கண் கெட்ட பின்னே சூரிய உதயம்: கவிஞர் தணிகை

ஆர்.கே நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளரை விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் ஆதரிக்கிறதாம்.
அதற்கு ஏகப்பட்ட விளக்கங்களை அளித்திருக்கிறார் வைகோ. மத்திய காவிக்கட்சியை அ.தி.மு.க ஆதரிக்கிறது அது மதவாதக் கட்சி என....
இவரால்தான் சரியாக சொல்லப் போனால் 18 மாதங்களுக்கு முன்னால் இவர்கள் எல்லாம் தி.மு.க அணியை பதவிக்கு வரவே கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு மூன்றாம் அணியை ஏற்படுத்தி தமிழக அரசியலை இருண்டு போகச் செய்தவர்கள்
Now see his statement about his present stand of his party MDMK:
VAIKO:
மகத்தான தியாகத்தாலும், அளப்பரிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டையாம் திராவிட இயக்கத்தைத் தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவ சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளும், நாலாத் திசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு இருக்கின்றது. எனவே, ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக்கின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசியல்ல எது வேண்டுமானாலும் நடக்கும்...அரசியல்ல எவருமே நண்பருமல்ல எதிரியுமல்ல....எல்லாம் சகஜமப்பா...
மக்கள் மட்டும் அப்படியே இவர்கள் என்ன சொன்னாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு தாங்கள் மாறாமல் தலைவருக்கும் கட்சிக்கும் அப்படியே கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும். வெட்கப்பட வேண்டிய அரசியலில் இன்னும் என்ன என்ன வேடிக்கை என்றுதாம் நாமும் பார்ப்போமே...
அம்மா ஜெ இருக்கும் வரை இவர்கள் எல்லாம் தனியாக நின்றே மூன்றாம் அணி ஒன்றை உருவாக்கி வாக்கு வங்கியை பிரித்தே ஆக வேண்டும் என வெளித் தெரியாத பேரங்களுக்குள் அடிமைப் பட்டு தம்மை தொலைத்துக் கொண்டு தொலைந்து போனவர்கள் மறுபடியும் வீரம் பேச விளைந்து விட்டார்கள் வீரம் விளைந்த மண்ணில்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பார்ப்போம் நண்பரே தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்று
ReplyDeletethanks sir vanakkam
ReplyDeleteஅருமை.
ReplyDelete