Sunday, December 10, 2017

கொடிவீரனா முடி வீரனா? சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

கொடிவீரனா முடி வீரனா?
சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

Related image


படம் வெளியீடான அன்றே இணையத்தில் வெளி வந்துவிட்டது இந்தப் படம்.
எடுத்த உடனே ஒரு பெண் புளியமரத்தில் தூக்குப் போட்டுக்கொள்ள அவளிடமிருந்த குழந்தை கீழே பிறந்து வீழ்கிறது.

ஒரு பெண் மொட்டை அடித்துக் கொள்கிறாள் அண்ணன் பழி வாங்க வேண்டி சூளுரைக்கிறாள்..அதுதான் பூர்ணா கேரக்டர்.

பழிக்குப் பழி இரத்தத்துக்கு இரத்தம்...சசிகுமார் அதே தாரை தப்பட்டை மூஞ்சி. அதே முடிவீரனாக சாரி கொடி வீர்னாக...இவர் யாருன்னு நினைச்சீங்க என்ற உடன் அடுத்தநாள் சாமியாடியாக வருகிறார்.

பசுபதிக்கு ஒரு வில்லன் சமமாக சசிக்குமாருக்கு இணையாக.

இந்த இயக்குனரின் கொம்பன் தேறி விட்ட படம். ஆனால் இந்த சசிக்குமார் தயாரிப்பில் அசோக்குமா நிதிப் பிரச்சனையில் மாட்டி உயிரை விடக் காரணமாக இருந்த படம். சசிக்குமார் மாபெரும் ஆளாக மதிக்கப்பட வேண்டும் என்ற  சினிமா கிளாமருக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்.

படம் படுதோல்வி. இவர் எல்லாம் தாமெடுத்த படத்தை முதலில் தாம் பார்த்துவிட்டுத்தான் வெளியுலகுக்கு கொண்டு வருகிறாரா என்பது தெரியவில்லை.

வன்முறையும், கொடுமையும் எல்லையில்லாமல் காட்டிவிட்டு அதற்கு பழிவாங்குவது போல கதாநாயகர்கள் நடிப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது சசிக்குமாரிடம்...கிடாவும் இப்படித்தான்...

மஹிமா நம்பியார், விதார்த்,சனுசா, பால சரவணன், பூர்ணா என்ற ஒரு பட்டாளமே இருந்து கடன் பண்ணி அசோக்குமார் பைனான்சியரை டிஸ்ட்ரிப்யூட்டரை தற்கொலைக்கு கொண்டு சென்றிருக்கும் படம்.

அசோக்குமாரை சொந்த மாமன் மச்சானாக இருந்தும் ஏன் இந்த ஹீரோ சசிக்குமாரால் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான கேள்வி.

அண்ணன் தம்பி அண்ணன் தங்கை சென்டிமென்ட் எதிரும் புதிருமாக‌ படம் எல்லாம் அதுதான்.

அந்தக் காலத்தில் எந்தப் படமானாலும் எதிர்மறையான கருத்துகளை பக்குவமாக சொல்வார்கள் காட்சிகளை துக்கத்திலிருந்து ஆரம்பிக்கவே மாட்டார்கள். இந்தப்படத்தில் எல்லாம் பொணம், ஒரே பொணம், ஒப்பாரி அழுகை , என அசோக்குமாரை கொள்ளை கொண்டு போனது போல..

சுபம் என கடைசியிலும், முதலில் சுபமான காட்சிகளுடன் மட்டுமே ஆரம்பிப்பார்கள் இதில் எல்லாமே இறப்பு அதன் எல்லைக்கப்பால் சென்றுவிட்டது.

எம்.ஜி.ஆர் படங்கள் வென்றதும், அவர் நாட்டை ஆண்டதற்கும் கூட இந்த நேர்மறைக் காட்சி அமைப்புகளே காரணம்.

சிவாஜி என்னதான் நடிப்புலக மேதையான போதும் தோற்றது எதிரான சோகமயமான காட்சிகளைக் கொண்டதுதான்.

அதே போல ரஜினிக்கடுத்து கமலை சொல்வதும் கூட இதன் அடிப்படையில்தாம்

மக்கள் இருக்கும் பிரச்சனையை மறுபடியும் திரையிலும் பார்க்க சகிக்காமல் அதில் கொஞ்ச நேரம் கவலை மறந்து கலகலப்பாக இருப்பதற்குமே நகைச்சுவை காட்சி எல்லாம் வைப்பார்கள்...அப்படி எல்லாம் இதில் ஏதும் இல்லாதது பெரும் குறை.

இந்தப் படத்தை கணக்கு காண்பிக்க பெரும் செலவு எனக் காட்டி எடுத்திருக்கலாம் ஆனால் இப்படி கடன் வாங்கி உயிரை விட்டு எல்லாம் எடுக்க அவசியமே இல்லை. அதை நீங்கள் பார்க்க வேண்டிய  அளவு இதில் எதுவுமே இல்லை.

தம்மை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், தாமும் ஒரு ஹீரோதாம் என்றும் புகழ் ஆசையில் சறுக்கி விழுந்தார் நிறைய பேர் அதில் சசிக்குமார் பேரும் இப்படியே போனால் நிச்சயம் இடம்பெறும்.

மன்சூர் அலிகான் படத்தை ஆரம்பித்த கதை எல்லாம் அனைவரும் அறிவர்.அதே போல மிக நீண்ட டைட்டில் வைப்பதாகவும் அவர் பெருமப்பட்டுக் கொண்டார். ஆனால் அவர் எல்லாம் எங்கிருக்கிறார் என்பதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். புகழ் ஒரு போதை புதைகுழி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

1 comment: