Sunday, July 30, 2017

கொண்டலாம்பட்டி,வேடுகத்தாம்பட்டி பள்ளிகளில் விநாயகா மிஷன்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்கள்: கவிஞர் தணிகை

கொண்டலாம்பட்டி,வேடுகத்தாம்பட்டி பள்ளிகளில் விநாயகா மிஷன்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்கள்: கவிஞர் தணிகை

கடந்த வாரத்தில் கொண்டலாம்பட்டி வித்யாமந்திர் சிபிஎஸ் ஈ பள்ளியிலும் வேடுகத்தாம்பட்டி அரசினர் துவக்கப் பள்ளியிலும் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை, மற்றும் பல் பராமரிப்பு முகாம்கள் நடந்தன.

இந்த முகாம்களை கல்லூரி முதல்வர் டாக்டர் பேபிஜான் நடத்துவதற்கான அனுமதி அளித்தார், சமுதாய பல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் வழி காட்டுதலுடன் நடந்த இந்த முகாம்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயன் பெற்றனர்.




தலைமை ஆசிரியை சிரூன், காத்ரீன் மற்றும் ஆசிரியர்கள் உறு துணை புரிந்தனர். டாக்டர் மூகாம்பிகை உட்பட 20 கை தேர்ந்த கல்லூரியின் மருத்துவர்கள் சேவை புரிந்தனர். வாய் சுத்தம், பல் தூய்மையின் அவசியம்
தினமும் இரு முறை பல் துலக்குவதன் முக்கியத்துவம், பல் துலக்கும் சரியான முறைகள், பராமரிக்கும் வழிகள் போன்றவை செய் முறை விளக்கங்கள் வழியாகவும் விழிப்புணர்வுக் கருத்துரை வழியாகவும் அனைவர்க்கும் கொண்டு சேர்க்கப்பட்டது...



முக்கியாக வேடுகத்தாம்பட்டி 300 தொடக்கப்பள்ளி மாணவர்களை இடப் பற்றாக்குறை பள்ளியில் இருப்பதாலும் பள்ளியின் வகுப்புகள் 3 இடங்களில் இருப்பதாலும், தற்போது கட்டட வேலை நடைபெறுவதாலும் ஊருக்குப் பொதுவான முனியப்பன் கோவில் அருகே வேப்ப மரத்தடியில் விழிப்புணர்வு கருத்துரை இயற்கையான சூழலில் நடத்தப்பட்டது மிகவும் ரசிக்கும்படியாக இயல்பாக இயற்கையான கல்வி முறையாக அமைந்திருந்தது.

முகாம்களை முகாம் அலுவலர் சு.தணிகாசலம் ஒருங்கிணைத்து நடத்தி வைத்தார்.



இது ஒரு அறிக்கை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment