உண்மையான தத்துவத்தை நம்ப யாருமே இல்லையா? கவிஞர் தணிகை
பட்டுக் கோட்டை அழகாக சொல்லிய பாடல்
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானியரும்
புத்தரும் யேசுவும்
உத்தமராம் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிசீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?
என்று
அது போல ஜெ குற்றவாளி என்று அனைவர்க்கும் தெரியும் நீதி மன்ற தீர்ப்பு அதை உறுதி செய்த தீர்ப்புகள் இருந்தாலும் அவருக்கு சிலையும் அவர் பேரில் கட்சியும் இயக்கமும் தேர்தலும் ஆட்சியும் மக்களும், எல்லா மதங்களிலுமே பிற மனிதர்க்கு துரோகம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சொல்லி இருக்கிற போது எப்படி ஒரு கிறித்தவன் பிற மனிதர்க்கு துரோகம் செய்ய முடியும்? எப்படி ஒரு முஸ்லீம் இன்னொரு மனிதரை துன்புறுத்த முடியும்? எப்படி ஒரு இந்து அடுத்துள்ள மனிதருக்கு வன்முறை செய்ய முடியும்? ஒழுங்காக கல்வி கற்ற எவராவது ஒரு மனிதரை கொலை செய்ய முடியுமா, வன்புணர்ச்சி செய்ய முடியுமா? கற்பழிக்க முடியுமா? சிறுமி, சிறுவர்களை துன்புறுத்த முடியுமா?
எல்லா அறிஞர்களும், யோகிகளும், சித்தர்களும், படித்த பெரும் அறிவாளிகளும் ஞானிகளும், எல்லாமே எல்லா உயிர்களும் நன்றாக துன்பமின்றி வாழ வழியே ஆசையே அளவில்லாமல் இருக்கக் கூடாது என்பதுதான் என்றார்கள் . ஆனால் எந்த வழியிலேனும் செல்வத்தை சேர்த்து வைத்துக் கொள்வதுதான் வாழ்க்கை, ஆட்சி, அரசு, கட்சி, என்ற கோட்பாடுகளிலேயே உழன்று வரும் வாழ்க்கையை மட்டுமே வாழத் தலைப்பட்ட தலைமுறைகளில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இதைப்பற்றி எல்லாம் எடுத்துச் சொல்வாரை அது போன்ற நெறிகளுடைய வாழ்வு முறையில் செல்லத் தலைப்படுவாரை வாழத் தெரியாதவர், செல்வம் சேர்த்த வழி தெரியாதவர் என்றெல்லாம் இழி நிலைக்கு ஆளாக்குகிற ஒரு சமுதாயம் முன்னேற எங்கிருந்து வழி கிடைக்கும்?
ஆள்கின்ற ஆட்சிகளும் மக்களை எல்லாம் எந்தவித குறுக்கு வழியிலாவது ஆட்படுத்தி, அவர்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து பதவிக்கு வந்த பின்னே அவர்களை மடைமைப் படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்கிற முனையும் சமுதாயம் எங்கிருந்து தமது நல்ல பாதைக்கு வழி காண முடியும்?
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்று பெரும் ஆளுமைகள் இருக்கிற வரை , ஆசையே அழிவுக்கு காரணம் என்ற அடிப்படையை ஏற்றுக் கொள்ளாதவரை,இந்த உலகத்தின் போக்கை மாற்றவே வழியில்லை. அதன் வளர்ச்சியைத்தான் நாம் ஆட்சி முறைகளில் மக்கள் வாழ்க்கையின் வழிமுறைகளையாக கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஜப்பானின் மனிதக்கறி பன்றிக்கறி மாதிரி இருப்பதாக தின்று பார்த்தவர் சொன்னது இன்று செய்தியாகி இருக்கிறது.
உலகின் பல பக்கங்களிலிருந்தும் எதெல்லாம் தேவையில்லையோ அதை எல்லாம் மனிதர்கள் விரும்ப ஆரம்பித்துள்ளமை உலகின் கலாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. பச்சைக் குத்துதலில் இருந்து, பல தார மணம், பலமுறை மணம், எல்லாம் சர்வ சாதாரணமாக மாறிக் கொண்டிருக்கிற காலம் மிக அருகே நமதருகே வந்துவிட்டது . அறிவியல் என்ற பேரிலான விளையாட்டு வினைகள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கிராமமே இந்தியாவின் இதயம் என்ற மகாத்மாவின் பேச்செல்லாம் காலத்தால் தூக்கி வீசப்பட்டுள்ளது. கிராமம் எல்லாம் வேண்டாம் கிராமத்து இளைஞர்களை மணம் செய்ய மாட்டோம் என ஒரு பெண்களின் அணி இன்றைய கோபிநாத்தின் நீயா நானாவில் சென்று கொண்டிருக்கிறது
உண்மை, சத்தியம், நேர்மை, நம்பிக்கை, நல்வழி , நன்னெறி இவை எல்லாம் மதிப்பின்றி அஹிம்சை என்ற அடிப்படை தீபத்தால் புதிய நாடாய் உருவான இந்தியா இன்று ஹிம்சை வழியை தேர்ந்து சென்று கொண்டிருக்கிறதூ.
பொய், கள்ளத்தனம், ,கொலை, களவு, சூது மது போதை எல்லாமே இன்று அதிகரித்தவண்ணம் வாழ்வைப்பற்றிய சிந்தனைகள் மாறிப் போய்விட்டன.
எனவே எல்லாக் கபடு சூது யாவற்றையும் அடித்து வீழ்த்தக் கூடிய முறைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.அதல்லாமல் இங்கே ஆள்வது, ஆட்சி, கட்சி எல்லாம் வெறும் மாயை, கண்துடைப்பு, பொய்.
நல்ல தலைமையை வேண்டிய அபிராம பட்டரைப் போல நானும் பிரார்த்திக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு காலத்தில் மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்றார்களோ அப்படி, ஒரு நல்ல மன்னன் நல்லாட்சி நடத்தும்போது அந்த மக்களுக்கு பொற்காலம் என்றார்களோ அது போல ஆள்வோர் முறைகளும், முறைமைகளும் தூய்மைப்படுத்தப் பட வேண்டியதவசியம்.
அது எந்த மதமானாலும் மதமற்றதானாலும்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment