Saturday, December 16, 2017

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

Image result for tharamangalam kailasanathar kovil

அவர் 6 அடிக்கும் மேல்4 அங்குலம் உயரமாக‌ இருக்கும் மிகவும் பலமான எரக்டான தேக அமைப்புடன் இருப்பார்  மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்றவர் விக்னேஷ்வரன் என்றாலே எல்லா ஓய்வு பெற்ற ராணுவத்தார்க்கும் தெரியும்.அது மட்டுமல்லாமல் ஊரில் அனைவர்க்கும் தெரியும். சரியான உயரம் அதற்கேற்ற பருமன். ஸ்ட்ராங்கான தேகம். அவரைப் பார்ப்பார் மற்றொரு முறை பார்க்கும் அளவு மனிதர் இருப்பார். . எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.

அவர் மிலிட்டரி  சர்வீஸ் முடிந்த கையுடன்  தமது சொந்த ஊரில் ஒரு ஹோட்டலை நடத்த ஆரம்பித்தார். அதற்கு  மல்லிகை அதுதான் அவர் துணைவியின் பெயர் ...எல்லாவகையிலும் ஹோட்டல் தொழிலில் உறுதுணையாக இருந்தார். அவரின் வளர்ப்புத் தந்தை அண்ணாமலை என்பதாலும் அந்த ஊர் தி.மு.க , அ.தி.மு.கவுக்கு பெரும் பற்றுடன் அறிஞர் அண்ணா அங்கு வந்து தங்கி சென்ற பெருமை பெற்றதாலும் அந்த ஹோட்டலுக்கு அண்ணா ஓட்டல் என்றே பேர் வைத்தார். அது இப்போது மல்லிகை மளிகை என்று காலத்தால் மாறி இருக்கிறது. ஆனால் அது என்னதான் அண்ணா ஓட்டல் என்று பேர் இருந்தாலும் மிலிட்டரிக்காரர் ஓட்டல் என்றுதாம் அந்த ஊர் மக்களிடையே பிரபலம்.

 அந்த ஊர் பெரும்பாலும் நெசவுத் தொழிலை மையமாகவே வளர்ந்து வளர்த்த ஊர். மிகவும் பிரசித்த சிவத்தலமான கைலாய நாதர் ஆலயம் அங்குதான்  உள்ளது .தாரமங்களம் என்பது அந்த ஊரின் பேர்.அங்குள்ள மக்களுக்கு காலையில் தேநீர் அருந்த வில்லை எனில் நாள் விடிந்ததாகவே இருக்காது. ஆளொன்றும் தேநீர் வீட்டுக்கு வாங்குவதற்கு சொம்பு ஒன்றுமாகவே இருப்பார்கள். ஹோட்டல் மற்றும் தேநீர்க் கடைகளில் ஆண்கள் , பெண்கள், சிறுவர் கூட்டம் நிரம்பி வழியும்.

Related image

அந்த ஊரில் உள்ள கைலாய நாதர் ஆலயம் மிகவும் பெருமை உடையது.கெட்டி முதலியார் என்ற ஒரு சிற்றரசரால் கட்டப்பட்டது. அதில் உள்ள யாழி வாயில் கல், சுழலும் கல்லாலான விதானத்தின் உச்சியில் இருக்கும் ஆகயத் தாமரை, ரதி மன்மதன் சிலை, ஆயிரம் லிங்கேஸ்வரர், மாபெரும் வரவேற்கும் கல்லால் ஆன இரண்டு யானைகள், சூரியனின் கதி தை மாதத்தில் சிவலிங்கத்தின் மேல் விழும் ஒளிக் கீற்று மூலஸ்தானம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதல்லாமல் ஒரு எண் கோண வடிவ குளமும் அந்த ஊரின் பிரபலமான இடம்...அது மட்டுமல்லாமல் மற்றும் ஒரு காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அந்தக் காலத்தில் அனைவரும் காலைக்கடன் முடித்து விட்டு வந்து கால் அலம்பிச் செல்லும் இடமாக குளமாக இருந்த அந்தக் குளம் கூட மிகுந்த கற் சிலை வேலைப்பாடாகவே அமைந்திருந்தது.

அன்றைய சிற்பிகள் எல்லாம் எந்தக் கோவில் வேலைக்கு சென்றாலும் தாரமங்கலம், தாடிக்கொம்பு வேலை தவிர மற்ற எந்த சிறப்பான சிற்ப வேலைகளும் செய்து தரப்படும் என்ற ஒப்பந்தம் இட்டுத்தான் கோவில் திருப்பணிகளை ஆரம்பிப்பார்களாம். அப்படிப்பட்ட ஊர் ஆனால்  இங்கு நமது கதாநாயகர் பற்றி சொல்ல வந்து விட்டு ஊர் புராணம் பாட ஆரம்பித்து விட்டால் அது நல்லா இருக்காது அல்லவா?

விக்னேஸ்வர் தமது வளர்ப்புத் தந்தை கொடுத்த இடத்தை ஹோட்டல் தொழிலுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார் . மர பெஞ்ச்கள் மர டேபிள்கள்தான். ஒரு மர பீரோவும் கண்ணாடி இடப்பட்டு ஈ கொசு மொய்க்காமல் உணவுப் பொருளை வைக்க நடுவில் நிறுத்தப்பட்டு இருக்கும். டீ போடும் மேஜை முன்னால் இருக்கும் அதற்கும் பின்னால் மற்றும் இரு டேபுள்கள் அதன் மேல் காலையில் இடப்படும் வடை, தயிர் வடை போன்றவையும், பட்டானி சுண்டல் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். மலை போல சுட்டு வைத்திருப்பார்கள் மட மட வென காலி ஆகி விடும்.

அந்த பீரோவுக்கு பின் வரும் வாயில் வழியே பின்னால் வந்தால் பெரிய ஒரு உணவு தயாராகும் அடுப்படி.மாதேஸ் டீ மாஸ்டர், நாயர் சரக்கு மாஸ்டர், 4 அண்ணாமலை, பச்சையப்பன், படிமானம், இடிச்ச புளி அதல்லாமல் அப்போதெல்லாம் அரிசி , உளுந்து ஆட்ட என்ற பெரிய உரல்களில் மாவு ஆட்ட இரண்டு பெண்கள், அவர்களுக்கு உதவ கமலா என்ற சிறுமி இதுதான் இவர்கள் ஓட்டல் டீம் . அதன் பின் கொஞ்ச காலத்தில் கோவையிலிருந்து அரிசி உளுந்து ஆட்ட பெரிய இரண்டு கிரைண்டர்களை தருவித்துக் கொண்டார் . அந்த பணிக்கூடத்தை அடுத்து ஒரு ஸ்டோர் ரூம். சரக்கு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும்.அதுதான் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தின் படுக்கை அறையும். அவரும் அவரது மனைவி மல்லிகையும், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் அதுதான் அவரது குடும்பம். மற்றபடி உற்றார் ஊரார்க்கு எல்லாம் குறைவே இல்லை. அவர்களுடன் அவ்வப்போது பள்ளி விடுமுறையில் எல்லாம் மல்லிகையின் தம்பி பேரரசு வந்து அவரகளுக்கு உதவுதலும் உண்டு.

திடீர் திடீர் என டீ மாஸ்டர் வர மாட்டான், உடனே இவரே சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் அவன் இருககானா வருவானா வரமாட்டான என்று பார்த்துவிட்டு வந்து டீ போட ஆரம்பித்து விடுவார். அவ்வளவு பெரிய ஜெய் ஜாண்டிக்காக இருப்பார் சைக்கிளில் போவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவே மாட்டார். 10 மணியாகிவிடும்  கடையை 8 மணிக்கெல்லாம் மூடிவிட்டாலும் காலை 3 மணிக்கே எழுந்து பாய்லர் வைத்து நெருப்பு போட ஆரம்பித்து விடுவார். சமையலரையில் முக்கியமான வேலைகள் எல்லாம் நடக்க ஆரம்பித்து விடும். 

புதன் , வியாழன் , ஞாயிறு  ஆகிய நாட்களில் அசைவ உணவும் உண்டு. அது ரொம்ப ஃபேமஸ். காரணம் அந்த அசைவ உணவை மட்டனை  குழம்பை மல்லிகையே தமது கை வண்ணத்தில் சமைத்துக் கொடுப்பார். மதியம் 2 மணிக்கெல்லாம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் அசைவக் கறி விற்பனை எல்லாம் முடிந்து தீர்ந்து விடும். அதன் பின் வருவார்க்கு இலவசமாக குழம்பு மட்டும் கிடைக்கும்.

அந்த சரக்கு மாஸ்டர் நாயர் கூட திடீர் திடீர் என லீவு எடுத்துக் கொள்வார் அப்போதெல்லாம் இவரது துணைவி மல்லிகையே கமலா போன்ற பெண்களின் உதவியோடு சமைத்தும், முன்னால் உள்ள சப்ளையர், மாஸ்டர்கள் உதவியுடன் சாப்பாடு, டிபன், எல்லாம் தயார் செய்து கொடுத்து விடுவார். ஆனியன், முட்டை ரோஸ்ட், ரோஸ்ட், தோசை, இட்லி , ஆம்லெட் எல்லாமே பறக்கும் நிற்காது...

அந்த ஊரில் உயர் நிலைப்பள்ளி, அங்கு நடக்கும் என்.சி.சி. மாணவர்களுக்கான பரேட் நடக்கும்போது உணவு எல்லாமே மிலிட்டரிக்காரர் கடையிலிருந்துதான் சப்ளை. ஊரில் எந்த விஷேசம் நடந்தாலும், எந்தக்கட்சிக்காரர் வந்தாலும் முகம் கோணாமல் நன்கொடை கொடுப்பதும் வேலை செய்வார்க்கு கொடுத்து விடுவதும் இவரது நற்பண்புகள்....என்னங்க இப்படி என இவரது மனைவி தடுத்தாலும் அப்பதான் வேலை செய்ய வருவாங்க அதற்கெல்லாம் தயங்கவே கூடாது என்பார்.

எப்போதும் லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை எல்லாம் சென்றுதான் சரக்கு எடுத்து வருவார். ஆர்டர் கொடுத்து வந்து விட்டால் மூட்டை மூட்டையாக அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் வந்து இறங்கும், அதன் பின் கொஞ்ச காலத்தில் மாட்டு வண்டிப் பழக்கம் குறைந்து லாரிகள் அந்த வேலையை செய்ய ஆரம்பித்தன. அந்த மூட்டை தூக்குவார் எல்லாம் கூட இவரது கடையில் தான் சாப்பிடுவார்கள், மேலும் போர்வெல் போடுவார் வன இலாகாவினர் இப்படி எல்லாமே. அங்குதான் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வார்கள்.Image result for tharamangalam kailasanathar kovil



இப்படி சென்று கொண்டு இருக்கும் காலத்தில்  ஒரு நாள் ரூபாய் தொண்ணூறு ஆயிரத்துடன் சரக்கு எடுக்க லிங்கன் வண்டியில் சேலம் சென்றவர் மறுபடியும் வீடு, கடைக்குத் திரும்பவேயில்லை...காரணம் எவருக்கும் தெரியவுமில்லை.

நாட்களும் நேரமும் செல்வது பெரும்பாடாக இருந்தாலும் மல்லிகை கடை நடத்துவதை மட்டும் விடாமல், பள்ளிகளுக்கு பிள்ளையை அனுப்புவதும் இடைப் படாமல் தமது தம்பிகளை அழைத்து பிரச்சனையை அணுகச் சொல்ல  முதலில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது அதன் பின் தினசரிகளில் படம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

ஒரு நாள் சென்னைத் தொலைக்காட்சியில் தூர்தர்ஷனில் அவரது படத்தை வெளியிட்டு காணாதார் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்த நேரத்தில் எங்கோ சென்றிருந்த அவர் தாமாகவே வீடு வந்து சேர்ந்து அந்த விளம்பரத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இடையில் ஏற்பட்டது என்ன என்பது தெரியவில்லை என்றும், அவருக்கு சுய நினைவு வந்தபோது அவர் டில்லி அருகே ரெயிலில் சென்று கொண்டிருந்ததாகவும் அதன் பின் எல்லாம் சுய நினைவு வர அங்கிருந்து மிலிட்டரிக்காரர் என்பதாலும் மொழிப்பிரச்சனை இல்லை என்பதாலும் சுலபமாக வீடு திரும்பி விட்டார் என்றும் அவர் சொன்னார். ஆனால் அவர் கொண்டு சென்ற பணம் 90 ஆயிரம் போனது போனதுதான்.

இடையில் சேலம் காவல் நிலையம், நாலு ரோடு, அன்டர் கிரவுண்ட் வோர்ல்ட் , பிக் பாக்கெட் நபர்கள் கூட்டம் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இவரைப்பற்றி அலசி அலசிப் பார்த்தும் இவரைப்பற்றி துப்பு ஏதுமே கிடைக்காமல் போயிருந்தது. பக்கத்தில் உள்ள பூக்கடைக்காரர்கள், சைக்கிள் கடைக்காரர்கள் எல்லாம் கூட இவரது மைத்துனர் பேரரசுவின் யமஹா பைக் ஓய்வில்லாமல் அலைந்தது பற்றி மலைத்துப் போனார்கள். ஆனால் அவரது போட்டிக் கடைக்காரர் எல்லாம் மனதுள் மகிழ்ந்தாலும் மிலிட்டரிக்காரர் பற்றி நல்ல எண்ணமே வைத்திருந்ததால் வருத்தப்படுவதாகவே காணப்பட்டார்கள்.

ஆனால் அந்தக் கட்டத்தை மிகவும் துணிச்சலுடன் சமாளித்த அவரது துணைவியார் மல்லிகையை எவருமே பாராட்ட அவர் இடம் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்கள் பலமிழக்கும்போது குடும்பத்தை பலத்துடன் கட்டிக் காக்க வேண்டியவர்கள் பெண்கள்தாம் என்பதை ஒரு வீரமங்கையாக தைரியத்துடன் அந்தப் பெண் கையாண்டிருக்கிறார் அந்த ஒரு ஆபத்தான கட்டத்தை.Image result for tharamangalam kailasanathar kovil



ஆனாலும் அது எப்படி நடந்தது? அவருக்கு அன்று என்ன நடந்தது என்பது எவருக்குமே தெரியவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை



5 comments:

  1. நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை. - இப்படியும் நடக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Kavignar Thanigai

    ReplyDelete