Sunday, January 7, 2018

சொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை

 சொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை
Image result for only truth truth only


அரசு வேலைக்கு இலஞ்சம் இல்லாமல் பணி ஆணையும் இட மாறுதலும் பெறுவதென்பது குதிரைக்கொம்பு...தேர்தல் காலம் மதுப் பிரியர்களுக்கும், இலவச பிரியாணி தினசரி பேட்டா காணும் கூலிப்படையினர்க்கும் ஒரு திருவிழாக்காலம் இதை எல்லாம் நடுவண் மற்றும் மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும், சட்டம் நீதி நிர்வாகம் அனைத்துத் துறைகளுமே அறிந்ததுதான். அதன் எதிரொளியும், எதிரொலியும், பிரதிபலிப்பாகவுமே போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்ன பிற...

மக்கள் தமது நியாயமான தேவைக்கு அரசு அலுவலகங்களை அணுகுவது எளிது என்பதும், அதற்கு எந்தவித குறுக்கு வழியிலுமல்லாமல் இலஞ்ச ஊழல் அல்லாமல் நேர்மையாக தமது பணிகளை செய்து முடிக்க முடியாது என்ற நிலை நீக்கமற நிலவி வருவதும்...


 ஆனாலும் இதை எவர் சொன்னாலும் அவரிடமே ஆதாரம் தந்து நிரூபிக்கச் சொல்வார்கள்,அவரைத் தாக்க முனைவார்கள் ஏன் அவர்களை இழிவு படுத்தி பொது வாழ்வை விட்டே துரத்தி அடித்து விடுவார்கள்... இந்த நாட்டில் மேல் தட்டு கீழ் தட்டு, ஆண்டை அடிமை என்ற வர்க்கம் மெதுவாக பிரிய ஆரம்பித்துள்ளது என்றே நினைக்கிறேன்.

இலட்சக்கணக்கில் வருவாய் மாதா மாதம் நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம் காலத்துக்கு காலம் பெருக்கிக் கொண்டே இருக்கும் ஒரு கூட்டம் அதற்கு ஏவல் புரிவோர் என ஒரு கூட்டம், இந்த இரண்டிடமும் இல்லாமல் இடைப்பட்ட ஒரு இவர்கள் பால் சார்ந்து குற்றவாளியாக வாழ்க்கை நடத்தவும் தெரியாமல், வாழ்க்கை நடத்தவும் முடியாமல் வாழ்ந்து போராடவும் தெரியாமல் போராடவும் முடியாமல் மடிந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நடுத்தர வர்க்கம் என இந்தியா சரித்திரம் செய்து கொண்டிருக்கிறது.

குற்றவாளிகளை கோவில் கட்டி கும்பிடுவார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோரையே வெற்றி பெறவும் செய்வார்கள் மத்தியிலும் மாநிலத்திலும் தமது சார்பாக நடக்கச் செய்யாதவர்களை நோக்கி நேரடியாக தனிப்பட்ட வாழ்வை ஆராய்ந்து அவர்கள் பழைய வாழ்வில் செய்த தவறுகளை இன்டு இடுக்கில் எல்லாம் நுழைந்து அவர்களை ஒரு பூஜ்யமாக்கி விடுவார்கள்.. குன்ஹாவைத் தாக்கி போஸ்டர் ஒட்டி வசை மாறி பொழிந்தார்கள் எல்லாம் நீதி செய்தவரை பணத்தால் விலைக்கு வாங்கி தீர்ப்பை மாற்றி எழுத வைத்தார்கள்... அதன் மத்திய அரசின் பொம்மலாட்டத்துக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஏன் எனில் எல்லாமே குற்றம் செய்த கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பதால்...

எல்லாத் துறைகளிலுமே ஒரு படித்த பணத்தை அதிகமாக அள்ளும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் ஒரு கீழ் மட்டத்துப் பணியாளர்களை நெருக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இதை விசாரித்து நீதி செய்வோர் எல்லாமே அரசின் பிரதிநிதிகளாக, விழி பிதுங்கி பார்க்க மறந்த நீதியாளர்களாக,  எல்லாமே பணச் சுழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்...

ஒழுக்கமற்ற அறிவு அபாயகரமானது என்கிறார் இந்தியாவின் தேசத் தந்தை
பணமே அடிமைகளின் தெய்வம் என்கிறார் வினோபா பவே...

பினாய் ராய் கேரளத்தின் முதல்வரான பிறகு 5 மந்திரிகளின் வண்டவாளங்கள் வெளிவந்து  அந்த மாநிலத்தின் 4 மந்திரிகள் இதுவரை அந்த பதவி பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடி அரசுக் கணக்கில் வாங்கிய 28,000 பில்லும், அந்தப் பெண்மந்திரியும் அவரின் கணவரும் மருத்துவமனையில் தங்கிய செலவை அரசின் கணக்கிலிருது பயன்படுத்தியமை இப்போது அந்த மாநிலத்தின்  Talk of the State and current affairs.

அந்தளவு அங்கு வெளிப்படைத்தன்மை இருக்குமளவு ஆட்சியும் ஊடகங்களும் அமைந்தமைக்கு அங்குள்ள மக்கள் விழிப்புணர்வடைந்தவர்களாக அறிவு பூர்வமாகவும் படித்தவர்களாகவும் விளங்குவது பாரட்டத்தக்கதாகவே உள்ளது.

இங்கு இன்னும் அரசு விழாவா, கட்சி விழாவா என்று தெரியாமலே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. மேலும் குற்றவாளி ஜெவின் மரணம் இன்னும் மர்ம முடிச்சாகவே இருக்கிறது அவரின் மறைவுக்கும் பின் ஓராண்டு ஓடி மறைந்த பின்னும். அந்தளவு ஆட்சியும், ஊடகங்களும், மத்திய அரசும் வெளிப்படைத்தன்மை உடையதாக இருக்கின்றன.

மத்திய அரசு மாநில அரசு ஆளும் வர்க்கம், மேலாண்மை செய்யும் முதலாளித்துவ குணம் கொண்ட நிர்வாகிகள் , விசாரணை செய்து நீதி செய்யும் அமைப்புகள் எல்லாமே திறக்க முடியாத மூடிகளுடன் அறைந்து சாத்தப்பட்டு இருக்கின்றன.

விசாரணை என்ற பேரில் கண்துடைப்புகளும், பேருக்கு என்ற பேரில் பாசாங்கு செய்யும் போக்குகளும், அவற்றுக்கு சரியாக தம்மை வெளிப்படுத்தாத மனதடிமைகளாகிப் போன கொத்தடிமை வர்க்கமும்...

ஆளும் ஆட்சிகள் மாறுகின்றன கட்சிகள் மாறுகின்றன மக்கள் நிலை இருக்க இருக்க கோழைத்தனம், நேர்மையின்மை,குற்றப் பின்னணி எல்லாம் பெருகியபடி அதன் விளைவாய் ஆள்வோரின் தரமும் காலத்துக்கு காலம் கடந்த ஆட்சியே பரவாயில்ல என்று தோன்றுமளவு நலவடைந்து இழிவடைந்து கொண்டே வருகின்றன...


இதிலிருந்து எல்லாம் என்று மீளப் போகிறதோ? என்றுதான் மீளுமோ? யார்தான் மீட்பரோ?

எப்போதுமே விளம்பரங்களையே பிரபலங்களையே இந்த நாடு தமது முகமாகக் கொண்டிருக்கிறது, முகமாகக் கொள்ள வேண்டும் என ஊடகங்களும் ஆட்சியாளர்களும் மக்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி எல்லாம் இருந்திருந்தால் உலகுக்கே முன் மாதிரியான ஒரு இந்திய சுதந்திரப் போரை இந்தியா நடத்தி வெற்றி கண்டிருக்காது....கொண்டிருக்காது...


இப்படி எல்லாம் இருந்திருந்தால் ஹோசிமின் என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை கழுவியும் இரவு நேரத்தில் எதிரிகளின் கொடூரத்துக்கு பயந்து நாட்டு வயல்வெளிகளில் பாறைகளில் படுத்துறங்கிய ஒரு கீழ் தட்டு மனிதர் வியட்நாம் என்ற நாட்டுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி மாபெரும் தலைவராக ஆகி இருக்க முடியாது...

இது போன்ற ஒரு சரித்திரம் இந்த நாட்டிலும் எழுதப்பட வேண்டியது அவசியம்.
நாட்டுக்கு சேவை செய்யும் கள்ளங்கபட மில்லாத பொருளாதாரக் குற்றம் இல்லாத மக்களை நல்ல வழி நடத்தும் அறநெறிப் படுத்தி ஆட்சியை அதிகாரம் இல்லாமல் நிர்வாகம் செய்து அனைவர்க்கும் நல்லதையே செய்யும் தலைமைக் குழுவும் தலவர்களும் அரசாள அரசுக் கட்டில் ஏற வேண்டிய அவசியம் உண்டு என்பதே எமது 2018ல் ஆரம்பமாக முதல் பதிவாக சொல்லும் செய்தியாக இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

6 comments:

  1. சொல்வதெல்லாம் உண்மை: கவிஞர் தணிகை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கவிஞர் தணிகை

    ReplyDelete
    Replies
    1. thanks sir for your feedback on this post. vanakkam.please keep contact.

      Delete
  2. நல்ல பதிவு. நன்றி ! வணக்கம் !! ************ ****************** இப்போது வரும் தலைவர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்கும் பொது நல்ல எண்ணத்துடனே ஆம்பிக்கின்றனர். ஆனால், இடையில் மாற்று கட்சில இருந்து வரும் அரசியல்வாதிகளை கட்சில சேர்ப்பதால். அவர்கள் இவர்களை மாற்றி விடுகின்றனர்.


    எந்த கொள்கைக்காக ஆரம்பிக்கிறார்களோ, அதை விட்டு நழுவல் இல்லாமல் பணியாற்ற வேண்டும். அதற்க்கு உண்டான மன உறுதியும், பக்குவமும், எவ்வளவு வருடங்கள் ஆனாலும் வழுவாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your comment on this post Suriyaa Screens.vanakkam. please keep contact.

      Delete
  3. உண்மை
    உண்மை
    நம் நாடும் மாறும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. It must be.It should be. we are waiting eagerly to see that moment of movement. thanks vanakkam.

      Delete