Sunday, December 31, 2017

நானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவிஞர் தணிகை

 நானும் அசை போடுகிறேன் உழவு மாடு செக்கு மாடாய்: கவிஞர் தணிகை

Image result for goodbye 2017


2018ல் அனைவரும் அடி எடுத்து வைக்கிறோம் நாளை அதாவது இன்றிரவு 12.01 மணியிலிருந்து. 2018 மிக நல்ல தருணங்களை அனைவரது வாழ்விலும் விளைவிக்க வாழ்த்து சொல்லி இந்தப் பதிவில் நுழைகிறேன். இது ஆங்கிலப் புத்தாண்டு,ஆனாலும் நல்லவைக்கு வாழ்த்து சொல்வதும் தீயவற்றை வீழச் சொல்வதும் தமிழர் மரபுதானே. எனவே உயிரில் தமிழும், உணர்வில் தமிழும் நாம் இருக்கிறோம் ஆனாலும் உடலளவில் ஆடையில் ஆங்கிலமுமாக உலகே மாறிக் கொண்டிருக்க அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு குறையும் நேர்ந்துவிடப் போவதில்லைதான். அத்தோடு இந்த கடந்த ஆண்டில் என்ன என்ன நிகழ்வுகள் என எனது எண்ண ஓட்டத்தையும் பின்னோக்கி செலுத்த முயற்சிக்கிறேன்.

இதே போல கடந்த ஆண்டின் ஜனவரியில் எனக்கு ஒரு காலண்டரை அதில் இந்துமதக் கடவுளான பள்ளி கொண்ட ரங்கநாதர் இருக்கிறார் எனவும் தாம் கிறித்தவ மதம் சார்ந்தவர் மேலும் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் மேலும் கம்ப்யூனிஸ்ட் தொடர்பு எல்லாம் உள்ளவர் என்று சொல்லிக் கொண்ட எமது கல்லூரியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடுத்தார். அந்தக் காலண்டர் இன்றுடன் முடிந்துவிட்டது. அது ஒரு தினசரிக் காலண்டர். ஆனால் அந்த நபர் எமது கல்லூரி பணியை முறித்துக் கொண்டு சென்று சில மாதங்களாகிவிட்டது. அதை அடுத்து கல்லூரி அருகே இருக்கும் இண்டியன் காபி ஹவுஸ் காலண்டரை அனைவர்க்கும் வாரி வாரி வழங்கியது இந்த ஆண்டு காலண்டரை போடவில்லை. இந்த ஆண்டு பொதுவாகவே காலண்டர் பிரிண்டிங்க் 40 சதம் குறைந்து விட்டதாக அறிவிக்கைகள் வெளிவந்தன.

இந்த ஆண்டு இன்னும் காலண்டர் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக நன்றாகவே இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

பொங்கல் வழக்கம் போல முடிந்தது. கல்லூரியில் அந்தப் பொங்கல் பை பரிசாக ஒன்று அனைவர்க்கும் கொடுக்கப்பட்டது ,...அரிசி, பொங்கல் வகை பொருட்களுடன் தாம்...கடந்த ஆண்டில் அரசு எதுவும் கொடுக்கவில்லை. இந்த ஆண்டில் பொங்கல பை ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ அஸ்கா சர்க்கரை, முந்திரி, திராட்சை ஏலக்காயுடன் இரண்டு அடி நீள கரும்புத் துண்டும் தருவதாக ஜனவரி 5 முதல் சுமார் 2 கோடி பேருக்கு 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு தர இருப்பதாக அறிவித்துள்ளது அரசு தமிழ் நாடு அரசு.

கல்லூரியில் ஆய்வு நடத்த வந்த ஒரு முன்னால் துணை வேந்தர் நன்றாக இன்னும் எழுதுங்கள் கல்லூரிக்காகவும் எழுதுங்கள் என்று சொல்லிச் சென்றார். கல்லூரி என்னை முகாம் மற்றும் பொது மக்கள் தொடர்பு அலுவலர் என பி.ஆர்.ஓ என பெயர்ப் பலகை, ஐ.டி.கார்ட், விசிட்டிங் கார்ட் எல்லாம் அடித்து தந்து வருகைப்பதிவேடு மற்றும் அலுவலக பதிவுகளிலும் மாற்றித் தந்தது.

மகன் வேறு ஒரு கைபேசி ஆன்ட்ராய்ட் வாங்கிக் கொண்டு அதாவது அவனுக்கு கிடைத்த கல்வி உதவித் தொகையில் வாங்கிக் கொண்டு எனக்கு அவன் உபயோகித்த கை பேசியைக் கொடுத்தான் அது முதல் நானும் வாட்ஸ் ஆப் வாசிக்க ஆரம்பித்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன்.

உடனே எனது கல்லூரித் தோழர் நீதிபதியாக இருப்பவர் கரூர் ஒரு அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்ட நிகழ்வில் பேச அழைத்து 5000 ரூபாய் கொடுத்து என்னை உறுதிப்படுத்திக் கொண்டார். அதை அடுத்து சேலத்து ஜங்சன் அருகே உள்ள ஒரு ஹோட்டலிலும் பெயர் மறந்து விட்டது ஒரு கல்லூரி நிகழ்வு சந்திப்பிலும் சென்று கலந்து கொண்டேன்.

நதி நீர் இணைப்பு தொடர்பாக சேலத்தில் ஒரு கூட்டத்திற்கு நண்பரும் நானும் முயற்சி செய்து நடத்தினோம். அதன் தொடர்பாக குளித்தலையில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் நீர் மேலாண்மை பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்களுடன் கலந்து கொண்டு ஒரு கூட்டத்தில் பேசினேன்.

ஆனால் அவர் சேலம் சட்டக் கல்லூரிக்கு வந்து கலந்து கொண்டபோது நான் கலந்து கொள்ள இயலவில்லை. ஆர்வம் காட்டவில்லை. மேலும் அது உடலியல் ரீதியாக முடியாத காரியாமாகிவிட்டது.

பழைய நண்பர்கள் பலர் இணைந்தனர் . எனது சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்களின் சொத்தை கை மாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

என்னை ஏமாற்றிச் சென்ற துளஸி எங்கிருக்கிறார் எனத் தெரிந்து கொண்டபின் அவர் ஐயாயிரம் ஐயாயிரமாக 3 முறை கொடுத்து விட்டு மறுபடியும் சென்று பதுங்கிக் கொண்டார். அவரது துணைவியார் அவ்வளவு நல்லவராக இருக்கிறார்.

வழக்கம் போல இந்த ஆண்டும் திருவில்லிப்புத்தூர் ரத்தினவேல் அய்யா அவர்கள் ஒரு தொகையை அவர் அதை வெளீயில் குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு எனது மகன் கல்விச் செலவுக்கு பயன்படுத்துக என நான் கேட்காமலே எனது வரவு வங்கிக் கணக்கில் வரவு வைத்து புளகாங்கிதமடைய வைத்திருந்தார்.

ஏன் இதை எல்லாம் நான் தெரியப் படுத்துகிறேன் எனில் மனித வாழ்வில் எதுவுமே எப்படியும் நடக்கலாம் எனது பெரிய சகோதரி ஒருவர் மறைந்தது போல...எனவே இதை எல்லாம் பதித்து விட்டால் நின்று விடும் என்பதற்காகத்தான்.

எனது தியான வழிச் சீடர் தங்கவேல் பிரவீன்குமார் திருமணம் பிப்ரவரி 6 ஆம் தேதி அருமையாக நடந்தது. அதற்கு எனது மனநிறைவுடன் ஈடுபட்டு எனது பங்கை ஆற்றினேன் மனநிறைவுடன் சில பரிசுகளையும் அளித்தேன்.

அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் மற்றும் சீரகம் ஊறவைத்த நீர் வடித்த முளை வந்திருக்கும் பயிரை சில ஸ்பூன்கள் அனேகமாக இரண்டு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட ஆரம்பித்தது நல்ல பலனளிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்று நீரிழிவு வியாதி வாங்கியதை நன்றாக கட்டுப்படுத்திக் கொண்டேன்.

நடைப்பயிற்சியை, தியானத்தை முடிந்தளவு கைக்கொண்டு விட்டு விடாமல் செய்தே வருகிறேன். ஆனாலும் கல்லூரி செல்லும் நாட்களில் அதை பெரிதும் செய்ய முடிவதில்லை. சேலம் நடைமேடையில் என்னதான் நடந்தாலும் அது திருப்தி அளிக்கவில்லை. மேலும் தியானம் செய்யவோ , எழுதவோ பெரும்பாலும் நேரம் கிடைக்காதபோதும் அவ்வப்பொது எழுதி வருகிறேன் இந்தப் பதிவையும் சேர்த்து சுமார் 195 பதிவுகளை இட்டுள்ளேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். அதில் தற்போது வந்துள்ள அருவி, வேலைக்காரன், தீரன் போன்ற படங்களும், சிறு சிறு பட்ஜெட்டுடன் எடுக்கப்பட்ட படங்களும் மிக நன்றாகவே இருந்தன.

ஓமலூர் வரை சனிக்கிழமைகளில் என்னை மதியம் வீடு வரும்போது கொண்டுவந்து விட்டுக் கொண்டிருந்த சண்முகம் டாக்டர் படித்து முடித்து சென்று விட்டதால் அரை வேலை நாள் முடிந்ததும், இனி என்ன செய்வதென்று யோசித்து வருகிறேன். ஏன் எனில் சனி நீராட எண்ண்ய்க் குளியல் நடத்த வேலை நாளில் முடிவதே இல்லை பணிக்கு சென்று வந்து சனி நீராட மாலை சுமார் மாலை 5.45க்கு மேல் ஆகிவிடுவதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் முடிவதில்லை. ஒன்று எழுத வேண்டியது அல்லது நடைபயிற்சி மேற்கொள்ள‌ வேண்டியது மட்டுமே இதுவரை இரண்டில் ஒன்றை மட்டுமே செய்ய முடிகிறது இனி எப்படியோ?

கல்லூரியில் கல்லூரி முதல்வர் கல்லூரியில் தினம் அல்லது இரு நாளுக்கொருமுறை அல்லது சில நாளுக்கொருமுறையாவது பொன்மொழிகள் எழுத வேண்டிக்கொண்டார் எனவே அந்தப் பிடித்தமான பணி தொடர்கிறது இது 2018ல் மேலும் மேலும் பல படிகள் உயர உயரச் செல்லும் என நினைக்கிறேன்.

இந்த ஆண்டில் மகன் மணியம் இரண்டாம் செமஸ்டரையும் மிகவும் டஃபாக இருந்ததாகவும் எனினும் இவன் தேறிவிட்டது திருப்தியையும் 3 ஆம் செமஸ்டரிலும் கடந்த வாரத்தில் தேறி விட்டதும் நடந்தேறியது. மற்றபடி இன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொல்லி உள்ளது ஊடகத்தை அலை பாய வைத்துள்ளது.

ஊராட்சி தேர்தலை நடத்தாமலே தமிழக அரசு காலம் கடத்த இப்போது தெருவிளக்குகள் எல்லாம் எரியாமல் இருட்டில் இருந்தாலும் அவை அப்படியே கிடக்கின்றன அந்தளவு நல்லாட்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், தினகரன் எம்.எல்.ஏ ஆனதும் இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தானதும், தேர்தல் ஆணையம் வெறும் வேடிக்கை பார்க்கும் நிலையிலிருந்து தேர்தல் நடத்தியதும் இந்த ஆண்டில்தான்.

வேறு ஒன்றும் நினைவுக்கு எட்டவில்லை எனவே இத்துடன் விட்டு விட வேண்டியதுதான் இந்த ஆங்கில 2017ஆம் ஆண்டை இனி 2018ல் இதை விட மிக மிக நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்...என்ற உறுதியோடு.

உங்கள் அனைவர்க்கும் எனது வணக்கங்களும், வாழ்த்துகளும்  வழக்கம்போல எப்போதும் போல‌...உரித்தாகின்றன...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

5 comments:

  1. உங்களுக்கும் இனிய புது வருடவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete