந்து அது பற்றி கூட்டத்திற்கான அழைப்பு வரும் அவர்கள் எங்கள் பக்கம், மின்சார வாரியத்தின் பக்கம் என விசாரித்தார்கள் ஏறத்தாழ இந்த விசாரணை 2 ஆண்டு நடந்து ருசுப்பிக்கப்பட்டது.
அந்த இலஞ்சம் பெற்ற நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதா என்பது வெளித் தெரியவில்லை. ஆனால் அதற்கு பொறுப்பான அந்த உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் தலைமை அலுவலர் என்ற முறையில் ஈசன் பெயர் கொண்ட அந்த உதவி மின் பொறியாளர் எங்கள் ஊரிலிருந்து பெரிய மணலி என்ற ஊருக்கு மாற்றப்பட்டார். அவர் இந்த செயல்பாடு முடிந்த தருவாயில் என் மேல் கோபம், வேறுபட்ட எண்ணம் கொண்டிருந்தவர் சுமூகமாகி என்னைப் பற்றி அறிந்து கொண்டு உங்களைப் போல் ஒருவராவது வேண்டும் எனப் பாராட்டி விடைபெற்றுக் கொண்டார்.
எனக்கு மணமுடிந்த ஆண்டு 1997 டிசம்பர் 4ஆம் தேதி...அந்த ஆண்டில் முதற் பருவத்தில் தாம் இந்த மின் இணைப்பும் கிடைத்திருக்கும் போலும் அதன் பின் மறு ஆண்டில் 1998 டிசம்பரில் 16 ஆம் தேதியில் எனது மகன் பிறப்பு. எனது தாமதமான திருமணம் 36 ஆம் அகவையில் மறுபடியும் தாயின் முதுமையில் அவர்களை மேலும் மேலும் தொந்தரவு தரக்கூடாது என்றும் இதற்கு மேல் தாமதிக்கவும் முடியாது என்பதாலும் செய்த திருமணம் அது அதை எல்லாம் ஏன் பகிர்கிறேன் என நினைக்கிறீர் அல்லவா...
கதையின் இரண்டாம் பாகம் என்ன வெனில் எனது மகனை நான் படித்த அதே அருகாமையில் உள்ள ஆனால் காலமாற்றத்திற்கேற்ப மாறிய பள்ளியில் நான் படித்தது அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பெற்ற தனியார் உயர் நிலைப் பள்ளி அப்போது அதுதான் இந்த ஊர்களுக்கெ எல்லாம் பெயர் பெற்ற ஒரே பள்ளி. இப்போது எனது மகன் படிக்கும் போது நான் படித்த துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளி ஆகி தனியாரின் மேலாண்மையில் ஆங்கிலப் பள்ளி ஆகி இருந்தது. எனக்கு ஒரு நினைவு பள்ளி எனப் படிக்க பிள்ளைகளை தொலை தூரம் அனுப்பக் கூடாது பூம்பிஞ்சுப் பருவத்தில்
எனவே அருகாமையில் பள்ளி எது இருக்கிறதோ அதற்கே அனுப்ப வேண்டும் என அனைவர்க்கும் சொல்வேன் .நானும் அதையே செய்தேன். அது ஒரு நடுத்தரமான நல்ல பள்ளிதான். மகன் என்னுடைய பயிற்சியின் மூலம் ஆரம்பமுதலே மழலையர் பள்ளி முதல் மேனிலப் பள்ளி இறுதி வரை அந்த ஒரே பள்ளியில் தாம் படித்தான். ஆரம்பம் முதலே நிறைய பரிசுகள் பெற அவனுக்கு வாய்த்தது. கடுமையாக முயற்சித்தோம்.
அதில் ஒரு சம்பவம் அவன் 6 ஆம் நிலை படித்திருக்கலாம் என அவன் நினைவுக்கு எட்டியதாக சொல்கிறான் இப்போது அவன் கல்லூரி இறுதி ஆண்டிலும் கடைசிக் கட்டத்திலும் உலகெலாம் வீட்டிலிரு தனித்திரு என்ற கட்டத்தில் இருக்கிறான். எனவெ அவனுக்கும் அது 6 ஆம் வகுப்பா 7 ஆம் வகுப்பா 5 ஆம் வகுப்பா எனத் தெளிவாக குறிப்பிட முடியவில்லை.
ஆனால் இவன் அவன் பள்ளியின் மூலம் காமராசர் மின்சார ஊழியர் நற்பணி மன்றம் என்ற ஒரு மன்றம் நடத்தும் போட்டிக்கு மேட்டூருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று போட்டியில் கலந்து கொண்டாக வேண்டும். ஆசிரியர்கள் வருவதுடன் அவரது குழந்தைகளை கூட்டிக் கொண்டு அவரது பெற்றோர் வந்து அங்கு சேர்ந்திட வேண்டும் என பள்ளியின் உத்தரவு. எனது துணைவி போக முடியாது என்ற சூழல். நான் அப்படிப் பட்ட சூழலில் சென்றே ஆகவேண்டும் உடன் அழைத்துச் செல்கிறேன்.
அங்கே சென்று விழாவில் கலந்து கொள்ள போட்டிகள் பல பள்ளி வாரியாக ஆரம்பிக்கப் பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அங்கே என்னால் அந்த மின்சார இலஞ்சப் புகாரில் சிக்கி இலஞ்சம் பெற்ற மின்சார வணிக ஆய்வாளர் அவருக்கும் என்னைத் தெரிந்து விடுகிறது. எனக்கும் அவரைத் தெரிந்து விடுகிறது. அவர் அந்த மன்றத்தில் ஒரு முக்கியப் பொறுப்பாளர் ஆக இருப்பதை அங்கே அவரது நடவடிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
நானும் என்னை எவ்வளவோ மறைத்துக் கொள்ளவும் முயன்றேன் ...உண்மை...ஏன் என்று கேட்காதீர். எனது மகனது பெயர் அழைக்கப்பட்டது...அவன் சென்று பேசுகிறான்...அவனது நேரம் மிகவும் வெகுவாக குறைக்கப்பட்டதைக் கவனிக்க முடிந்தது. அனைவர்க்கும் 5 நிமிடம் என்றால் இவனுக்கு இரண்டு மூன்று நிமிடம் மட்டுமே இருக்கும்.
இவனுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்றிருந்ததை கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள்...நான் பயந்திருந்தது போலவே நடந்திருந்தது. எனது துணைவியாரோ அல்லது ஆசிரியரோ அழைத்து சென்றிருந்தால் அந்தப் போட்டியிலும் இவனுக்குப் பரிசு கிடைத்திருக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் அது நடந்த ஆண்டு தோராயமாக: 2010 இருக்கக் கூடும்... அதாவது எனது மகன் பிறந்த ஆண்டிலிருந்து கணக்கு வைத்து சொல்கிறேன். மேலும் எங்களது இலஞ்சத்துக்கு எதிரான போராட்டம் இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் நடந்த ஆண்டு தோராயமாக சுமார் 15 ஆண்டுகள் ஆகிய பின் கூட மணமாகாமல் இருந்த நான் மணமாகி பிள்ளை பெற்று அவனைப் பாதிக்கிறது என்றால் அதன் மகிமையை என்னே சொல்ல....
கொசுறு: அந்த கடிதப் போக்குவரத்து நடந்ததை என்னால் பழைய கடிதங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் மிகவும் சரியாக சொல்லி விட முடியும் ஆனால் விடயம் முக்கியம் புள்ளி விவரம் அதன் கனம் முக்கியமல்ல என்பதால் தோராயமாகவே சொல்லி இருக்கிறேன்.
கொசுறு: 2.
ஒரு கோலப் போட்டி நடந்தது...உள்ளூரில் கோலமே போடத் தெரியாமல் தான் என்னை மணம் செய்து கொள்ளும்போது எனது துணைவி வீடு வந்து சேர்ந்தார்கள் அதன் பின் கோலம் கற்றுக் கொண்டு மிகவும் தேறி அனைவர்க்கும் சொல்லிக் கொடுக்கும் நிலையிலும் மிகவும் நன்றாக கோலம் போடும் நபராகவும் மாறி இருந்தார் ஒரு பொங்கல் அல்லது தீபாவளி போன்ற திருநாளில் உள்ளூரில் வீட்டில் வாசலில் போட்ட கோலத்தைப் பார்த்து போட்டி நடத்தி பரிசளிப்பதாக நிகழ்வு. ஒரு கட்சி சார்ந்த அமைப்பு உறுப்பினர் ஒருவர் கோலப்போட்டியில் உங்கள் கோலத்துக்கு ஒரு பரிசு என்று அறிவித்து சென்றிருந்தார் எங்கள் வீட்டுக் கோலத்தைப் பார்த்து ஆனால் அவர் அதன் பின் பரிசுடன் வரவே இல்லை. ஏன் என்ன ஆயிற்று என்ற பதிலும் எங்களுக்கு சேரவில்லை. அது எங்கள் வீடு என்று தெரிந்ததால்...
கேள்விப் பட்டதெல்லாம் உண்மையாக இருந்தால்: கவிஞர் தணிகை
நேற்று நண்பர் ஆசியாநெட் செய்தியாக வந்திருந்த ஒரு செய்தியை எனக்கு கட்புலன்செவி சமூக ஊடகம் வழியே அனுப்பி இருந்தார்.
அதில் தமிழக முதல்வர் மதுக்கடைகளுக்கு நிரந்தரமாக குட் பை சொல்ல திட்டத்தில் இருப்பதாகவும், அதனால் மது ஆலைகளின் பெரும்பான்மையான முதலாளிமார்களாக இருக்கும் தி.மு.கவினர்க்கு செக் வைக்கப் போவதாகவும் அந்த வருவாய் இழப்புக்கு தனியார் கல்லூரி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் தமது வருவாயில் இருந்து 30 சதவீதம் அரசுக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் அவைகூட அதிகம் தி.மு.க சார்ந்தவரிடமே இருக்கிறது என்பதும் திட்டமிட்டிருப்பதாகவும் அப்படி செய்யும் கட்டத்தில் அந்த ஒரு கல் மூன்று மாங்காய் அடிப்பது வாயிலாக மக்கள் இடம் நல்ல பேர் வாங்கி தேர்தலையும் சந்திக்கத் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சிகளுக்கு பொருளாதார அடி கொடுக்கப்படும் என்றும் அந்த செய்தி சாராம்சம் சொல்லி உள்ள நிலையில்
அதைக் கண்டு வெலவெலத்துப் போன தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்றோர் இந்த கொரானா அலை முடிந்ததும் முழுமையான மதுவிலக்கு கோரி இவர்களாகவே போராட்டம் ஆரம்பிக்க இருப்பதாகவும் செய்தி சொல்லி இருக்கிறது.
இப்படி எல்லாம் ஆகும்போது எங்களைப் போன்ற மதுவிலக்கப் போராளிகளுக்கு ஒரு நல்லது நடக்கிறது அது முழுமையான மதுவிலக்கு மாநிலத்தில் நடைபெறுவது மட்டுமே...
ஆனால் மத்திய அரசு பிரதமரிடம் பல மாநிலங்களில் இருந்து மதுக்கடைகளுக்கு திறக்கச் சொல்லி அனுமதி கோராலாம் என மற்ற மாநிலங்களிலிருந்து முயற்சிப்பதாகவும் செய்தி இருக்கும் போதூ இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விகளும் எழாமலும் இல்லை
மேலும் ஜோஸ்யக்காரர்கள் ஸ்டாலினா, ரஜினிகாந்தா முதல்வராக வாய்ப்பு என்று பார்க்கும் போது ரஜினிகாந்துக்கே வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லியதாக இந்த மாற்றி மாற்றி ஒரு நிலை இல்லாமல் செய்தி தந்து வரும் ஊடகங்களை எந்த அளவு நம்பலாம் இந்த செய்திகள் உறுதியாகுமா என்பதெல்லாம் காலப் போக்கில் இருந்துதான் பார்க்க வேண்டும்...
இதெல்லாம் பிரதமரிடமும், உள் துறை மந்திரியிடமும் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கும் போல் இருக்கிறதே தமிழக முதல்வரின் அடுத்த அடி அப்படி இருந்தால் அது சுவாரஸ்யமான அரசியல் மூவ்...அரசியல் களத்தில். களம் ருசிகரமாகி விடும்...
இவர்கள் ரஜினிகாந்த், ஸ்டாலின் இருவருக்கும் தான் போட்டி என்றால் தமிழக தற்போதைய முதல்வர் அதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா அதற்கென்று அவருக்கென்று சில பணிகளையும் செய்வார்தானே...அதில் மத்திய அரசின் கலவையும் ரஜினிகாந்தும் இருப்பார்களா அல்லது மறுபடியும் இவரோ துணை முதல்வரோ வருவதற்கு முயற்சிப்பார்களா என்பதெல்லாம் ஆவலுடன் பார்க்கப் பட வேண்டிய விடயங்களாக இன்னும் ஓராண்டுக்குள் காணக் கிடைக்கும் காட்சிகளாக இருக்கலாம்.
எப்படிப் பார்த்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்க்கு வரும் காலம் மிகவும் கடுமையான போராட்டக் காலமாகவே இருக்கும் போலிருக்கிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
என் வாழ்வில் சிகரத்தின் உச்சி அடைந்த பொழுதுகளை அலையின் முகடுகளை வாழ்க்கையின் விழுதுகளை நேற்று உறங்காத போது நினைத்துப் பார்த்தேன்.
1. கலாமின் கடிதத்தை தபால்காரரிடம் இருந்து வாங்கிய போது (அது இலஞ்ச ஊழலுக்கு எதிரான அறிவுரை)
2. முன்னேற்பாடு ஏதுமில்லாது திடீரென உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேச வேண்டும் என அழைப்புக் கிடைத்த போது...
3. ஒவ்வொரு புத்தக வேலையும் நிறைவடைந்து அது சில பிழைகளுடன் இருந்த போதும் கையில் ஏந்தியபோது
4.கல்லூரியில் கவிதைப் போட்டியில் முதல் இடம் பிடித்து கல்லூரி மற்றும் விடுதி அறிவிப்புப் பலகைகளில் எனது பெயர் முதல் என்றிருந்ததைக் கண்டபோது..
5. கவிஞர் இன்குலாப் உடன் கவிதை செய்து கவியரங்கத்தில் பங்கேற்றபோது
6. நேரு யுவக் கேந்திரா பிராந்திய இயக்குனர் கொ.வேலாயுதத்துடன் இயக்கப் பணிகளில் பல முறை உரசிக் கொண்டு முரண் பட்ட போதும் அந்த உறவு இன்று வரை தொடர்ந்து வரும்போது
7. விடியல் குகன் என்னும் எனது கல்லூரிக் கால நண்பர் கு.கருணாநிதி 42 ஆண்டுக்கும் மேலாக என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பயணத்தை எண்ணும் போது
8. சிறு வயதில் முதல் மாணவனாய் பள்ளியில் இருந்ததை எனது மூத்த சகோதரி மல்லிகேஸ்வரி அப்போது மணம் புரிந்து வந்திருந்த தோழி தேவகியிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது படுக்கை அறை கதவின் சந்து ஓரம் சென்று ஒளிந்து கொண்ட போது...
9, ஒவ்வொரு வாரமும் தாய் சந்தைக்குச் சென்று திரும்பும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொது முச்சந்தியின் தெருவிளக்குக் கம்பத்தின் முன் சார்ந்து கொண்டு அதைப் பிடித்துக் கொண்டு வைத்த விழி மாறாமல் அவள் வருகையை எதிர்நோக்கி காத்திருந்து அவளது தலைமேல் கூடையுடன் வருவது கண்ட போது...
10. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பேசி, பரிசாக பொருளீட்டியபோது 11. 11 ஆம் வகுப்பில் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசை வென்றபோது, பேச்சுப் போட்டியில் வட்டார அளவுக்கு தேர்வு செய்யப்பட்டு மேட்டூர் கூட்டுறவு பண்டகசாலையில் முதல் பரிசை எட்டி எனது பேச்சை ஒரு ஊமை சுமைப் பணியாளர் இரசித்துப் பாராட்டிய போது
12. அரட்டை அரங்கம், அகடவிகடம்,விஜய் டி.வி சன் டி.வி, பொதிகை, திருச்சி ஆல் இண்டியா ரேடியோ ஆகியவற்றில் வாய்ப்புகளை பயன்படுத்திய போது..
13. கபாலீஸ்வரர் கோவில் கட்டும்போது அதன் பிரதானமாக இருந்த இரசாயன ஆலை முதலாளியாலும் முடியாமல் எனது வழியாகவே மூலவர், மற்றும் பிரதான சிலைகள் அமைந்த போது அவரது ஆணவமும் செருக்கும் இயற்கையாக அடித்து அழித்த போது...
14. காதலன் என்று பொழுதுகளில் மாட்டிக் கொண்டு விழித்த போதும் அதை முதன் முதலில் அறிந்த போதும்
15. திருமணம் மற்றும் தாம்பத்யம்
16. வீட்டுக்குப் போ நல்ல செய்தி காத்திருக்கிறது என மேட்டூர் சுப்ரமண்ய சாமி கோவிலில் பிரதோஷ வழிபாட்டுக்கு சென்றவனுக்கு என்ற வார்த்தைகள் வந்த பின் வீட்டுக்கு வந்து மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியை அறிந்த போது...
17.ஒவ்வொரு முறையும் எனது மகன் தனது மழைலையர் பள்ளி முதல் மேனிலை இறுதி யாண்டு வரை பரிசுகளாய்க் கொண்டு வந்து காண்பித்த போது
18. ஏராளமான புத்தகங்கள் படித்து நெக்குருகி உணர்வழுந்த உருகி நிற்கும்போது...எடுத்துக் காட்டாக ஒரு ரஷிய நாவலை ஒரு பொது கலை அரங்கத்தில் அனைவரும் சத்தமிட்டிருக்க நான் அதைப் படித்து கண்ணீர் புரண்டு வழிய அழுது கொண்டிருந்த போது...
19. எனது சகோதரி இருவரின் மனம் நெகிழ்ந்த உதவிகள் பெற்ற போதும் உற்ற நண்பர்களின் தேவையான நேரத்தின் உதவி பெற்ற போதும்
20.எந்த வித எதிர்பார்ப்புமே இல்லாமல் எப்போது கேட்டாலும் எப்படியும் கிடைக்காத சிலர் என் மேல் காட்டிய நேசத்தை உணர்ந்த போது
21. எனது மறுபடியும் பூக்கும் என்ற புத்தகம் உலகின் மாபெரும் நூலகக் கூட்டமான அமெரிக்கன் லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகத்தில் இடம் பெற்றதை அறிந்த போது... அதற்கான கடித அறிவுறுத்தல் பெற்றபோது
22.எனது தியானப் பயிற்சிகளில் பிரவீன்குமார் போன்ற இளைஞரைப் பெற்றபோது...
23. நல்ல சபை வாய்த்து எனது உரைவீச்சு நிகழ்ந்து அதை பேசுவதற்காகவே பிறந்திருக்கிறீர் என அனைவரும் பாராட்டும் போது...
23. எனது புத்தகத்தை படித்து எவரோ திடீரென பாதையில் குறுக்கிட்டு உங்கள் புத்தகத்தால் உங்களால் நான் இந்த பயன் பெற்றேன் என்று நன்றி பாராட்டும் போது...
23. நிறைய பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு பொருட் செலவின்றி அவர்கள் அந்தப் பிரச்சினைய முடித்துக் கொடுத்து விடை பெறும்போது வாழ்த்தும் போது...இறக்கும் போது கூட தமது மக்களிடம் ஒரு தந்தை எந்தப் பிரச்சனை வந்தாலும் இவரை வைத்து பேசி முடித்துக் கொள்ளுங்கள் என எழுதிக் காட்டியதாக கேள்விப்பட்ட போது...
24. எனது தங்கைக்கும் அவரது மகளுக்கும் எனது எண்ணப்படியே மணம் அமைந்த போது...
25. நல்ல புத்தகங்கள் மார்க்ஸீயம், காந்தியம், ஜி.கிருஷ்ணமூர்த்தி எல்லாம் படித்து அதில் மூழ்கி நிற்கும் போது...
26. நல்ல திரைப்படங்கள் பார்த்து விட்டு ஸிண்டலர்ஸ் லிஸ்ட் போல பேச்சு மூச்சு வராமல் திகைக்கும்போது திக்கெட்டும் பரவ் தாம் தூம் என்று குதித்துக் கொண்டு அதைப்பற்றியே பார்க்கும் நபர்களிடம் எல்லாம் பல நாட்கள் பேசும்போது...
27. நல்ல இசை, திரை இசையும் கூட கேட்டு ஆழ்ந்து அமிழ்ந்து விடும் போது..ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா சித் ஸ்ரீராம்...
28. நல்ல கவிதைகளை விட்டு விடாமல் பிடித்து வைத்து எழுதி முடித்து மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது
29. நல்ல புத்தகங்களைப் படித்து விட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது
30. எனக்கு ஒரு நல்ல தாய் தந்தை கிடைத்து சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத சகோதர சகோதரிகளை குடும்ப உறவாக பெற்றதை எண்ணும் போது...
31. எனக்கு அன்றாடம் பத்திய உணவை செய்து கொடுக்கும் துணையைப் பெற்றதற்காகவும் நல் ஒழுக்கமுடைய மகனை இளைஞராக பார்க்க இயற்கை அருள் செய்தமை எண்ணியும்....
இங்கு இரண்டு மருத்துவர்களின் நல்லடக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்பெயின் தோட்டத்தில் அடிமைத் தொழிலாளராக ஆப்பிரிக்க மக்கள் இருப்பதாகவும் அடிமையாக இருங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அதன் முதலாளிகள் சொல்வதாக வந்திருக்கும் இந்த பிபிசி அறிக்கை காலத்தின் பதிவு
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
நன்றி: பிபிசி
கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”
ஸ்பெயினில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் கட்டற்ற உழைப்பு சுரண்டல் நடப்பது பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்பெயின் அல்மெரியா மாகாணத்தில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பழங்களும், காய்கறிகளும்தான் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த பண்ணைகளில் ஏராளமான ஆப்ரிக்க மக்கள் பணியாற்றுகிறார்கள். அதில் சிலர் எந்த ஆவணமுமற்ற புலம்பெயர் தொழிலாளர்கள். இங்கு ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை மற்றும் இருப்பிட வசதி செய்து தரப்படவில்லை என பல வருடங்களாகக் குற்றச்சாட்டு உள்ளது.
"அடிமைகளாக இருக்க முடியுமென்றால் இருங்கள் இல்லையென்றால் கிளம்புங்கள் ," என பண்ணை உரிமையாளர்கள் சொல்வதாக அங்கு பணியாற்றும் ஆஃப்ரிக்க மக்கள் சொல்கிறார்கள்.
இப்படியான சூழலில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு இந்த பண்ணைகளில் பிபிசி ரகசிய புலனாய்வை மேற்கொண்டது. அதில் இந்த குற்றச்ச்சாட்டுகள அனைத்தும் உண்மை தெரியவந்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதில்லை. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பண்ணை உரிமையாளர்கள் மறுக்கிறார்கள்.
இன்னும்கூடா ஆயிலாவே இருக்கிறீர்களேயடா என்று அன்றைய மொழியில் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். ஆனால் பயணம் வெகு தூரம் வந்த பின்னே அப்படிக் கேட்பதற்கெல்லாம் நமக்கு மனமில்லை. ஏன் எனில் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கிறதே....அந்தக் கல்லூரி வாழ்வில் எனக்கு கிடைத்த கசப்பிலும் ஆறாத இரணத்திலும் நல்ல துணை என்றால் அது செம்பண்ணன், விடியல் குகன்,அழகிரி,பாலு,ஆறுச்சாமி, என்னை அழகிரி மகன் மணத்துக்கு வந்தபோது தனது வீட்டில் இடமளித்த அன்புச் சகோதரன் வேலுச்சாமி,இளங்கோவன் வணிகவியல்;மற்றும் எந்திரவியல் இளங்கோவன், ஞானசேகரன், நாச்சிமுத்து,நாராயணமூர்த்தி, திருமூர்த்தி,கிரிதரன்,லகர், போன்ற பெயர் குறிப்பிடாமல் விடுபட்டுள்ள பலருடையது.
நாகச் சந்திரன் நல்ல பண்பட்ட மனிதராய் தாம் படித்ததை அனுபவிக்க அனைவர்க்கும் தந்து வருகிறார் நல்ல முன்னேற்றம். திருச்செங்கோடு சேகர் தம்பதியர் என்னை உபசரித்த உணவின் மணம் இன்னும் என் கையில் இருக்கிறது...அப்போது நாமக்கல் ஒரு விடியல் கூட்டத்துக்கு போகும் வழியில் அவர் என்னை அழைத்துக் கொண்டார்.
என்னை தனது சகோதர நண்பராக நினைத்த எனது சீனியர் மணிமாறன், ஜூனியர் ரமேஷ் இப்படி நிறைய நபர்களை சொல்லிக் கொண்டே போக முடியும்
நான் தினைத்துணையாம் நன்றி செயினும் பனைத் துணையாய்க் கொள்வார் பயன் தெரிவார் என்ற குறளுக்கேற்ப அன்று அழகிரியின் மணம் முடித்து காலையில் தனியாகப் புறப்பட்ட எனக்கு ராமலிங்கம் சற்று தூரம் காரில் கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் விட்டது கூட இன்னும் நினைவில் இருக்கிறது . யாரது பாலு அந்த லெஜிபில், என்னை தெரிந்து கொள்ள நினைத்தார் ஆனால் அது யாரென்று எனக்குத் தெரியவில்லை... எல்லாம் எனக்கு காமராசரையும் அவரது வார்த்தைகளையும் நினைவூட்டி இருக்கிறார்கள்.
அந்தக் கல்வி நிறுவனத்துக்கும் எனக்குமான தொடர்பை எனது " நேசமுடன் ஒரு நினைவதுவாகி " என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன் இப்போதல்ல அப்போதே அந்த நூல் வெளியான ஆண்டு:2009. அதில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன் நான் அந்த ஒலிபெருக்கி யுனிட்டை பாலமலை என்ற மழைவாழ் மக்களின் தேவைக்காக ஒரு போராட்டக் களத்தில் 1981ல் இருந்து வைத்திருந்ததை 1986ல் இளைஞர்களுக்கு தானமாக வழங்கி அதை அந்த ஊரின் ஒரு ஊராட்சித் துணைத் தலைவர் ஊராட்சி ஒலிபரப்பின் நிகழ்வை தனது வீட்டுக்கு என தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்ததை மாற்றி ஊருக்கே பயன்படுத்தியதை. (Note Page no: 108,109.)
மேலும் எனது அந்த செயலுக்கான கல்லூரியின் பார்வையிலான நீதியை தண்டனையை எங்களுக்கு கல்லூரி வழங்கி அந்தக் கடைசி மூன்று மாதம் வீட்டில் இருக்க செய்து நேரடியாக வந்து தேர்வை எழுதச் சொல்லியது போன்ற, தந்தையை அழைத்து வந்து கல்லூரியில் சந்தித்த போது நடத்திய விதம், ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றி விட்டது. அது மட்டுமல்ல ரூபாய் ஆயிரம் அபராதத்தையும் கட்டி இருந்தது எங்கள் குடும்பம். அப்போதும் நாங்கள் எங்கள் சுயநலத்துக்காக இயங்க வில்லை இப்போதும் அது போன்று எங்கள் சுயநலம் என்ற ஒரேநோக்கத்துக்காக இயங்குவதில்லை.
எப்போதும்...அப்படித்தான்...ஆனால் அதற்காக நாங்கள் ஒருபோதும் எவருக்கும் சளைத்த பிற்போக்கான வாழ்வை வாழவில்லை சொல்லப் போனால் இந்த நாட்டின் பிற்போக்கில் கடைத்தட்டில் அடித்தள மக்களுக்கு என்ன எம்மால் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து பிணி பல பெற்று இயலாமையின் பிடியில் இன்னும் இருந்த போதும் எங்களது இயக்கம் என்னும் ஓய்ந்தபாடில்லை நின்று விட்டது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எவ்வளவு முடிகிறதோ அவ்வளவில் சென்று கொண்டுதான் இருக்கிறது. ஒரு அடையாளம் இருக்கிறது.
மேலும் மேலும் பேசிக்கொண்டே இருந்தால் அந்தளவு தரம் நாமும் தாழ்ந்தவராகவே ஆகிவிடுவோம் என ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டேன்...நான் ஒருவர் தெரிவித்த செய்திக்கு பலர் அங்கிருந்து விதண்டாவாதம் செய்ய ஆரம்பித்தனர்....
நான் இலக்கியம் படித்தது, வள்ளுவம் படித்தது, காந்தியம் படித்தது, கம்யூனிசம் படித்தது, ஜி.கி(75 நூல்களில் பெரும்பாலும் படித்து முடிந்தது இந்த எனது நாட்கள் பெரும்பாலும் அதற்கு நேரம் கிடைக்க வில்லையே என்றேங்கிக் கிடந்தது இப்போது படிக்க வாய்த்தது) படித்து வருவது நாடெங்கும் அலைந்து திரிந்து செய்த சேவை இப்போதும் செய்து கொண்டிருப்பது எல்லாம் இவர்களுடன் சேர்ந்து கேலிக்கிடமாகி விடும் போலிருந்தது...
ஒரு பொதுக் கருப்பொருள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தனிப்பட்ட மனிதர்களை விமர்சிப்பதும் தாம் தாம் ஏதோ எல்லாவற்றுக்கும் அத்தாரிட்டி போல கமென்ட் அடிப்பதும் எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது என்பது அனைவராலும் உணரப்பட வேண்டியது. அரைக் கால் சட்டை போட்டுக் கொண்டு பொது இடங்களில் புழங்குவதும் மது நுகர்வோராய் இருப்போரையும் எனது தோழமை என்று ஒருபோதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதே இல்லை...
அதில் ஒரு மனிதர் எவ்வளவு தூற்ற வேண்டுமோ அது போன்ற வார்த்தைகளால் மஞ்சள் பத்திரிகை, பாகிஸ்தான் தீவிரவாத தொடர்பாளர் அந்த தலைவரும், அந்த பத்திரிகையாளரும் இப்படித்தான் அப்படித்தான் என நான் என்னக் குறிப்பிட்டாலும் உச்ச பட்ச வார்த்தைகளாலே தகுதியில்லா வார்த்தைகளால் வார்த்தையாடிக் கொண்டிருந்தார் அவரது தகுதி அவ்வளவுதான் என்பதாக....
எனக்குத் தெரிந்த முறை என்னவெனில் எதை ஒன்றைப் பற்றியும் சொல்லப் புகுமுன் அதை நன்கு அறிந்திருக்க வேண்டும் அல்லது அதை அறிந்து கொள்ள முயற்சியாவது செய்திருக்க வேண்டும்....அப்படிப் பார்த்தால் கம்யூனிசம் என்றால் என்ன என படித்திருந்தால் அதைப் பற்றிய பரிமாணம் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தால் அதைப்பற்றி எல்லாம் கேவலமாக பேசவே வழி இல்லை...
அனுபவங்கள் செறிவானவை அவை ஒவ்வொருவர்க்கும் ஒருவாறு இருக்கும் என்பது இயல்புதான் ஆனால் வார்த்தைகளால் எகிறி அடித்து தொடர்பில்லாமல் கெக்கலி கொட்டி வரும் இயல்பு மாற்றிக் கொள்ள வேண்டியது.இல்லையேல் காலம் மாற்றும்...
சொந்தச் சகோதர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் என வரும் பாரதி பாடல் இங்கு எனக்கு ஆறுதல் தருகிறது
1. நெஞ்சிலுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி...
2. கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே
நாளில் மறப்பாரடி...
3. சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாகுமோ? கிளியே
அலிகளுக் கின்பமுண்டோ?
4. கண்களிரண்டிருந்தும் காணுந் திறமையற்ற பெண்களின் கூட்டமடி...கிளியே
பேசிப் பயனென்னடீ..
5. யந்திரச் சாலையென்பர் எங்கள் துணிகளென்பர் மந்திரத்தாலேயெங்கும் ..கிளியே
மாங்கனி வீழ்வதுண்டோ?
6. உப்பென்றும் சீனியென்றும் உள் நாட்டுச் சேலையென்றும் செப்பித் திரிவாரடி ...கிளியே
செய்வதறியாரடீ...
7. தேவியர் மானமென்றும் தெய்வத்தின் பக்தியென்றும் நாவினாற் சொல்வதல்லால்...கிளியே
நம்புதலற்றாரடீ..
8. மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைக்.. கிளியே
பேணியிருந்தாரடீ.
9. தேவி கோயிலிற்சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென்றெண்ணிக் ...கிளியே
அஞ்சிக் கிடந்தாரடீ.
10. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடீ...கிளியே
ஊமைச் சனங்களடீ.
11. ஊக்கமும் உள்வலியும் உன்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும்...கிளியே
வாழத் தகுதியுண்டோ?
12. மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க்குலத்தினில்...கிளியே
இருக்க நிலைமையுண்டோ?
13. சிந்தையிற் கள் விரும்பிச் சிவ சிவ வென்பது போல் வந்தே மாதரமென்பார்...கிளியே
மனதிலதனைக் கொள்ளார்...
14. பழமை பழமையென்று பாலனை போலன்றிப் பழமை இருந்த நிலை..கிளியே
பாமர ரேதறிவார்?
15. நாட்டிலவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத் தேட்டில் விருப்புங்கொண்டே ...கிளியே
சிறுமையடைவாரடீ.
16. சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை யிரங்காரடீ...கிளியே
செம்மை மறந்தாரடீ...
17. பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் ...கிளியே
சோம்பிக் கிடப்பாரடீ.
18. தாயை கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார் வாயைத் திறந்து சும்மா...கிளியே
வந்தேமாதரமென்பார்...
குறைகளை சொல்வதென்பது சரி செய்து கொள்வதற்காகத்தான்...கோவையின் பாரளுமன்ற உறுப்பினர், மதுரையின் பாராளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு. வெங்கடேசன் போன்றோர் எல்லாம் கம்யூனிஸ்ட்களே அவர்கள் எல்லாம் கூட இந்த தருணத்தில் எப்படி ஒரு இளைஞரை கேடு கெட்ட எண்ணத்தால் படாத பாடு படுத்தி இரயில் முன் பாய்ந்து இறக்க வைத்தார்கள் என்பதை எழுதியதை எல்லாம் மறந்து விட முடியாது, நெல்லூர் மருத்துவருக்கு நேர்ந்த அவதி அவரது மரணத்தையும் அவமானப்படுத்திய விதம் எல்லாம் விழிப்புணர்வில்லா மாக்கள் கூட்டத்தால் நிகழ்ந்த அவஸ்தை எல்லாம் வெளிப்படுத்தியவை ஊடகம் தான்.
ஊடகச் சுரண்டல் எல்லாம் இருக்கிறதுதான் எல்லாத் துறைகளிலும் இருப்பது போல. ஆனால் அதற்காக ஊடகமே எல்லாமே ஒரே விதம் தான் என்று கொள்வதும் சொல்வதும் அது பற்றி வந்திருந்த செய்தி பற்றி குறிப்பிடவே கூடாது என்பதெல்லாம் எந்த முறைமைகளில் வருவது...அப்படிப் பட்ட சர்வாதிகாரத் தனம் எவருக்கும் கிடையாதே...என்னை எல்லாம் தடைப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்ல அப்படி என்னதான் நீங்கள் செய்துவிட்டீர்...நீங்கள் எல்லாம் சொன்னால் என் போன்றோர் எல்லாம் கேட்டே ஆக வேண்டும் என நினைக்கிறீர்களா? ...நண்பர்களே...தோழர்களே....சரியான நபர் இல்லை ...இல்லை எனில் நேரடியாக ஒரு வாதப் பிரதிவாத தளத்திற்கே கூட ஏற்பாடு செய்யலாம்...ஆனால் அந்த அளவு நாகரீகமாக நீங்கள் வார்த்தையாடவில்லை என்பதுதான் இங்கு கருவே...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
இந்தப் பதிவை
விடியல் குகன்
செம்பண்ணன்
போன்ற உண்மையான நட்புக்கு சமர்ப்பிக்கிறேன்... அவர்களுக்கு எழுதியதாகவே கொள்கிறேன்..
மறுபடியும் சொல்கிறேன்:
கம்யூனிசம் என்பது பற்றி தெரியவில்லை எனில் கார்ல் மார்க்ஸ் மூலதனம் அல்லது டாஸ் கேப்பிட்டல் படிக்கவும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் லெனின், வாழ்க்கை வரலாறு பயிலவும் காந்தியைப் பற்றி முழுதும் தெரியவேண்டும் எனில் 60000 முதல் 80000 பக்கங்களும் படிக்க முயற்சிக்கவும் ஜெ.கெ படிக்க வேண்டுமெனில் 75 வெளியீடுகள் இப்படி பலவற்றையும் படித்தறிந்து விட்டு ஒரே வார்த்தையில் கமென்ட் செய்யலாம்...
சுருக்கமாகச் சொல்லுங்கள் கம்யூனிஸம் என்றால் என்ன அது பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் என்ன சொல்லலாம் என்று கார்ல் மார்க்ஸ் இடம் கேட்டபோது: தனியார் சொத்துரிமையை ஒழிப்பது என்றே சொன்னார்...
அது எதற்கு அப்படிச் சொல்லப்பட்டது எனில் அப்போதுதான் உலகின் அனைத்து மாந்தர்க்கும் உணவும் குடிநீரும் குறைந்த பட்சம் கிடைக்கும் என்பதற்காகத்தான்...
கவச உடைகள், உணவு, தங்குமிடம்கூட இல்லை கொரோனா சிகிச்சைப் பிரிவு பயிற்சி டாக்டர்கள் குமுறல்
2020-04-17@ 01:00:26
சென்னை: கவச உடைகள், உணவு, தங்குமிடம் கூட இல்லை என்று மருத்துவமனைகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரைக் கொடுத்து வேலை செய்யத் தயார். அதற்காக உயிருக்கே உலை வைப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா வைரஸ், இந்தியாவுக்குள் தாக்குதலை தொடங்கியவுடன், கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரசைக் கண்டு உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்திலும் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பலர் வேலைகளை இழந்துள்ளனர். பலர் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர். ஆனாலும், அவர்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது டாக்டர்கள், போலீசார், உள்ளாட்சித்துறை, வருவாய் துறை பணியாளர்கள்தான். இவர்களை பாராட்டும்விதமாக கைதட்டுவது, ஒளி ஏற்றுவது போன்றவற்றை மக்கள் செய்தனர். இதற்கு அரசும் ஆதரவு தெரிவித்தது. ஆனால், கொரோனா தாக்குதலை முன்னின்று முறியடிப்பதில் களப்போராளிகளாக செயல்படுவது டாக்டர்கள்தான். அந்த டாக்டர்களுக்கு முறையான மருத்துவ உபகரணங்கள் இல்லை. கவச உடைகள் இல்லை. உணவு வழங்குவதில்லை என்று அவர்கள் குமுறி வருகின்றனர்.
இதுகுறித்து, பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பமானவுடன், அரசு மருத்துவமனைகளில் உள்ள இதய நோய் பிரிவு, குழந்தைகள் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டு, கொரோனா பிரிவு என்ற ஒரே பிரிவு மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து பிரிவு டாக்டர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தது ஒரு மருத்துவமனையில் ஒரு ஷிப்ட்டில் 8 டாக்டர்கள் முதல் பணியில் இருக்கும் வகையில் பணி பிரிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் போடப்பட்டன. ஒரு டாக்டர் ஒரு ஷிப்டு மட்டுமே பார்ப்பார். ஒரு வாரம் தொடர்ந்து பணியாற்றுவார். பின்னர் டாக்டர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டன. அங்கு ஒரு வாரம் தொடர்ந்து தனிமையில் இருப்பார்கள்.
ஏனென்றால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் ஒரு வாரத்தில் தெரிந்து விடும் என்பதால் ஓட்டல் அறையில் ஒரு வாரம் தனியாக இருப்பார்கள். சாப்பாடு மட்டுமே கொண்டு சென்று கொடுக்கப்படும். அதன்பின்னர் ஒரு வாரம் வீட்டில் தனிமையில் இருப்பர். இதனால் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவருக்கு 2 வாரம் விடுமுறை கிடைக்கும். இதை நாங்கள் குறை சொல்லவில்லை. அதேநேரத்தில் முதுகலை, இளங்கலை மருத்துவ பயிற்சி டாக்டர்கள் நிலைதான் படுமோசம். நாங்கள்தான் கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக சோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு உத்தரவு போட்டு மேற்பார்வையிடும் பணிகளைதான் டாக்டர்கள் செய்வார்கள். நாங்கள்தான் களப்போராளிகள்.
எங்களுக்கு மட்டும் ஒருவார பணி கிடையாது. எல்லா நாட்களும் பணிக்குச் செல்ல வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எங்களுக்கு கோரண்டைன் அறைகள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்களும் கிடையாது. கொரோனா வார்டில் இருந்து நேரடியாக, நாங்கள் வழக்கம்போல தங்கும் எங்கள் விடுதியில்தான் தங்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் 70 ஆண்கள், 70 பெண் பயிற்சி டாக்டர்கள் அவரவர் விடுதியில் மொத்தமாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் எளிதாக பரவிவிடும்.
கோவையில் 2 டாக்டர்கள் மற்றும் 2 பயிற்சி டாக்டர்களுக்கு நோய் தாக்கியுள்ளது. எங்களுக்கு எந்த உயிர்பாதுகாப்பும் இல்லை. எங்களுக்கே இந்த நிலை என்றால், வார்டுபாய் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களின் நிலைகளை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். மேலும் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவச உடைகள் இல்லை. இரு நாட்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறும்போது, யாருக்கு உடைகள் இல்லை என்று ஒருவரை சொல்ல முடியுமா என்று கேட்கிறார். மாநிலம் முழுவதும் அனைத்து டாக்டர்களும் போராட்டம் நடத்தியதையே அரசு முறியடித்து விட்டது. பலரை பணி மாற்றம் செய்தனர். நாங்கள் ஒருவர் கேட்டால், எங்கள் நிலை என்ன?
நாங்கள் முழுக்க முழுக்க படிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் கொத்தடிமைகள். டாக்டர்கள் நினைத்தால்தான் நாங்கள் பாஸ் பண்ண முடியும். இல்லாவிட்டால், நாங்கள் ஒழுங்காக படித்து, தேர்வில் வெற்றி பெற முடியாது. எங்களுக்கு தேவையான என் 95 மாஸ்க் இல்லை. பாதுகாப்பு கவச உடைகளும் வழங்கப்படுவதில்லை. தற்போது பரிசோதனை கருவிகள் ஓரளவு கிடைத்து விட்டது. அவைகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து விட்டது. அதை வரவேற்கிறோம். பரிசோதனை கருவிகள் வந்து என்ன பயன். எங்களுக்கு கவச உடை வரவேண்டுமே. கவச உடை இல்லாமல், பரிசோதனை செய்தால், கொரோனா நோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது அவர் தும்மினால் அவரது முகத்தின் அருகேதான் எங்கள் முகத்தை வைத்திருப்போம். அப்போது உடனடியாக கிருமி எங்களுக்கும் பரவி விடும். இதனால்தான் முதலில் பாதுகாப்பு உடைகளை கேட்கிறோம்.
நாடு முழுவதும் தற்போது 200 டாக்டர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 8 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு வழங்கும் கவச உடைகள் தரமானவைதானா என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அதை நாங்கள் எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை. படித்ததும் இல்லை. இப்போதுதான் புதிய நோய் வந்துள்ளது. இதனால் இப்போதுதான் உடைகளை கேள்விப்படுகிறோம். அதனால் அரசு கொடுக்கும் உடைகளை நாங்கள் நம்பித்தான் போடுகிறோம். சீனா கொடுக்கும் கருவிகள் தரமானவை இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை எல்லாம் மீறித்தான் நாங்கள் கடவுள் மீது பாரத்தைப் போட்டு பணியாற்றுகிறோம். இதனால் பயிற்சி டாக்டர்களுக்கும் தேவையான கவச உடைகள், மாஸ்க் வழங்க வேண்டும்.
மேலும் கொரோனா வார்டு சிகிச்சை அளிக்கும் பயிற்சி டாக்டர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. எங்களை சூபர்வைசர் செய்யும் டாக்டர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் கொடுப்பதால், அங்கே உணவு வழங்கப்படுகிறது. எங்களுக்கு உப்புமா போன்ற உணவுகள்தான் கிடைக்கிறது. நோயாளிக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதில் 10ல் ஒரு பகுதி கூட எங்களுக்கு தரமான, சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. செங்கல் சூளையில் பணியாற்றும் கொத்தடிமைகளின் நிலைபோலத்தான் நாங்களும். கோவையில் இரவு 10.30 மணிக்கு சாப்பாடு வந்தது. ஆர்எம்ஓவிடம் கேட்டதற்கு, ஏன் தாமதமாக கொடுத்தால் சாப்பாடு இறங்காதா என்றார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தோம். தற்போது டீன் அசோகன் மாற்றப்பட்டுள்ளார். நாங்கள் வேலை செய்யப் பயப்படவில்லை. ஆனால் நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் உயிர் இருக்கிறது. களத்தில் பணியாற்றும் நாங்கள்தான் மருத்துவமனையில் முதுகெலும்பு. ஆனால் எங்களை கவனிக்க ஆள் இல்லை. இவ்வாறு பயிற்சி டாக்டர்கள் குமுறலை தெரிவித்தனர்.
கூண்டுதான் பெஸ்ட்... பயிற்சி டாக்டர்கள் மேலும் கூறுகையில், ‘‘கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் டாக்டர்கள் சென்று விடலாம். பின்னர் நோயாளியை கூண்டுக்கு வெளியே உட்கார வைத்து பாதுகாப்பான கையுறை அணிந்து அவரை பரிசோதிக்கலாம். இதனால் டாக்டர்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்படும். நோயாளி தும்மினால், கண்ணாடியில்தான் படும். பின்னர் அதை சானிடைசர் போட்டு கழுவிவிடலாம். டாக்டர்களுக்கோ, ஊழியர்களுக்கோ பாதிப்பு இல்லை. இந்த திட்டம் சமீபத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. இந்த கூண்டு செய்ய 10 ஆயிரம் ரூபாய்தான்.
ஆனால், எல்லா மருத்துவமனையிலும் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அரசாணை பிறப்பித்தால் போதும் உடனடியாக செய்யலாம். ஏன் டாக்டர்களே சொந்த பணத்தில் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாணை பிறப்பிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு வாங்க வேண்டிய கவச உடைகளுக்கான கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். இதை எல்லாம் அரசு செய்யலாம். எங்களையும் அரசு முதன்மையாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களில் பலரை இந்த கொரோனா நோய் தொற்றை விரட்டுவதற்குள் நாங்கள் இழந்திருப்போம்’’ என்றனர்.
தீபக் குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஞானம்: கவிஞர் தணிகை
தீபக் குப்தா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆமதாபாத் ஒரு நிகழ்வில் நீதிபதியாக இல்லாமல் ஒரு சாதாரணக் குடிமகனாக இந்தியனாக இருந்து இதை சொல்கிறேன் என இந்திய ராணுவத்தையும், நீதிமன்றங்களையும் விமர்சிப்பது தவறாகாது அது மேலும் அந்த அமைப்புகளை Dசெழுமைப்படுத்த உதவும் என்று வெளிப்படையாக திறம்பட பேசியுள்ளார்.
இந்த கொரொனா அலையில் இது போற்றப்பட மறந்த நிலை காணப்படுகிறது. உண்மையில் இது போன்ற கருத்துகள் வரவேற்கத் தக்கவை. அதுவும் ஒரு தலைமை நீதிமன்ற நீதிபதியில் வழியாக வருவதை பாராட்டாமல் இருக்கவே கூடாது.
இந்தியா போன்ற மிகவும் பெரிய ஜனநாயக நாட்டில் நிர்வாகம், நீதி, பாதுகாப்பு பற்றி எல்லாம் இன்னும் மிகவும் தொலை தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எவராவது எழுதி விட்டாலோ, பேசிவிட்டாலோ உடனே அவர் தேசத் துரோகியாக கருதப்படுவதும்,அவர்
எதிரியாக பார்க்கப்படுவதும் உடனே அவர் வேண்டாத தீண்டத் தகாத தீட்டாக கருதப்படுவதும் போன்ற நிகழ்வுகள் நிறைய உண்டு.
அதை எல்லாம் தவறு என்றும் , பேச்சுரிமை, எழுத்துரிமை, அடிப்படை உரிமைகள் அனைவர்க்கும் உண்டு என்பது ஜனநாயக அமைப்புகளுக்கு அடங்கியது அது மேலும் ஜனநாயக அமைப்பை நல்லதாக்கும் என்றும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் கூட அது போன்ற நிகழ்வுகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இராணுவம், நீதிமன்றம், நிர்வாகத் துறைகள், காவல் துறை போன்றவற்றை பொது சேவை செய்வார் நாட்டின் தன்னார்வலர்கள் கடந்து சென்றாக வேண்டிய கட்டாயம் உண்டு அவர்கள் உண்மையாக தங்களது சேவைப்பணியைச் செய்தால். அது சில நேரம் அரசின் அமைப்புகளுக்கு உதவிகரமாகவும் குளிர்ந்த மனநிலையையும் அளிக்கும் சில நேரங்களில் சில சம்பவங்களில் மாறுபட்ட நெருடல்களை எல்லாம் விளைக்கும். அதற்காக அந்த சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் பாதிக்கப்படவும் கூடாது. அவர்கள் உரிமை, உடமை, குடும்பம், உயிர் ஆகியவையும் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நமது அரசில் அதன் துறைகளில் இருப்பதாகத் தெரியவிலை அதைப் புரிந்து நடந்து கொள்ளும் மக்களும் இல்லை.
நாட்டின் மிகவும் முக்கியமான அடிப்படை அமைப்புமுறைகளை நிறுவுவதில் ஏராளமான போலித்தனம் இலஞ்ச லாவண்யங்கள்,குற்றங்கள், புதைந்து கிடக்கிறது இதை எல்லாம் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் புரிந்து உணர்ந்து தெரிந்து நடந்து கொள்ளும் போதுதான் சிறிது அளவாவது முன்னேற்றப் படிகளில் ஏற முடிந்து நிர்வாகம் மேம்படும். மக்களுக்கும் நல்லது மலரும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
ட்ரான்ஸ்:சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை
2020 பிப்ரவரியில் வெளியான ட்ரான்ஸ் என்னும் மலையாளப் படம் நேற்றுப் பார்த்தேன். கொஞ்சம் பொறுமையிருந்தால் அனுபவித்துப் பார்க்கலாம். படம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து கொச்சி, மும்பை ஐரோப்பிய நாடான நெதர்லாந்து வரை சென்று முடிகிறது. நமது கௌதம் வாசுதேவ மேனன் இயக்குனர் இதற்கு முக்கிய வில்லன் பாத்திரம்...
மிகவும் அருமையாக எப்படி யேசுவின் பேர் சொல்லி சில இயக்கங்கள் போலித்தனமாக பெரும் வருவாய் ஈட்டுகின்றன எனச் சொல்லப்பட்டு இருக்கிறது. நான் கடவுள் படத்தில் எப்படி பிச்சைக்காரர்களைப் பின்னி ஒரு கூட்டம் மிகவும் கேவலமாக இயக்குகிறதோ இந்தப் படத்திலும் அதுதான் ஆனால் நாசூக்காக வெகு அழகாக பார்வைக்கு உறுத்தாத வகையில் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.
நஸ்ரியாவும் அவரது கணவர் பாசிலும் அருமையாக் வாழ்ந்துள்ளனர் படத்தில் முக்கியமாக. படம் 35 கோடியில் எடுக்கப் பட்டதாக சொல்லப்பட்டுள்ளது ஆனால் அதை விட பிரமிப்பூட்டும்படியாக நிறைய செலவில் எடுக்கப்பட்டதான தோற்றத்தைக் கொடுத்துள்ளது. ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் நாயகன் தமது பங்களிப்பை செய்து இருக்கிறார். அவ்வளவு இயல்பாக எல்லாம் இருக்கிறது படம் என்று தெரியாமல் நான் மூழ்கிப் போய்விடுகிறோம்.
அனால் 170 நிமிடம் ஒதுக்கியாக வேண்டும். அதை இதை எல்லாம் செய்து கொண்டு பார்க்கக் கூடாது.
அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்: கவிஞர் தணிகை
தமிழக அரசின் தலைமை அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லி அமல் படுத்தி இருந்தது இன்னும் மாறாதிருப்பதால் இந்த தமிழ்ப் புத்தாண்டு என எடுத்துக் கொண்டு இந்த தமிழ்ப் புத்தாண்டு மிகவும் அரிய தமிழ்ப் புத்தாண்டாக இருப்பதால் அனைவர்க்கும் வாழ்த்தை தெரிவிப்பதில் மகிழ்வடைய வேண்டியிருக்கிறது அது எப்போது எப்படியாக இருந்தாலும் உயிரோடு இருந்து உயிரோடு இருக்கும் அனைவர்க்கும் இனியாவது உயிர் பயம் போகட்டும் வரும் நாளெல்லாம் நன்மையே விளையட்டும் என்ற நோக்கத்தில் வாழ்த்தை பரிமாறிக் கொள்கிறோம்.
வாழ்க்கை என்றாலே நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லாமே கலந்துதான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் ஏன் இது போன்ற விழாக்களில் வாழ்த்தை பரிமாறிக் கொள்ள வேண்டி இருக்கிறது என்றால் ஒரு ஆறுதல் இனியேனும் நல்லவை நடக்காதா நடக்கட்டுமே என்ற ஒரு நம்பிக்கை பிறக்கட்டுமே என்ற ஆதங்கத்தில் தான். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்களே என்பது போல. தை மாதமே சூரியன் சற்று பூமியின் பார்வையில் வடக்கு நகர்ந்து உத்திராயணம் என உதிப்பது அறுவடை நாள் எனச் சொல்வது , ஆடி முடிந்து ஆவணி வாக்கில் தட்சிணாயணம் என தெற்கு நோக்கி நகர்வது 12 மாதங்களில் அந்த 6 மாதம் அப்படி என்றும் இந்த ஆறு மாதம் இப்படி என்றும் கணக்கு உண்டு.
தை முதல் நாள் தாம் தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாற்றியும் வைத்துப் பார்த்தாகிவிட்டது என்றாலும் அவரை முதல்வராக கடைசியில் விடவில்லை இந்த மக்கள் எங்கே மறுபடியும் வந்தால் தமது முதல் கையெழுத்தை மதுவிலக்குக்காக போட்டு மதுக்கடைகளை இல்லாமல் செய்துவிடுவாரோ என்று இவர்தான் மதுக்கடைகள் வரக் காரணமே என்ற அரசியல் வார்த்தைகள் சொல்லப்பட்டாலும் இறப்பு வரும் அது மிக அருகே வரும் என்று தெரிந்தவுடன் மனிதர்கள் மாறி தங்களால் முடிந்ததை செய்து விட்டு நல்லதை செய்து நல்ல பேர் எடுத்து மறைய வேண்டும் என்பதெல்லாம் இயல்புதானே...
எது எப்படியோ இந்த ஆண்டை சார்வரி வருடப் பிறப்பு என தமிழ்ப் பஞ்சாங்கம் சொல்கிறது...பஞ்சாங்கத்தில் சொல்லியபடிதான் இருக்கிறது...வைரஸ் காய்ச்சல் இருக்கும் என்றெல்லாம் இருந்ததை ஏற்கெனவே முன்பே குறிப்பிடப்பட்டிருந்தது என்ற செய்தி எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்...
இது சார்வரி வருடம்...60 வருடத்தை திருப்பி திருப்பி இவர்கள் சுழற்றுவார்கள்... அதில் மறுபடியும் 34 ஆவது ஆண்டாக சார்வரி வருகிறது ஆங்கில கணக்குக்கு 2020 2021,கலியுகாதி 5122, திருவள்ளுவராண்டு : 2051 2052 திருவள்ளுவராண்டையே நமது தமிழ்ப் புத்தாண்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தமிழ் சொல்வோரும் உண்டு...
சார்வரி ஆண்டுப் பலன்:
சார்வரி யாண்ட தனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயாற் றிரிவார்கள் மாரியில்லை
பூமிவிளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏமமின்றிச் சாவாரியம்பு
சார்வரி ஆண்டில் எல்லா சாதி உயிர்களுமே
குளிர் சார்ந்த நோயற் திரிவார்கள் மழையில்லை
பூமி விளைச்சல் இல்லாமல் மனிதர்களும் மற்ற உயிர்களும்
இது தான் நமது தமிழ் அறிவுக்கு எட்டிய வகையில் அந்தப் பாடலுக்கான தெளிவுரையாக இருக்கிறது. பஞ்சாங்கத்தில் சங்கராந்தி புலி மேல் அவதரித்துள்ளதாகவும் 27 நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் ஆயில்யம் வரை 9 நட்சத்திரத்துக்கு உத்தம பலன்களும், அடுத்த மகம் முதல் கேட்டை வரை 9 நட்சத்திரத்துக்கு மத்திமமான பலனும் கடைசி 9 நட்சத்திரத்துக்கு மூலம் முதல் ரேவதி வரை அசுப பலன்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது...
No.
Name
Name (English)
Gregorian Year
No.
Name
Name (English)
Gregorian Year
01.
பிரபவ
Prabhava
1987–1988
31.
ஹேவிளம்பி
Hevilambi
2017–2018
02.
விபவ
Vibhava
1988–1989
32.
விளம்பி
Vilambi
2018–2019
03.
சுக்ல
Sukla
1989–1990
33.
விகாரி
Vikari
2019–2020
04.
பிரமோதூத
Pramodoota
1990–1991
34.
சார்வரி
Sarvari
2020–2021
05.
பிரசோற்பத்தி
Prachorpaththi
1991–1992
35.
பிலவ
Plava
2021–2022
06.
ஆங்கீரச
Aangirasa
1992–1993
36.
சுபகிருது
Subakrith
2022–2023
07.
ஸ்ரீமுக
Srimukha
1993–1994
37.
சோபகிருது
Sobakrith
2023–2024
08.
பவ
Bhava
1994–1995
38.
குரோதி
Krodhi
2024–2025
09.
யுவ
Yuva
1995–1996
39.
விசுவாசுவ
Visuvaasuva
2025–2026
10.
தாது
Dhaatu
1996–1997
40.
பரபாவ
Parabhaava
2026–2027
11.
ஈஸ்வர
Eesvara
1997–1998
41.
பிலவங்க
Plavanga
2027–2028
12.
வெகுதானிய
Vehudhanya
1998–1999
42.
கீலக
Keelaka
2028–2029
13.
பிரமாதி
Pramathi
1999–2000
43.
சௌமிய
Saumya
2029–2030
14.
விக்கிரம
Vikrama
2000–2001
44.
சாதாரண
Sadharana
2030–2031
15.
விஷு
Vishu
2001–2002
45.
விரோதகிருது
Virodhikrithu
2031–2032
16.
சித்திரபானு
Chitrabaanu
2002–2003
46.
பரிதாபி
Paridhaabi
2032–2033
17.
சுபானு
Subhaanu
2003–2004
47.
பிரமாதீச
Pramaadhisa
2033–2034
18.
தாரண
Dhaarana
2004–2005
48.
ஆனந்த
Aanandha
2034–2035
19.
பார்த்திப
Paarthiba
2005–2006
49.
ராட்சச
Rakshasa
2035–2036
20.
விய
Viya
2006–2007
50.
நள
Nala
2036–2037
21.
சர்வசித்து
Sarvajith
2007–2008
51.
பிங்கள
Pingala
2037–2038
22.
சர்வதாரி
Sarvadhari
2008–2009
52.
காளயுக்தி
Kalayukthi
2038–2039
23.
விரோதி
Virodhi
2009–2010
53.
சித்தார்த்தி
Siddharthi
2039–2040
24.
விக்ருதி
Vikruthi
2010–2011
54.
ரௌத்திரி
Raudhri
2040–2041
25.
கர
Kara
2011–2012
55.
துன்மதி
Dunmathi
2041–2042
26.
நந்தன
Nandhana
2012–2013
56.
துந்துபி
Dhundubhi
2042–2043
27.
விஜய
Vijaya
2013–2014
57.
ருத்ரோத்காரி
Rudhrodhgaari
2043–2044
28.
ஜய
Jaya
2014–2015
58.
ரக்தாட்சி
Raktakshi
2044–2045
29.
மன்மத
Manmatha
2015–2016
59.
குரோதன
Krodhana
2045–2046
30.
துன்முகி
Dhunmuki
2016–2017
60.
அட்சய
Akshaya
2046–2047
சித்திரைக் கனி என்று கனி வர்க்கங்களை எடுத்து வைத்து அந்த ஆண்டை வரவேற்கும் பழக்கமும் உண்டு. அந்த மேசை மீது திருவள்ளுவர், கம்பர்,இளங்கோ, அவ்வையார், பாரதி போன்ற மாபெரும் தமிழ்ப் புலவர்களின் படங்களை எடுத்து வைத்துப் பார்த்ததும் இந்த ஆண்டின் எங்கள் வீட்டுச் சிறப்பாக கொள்கிறோம்...