Thursday, August 3, 2017

மேட்டூர் பயணிகள் இரயில் இரண்டு மாடுகளை வீழ்த்தியது: கவிஞர் தணிகை

மேட்டூர் பயணிகள் இரயில் இரண்டு மாடுகளை வீழ்த்தியது: கவிஞர் தணிகை

Related image



மோடி  வேலைகளைப் பற்றி  எழுதி என்ன ஆகப் போகிறது, ஹைட்ரோ கார்பன், கதிராமங்கலம், டில்லியில் நமது விவசாயிகள், ஆடி 18ன் நீர்க் கோபம் இவைபற்றி எல்லாம் எழுதாமல் இன்று நடந்ததை எழுதுகிறேன்.

கடந்த கால தி.மு.க அரசுதான் அனுமதித்தது இந்த ஆயில் அன்ட் நேச்சரல் கேஸ் கமிஷன் திட்டங்களை, இன்று இந்த அ.இ.அ.தி.மு.க அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று பா.ம.க நிறுவனர் பேசுவதும் கூட சரியானதுதான். ஆனால் அவர்கள் எந்த அளவில் இருக்கிறார்கள் என அந்தக் கட்சியில் இருந்து விலகிய பழைய எம்.எல்.ஏக்கள் மந்திரிகளைக் கேட்டால்தான் தெரியும்.

கதிராமங்கலம் பற்றி எழுதுங்கள் என இரண்டு பொறியியல் பட்டப் படிப்பு படிக்கும் எனது சிநேகிதர்கள் சொல்கிறார்கள்...எனக்கு சசிபெருமாளைத் தான் நினைவுக்கு வருகிறது. இப்போது இருக்கும் சூழலில் பி.ஜே.பி அரசை கடுமையாகத் தாக்கி மட்டுமே எழுத முடியும்...அதனால் வரும் பயன்களை அந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகள் ஏற்றுக் கொள்ளத் தலைப்படும்பட்சத்தில் எழுதலாம்.

மன்மோகனை செயல்படாத பிரதமர் என்றார்கள், இப்போது மோடியை நிதிஷ்குமார் போன்ற பெரும் முதல்வர்கள், அரசியல் முதுபெரும் தலைவர்கள் 2019 மத்திய பொதுத் தேர்தலில் எவருமே பிரதமர் வேட்பாளராக எதிர்க்க ஆள் இல்லை என்கிறார்கள்..

ஏன் எனில் அவர் தமது தேர்தல் வாக்குறுதிப்படி ஸ்விஸ் மற்றும் வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருந்த இந்தியப் பணத்தை கொண்டுவந்து இந்தியர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார், மேலும் மல்லையா, லலித் மோடி போன்றவர்களையும் சட்டப்படி தண்டித்து விட்டார்,

டி மானிட்டரிசேசன் என்ற பெரும் புரட்சியை நள்ளிரவில் நடத்தி 2000 ரூபாய் நோட்டில் காந்தியை தூக்கி விட்டு தமது உரை வரும் ஆப்பை போட்டுக் கொண்டார், அந்த டி மானிட்டிசேசனால் பொது மக்களுக்கு நிகழ்ந்த விளைந்த பலன்கள் சொல்ல முடியாதன..நிறைய பேர் செத்தே போனதும் அதில் அடங்கும்.. அதனால் ஏற்பட்ட சாதனையைக் கூட சொல்ல மறுத்து வரும் அளவு அந்தக் கட்சியினர் புகழை விரும்பாதார்
Related image



அடுத்து சரக்கு மற்றும் சேவை வரியால் பாமர மக்களுக்கு செய்த பெரும் சேவை சொல்ல முடியாதது தக்காளி விலை ரூ. 70, சின்ன வெங்காய விலை 70 இப்படி விலை ஏற்றத்தை சந்திக்க வைத்து மக்களின் வாங்கும் திறனைக் கட்டுப்படுத்தி மொத்த வியாபாரத்தில் 40 சதம் வீழ்த்திய பெருமை எல்லாம் நமது ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் எல்லாம் வெள்ளம், தமிழகத்தில் குடிநீர்ப்பஞ்சம்...விஜயபாஸ்கர் மந்திரி சொத்து முடக்கம், கர்நாடகா மந்திரியிடம் சுமார் 10 கோடி அவரும் கைது இப்படியாக அடுத்தடுத்து நாட்டை நாட்டுமக்களை ஆச்சரிய செயல்பாடுகளில் முழ்கடித்து அத்வானியை குடியரசுத் தலைவராக்க விடாமல் பாபரி மஸ்ஜித் வழக்கை தூசி தட்டியது போல...

அடுத்து கேஸ் மானியம் ரத்து, ரேசன் பொருட்கள் ரத்து இப்படியாக தொடர்ந்த  அடி மேல் அடி வைத்தால் பொதுமக்கள் எப்படி எழ முடியும் எனத் திட்டமிட்ட ஆட்சி அவர்களுடையது.. அதிலும் குறிப்பாக தமிழ் மண் மேல் இரகசியமாக போர் உத்திகள்,,..சீன எல்லைப் பிரச்சனையில் நாய் வாலை இரண்டு பின்னங்காலுள் அடக்கி ஒடுக்கியதான நிலையில்

எல்லாரும் ஒரு(வர்) கட்டுக்குள் வர வேண்டும்...அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை ரெய்டு வேண்டுமானாலும் நடத்தலாம் திட்டமிட்டு எதிரிகள் மேல் எதிர்க்கட்சிக்காரர்கள் மேல், கண்துடைப்புக்காக தமது கட்சியினர் மேலும் செய்யலாம்.


