ஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவிஞர் தணிகை
பாஹு பலியைப் போல, கோமதீஸ்வரர் போல இரண்டும் ஒன்றுதானே? அது போல அண்ணாமலை திப்பு சுல்தான் கரட்டின் உச்சியில் நின்று எரிந்து கொண்டே நின்ற தினமான கார்த்திகைத் தீபத்தன்று ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் இலட்சக்கணக்கான கூட்டம் சென்று விளக்கேற்றி வழிபடுகிறது.
நினைத்த வேண்டுதல் அப்படியே அடுத்த ஆண்டுக்குள் நிறைவேறிவிடுவதாக திருமணமான ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து குலாவி இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். கட்சிக்காரர்களும் பணக்காரர்களும் அங்கே ஒரு மண்டபம் எழுப்பத் திட்டமிட்டு மாபெரும் ஒரு மண்டபத்தை எழுப்பியும் விட்டார்கள். அதில் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அண்ணாமலை நன்கொடை கேட்டபோது இல்லை என மறுத்தவர்கள் எல்லாம் கூட அவனை கடவுளாக நினைத்து பேர்களை இணைத்துப் போட்டுக் கொண்டார்கள் அவன் சேவைக்கு இவர்கள் அடிமையாகி. இலவச நீர் மோர், தண்ணீர்ப் பந்தல்கள், அன்ன தானக் கூடங்கள், குளிர்பான விற்பனைகள் என ஆண்டுக்கு ஆண்டு கடைகள் போட ஆரம்பித்து விட்டனர். மினி அண்ணாமலையாக சில ஆண்டுகளில் எழுந்த அது திருவண்ணாமலையின் கூட்டத்தை ஒரு நாள் மிஞ்சும் எனப் பேசிக்கொண்டார்கள்.
திருவண்ணாமலையில் கிரி வலம் போய் வருவது போல இங்கு அணையைச் சுற்றி ஒரு வலம் வந்து வேண்டுகோளை வைத்து இந்த அண்ணாமலை மறைந்து எரிந்த பாறையருகே வந்து பெரிதும் பிரார்த்தனை செய்தார்கள் ...அவர்களுக்கு இங்கு கேட்டதெல்லாம் கிடைத்தது என புகழ் பரவ ஆரம்பிக்க மாநில முதல்வர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட தனிப்பட்ட பயணம் வந்து செல்ல ஆரம்பித்தனர். இதை அரசு சார் விழாவாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்திய மேட்டூர் தொகுதி உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், மந்திரிகளும் கட்டியம் கூறினார்கள்.
ஆனால் இது ஆரம்பித்த கதை என்ன வென்றால் அண்ணாமலை எரிந்து நின்றுபோன மறு ஆண்டில் அவரது நண்பர்கள் கார்த்தி, பார்த்தி, பாரதி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அங்கு வந்து ஒரு தீப்பந்தத்தை ஏற்றி விட்டு இரவு முழுதும் அங்கேயே தங்கி இருந்து அது என்ன காற்றடித்தாலும் அணையாமல் நிறைய எண்ணெய் விட்டு திகு திகு என எரிய பார்த்தபடி அந்த நாளை நினைத்தபடி அன்றைய இரவு முழுதும் அங்கேயே கழித்தனர்.
மறு ஆண்டில் ஒரு அண்டாவை எடுத்து வந்து அதில் நெய்விட்டு சீலைத் துணியை நினைத்து பற்ற வைக்க ஆரம்பித்தார்கள்...இவர்கள் ஏற்றிய தீபம் மேட்டூரைச் சுற்றி சுமார் 35 கி.மீ தெரிவதாக பேச்சுகள் பரவி பல மாவட்டஙக்ளில் இருந்தும் மக்கள் கூட ஆரம்பித்தனர், திருவண்ணாமலைக்கு அவ்வளவு தூரம் செல்ல முடியாதார் எல்லாம் இங்கு வர ஆரம்பித்துவிட்டு அதை விட இதே நன்றாக இருக்கிறது. கேட்டதெல்லாம் நிறைவேறுகிறது என வாய் ஓயாமல் பேசிக் கொண்டார்கள்.
அவர்களின் உறவு, நட்பு என வட்டம் மிகவும் குறைந்த காலத்தில் விரிவடைந்தது
அடுத்த வருடம் இந்தத் திருவிழா நடக்கும்போது வந்து பாருங்கள். உங்களுக்கும் தேனும் தினைமாவும் தவறாமல் கிடைக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவர்க்கும் திருவிழாக்குழு தேனும் தினைமாவையும் தவறாமல் கொடுக்க ஏற்பாட்டை விரிவாக விரிவாக்கி ஆண்டுக்கு ஆண்டு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய காடு தோட்டம் எல்லாம் வாங்கி தினையரிசி மட்டுமே பயிரிட்டு வருகிறது. தேன் மட்டும் இதற்கு கொல்லிம்லையிலிருந்து தவறாமல் வந்து சேர்ந்து கொள்கிறாது. பக்கத்திலேயே காவிரி நதி தீரம் இருப்பதால் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு ஓடம், பரிசல் போக்குவரத்தும் பௌர்ணமி இரவு முழுதும் நிற்காமல் நடக்கிறது.
கேரளாவுக்கு அய்யப்பான் , திருவனந்தபுரம், ஆந்திராவுக்கு திருப்பதி போல தமிழகத்துக்கு பழனியோ, திருவண்ணாமலையோ திருவரங்கமோ அல்லாமல் மேட்டூர் கார்த்திகை எல்லாவற்றையும் மிஞ்சத்தான் போகிறது...
அட நீங்களும் தாம் வந்து கலந்து கொண்டு வேண்டித்தான் பாருங்களேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

விழா சிறக்கட்டும்
ReplyDelete