சத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.
மஹேஸ்வரி சத்யராஜ் தயாரிப்பில் தமது மகனுக்காக தயாரித்தளித்திருக்கும் படம். நல்ல முயற்சிதான். நல்ல கதைதான் ஆனால் இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியுமா என பிற்பகுதியில் தோன்றுகிறது.
ஒரு குழந்தை காணாமல் போய்விடுகிறது அது பற்றிய எந்த தடயங்களுமே இல்லை. முன்னால் காதலனை காதலி தற்போது இன்னொருவன் மனைவியானவர் அழைத்து தம் குழந்தையை தேடப் பணிக்கிறாள்.
தேடும்போது அவளுக்கு குழந்தையே இல்லை என்கிறார்கள் அனைவரும். காவல் துறை உட்பட. அவளுக்கு கோமா நிலைக்கு விபத்தின் காரணமாக சென்றது முதல் நினைவு இல்லை. மனநிலை சரி இல்லை என்கிறார் அவர் கணவரே. அக்கம் பக்கத்தில் உள்ளாரையும் அவர் வேண்டி அப்படியே சொல்ல வைக்கிறார்.
ரெம்யா வா ரம்யா நம்பீசனா அவருக்கு நல்ல வாய்ப்பு நன்றாக செய்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் போலீஸ் ஆபிசர். போலீஸ் ஆபிசராக இருந்தால் வாயைத் திறந்து கூட பேசமாட்டார்களா என்ன? இன்னும் நன்றாக செய்திருக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார். அருமையான வில்லி வேடம். சொதப்பி விட்டார்.
ஆனந்த் ராஜ் நீண்ட நாளுக்கும் பின் கல கலக்க வைக்கிறார் அளவான நேரம்ம் தமக்கு கொடுக்கப்பட்டிருந்தும் கூட.
சதீஷ் பாபு கானாக வந்து பாதி வில்லனாகி மீத கதாநாயகனுக்கு துணையாகி இறந்தும் தமக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவேற்றி இருக்கிறார். நிழல்கள் ரவியும் வழக்கமான அப்பா ரோல்.
சிபிராஜ் ஒரே தாடி மீசை அதே கெட் அப். ஆனால் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு தந்தை நல்ல படங்களைக் கொடுத்து நிலை நிறுத்த முயல்கிறார். நல்ல முயற்சிதான். ஆனால் இன்னும் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன் வந்த நாய் தோழனாயிருக்கும் படம் இதை விட இவருக்கு நன்கு பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்தது அந்தப்படம் ஆனாலும் இந்தப்படத்தை பார்க்கலாம்.
ரிச்சி:
வேறு ஆளே தமிழில் இல்லை நிவின் பாலி என்னும் பிரேமம் படத்தில் நடித்த மலையாள நடிகர். ஒரே மாதிரியான முகமும் தோற்றமும். கிறிஸ்மஸ் வருகிறதை நினைவூட்ட. இந்தப் படம் கடற்கரை மீனவ சமுதாயம் சர்ச் பாதர். என்று வலம் வருகிறது.
சிறுவர்களாக இருக்கும்போது ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் குத்தி விட்டு தப்பி விடுகிறான். இந்த சகாயம் என்னும் ரிச்சி மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து தந்தை பாதார் பிரகாஷ் ராஜ் இவனை தம் மகனாக சொல்வதில்லை. ஆனால் இவன் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தண்டனை முடிந்து வந்து அந்தக் கிராமத்தின் மீனவர்களை அடக்கி ஆளும் ஒருவருக்கு தலைமை அடியாளாக வேலை பார்த்து அனைவர்க்கும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறான் தமது முரட்டுக் குணத்தால் அடிதடியால் கொலை போன்ற வன்முறைகளால்...
இவனது நண்பன் செய்த குற்றத்திற்கு இவன் அனுபவிக்கும் தண்டனையை மனதில் வைத்துக் கொண்டு அனைவரையும் தண்டிக்கிறான். கடைசியில் அப்படிஓடிய நண்பனையும் கொன்று, தாமும் செத்து இப்படி போகிறது படம்.
ஆனால் அதற்குள் பட ஆரம்பத்தில் இமாலய பில்ட் அப்... அப்படி இப்படி என பத்திரிகை வெளியீடு, உலகையே உலுக்கப் போவதாக..உலைகையே அழிக்கப்போவதாக உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப் போவதாக, பிரமிக்க வைக்கப் போவதாக எல்லாம் புஸ்....
தேவையில்லாத தோரணங்கள் ...ரிச்சி சாதாரண ஒரு சினிமாத் திரைக்குச்சி. ஒரு பூச்சி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteநன்றி
thanks sir vanakkam.
ReplyDelete