யோகி ஒருவரை உ.பியில் ஆள வைத்தார், அதே உ.பியில் ஒரு தாழ்ந்த சாதிக் காதலர்களை நிர்வாணப்படுத்தி ஒருவர் மற்றவரை தோள் மேல் தூக்கிச் செல்ல வைத்த அவலத்தை தூக்க முடியாமல் அந்த நிர்வாணப்பெண் அந்த நிர்வாண ஆணை கீழே போட்டு விழ, எருக்க மாறைக் கொண்டு விளாசுகிறார்கள் ஊரே கூடி பின் தொடர்ந்து துரத்தியபடி..

எருக்க மாறு அடி எப்படி இருக்கும் தெரியுமா, வெறும் உடம்பில் , சுறீர், சுருக் என தைக்கும் சதை தீப்பற்றியது போல எரியும் அப்படித்தான் இருக்கிறது இந்த ஆட்சி முறையும்.

எனவே அதைப்பற்றி எல்லாம் எழுதச் சொல்லாதீர் நண்பர்களே. எனக்கு இன்னும் கடமையாற்ற வேண்டியது பாமர ஏழை மக்களுக்கு நிறைய இருக்கிறது நிறைய நோயாளி மக்கள் என் சிறு உதவியாலும் தம் துன்பம் தீர்க்கிறார்கள். மேலும் குடும்பத்துக்கும் பயன் தர வேண்டிய கட்டாயச் சூழல் உண்டு எனவே தான் பெற்றோர் ஊதியத்தில் படித்துக் கொண்டு எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசிக் கொண்டு இருக்கும் அந்த இளைஞர்கள் சொல்வதை எல்லாம் நான் கேட்பதாய் இல்லை.

எனவேதான். அவற்றுள் எல்லாம் புகாமல்: இன்று நாங்கள் பயணம் செய்த மேட்டூர் பயணிகள் ரயில் (Evening trip)  மேச்சேரி ரோடு என்ற நிறுத்தம் வரும் முன்பே தேவையில்லாமல் திடீரென நின்றது வழக்கம் போல சிக்னலுக்காக நிறுத்துகிறார்களோ என்று எண்ணி உள்ளே இருந்தேன்.

நமது கல்லூரி இளைஞர்கள் வந்து சொன்னார்கள், மாட்டை வீழ்த்திய கதையை...ஒன்றல்ல இரண்டு மாடுகள் என்பதை பின்பு புரிந்து கொண்டு பார்த்தோம். ஒன்று எஞ்சின் முன் அடித்து வீழ்த்தப்பட்டிருந்தது இறந்து கிடந்தது எலும்புகள் எல்லாம் முறிந்து போய் தோலும் அதுவுமாக...

அது செவலை மாடு, மற்றொன்று கறுப்பு நிறம், எங்களது கடைசிப் பெட்டிக்கும் சற்று முன்னர் கால் ஒடிந்து கிடந்தது...இதைக் காப்பாற்றலாம். ஆனால் நிற்குமா, நடக்குமா என்பது சந்தேகமே. அவ்வளவு பெருத்த உடலுடைய மாடுகளுக்கு இயற்கை இன்னும் பெரிதாக கால்கள் வைத்திருக்கலாமோ என்று பலமுறை சிந்தித்ததுண்டு. யானைக்கு சரியாக இருக்கிறது தூணைப்போல அந்த சுவர் உடம்பை தாங்க...ஆனால் இந்த மாடுகளுக்கு கால்கள் சிறியவை அதன் உடம்பை தாங்க சக்தி இல்லாததாக ஏன்?

இன்று மாடுகள் விற்கும் விலையில் அதன் மதிப்பு எவ்வளவோ ? ஏன் இந்த மாடு மேய்க்க வேண்டிய விவசாயிகள், அல்லது அதன் சொந்தக்காரர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறார்கள்? இது போல அடிக்கடி நடந்து வருகிறது எனக்குத் தெரிந்தே இப்போது 4 அல்லது 5 முறை இருக்கும் பல மாடுகள் இப்படி வீழ்ந்தன.

Image result for train killed 2 cows

ரயில்வேயில் பணி புரியும் ஒரு மேல் அலுவலர் ஒருவரும் தம் வீட்டருகே ரயில் நிற்கும் முன்பே இறங்குவதாக எண்ணி முகம் குப்புற விழுந்து அடிபட்டதாக செய்திகள் ...

ரயிலும் ரயில் சார்ந்த பயணமும் என்ற அத்தியாயத்தில் இவை எல்லாம் வருகின்றன....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. மேட்டூர் பயணிகள் இரயில் இரண்டு மாடுகளை வீழ்த்தியது: கவிஞர் தணிகை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete