Sunday, December 17, 2017

அருவி: கவிஞர் தணிகை

அருவி: கவிஞர் தணிகை

Image result for aruvi movie


நீண்ட நாள் கழித்து குடும்பத்தின் அனைவரும் சேர்ந்திருந்து பார்க்க வேண்டிய படமாக அதிதியாக அருவி... அருவியாக அதிதி


எப்படிப் பாராட்டினாலும் தகுதியுடைய ஒரு படம் தமிழ் பட உலகுக்கு கிடைத்திருக்கிறது . ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து சமூக அக்கறையுடன் செதுக்கி உள்ளனர்.அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஜோக்கர் சகுனி கஷ்மோரா ஆகிய படங்களைத் தயாரித்த அதே பட நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயரிப்பில் அருண் பிரபு புருசோத்தமன் என்ற இரண்டு நபர்கள் இயக்கி வெளி வந்திருக்கும் படம். ஏற்கெனவே சீனா ஷாங்காய் பட விழாவுக்கு சென்று வந்து இங்கு டிசம்பர் 15ல் வெளி வந்துள்ளது சுமார் 130 நிமிடங்கள் வீண் போகாத படம்.

அதிதி பாலன் என்ற வழக்கறிஞரை 600 பேரிலிருந்து இதன் கதாநாயகியாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் இந்தப் படத்தை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். ஜோக்கருக்கு அடுத்து சமூகத்தை ஒவ்வொரு கட்டத்திலும் சாட்டையால் வெளுத்திருக்கும் பாடம்.

ஊடகம், அரசியல், சினிமா, தொலைகாட்சித் தொடர்கள், அரசு, காவல்துறை, தம் பிள்ளைகளையே நம்பாத பெற்றோர், கிராம வாழ்க்கையிலிருந்து நகர வாழ்க்கைக்கு  புலம் பெயர்தலால் கிடைக்கும் பரிசு இப்படி ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் இரசிக்கும்படியாக காட்சிக்கு காட்சி பாராட்டும்படியாக நன்றாக பார்வைக்கு வந்திருக்கும் படம். இது போன்ற படங்கள் தாம் உண்மையிலேயே சமூகத்திற்கு அவசியத் தேவை.

இதில் நடித்துள்ள நபர்கள் யாருமே பெரிய ஆட்கள் ரஜினி, கமல் எல்லாம் கிடையாது ஆனால் இதுவரை அவர்கள் எல்லாம் கூட தொடாத பிரதேசத்தை தொட்டுச் சொல்லி இருக்கும் படம் . கடைசியில் கண்ணீரை வராமல் இந்தப் படத்தை நிறைவு செய்யவே முடியாது.

வாழ்க்கையில் இறப்பு எப்போது என்ற பயம் இருக்கும்போது அனைவர்க்கும் நன்மை செய்யவே தோன்றும் அந்த பயம் இருந்தால் நாம் எவருமே தவறு செய்ய மாட்டோம் என்பதில் இரகசிய நீரோட்டமாக இழையோடவிட்டு,

எய்ட்ஸ் நோய், பற்றி எடுத்துச் சொல்லி திருநங்கை பாத்திரத்தை எல்லா திருநங்கை வர்க்கமுமே பெருமப்படும் வண்ணம் அழகுபடுத்தி அவரே எய்ட்ஸ் வந்த அருவியை அருவருக்காமல் உடன் வரும் தோழியாக கடைசி வரை நிற்கிறார் என்று காட்டி,,
Related image


ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் என்ன என்ன வெட்டி பந்தா இருக்கும் என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லி, அதில் காட்சியை தொகுப்பவராக நடத்துபவராக இலட்சுமி கோபால் சாமியையும் தொடர் இயக்குனராக கவிதா பாரதியையும் உதவி இயக்குனராக, அவருக்கு ஒரு உதவியாளராக இப்படி பல அடுக்குகள் கொண்ட நிலையை நன்கு விளக்கி சொல்லி இன்டஸ்ட்ரியின்ன் காலில் விழும் கலாச்சாரத்தை சாடி, அந்தக் காட்சிகள் எப்படி உள்ளிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை எல்லாம் சொல்லி...இது பற்றி கவண், மற்றும் ஊமை விழிகள் ஆரம்பித்து பல படங்களில் ஒன்றில் ஜீவா கூட நடித்திருந்தாரே அது போல பல படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக அவர்களை எல்லாம் விட தேர்ந்த மனிதர்கள் வெளியில் இருக்கிறார்கள் வாய்ப்பின்றி என்பதை அழகாக  அதிதி பாலன் என்னும் அருவி உணர்த்துகிறார்.

சாதரணமாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் என அப்பா மகள் கதை சொல்லப்போகிறார்களோ என்று நினைத்து மீள்வதற்குள் அருவி வயதுக்கு வந்து பெரியவளாகி,காதல் இல்லாமலே போய் அதன் பிறகு கதை போகிறது பயணம் உச்சத்திற்கு, உச்சி சிகரத்துக்கு, என்னதான் இருந்தாலும் பெற்ற பிள்ளைகளையெ நம்ப முடியாத பெற்றோர்க்கும் இது தரும் பாடமும்.. வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறுகிறது ஒரு மருத்துவ அலட்சியத்தால் எவரோ செய்யும் ஒரு பிழை எப்படி சமூகத்தை ஆட்டி கலக்கு கலக்குகிறது அதை நன்றாக உணரும்படி செய்திருக்கிறார்கள்.

நினைப்பதை நினைத்ததை எல்லாம் காட்சியாக்கி மிகவும் இயல்பான வாழ்க்கையை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். நான் எடுத்தால் இது போன்றுதான் படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுவேன். அதற்கு பதிலாக இவர்கள் தாமெடுத்து விட்டார்களே. தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்து விட்டார்கள்.

கற்பழிப்பு, கொலை, நிர்பயா போன்றவற்றையும் தொட்டு விட்டு அவர்களையும் மன்னிக்கச் ச்சொல்லி,  ஊடகம் பிரச்சனையை ஊதிப் பெருசாக்குவதற்கு மாறாக நினைக்காத கோணங்களில் எல்லாம் படம் படையெடுக்கிறது லைவ் டெலிகாஸ்ட்டில் இருவருக்கும் எய்ட்ஸ் பாஸிட்டிவ் என்று சொன்னதிலிருந்து...

அனேகமாக‌ 2017 முடியப் போகிற போக்கில் ஒரு சிறந்த படத்தை , இதுதான் இந்த ஆண்டின் சிறந்த படம் என்ற போக்கில், அதிதி பாலன் தாம் சிறந்த நடிகை என்ற கோணத்தில் ...ஏன் 2017, தமிழ் பட வரலாற்றிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் இது நிச்சயம் இடம் பெறும் என்று சொல்லலாம்.

சங்கர், மணி ரத்னம் போன்றோர் இன்னும் பிரம்மாண்டம் என்று சொல்லி மகக்ளை ஏமாற்றும் நிலை விட்டு இது போன்ற நல்ல நேர்மறையான படங்கள் நோக்கி திரும்பிப் பார்க்கலாம்...

அருமையான திரைக்கதை, கூர்மையான வசனம், நல்ல காட்சி அமைப்பு, ஆக்சன் என கவிதா பாரதி சொல்லிய மறு குரலாக ரோலிங் சார் என்ற குரல் நகைச்சுவையுடன் இப்போது கூட ரீங்காரம் செய்வதை கேட்க முடிகிறது...இந்தப் படத்தை ஒரு முறை மட்டுமல்ல இரண்டாவதும் சினிமாத்தியேட்டரில்  அமர்ந்து பார்த்து பாராட்டி அழத் தோன்றுகிறது. \

நிறைய இடங்களில் காட்சி அமைப்புகளும், வசனங்களும் மஞ்சப்பையில் செருப்பை போட்டு அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது போல சமூகத்தை அதன் அவலத்தை  முட்டாள் தனத்தை அடித்து நொறுக்கி விடுகிறது...
Image result for aruvi movie


அதிதி பாலன் உருக்கி விடுகிறார். சிரிக்க வைக்கிறார் மகிழ்ச்சி அடைய வைக்கிறார் அழவும் வைக்கிறார்.  யார் சொன்னாலும் ஏன் என்று கேட்க வேண்டும் , அனைவருடனும் அன்பாய் இருக்க வேண்டும் என நீங்கள் தாம் சொன்னீர்களே அப்பா எனக் கேட்கிறாய் படத்தின் கரு இதுதான்...அருவி உயரே இருந்து கொட்டுகிறது ஆர்ப்பரிக்க சுழித்து ஓடுகிறது...

கமல் பெற்றால் தான் பிள்ளையா என்ற பண்பலைக் குரலை விட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்தப் படம் ஒரு வரம். தமிழ் பட உலகுக்கு ஒரு நல்ல பரிசு.

வாழ்த்துகள்
வணக்கங்கள்
எ க்ரேட் சல்யூட் டு தி டீம்.

Image result for aruvi movie


நூற்றுக்கு 80 தரலாம் தாராளமாக.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
\
எப்போதுமே குடி மதுக்குடி வரும் படங்களை நான் சாடுவது வழக்கம் இதிலும் பீர், வைன் எனக் குடிப்பது போல காட்சிகள் வருகின்றன ஆனால் சாகப்போகிற நாள் நெருங்குகிற நபர் குடித்தால் கூட தவறில்லை அதை பெரிதாக விமர்சிக்க ஒன்றுமில்லை என நினைக்கிறேன். அப்படித்தான் கண்ணதாசன் தாம் ஒருவரே எல்லா மதுவையும் குடித்து மதுவிலக்கு அவசியம் நாட்டுக்குத் தேவை என்று சேவை செய்தாரோ என்னவோ? இதெல்லாம் சொல்லத் தோன்றியது..



1 comment: