Saturday, December 30, 2017

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள்:= கவிஞர் தணிகை
Image result for kalavaadiya pozhuthugal


தீரன், அருவி, வேலைக்காரன் போன்று விறுவிறுப்பு இல்லை என்று இரசிகர்கள் பார்க்காமல் விட்டு விடாதீர்கள். தங்கர் பச்சான் போன்ற ஒளி ஓவியர்களை அவசியம் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காகவாவது இது போன்ற படத்தை நாம் பார்த்து பரிமாறிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு கதை பின்னால் ஒளிந்திருக்கும். அதை எல்லாம் மறந்து விட்டும் மறந்து விடாமலும் தாம் வாழ்வை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். அதை ஒரு அழகிய கவிதையாக நமக்கு உண்மையும் கற்பனையும் கலந்து உண்மையான கலைஞராக நின்று வழங்கி இருக்கிறார் தங்கர் பச்சான்.

இது போன்ற படங்களில் ஒரு வேகம் இருக்காது என்றாலும் பார்க்கும்படியாகவே இருக்கும் ஆனால் இது போன்ற படங்களைப் பார்க்க நமது இளந்தலைமுறைக்கு ஆர்வமும் பொறுமையும் இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது.

சத்யஜித் ரே, மூன்றாம் பிறை தந்த பாலு மகேந்திரா, மகேந்திரன் போல இந்த தங்கர் பச்சானின் படமும் ஒரு தனிப்பட்ட ரசனையோடு பார்க்க வேண்டியிருக்கும். இவரின் பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி போன்ற படங்களின் தொடர்ச்சியாக இந்த படத்தையும் சொல்லலாம்Related image



அந்த படங்களில் எல்லாம் அவ்வப்போது ஒரு திருப்பு முனை நிகழ்ந்து படத்தை வேறுபட்ட தளங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கும் ஆனால் இதில் காதல். மிகவும் சாதுர்யமாக கம்பி மேல் நடப்பது போல அழகாக கையாள வேண்டிய கருப்பொருள். அதை அழகாக செய்து வெற்றி பெற்றிருக்கிறார் தங்கர்.

மிகையாகப் போனாலும் பாலுணர்வை சொல்வது போன்றதாகிவிடும், குறைவாகவும் சொல்ல முடியாது மிகவும் அருமையாக பிரபு தேவா, பூமிகா அடித்துள்ளனர் அவர்கள் தோள் மேல்தான் எல்லா பொறுப்பும். பிரகாஷ்ராஜ்க்கு எப்போதும்போல் ஒரு ஜென்டிலான கேரக்டர்.சத்யன் வழக்கம் போல் அதிகம் வராமலே படத்தின் முக்கியமான கட்டத்தில் படத்தின் முடிச்சை அவிழ்த்து கணவனான பிரகாஷ்ராஜ்க்கு அதாவது சௌந்தர்ராஜனுக்கு மனைவியான பூமிகா ஜெயந்தி ஏற்கெனவே பொற்செழியன் பிரபு தேவாவின் காதலிதான் என்று வெளிப்படுத்தி விடுகிறார்.

ஜெயந்தி இருக்கிறாளா, இறந்து விட்டாளா என நமக்குத் தெரியாதது போல பொற்செழியனும் தெரியாமலே செல்பேசியின் சிம் கார்டையும் கிழித்து போனையும் வீசி எறிந்து விட்டு பயணத்தை மேற்கொள்கிறார்.
Related image


இரண்டு காதலர்களின் ஊசலாட்டத்தை அகடு முகடாக மாற்றி மாற்றி அழகு படுத்தி உண்மையான அலைபாய்தலை சில காட்சிகளால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று கட்டுப் பாட்டுடன் இருக்கும் பொற்செழியன் திடீரென தமது காரை ஜெயந்தி செல்லும் காரை சென்று மறித்து அவளை தனது காரில் ஏறச் சொல்லி அவளது லக்கேஜ்களை எடுத்து வரும்போதும்,

பின்னால் அமர்ந்தே பயணம் செய்யும் ஜெயந்தி ஒரு கட்டத்தில் தாமாகவே வந்து முன் இருக்கையில் அமர்ந்து வருவதும் இப்படி சில இடங்களில்...

கடைசியில் இருவருமே கட்டு மீறிப் போய்விடுவோமோ என்று பிரிந்து சென்றாகவேண்டும் என முடிவெடுக்கிறார்கள். வாழ்வது மிகவும் கடுமையாக கொடுமையாக இருப்பதும், நான் செத்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா ஜெயந்தி என பொற்செழியன் சொல்வதும் படத்தை நமக்கு உணர்த்தும் சொல்லாக...
Related image



ஏண்டாப்பா இந்த சௌந்தரைக் காப்பாற்றினோம் என ஜெயந்தியைப் பார்த்து துடிப்பதும் நடிப்பதுமாக நல்ல மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரபு தேவா நன்றாக செய்திருக்கிறார்.

நல்ல கதை எல்லார் வாழ்விலும் ஜீரணித்தும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும் கதையை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர். கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் பெரியாரிசம், என ஜீவா, பெரியார் எல்லாம்மேடையேற்றி எப்போதும் போல தமது கூத்துப் பட்டறைக் காட்சியையும் கொண்டு வந்திருக்கிறார்.

மக்கள் எல்லம் ஆட்டம் பாட்டம் என ஒவ்வொரு வீட்டையும் தியேட்டராக மாற்றி தொலைக்காட்சி அடிமைகளாக மாறிவிட்டதையும், மது அடிமையாக நாடு மாறி வருவதையும் சொல்ல முயன்றிருக்கிறார்.

கதையின் ஆழத்தில் இந்தப் பிரச்சாரம் எல்லாம் மிகவும் லைட்டாகவே இருக்கிறது... சத்யராஜின் பெரியார் வசனங்கள் மிகவும் செயற்கையாக ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க இந்த கஸ்ட் ரோலில் சத்யராஜ்...மிகையான நடிப்பில் சொதப்பல்.

மற்றபடி பார்க்க வேண்டிய படம். உணர வேண்டிய படம். எல்லம் கடந்து வந்த பாதை தானே....ஒரு கவிதை.
களவாடிய பொழுதுகள் நல்ல தலைப்பு. நூற்றுக்கு 50 மதிப்பெண் நமது மதிப்பீடாக.
Related image



பாக்யராஜின்  அந்த 7 நாட்கள் வேறு மாதிரி இருக்க இது முற்றிலும் காதல், திருமணத்துக்கும் பின் இருவரின் சந்திப்பு அதனால் கெடாத கெடுத்துக் கொள்ள முடியாத நெருப்பின் முனையாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
P.S:
இருவரும் முகநூலில் நண்பர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மேட்டூரில் எனக்குத் தெரிந்த இடத்துக்கு வரும் நாளில் வருக சந்திக்கலாம் என்று சொல்லியும் அன்று என்னால் போக முடியாததற்காக இன்னும் வருந்தியபடியே இருக்கிறேன். சாரி தங்கர் பச்சான்.

2 comments:

  1. அவசியம் பார்க்க வேண்டிய படம் என்பதை தங்களது விமர்சனம் உணர்த்துகிறது
    நன்றி நண்பரே

    ReplyDelete