Tuesday, May 1, 2018

மே தினத்தில் இந்தியா 2018.‍‍ ‍‍கவிஞர் தணிகை.

மே தினத்தில் இந்தியா 2018.‍‍ ‍‍கவிஞர் தணிகை.

Image result for very worst may 1 in India 2018


மே தினம் ஒரு நாள் விடுமுறை. அதற்கும் மேல் ஆய்ந்தால் எதுவுமே மிஞ்சாத தேசம், மாநிலத்தில் நானும் எனது எண்ணங்களும். உழைப்பாளர் நாள் என்பார் உழைப்புக்கு மரியாதையே செய்யாத நாடும் மாநிலமும் எமது.

விவசாயி தினம் தினம் செத்து செத்து மடிய அவன் விளைபொருட்களுக்கு இடைத்தர‌கர் பலனடைந்து கட்டடங்களாக, காராக, ஏசியாக அவனது உழைப்பு வேறொரு கைகளில் சென்று மறைந்திருக்கும்.

அதுவும் இந்த மோடியின் கைகளில் நாடு வந்த பின்னே கல்வி உழைப்பு என்பதெல்லாம் கோடான கோடி அதல பாதாளத்திற்க்கு தள்ளப்பட்டுவிட்டன.

காங்கிரஸ், வாஜ்பாயி காலத்தில் எல்லாம் கூட தனியார் மயத்துக்கென்றும் பொதுத்துறை மையங்களை பிரித்து விற்பதற்கென்றும் தனியாக துறை நியமிக்கப்பட்டு அதற்கென மந்திரிகள் அருண் ஷோரி போன்றோர் வீரியம் மாறி செயல்பட்டதுண்டு.  என்றாலும் அம்பானிகளும், அதானிகளும், மல்லையாக்களும், லலித் மோடிகளும் ஸ்டெரிலைட் குழுமம் போன்றவையும் துணிந்து மோடியின் தோள் இருக்கிறது என தாலாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் என்ன மேதினம் இந்தியாவில் தமிழ் மண்ணில் தமிழி மண்ணில் வேண்டிக்கிடக்கிறது என்கிறீர்களா? அது சரிதான்.

இன்னும் உயிரும், உடலும் உணர்வும் கொஞ்சம் சிவப்பு வண்ணம் ஏதாவது சாதித்து அனைவர்க்கும் நன்மை பயத்து விடாதா என்ற நப்பாசையில் சிலரது பயணம்.

திரிபுரா புதிய முதல்வர் இந்த கட்சிக்காரர், அரசியல் செய்வோர் பின்னால் இளைஞரை அலையாதீர் அரசுப் பணிக்கு பதிலாக மாடு வாங்கி பால் கறந்து வியாபாரம் செய்தும், பெட்டிக்கடை வைத்தும் பிழைத்துக் கொள்வீர் இளைஞர்களே என வெளிப்படையாகவே பேசுகிறார்.

காஷ்மீரத்து துணை முதல்வர் அசிஃபா சம்பவம் சாதரணமானதுதான் என்கிறார் இங்கே தமிழகத்து எடப்பாடி ஆட்சியிலும் தினசரிகளில் வயது பழுத்த கிழங்கள் அரும்பாத சிறு பிஞ்சுகளை காம வன்முறையில் வீழ்த்தும் செய்திகள் ஒன்றிரண்டாவது தினமும் தென்படுகின்றன.

அதற்கு சட்டத்தில் கடும் தண்டனை தூக்கு தண்டனை என பாராளுமன்றம் மசோதா  தாக்கச் செய்து அரங்கேற்றியதை நுட்பமாக ஆய்ந்தால் அதில் மறுபடியும் நெளிவு சுளிவுகள் இருக்கின்றன. ஓட்டை வழியே தப்பி செல்ல குற்றவாளிகளுக்கு இடம் இல்லாமல் இல்லை...ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்...என்ற ரஷ்யாவின் அவாரியப் பழமொழி நினைவுக்கு வர, அதற்கு மாறாக மொக்கையான சட்டமும் தண்டனையும்...

ஒரு தொழிலாளிக்கு குறைந்த பட்சம் மாத சம்பளம் 16,600 என நீதிமன்றமும், நாட்டின் தொழிற்சட்டங்களும் சொல்லில் ஏன் ஏட்டில் சொல்லி இருக்க ஒரு பொறியாளருக்கும், மருத்துவருக்கும் கூட சில ஆயிரங்கள் ஊதியம் இருக்குமளவு நாடு கேடு கெட்டு விட்டது.

ப்ளஸ் டூ கூட தாண்டாத  தேறாத ஒரு இளைஞர் துபாய் போன்ற எண்ணெய் வள நாடுகளில் சுமார் எண்பதாயிரம் வரை ஊதியம் பெறுகிறார்.

கொத்துவேலை செய்வோர், மரத்தச்சு வேலை செய்வோர், மின் பணியாளர் போன்ற தனித்திறமை வாய்ந்தவர்க்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு நாளைக்கு சரியாக ஆயிரம் வரை கூட ஈட்டும் நிலையும் உள்ளது.
Related image



ஆனால் இவர்களுக்கு தொடர்ந்த வேலையில்லை...கிடைக்கும் ஊதியத்தை உறிஞ்சிக் குடிக்க மதுக்கடைகளை அரசே பரப்பி புகையை மூட்டி சீக்கிரமாக சுடுகாட்டில் கொண்டு வைக்கவும் அவர்கள் குடும்பத்துக்கு எவ்வளவு விரைவாக பாடை கட்டமுடியுமோ கட்டி வருகிறது.

ஒரு மனிதர் எப்படி குடும்பம் நடத்துவார், எப்படி பணிக்கு பேருந்தில் கட்டணம் செலுத்தி வருவார், போவார், எப்படி உடை உடுத்துவார், எப்படி கல்வி மருத்துவத்துக்கான  சுருக்கமாக சொன்னால் அவரது அன்றாட அத்தியாவசியத் தேவைகளை சிறிது கூட நிறைவு செய்து கொள்ள முடியாத அதைப் பற்றி சிறிதும் யோசனை, சிந்திக்காத தனியார் மயம், தாரளமையம், உலகமயம் அதில் மத்திய மாநில அரசுகளும் தனியார் முதலாளித்துவமும் உழைப்பளரை கசக்கிப் பிழிந்து வரும் காலச் சூழல்.


Related image

விவசாயிகளுக்கு எந்த வித எதிர்காலமும் இல்லை. கிராமங்கள் நிலை மகாக் கேவலம். மண்ணில் கைவைக்க நினைக்காத கல்விக்கும் , மண்ணில் கை வைக்க வேண்டிய தொழிலுக்கும் எந்தவித மதிப்புமே இல்லாமல் இருக்கும் நிலை.

2016 நவம்பரில் நள்ளிரவில் செல்லா நோட்டு என மோடி அறிவித்ததன் பயன்பாட்டில் ஒரு பலனும் விளையாமல் ஏழை எளியாரின் செல்வம் வங்கிக்குள் போக அத்தனையும் பணக்கார முதலைகளுக்கு கடனாக வாராக் கடனாக சென்று விட...

ட்ராக்டர் என்ற ஒரு எந்திரம் வந்து விவசாயத்தில் உடல் உழைப்பின் உழவு என்ற பதத்தை கெடுக்க, பொக்லைன் எந்திரங்கள் நிலத்தை பறித்து வாய்க்கால் , அடிக்கால் எடுக்க பயன்படுட்டு நிலத்தை தோண்டுவாரின் உழைப்பை அடியோடு எடுக்க‌

விவசாயிகளுக்கு சென்று உறுதுணை புரிந்து கொண்டிருந்த விவசாயக் கூலிகளின் ஒத்துழைப்பை நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பேரில் எல்லாம் கெடுக்க...


Image result for very worst may 1 in India 2018

இதை எல்லாம் சொன்னால் கூட மிக வறட்சியாக கவர்ச்சியாக இருக்காது படிக்க...ஏன் எனில் உழைப்பும் வியர்வையும் எப்போதும் கடினமானது வியர்வை நாற்றமுள்ளது..

கடின உழைப்பை விட புத்திசாலித்தனமான உழைப்பே வருவாய் பெருக்கும் என்றார்கள்...ஆனால் இப்போது எந்த படிப்புக்குமே முக்கியமாக பொறியியல் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

இது பற்றி ஒரு விவாதத்தில் ஒளி ஓவியர் தங்கார் பச்சான் கூட கடுமையாக பல்கலைகளையும் அதன் தலைவர்களையும் சாடி இருப்பார்.

இப்படி எவர் தாம் என்னதான் சொன்னாலும் இந்த நாட்டில் திருத்த ரேகை காணப்படவில்லை. மொழியியலில் தாய் மொழியை பின் தொடரும் ஜப்பான், சீனா, எண்ணெய் வள நாடுகள், ஜெர்மன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் முன்னணியிலும் உழைப்பை மதிப்பதிலும் சிறந்து விளங்க, மதம், மொழி , சாதீ சதி  தீ என இந்தியா இன்னும் கீழ் இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது

Related image

மத்திய மாநில அரசைக் கேட்டால் மிக முன்னேறியதாக புள்ளி விவரம் தருவார்கள்...ஆனால் கலாம் கண்ட 2020 இந்தியக் கனவு கிடப்பில்.  வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது...

இந்நிலையில் உழைப்பாளர் தினம் மேதினம் உலக அளவில் கொண்டாட இந்தியாவும் பங்கெடுத்தபடி மந்திரிமார்கள் எல்லாம் வாழ்த்து சொல்லிக் கொள்வதும், சிலை வணக்கம் செய்வதும், மேதினச் செய்தி தருவதும் மகாக் கேவலமானது , இழிவானது , வெட்கக் கேடானது...அதை முன்னேற்ற எந்தப் பணியுமே உருப்படியாக செய்யாமல் இருந்து கொண்டு தேய்ந்தபடியே இருக்கும் இத்தேசத்தில் வாழ்தலும் கேடு சாதலும் நன்று...

நல்ல தலைமைக்கு முன்னுரிமை தராமல் மக்களை இழி நிலையில் வைத்து வாக்கு வங்கி கொண்டு பிரித்தாண்டு பதவிக்கு வருவதையும் கடவுள் என்ற பேரில் அனைவரையும் ஏய்த்தபடியுமே இருக்கும் நாடுகளில் விதை தூவ இன்னும் எமக்கு காலமும் நேரமும் வாய்ப்பும் இருக்கிறது. அதில் ஒன்றாகத்தான் இந்தப் பதிவும்

அண்மைய காலத்தில் எனக்குத் தெரிந்த  அளவில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி  ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது அதன் கோரிக்கை பற்றி பேச முதலாளிகள் இறங்கி வந்தனர் என்ற ஒரு செய்திதான் உழைப்பாளர் தினமாக நேர்மறையாக எனக்கு கிடைத்தது...அத்துடன்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, April 29, 2018

உண்மையிலேயே நான் குற்றவாளியா? - சிறையிலிருந்து மரு. கபீல் கான்

கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...

உண்மையிலேயே நான் குற்றவாளியா? -  சிறையிலிருந்து மரு. கபீல் கான்

உண்மையிலேயே நான் குற்றவாளியா? -  சிறையிலிருந்து மரு. கபீல் கான்
கோரக்பூர் மருத்துவமனையின் துயரம்: மரு. கபீல் சிறையில் இருந்து எழுதியுள்ள கடிதம்...
(கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-11 நடுப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் உத்திரபிரதேச பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பரிதாபமாக 30 உயிரிழந்த துயரமான வேளையில் உயிருக்கு ஆபத்தான பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற விடாது போராடியதால் "ஹீரோ" என பொதுமக்களால் போற்றப்பட்டவர் மரு. காபீல் அகமது கான் ....
இந்நிலையில் குறித்த குழந்தைகளின் உயிர் இழப்பு - ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக அங்குள்ள அதிகாரிகளால் காட்டப்பட்ட அவர் மீது குற்றச் சதித்திட்டம் - 120B, கொலை செய்ய முயற்சி 308 மற்றும் அரசின் பொதுத்துறையின் பொது ஊழியர் மீதான மக்களின் நம்பிக்கையை சீரழித்தது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செப்டம்பர் 2 ஆம் திகதி கைது செய்து கோரக்பூரில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 8 மாதங்களாக கோரக்பூரில் சிறையில் உள்ளவருக்கு அவர் கீழ் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் ஏதொரு விளக்கத்தையும் செவியுறாது ஒரு காரணத்திற்காகவோ அல்லது மற்ற சொல்லப்படாத காரணத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
தனது கைதானது அநியாயமானது என்பதை ஆதாரபூர்வமாக குறித்த இளம் மருத்துவர் சிறையில் இருந்து எழுதியுள்ள 10 பக்கக் கடிதத்தில் ஊடகத்திற்கு விளக்கியுள்ளார்.)
அந்த ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கணமும் என் கண்கள் முன்னால் நடப்பதைப் போல் இன்னும் உயிரோடு இருக்கிறது. 8 மாதங்கள் தாங்கொணாத சித்திரவதைக்கு பிறகு, பார்வைக்கு பின்னால் அவமானம் அடைந்தபோதும் சில நேரங்களில், என்னை நானே கேட்கிறேன், " உண்மையில் நான் குற்றவாளியா ...? " பதில் என் இதயத்தில் இருந்து வெளியே மேல்தோன்றும் - ஆம் உறுதியாக நான் குற்றவாளி இல்லை ...
அந்த தருணத்தில் அந்த நொடியில் அந்த வாட்ஸாப் செய்தி கிடைத்த துயரமான அந்த 10 ஆகஸ்ட் 2017 நள்ளிரவில் நான் எல்லாவற்றையும் செய்தேன். ஒரு மருத்துவராக, ஒரு தந்தையாக, ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக செய்ய முடிந்ததை / செய்ய வேண்டியதை எல்லாம் செய்தேன்.
திரவ ஆக்ஸிஜன் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் நான் காப்பாற்ற முயன்றேன்.
ஆக்ஸிஜனின் பற்றாக்குறையால் இறக்கும் அந்த அப்பாவி பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற என் நிலையில் என்னால் முடிந்ததை செய்தேன். நான் சோர்வுறாமல் அனைவரையும் அழைத்தேன், நான் மன்றாடினேன், நான் பேசினேன், நான் ஓடினேன், ஓட்டிச் சொன்னேன், நான் கட்டளையிட்டேன், நான் கதறி அழுதேன், நான் ஆறுதல் அடைந்தேன், நான் ஆலோசனை சொன்னேன், நான் செலவு செய்தேன், நான் கடன் வாங்கினேன், நான் அழுதேன். மனித நேயத்தால் சாத்தியபடுத்தக்கூடிய அனைத்தையும் நான் செய்தேன்.
நான் துறையின் தலைவரை அழைத்தேன். என் சக மருத்துவ ஊழியர்களை, BRD முதல்வரை, தற்காலிக நியமன முதல்வரை, கோரக்பூர் மாவட்ட நீதிபதியை, கோரக்பூர் மாவட்ட மக்கள் சுகாதார நலன் கூடுதல் இயக்குனரை, கோரக்பூர் CMS மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை, BRD மருத்துவ & மருத்துவ சேவைகளுக்கான மையத்தை அழைத்து ஆக்ஸிஜனை வழங்குவதில் திடீரென்று ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மற்றும் திடீரென ஏற்படும் ஆபத்து காரணமாக குழந்தைகளின் உயிர்கள் எப்படி ஆபத்தில் உள்ளன என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தேன். (நான் அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளையும் சேமித்து வைத்துள்ளேன்.)
மோடி கேஸ் ஏஜென்சி , பாலாஜி கேஸ் ஏஜென்சி , இம்பீரியல் கேஸ் ஏஜென்சி, மயூர் ஏஸ் கேஸ் ஏஜென்சி உள்ளிட்ட கேஸ் ஏஜென்சிகளை - BRD மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிடமும் - நூற்றுக்கணக்கான அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஜம்போ சிலிண்டர்களுக்கு தங்களின் தொடர்பு எண்களை ஏற்பாடு செய்த பிறகு ஆக்ஸிஜன் விநியோகங்களை கேட்டு நான் மன்றாடி வேண்டினேன்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்திற்கு நான் அவர்களிடம் முன்பணம் கொடுத்தேன், மீதமுள்ள தொகையைச் செலுத்த உறுதியும் அளித்தேன். (திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் வரும் வரை நாங்கள் நாளொன்றுக்கு 250 உருளைகளை ஏற்பாடு செய்தோம். ஒரு ஜம்போ சிலிண்டர் விலை ரூ. 216 /-)
நான் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு, அதாவது 100 வது வார்டில் இருந்து 12 வது அவசர வார்டுக்கு ஓட்டப்பந்தய வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன். ஆக்ஸிஜன் வழங்கல் நிலையிலிருந்து தடையற்ற ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.
அருகிலுள்ள மருத்துவமனைகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுவர நானே என்னுடைய காரை ஒட்டி சென்றேன். என்னுடைய கார் அதற்கு போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த போது, உடனடியாக நான் இந்திய அரசின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான சிறப்பு சேவை பணியகத்திற்கு (SSB - Seema Suraksha Bal) விரைந்து சென்றேன், அங்கே அதன் டி.ஐ. ஜி அவர்களை சந்தித்து முன்னெப்பொழுதுமில்லாத இந்த துயரமான நிலைமையை குறித்து அவரிடம் விளக்கினேன். அவர்களின் பதில் மிக விரைவாகவும் ஆதரவளிப்பதாகவும் இருந்தது.
BRD யில் இருந்து காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஆக்ஸிஜன் ஏஜென்சியிடம் கொண்டு செல்லவும் அங்கே சிலிண்டர்களில் ஆக்ஸிஜன் நிரப்பி மீண்டும் அதை மருத்துவ பயன்பாட்டிற்காக BRD க்கு கொண்டு வரவும் சிறப்பு சேவை பணியகம் ஒரு பெரிய டிரக் & படையினர் அடங்கிய குழு ஒன்றை ஏற்பாடு செய்து தந்தது
அவர்கள் தொடர்ச்சியாக 48 மணி நேரம் பணிபுரிந்தனர். ஓயாத கடமையாற்றிய அவர்களது பணி எங்களை ஊக்குவித்தது.நான் SSB யை வணங்குகிறேன் மேலும் அவர்களின் தக்க நேரத்து உதவிக்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
ஜெய்_ஹிந்த்
நான் என் இளைய / மூத்த மருத்துவர்களிடம் பேசினேன், நான் என் சக ஊழியர்களிடம்,"பீதி அடையாதீர்கள்... மனச்சோர்வு கொள்ளாதீர்கள்... தங்களது குழந்தைகளுக்காக மனசோர்வில் நம்மிடம் கோபம் கொள்ளும் பெற்றோருடன் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாதீர்கள்... நீங்கள் யாரும் ஓய்வு எடுக்கவேக் கூடாது. ஒவ்வொரு குழந்தையின் உயிரும் முக்கியம், அந்த பிஞ்சு உயிர்களின் வாழ்க்கையை காப்பாற்ற திறம்பட சிகிச்சையளிப்பதற்காக நாம் ஒரு குழுவாக கடமையாற்ற வேண்டும். " என உத்தரவிட்டிருந்தேன்.
தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் துயரங்களை கண்டு நான் சொல்லொணாத வருத்தத்தை கொண்டேன். தங்களின் குழந்தைகளை இழந்தபின் மனம் உடைந்த நிலையில் கோபமடைந்த அந்த கஷ்டமான பெற்றோரிடம் நான் நிலவரத்தை விவரித்தேன். மருத்துவமனை மேற்கொண்ட பணிகளை கூறினேன். ஆலோசனை செய்தேன். அங்கே அப்பொழுது நிலவரம் மிகவும் குழப்பமாக இருந்தது.
நான் அவர்களுக்கு விளக்கினேன் - திரவ ஆக்ஸிஜன் O2 தீர்ந்துவிட்டது... ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு ஜம்போ சிலிண்டர்களை கொள்முதல் செய்துக்கொண்டிருப்பதை அவர்களுக்கு விளக்கினேன்.
எல்லோரும் உயிர்களை காப்பாற்ற கவனம் செலுத்த வேண்டும் என நான் இறைஞ்சினேன்... அழுதேன் / கதறினேன்.
நான் அழுதேன், ஆக்ஸிஜன் சப்ளையர்களுக்குக் கட்டணம் செலுத்தாத "நிர்வாகத் தோல்வி" மூலம் உருவாக்கப்பட்ட ஓர் பெரும் அழிவைப் பார்த்து உண்மையில் மருத்துவக் குழுவில் உள்ள அனைவருக்கும் அழுவதைத் தவிர்த்து வேறெதுவும் செய்ய முடியாத நிலை - ஒரு பயங்கரமான இருள் சூழ்நிலையை விளைவித்தது.
13-08-2017 அன்று 1:30 மணியளவில் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகள் BRD வரும் வரை நாங்கள் முயற்சி செய்வதை நிறுத்தவில்லை.
ஆனால், 13-08-2017 அன்று உத்திரபிரதேச முதல்வர் யோகிஜீ மகராஜ் அடுத்த நாள் காலை வந்தபோது என் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
அவர் கேட்டார் : எனவே நீதான் அந்த மரு.காபீல் !? நீ தான் சிலிண்டர்களை ஏற்பாடு செய்தது ?
நான் போயிருந்தேன் - ஆம் ஐயா...
அவர் மிகுந்த கோபம் மிக்கவராக என்னை பார்த்து கேட்டார் - அப்படின்னா சிலிண்டர்களை ஏற்பாடு செய்து நீ ஹீரோவா ஆயிடுவ...? இரு ...! நான் அதை கவனிக்கிறேன் ...
யோகிஜீ கோபமாக இருந்ததற்கு காரணம் ... இந்த சம்பவம் ஊடகங்களில் எப்படி வந்தது... நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றேன், அந்த இரவில் எந்த ஊடகவியலாளருக்கும் நான் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. முன்னதாகவே அன்றைய இரவு அவர்கள் அங்கேயே இருந்தனர்.
அதை தொடர்ந்து காவல்துறையினர் என் வீட்டிற்கு வர தொடங்கினர் - படுகொலை அச்சுறுத்தல், சித்திரவதை செய்தல் என எனது குடும்பத்தை சித்திரவதை செய்தனர்.
அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என மக்கள் என்னிடம் எச்சரிக்கை தெரிவித்தனர். என் குடும்பம், என் அம்மா, என் மனைவி, என் குழந்தைகள் மிகவும் அச்ச உணர்வில் இருந்தார்கள் அதனை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
என் குடும்பத்தை அவமானம், துன்பம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு நான் சரணடைந்தேன் - நான் தவறொன்றும் செய்ததில்லை என்பதால் நிச்சயமாக நான் நீதியை பெற வேண்டும்.
ஆனால் டிசம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் ஓடின. ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது - ஒவ்வொரு தேதியும் - டேரீக் பாத் தெய்வ்ஹ் (தேதியிட்ட தேதிகள் கழித்தது ) பிணை எடுப்பர் என நம்பிய நாட்கள் கழிந்தன. பின்னர் நீதித்துறை மேலும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். (அவர்கள் கூட அதை ஒப்புக்கொண்டனர்.)
ஒரு தடுப்பு முகாமில் கட்டாந்தரையில் 150 க்கும் மேற்பட்ட சிறைவாசிகளுடன் இரவில் மில்லியன் கணக்கான கொசுக்களுடனும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுடனும் தூங்கிக்கொண்டிருக்கிறேன். உண்டு உணவை விழுங்குவதற்கு முயற்சி செய்து, வயலில் குளிக்க அரை நிர்வாணமாகவும், உடைந்த கதவு கொண்ட ஒரு கழிப்பறைக்குள் உட்கார்ந்து கழிக்கிறேன். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் என் குடும்பத்தை சந்திக்க காத்திருக்கிறேன்.
வாழ்க்கையே நரகமாக எனக்கு மட்டுமல்ல என் முழு குடும்பத்திற்கும் சேர்த்தே துன்பகரமானதாக உள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை கோரக்பூரிலிருந்து அலாகாபாத் வரை நீதிக்கான நம்பிக்கையில் ஒரு தூணிலிருந்து மற்றொன்றை இயக்க வேண்டியிருந்தது - ஆனால் அனைத்தும் வீண்.
என் மகளுடைய முதல் பிறந்தநாளைக் கூட நான் அவளோடு இருந்து கொண்டாட முடியவில்லை இப்பொழுது அவளுக்கு 1 வயது 7 பழைய மாதங்களாகிறது. கூடுதலாக ஒரு குழந்தை மருத்துவர் என்ற வகையில் எனக்கு அது மிகவும் வேதனையாக இருக்கிறது, தனது குழந்தையை தவழ்வதை வளர்வதை சிரிப்பதை பார்க்க ஆவலுடன் இருக்கும் என்னை இதயமற்ற நிலைக்கு தள்ளுகிறது. இதயத்தை அது நொறுக்குகிறது.
ஒரு குழந்தை மருத்துவராக, ஒரு குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான பொழுதுகளை குறித்து நான் இதுவரை கூறியவைகளில் நடைபயில தொடங்கியது, மழலை மொழி பேசுவது ஓடுவது ஆடுவது என என் குழந்தை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.
எனவே இப்போது மீண்டும் அந்த கேள்வி என்னை வருத்துகிறது - நான் உண்மையில் குற்றவாளியா ? இல்லை... இல்லை... இல்லைவே இல்லை ...
நான் ஆகஸ்ட் 10, 2017 அன்று விடுமுறையில் இருந்தேன். (என் துறையின் தலைமை மூலம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டது). ஆனாலும், நான் என் கடமைகளைச் செய்ய விரைந்தேன் - அது தான் தவறா ?
கோரக்பூர் துயரம் என்பது உயர் அதிகார மட்டத்தின் மொத்த நிர்வாகத் தோல்வி ஆகும், அவர்கள் அந்த மட்டத்தின் தன்மையை உணரவில்லை என்பதோடு தங்களை காப்பாற்ற எங்களை பலிக்கடாவாக்கி சிறைக் கதவுகளுக்கு பின்னால் நிறுத்திவிட்டு அதன் மூலமாக உண்மையை கோரக்பூர் சிறைச்சாலையில் உள்ளே இருத்தி வைக்க எண்ணுகின்றனர்.
100 படுக்கைகள் கொண்ட கடுமையான மூளையழற்சி சிண்ட்ரோம் (AEH) வார்டு என்ற பிரிவின் துணைத் தலைவராகவும், BRD இன் துணைத் தலைவராகவும் எனக்கு தலைமை பதவி தந்தார்கள். இங்கு நான் ஒரு இளநிலை மருத்துவராகவே இருந்தேன். 08-08-2016 அன்று தான் ஒரு நிரந்தர ஊழியர் கூட ஆனேன். என்.ஆர்.ஹெச்எம்யில் நோடல் அதிகாரியாகவும், குழந்தை மருத்துவ பிரிவில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். என் முழு வேலையும் மாணவர்களுக்கு கற்பிப்பதும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் ஆகும். எனக்கும் திரவ ஆக்ஸிஜன் / ஜம்போ சிலிண்டர்கள் வாங்க / டெண்டர் எடுக்க / ஆர்டர் குடுக்க / பராமரிப்பு / சப்ளை / கட்டணம் செலுத்தம் விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
ரூ.68 இலட்சம் புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தில் இருந்து நிலுவைத்தொகையை திரும்பச் செலுத்துமாறு 14 முறை நினைவூட்டப்பட்டபோதும், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த மாவட்ட கலெக்டர், DM கோரக்பூர் (மருத்துவக்கல்விக்கான பொது இயக்குனர்), டி.ஜி.எம்.இ. மருத்துவக் கல்விக்கான பொது தலைவர் போன்றோர்தான் உண்மையான குற்றவாளிகள்.
புஷ்பா சேல்ஸ் (the official supplier) திரவ திரவ ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்தினால் , அதற்க்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாக முடியும் ?
மருத்துவத் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் கூட 'மருத்துவர்களுடைய வேலை என்பதானது சிகிச்சை செய்வது தானேயொழிய ஆக்ஸிஜனை வாங்குவதில்லை' என்று சொல்ல முடியும் .
மணீஷ் பண்டாரி (புஷ்பா விற்பனை இயக்குனர்) ஜாமீன் பெற்றபோது, நாங்களும் அதே வெளிச்சம் எங்கள் மீதும் இப்போது பாய்ந்து நீதி கிடைக்கும் என் குடும்பத்துடன் வாழ மறுபடியும் முடியும் என்றும் மீண்டும் மருத்துவ சேவை செய்ய முடியும் என நம்பி இருக்கிறேன்.
ஆனால் இல்லை - நாங்கள் இன்னும் காத்துக்கொண்டே இருக்கிறோம்
உச்ச நீதிமன்றம் கூறுகிறது - பிணை என்பது உரிமை, சிறை என்பது விதிவிலக்கு. இது நீதி கருச்சிதைவுற்றதற்கான ஒரு உன்னதமான உதாரணம்.
நான் நம்புகிறேன் நேரம் வரும் நான் விடுபடுவேன் சுதந்திரமாக என் குடும்பத்தாரோடு என் மகளோடு இருப்பேன். உண்மை எப்போதும் நீடித்திருக்கும். நீதி வழங்கப்படும்.
இப்படிக்கு,
என்ன செய்வது என்று அறியாத ...
ஒரு உதவியற்ற, மனம் உடைந்த தந்தை, கணவன், சகோதரன், மகன் & நண்பர்
மரு. கபீல் கான் 
18-04-2018

தமிழில் மொழியாக்கம் : செம்பியன்

Friday, April 27, 2018

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை


Related image


உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெவின் படம் தமிழகத்தின் சட்டசபையில் இடம் பெற்றிருப்பது  அதை நீக்க தேவையில்லை எனத் தீர்ப்பளித்தன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறது....

மேலும் சொல்லப் போனால் இது போல தமிழக அரசு முப்பதினாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இருப்பதாகவும் வட்ட மேஜை என்னும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றிய விவாத மேடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் பேசி புள்ளி விவரம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இழு இழு என ஊழல் இலஞ்சத்தால் இழு இழு என இழுத்து விட்டு இந்திய நீதி கடைசியில் ஜெ வின் மரணத்துக்கும் பிறகு வழக்குக்கு தீர்ப்பளித்து அதில் முதல் குற்றவாளிக்கு சட்டசபையில் படம் வைத்து ஆட்சீ நடத்துவது எவ்வளவு நீதி நேர்மையானது என்று உணருமளவு நமது குடி மக்களுக்கு நேரமில்லை...

மேலும்  அந்த 11 எம்.எல்.ஏ சட்டசபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வழக்கிலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவை  உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட இருப்பது யாவுமே மக்களை எல்லாம் மடமையாக்குவது, தாமதிக்கப்பட்ட நீதியும் தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதி என்று
என்றுதானே மானிட நீதி சொல்கிறது.

அதன் படி எல்லாம் பார்த்தால் ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆகி இருப்பதும் எவ்வளவு தவறான செயல் என்பதை இந்த சட்டம் நீதி எல்லாம் சொல்லவில்லையா?  இந்த எடப்பாடி அரசு தற்காலிக வெற்றிகளை இது போன்ற தீர்ப்பை   சாதகமாக‌         பெற்றிருப்பது  எல்லாம் பார்க்கும்போது... மக்களிடம் நீதியின் மேல் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் குழி நோண்டி ஆழத்தில் அழுத்தி அழுத்தி மேலும் ஆழத்தில் கொண்டு போய் ஆழ்த்தி இருக்கிறது என்பதை எவருமே மறுக்க முடியாது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

Monday, April 23, 2018

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

Related image


அது ஒரு உலக அளவிலான சேவை நிறுவனம். மணி அதில் கம்யூனிட்டி ஆர்கனைசர் ஆப் ரூரல் என்விரான்மென்ட் ஆபிசர்.அது பயிற்சிக்காலம். பதிவு அலுவலகம் புது டில்லியிலும், தேசிய மத்திய அலுவலகம் போபாலிலும். ஆந்திராவிலும் அதன் கிளைகள் 12 மாவட்டங்களில் வேரோடி இருந்தன. அதில் ஒன்று கம்மம் மாவட்டம் பிரிவு. ஹெட்கோட்டர் கம்மம் அங்கு தலைமை நிர்வாக அலுவலகம் அமைந்திருந்தது.

 அங்கு தான் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை சந்தித்தான். மாநிலங்கள் வேறாக இருந்தபோதும் நல்ல தோழமை நட்பு. இன்றையமையா உதவி. அவர் நெல்லூர். பெற்றோரை விட்டுப் பிரிந்து இங்கு சேவை செய்ய வழக்கறிஞராக வந்தவருக்கு, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கல் எல்லாம் நல்ல தொடர்பு. மணி பல மாநிலங்களுக்கும் மாறுதலாகி பயிற்சி முடிந்து திட்ட அலுவலராகி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி...தீபக் மிஸ்ரா அல்ல...அவருடன் எல்லாம் கலந்து கொண்ட காலத்தில்...நெல்லூர் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி மறக்காமல் திருமணப் அழைப்பிதழ் அனுப்பி அழைத்தது வரை இவர்கள் நட்பு அப்படியே இருந்தது.. .என் இன்னும் சொல்லப்போனால் அந்த நிறுவனத்திலிருந்து மணி விலகும் வரை என்றும் கூட சொல்லலாம்...

Related image
ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி அங்கிருந்த ஒரு லீகல் செல்லில் லாயர். ஆள் குள்ளையாக, கறுப்பாக‌ கட்டையாக இருப்பார். படு சுறு சுறுப்பு. சிகரெட்டும் கையுமாகவே பார்க்கலாம். வயது இருந்தால் 30க்குள் இருக்கும்.  பிரதிக்கட்டணா அதாங்க பூ ஒன்று புயலானது என தமிழில் விஜய்சாந்தி நடித்து பிரபலமானதே அந்தப் படம் அப்போது ஆந்திராவில்... அப்போது இரண்டு மாநிலமாக பிரியாத...என்.டி.ஆரை கடவுளாக வணங்கிய ஆந்திரா...சிவபார்வதியை கல்லூரி பேராசிரியையை பேரன் பேத்தி எடுத்த பின்னாலும் கூட இருவரும் மணந்து கொண்ட போதும் கூட கடவுள் கடவுள்தாம்... ஆந்திராவில் சினிமா மோகம் எப்போதும் அதிகமோ அதிகம் தான்...

அந்தப் பிரதிக்கட்டணா படத்தில் அந்த தாடி வைத்த ஜெய்ஜாண்டிக்கான வில்லன் ஒரு பைஜாமா குர்தா ஒரே கலரில் அணிந்திருப்பார்..அதாவது கோல்டு, பிங்க், இப்படிப்பட்ட லைட் கலரில்...அதை அப்படியே ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தியான‌ இவர் அணிவார் தோளில் ஒரு சால் வேறு அதே கலரில் காலில் ஒரு ஷீ...ஊருக்குள் சென்றால் எல்லாம் இவரையே பார்ப்பார்கள்...கறுத்த மூஞ்சி கட்டை குட்டை விரல் பற்றி எல்லாம் இவர் கவலைப் படவே மாட்டார்.... பணம் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. பணத்துக்கும் பஞ்சம் இல்லை போல் இருக்கும்.

சரண்ராஜ் கூட அப்படிப்பட்ட ஒரு படத்தில் இருந்து வில்லனாக நடிகராக நட்சத்திரமாகத் தோன்றியவர்தாம் அந்தக் காலக் கட்டத்தில்...


Image result for prathighatana telugu movie

அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மணிக்கு  ப்ரண்ட் இன் டீட் இஸ் ப்ரண்ட் இன் நீட் என்பதற்கு ஏற்ப நிறைய உதவிகள்...தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் ஆபிசர் என ...அதில் இரண்டு மட்டும் இங்கே...ஒன்று ஒரு முறை கம்மம் மமதா ஹோட்டல் அது இப்போது இருக்கிறதோ என்னவோ...சாப்பிட்டு விட்டு மடக்கும் குளிர் கண்ணாடி ஒன்றை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார்... திரும்ப போய்ப் பார்த்தால் காணோம். ஹோட்டல் முதலாளியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொன்ன சிறிது நேரத்தில் உள்ளூர் காவல்நிலையத்தின் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு போன் செய்து அரை மணி நேரத்தில் கண்ணாடி கைக்கு வந்து சேர்ந்த மாயத்தை செய்தவர்...

மணியால் ஒரு திருட்டு டிரைவரை வேலையை விட்டு நிறுவன அலுவலகம் அனுப்ப, அதற்கு பழி தீர்க்க அந்த திருட்டு டிரைவர் பேர் சத்யம்...இவன் எப்போது அந்த ஊர் வருவான் அவனைப் போட்டுத் தள்ளலாம் என கத்தியுடன் திரிய அவன் இவன் சாப்பிட சென்றால் கூட பின் தொடர்வதை அறிந்த மணி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொல்ல மறுபடியும் காவல் உதவி ஆய்வாளர்கள் தொடர்பால் சத்யத்தைப் பிடித்து மிரட்டி மணிக்கு நேர இருந்த ஆபத்தை நீக்கினார் ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தி... எப்படி அப்படி எல்லாம் உதவியிருப்பார்.

ஒரு வேளை ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு இயல்பாகவே உதவும் குணம் உண்டா அல்லது பின் வரும் சம்பவத்துக்கு பிராயச் சித்த உதவியாக அவர் மணிக்கு சில பல உதவிகள் செய்திருக்கக் கூடுமோ...

அது மணி அந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்த புதிது. மத்திய அலுவலகத்திலிருது கம்மம் அலுவலகம் செல்கிறார். அலுவலகப் பணியாக ஒரிஸ்ஸா செல்ல வேண்டியவர் இடையில்..

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அப்போது மணி மாலை 6 இருக்கும். இருள் கவிந்து இரவு வரும் நேரம். மணி ஒரிஸ்ஸா தனது களப்பணித் திட்டத்திற்கு செல்லும் முன் கம்மம் வழி என்பதால் அங்கு சென்று தங்கி விட்டு மறு நாள் கிளம்பலாம் என அங்கு சென்றார்.

அப்போது அவனிடம்  முன்பே அலுவலகத்தை விசாரித்தபடியே ஆஸ்திரேலியா அல்லது நெதர்லாந்தை சேர்ந்த ஒரு அயல் நாட்டுப்  பெண் இளைமையும், அழகும் உடன்..வேறு யாரும் இல்லா தனி...என்னுடன் கேட்டு எனைப் பிடித்தபடி அவளும் அந்த அலுவலகம் வந்தாள். அதெல்லாம் அங்கு சகஜம்...

மணி, அந்தப் பெண், ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி...மூவர்தாம்...அவ்வளவு பெரிய அலுவலகத்தில்...
மணி ப்ளீஸ் நீ கொஞ்சம் எனக்கு வாய்ப்பு கொடேன், வெளியே சென்று ஒரு சினிமா பார்த்து விட்டு வாயேன், அல்லது ஒரு மணி நேரம் கழித்து வாயேன் ப்ளீஸ் எனக் கெஞ்சினான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி..

மணி வெளியே சென்று விட்டார். காலம் கடந்த பின் மறுபடியும் அலுவலகம் வந்தார் தங்கிக் கொண்டார். மறு நாள் ஒரிஸ்ஸா சென்றார்.

ஸ்ரீராமச் சந்திரமூர்த்திக்கென தங்குவதற்கென அந்த அலுவலகத்தில் ஒரு அறை  எப்போதும் உண்டு...அந்த அறைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த அயல் நாட்டு அழகு மங்கை , எளிதாக இயல்பாக நட்புறவுடன் பேசி நடந்து கொண்ட அந்த மங்கை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி...இருவர் மட்டுமே அந்த அலுவலகத்தில் அந்த நேரத்தில் அங்கு இருந்தனர்...ஆங்கில மொழி உதவி வேண்டும்... இருவருக்கும் அது ஒன்றே பொது தொடர்பு... மேலும் ஆண் பெண் என்ற இருபால் கவர்தல்...இருவரின் இளமை...அதற்கு மேல் கற்பனை செல்ல வழி இல்லை.. அந்தப் பெண் இரவிருந்து மறு நாள் காலை செல்ல வேண்டிய இட சென்றாரா....அல்லது அன்றே சென்றுவிட்டாரா என்பதெல்லாம் மணிக்கு நினைவில்லை...

ஆனால் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி எப்போதும் நினைக்க நல்ல நண்பராகவே இருக்கிறார். அந்தப் பெண்...முகம் மறந்து போன அந்தப் பெண் எந்த நாட்டிலோ...என்ன ஊரிலோ, என்ன பேரிலோ...எல்லாம் ஒரு நேரம்...அதைத்தான் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச் சொல்லி இருக்க வேண்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை

புத்தரைப் போல ஒர் நாள்: கவிஞர் தணிகை
Related image


இரண்டு நாளுக்கும் மேல் ஆகிவிட்டது வீட்டை விட்டு வெளி சென்று.சற்றேறக்குறைய போக வர 2 கி.மீக்கும் மேல் இருக்கும்.நடந்தேன் குடையும் தலைமேல் தொப்பியுமாக... சரியான 11 மணி வெயில்

அது ஒரு சிறு தொழில் நகரத்தின் வழி. ஒரு வேப்பமரத்தினடியில் ஒரு ஆணும் பெண்ணும் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்...அட, இது போல வேப்பங்கொட்டைகளுக்காக கீழ் விழுந்து கிடக்கும் வேப்பம் பழங்களைப் பொறுக்குவதைப் பார்த்து எவ்வளவு நாளாகிறது...அருகே சென்றால் தான் தெரிகிறது அது ஓர் சிறு பட்டறை தொழில் புரியும் இடம், அனேகமாக வெல்டிங் செய்யும் இடமாகவும் இருக்கலாம். வாயிலில் கதவு மூடப்பட்டிருந்தது. இவர்கள் பொறுக்கியது கீழே புழுதி மண்ணில் விழுந்து கிடந்த ஆணிகளை... வேப்பமரத்தை அண்ணாந்துப் பார்த்தேன் அதில் பழங்கள் ஏதும் இல்லை..இப்போதுதான் பச்சையாக இலைகள் இருந்தன.

எனைக் கடந்து ஒரு சரக்குந்து சென்றது வெகு வேகமாக... சரியாக ரயில் பாலத்தினடியில் எந்த வண்டியும்  செல்லாத பாலத்தின் பக்கம் நிறுத்திக் கொண்டார்கள் எதிரே வந்த இருசக்கர மொபைக்கும் அந்த வண்டி அருகே மிக நெருங்கி சென்றது. அந்த வண்டி பின்னால் ஆங்கில எழுத்துகள் கேஎஸ்பி என ..முன்னால் பேரை நான் சரியாக கவனிக்கவில்லை...அந்த முன்று எழுத்துகளில் ஆங்கில ஜே இருந்ததாக நினைவு..

திரும்பி வருகையில் அந்த டேங்கர் லாரியின் மூடியைத் திறக்க முயன்று மேல் ஒருவன்...என்னைப் பார்த்தவுடன் நிறுத்திக் கொண்டான். நான் ஒன்றும் செய்ய மாட்டேன் நீ நடத்துவதை நடத்து என மனதுக்குள் பேசியபடி மறுபடியும் அவனை அந்தக் காட்சியைத் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்...ஆக்சிட் திருடி ட்யூப் வைத்து அந்த பைக் பேர்வழி கொண்டு வந்த கேனில் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்காமலே எனக்க்குப் புரிந்தது அதைப் பார்த்தும் உறுதி செய்து கொண்டேன். எவ்வளவு கன கச்சிதமாக அந்த இடத்தில் நிறுத்தி அந்த திருட்டு வேலையை செய்து கொள்கிறார்கள்...

திரும்பி வருகையில் அந்த ஆணி பொறுக்கிய பெண்ணும், அந்த சும்மா அவளுடன் நின்று கொண்டிருந்த ஆணும்...ஆணியை இரகம்  வாரியாக பிரித்து கூறு போட்டு சேர்த்தபடி இருந்தனர். ஒரு வேளை இதை விற்றால்தான் மதியம் சோறு என்றும் கூட இருக்கலாம்.


பாலத்தடியில் விநாயகரும், அம்மனும் வீற்றிருந்தார்கள்...எல்லா இந்துக் கடவுள்களும், இந்த விநாயகர், ரெண்டுப் பெண்டாட்டிக்கார முருகன்,அவனது தாய்,தந்தை சக்தி, சிவன், திருமால், இப்படி அவர்கள் அனைவருமே அந்த முகமதிய அல்லா கடவுளுக்கு ஆசிஃபா சித்ரவதையில், கொடுங்கொலைக்கு பதில் சொல்லியாக வேண்டியபடி நிலை ஏற்பட்டுவிட்டதே என எண்ணம் என்னுள் துளிர்விட்டது...

அந்தப் பாதையில் இருக்கும் இந்த சினிமா தியேட்டரை என்னவாக்குவது எனத் தெரியாமல் இன்னும் வீம்புக்கு தி புரொடக்டர் என்னும் ஆங்கிலப் படம் காட்டுவதாக சினிமா போஸ்டர் சொல்லியது... கதவுகள் திறந்து கிடந்தன...

புதிதாக சில ஜோதிட நிலையங்களும், கடைகளும்,பியூட்டி பார்லர்களும், பெட்டிக்கடை போல இன்னும் சில எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களின் புது போர்டுகளும் காட்சி அளித்தன... அதில் ஒரு மூடப்பட்ட ஜோதிட நிலையத்தில் பேரே வித்தியாசமாக இருக்க...விதி இருந்தால் நீ என்னிடம் இங்கு வந்துதான் ஆக வேண்டும் என ஒரு வாசகம் மிரட்டியது, தமிழனாயிருந்தால் ஷேர் செய் என்னும் வாட்ஸ் அப் செய்தி போல, மனிதராய் இருந்தால் கை தட்டு எனத் தம் பேச்சுக்கு மிரட்டி கேட்டு கை தட்டல் பெரும் முயற்சிக்கும் அசிங்கம் போல...

15.03. 2018ல் கால் வலி என ஒரு ஊசி போடச் சென்று மறைந்து போன சுசீலாவின் தே.மு.தி.க  மேற்கு மாவட்ட கிளை போட்ட ஒரு அடிக்கு ஒரு அடி நோட்டீஸ் வழி எங்கும் ஒட்டியிருந்தது...இன்னும் கிழிபடாமலே, உதிராமலே...

அதில் ஒன்று அம்மா முகத்தின் மேலே ஒட்டப்பட்டிருந்தது...எடப்பாடி கீழே ஏதோ எழுதியதன் அருகே அத்தனை பற்களையும் காட்டியபடி இருந்தார். உண்மையிலேயே அந்த சுசீலா நேரில் இருப்பதை விட இருந்ததை விட அந்த கருப்பு போட்டோ போட்ட‌  போஸ்டரில் நன்றாக சிரித்தபடியே தத்ரூபமாக உண்மை சொரூபமாக சரியான முறையில் இருந்தார். அவரது வீடு எது என அடையாளம் தெரியாமல் இருந்தது...

எதை எழுதினாலும் எனக்கு ஒரு முறை படித்துக் காண்பியேன் எனச் சொன்ன அப்பு முதலியாரின் வீடு இல்லை இல்லை பங்களா அவரில்லாமல் அப்படியே இருந்தது. எனது எழுத்துகளை பெரும்பாலும் வடிவமைத்துக் கொடுத்த செல்வன் பிரஸ் வெறும் பேரை மட்டும் சுவரில் வைத்துக் கொண்டிருந்தது.. மணியை செல்வன் பிரஸ் பணி முடிந்ததா போய்ப் பார்டா என்றால் சைக்கிள் இருந்தும் பல முறை போப்பா எத்தனை முறை போய் பார்ப்பது என சலித்துக் கொண்டது எல்லாம் நினைவுக்கு வந்தது...

அந்த தோழர்.ம.துரைசாமி, அவரது துணைவி, அவரது மகன் செல்வன் என்னும் நாகராஜ் அவரது குடும்பம் இருக்கும் சுவடே இல்லை. எல்லாம் வாடைகைக்கு விட்டு விட்டு வேறு எங்கோ சென்னையோ, பெங்களூரோ, வெளிநாடோ சென்று விட்டார்கள்...

நான் எழுதியதை அழித்திருக்க மாட்டார்கள் என இருந்தேன் பொதுமுனைய போர்டில்... புவி தினம் ஏப்ரல் 22..என்பதில் பு காணோம் மேலும் வேண்டுமென்றே கை வைத்தே கடைசி எழுத்துக்கும் முதல் என்பதில் இடை எழுத்தான த வை அழித்து முல் என அர்த்தமற்றதாக மாற்றுவதாக எண்ணி அர்த்தமற்ற செயல்களைப் புரிந்திருந்தார்கள் எவரோ, சிறுவரோ, கொழுப்பு எடுத்த நபரோ...

எங்கோ ஒரு கிளைப் பாதையில் இருந்து ஒரு உடன்பிறப்பு இரு சக்கர வாகனத்தில் வருவது போல இருந்தது அது அவரோ, வேறு எவரோ, நான் அந்தக் கிளைப்பாதையையும் கடந்து நேர்வழியில் மேட்டில் ஏறி சென்று கொண்டிருக்கிறேன் இலக்கு நோக்கி...

உலகு கை நழுவி, கால் நழுவி போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது நான் உணர்வது போல ஒவ்வொருவரும் ஒரு நாள் உணர்வார்கள்...எல்லாம் என்னால் கட்ட முடியாத பெரும் கட்டடங்களாய் மாறி இருக்கின்றன..என்னை விட சிறியவர்கள் வாழ வந்தவர்கள் எலலம் மாபெரும் கட்டட சாதனைகள் புரிந்திருக்க, நான் எனது இளமையைப் போலவே இப்போதும் தனியே நடந்தபடி இருக்கிறேன்... அதில் ஒரு கடையில் கொச்சையாகிப் போன பழம் நட்பு ஒன்றும் எனது பார்வைச் சூடு தாங்கமாட்டாமல் தலையை அப்புறம் திருப்பி பார்த்தபடியே இருந்தது...அதனுடன் தான் எத்தனை சுற்றல், எத்தனை திரிதல், எத்தனை அலைதல்....

Image result for buddha images


உறங்கும் போது மரணம் மிக இயல்பானதாக ஒரு பழுத்த இலை உதிர்வது போல இருக்க வேண்டும் என்கிறார்கள் வலி இல்லா நிறைவாக..



புவி எங்கும் காற்று நிறைந்திருக்கிறது. அதில் இருந்து சிறு அளவு தனக்கென எடுத்து சுவாசிக்க முடியாமல் உறுப்புகள் , உடற்கருவிகள் பயனற்று, பலனற்று போக...செயல்புரிந்த புலன்கள் மந்தமாகி  பழதாகி, பழமாகி இற்று சிதைந்து, மாற்றவே முடியாமல் செயல்பாடுகளை எல்லாம் நிறுத்தும் முன் ஒரு சவத்தின் ஊர்வலம் அதுவே சிவத்தின் வலம்...என்கிறார்கள்

இருந்தும் இல்லாதிருப்பது போல...என்கிறார்கள் யோகியை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, April 21, 2018

சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் புறக்கணிப்பு ஏன்?: கவிஞர் தணிகை

சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் புறக்கணிப்பு ஏன்?: கவிஞர் தணிகை


Image result for salem to mettur train


20.04.2018 அன்று மாலை சேலத்திலிருந்து மேட்டூருக்கு 5.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் எண்: 56102 ரத்து செய்யப்பட்டது . இது குறித்து துணை மேலாளர் வணிகத்தை தொடர்புகொண்டேன் அவரோ போடிக்கவுண்டன்பட்டி(பெயர் மறந்து விட்டது: ஒரு வேளை போடி நாயக்கன்பட்டியோ!) பால வேலைகள் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேலத்துடன் இணைக்க நடக்கிறது இந்தப் பணி. பொறுத்துக் கொள்ளுங்கள் நாளை அதாவது இன்று முதல் ரயில் ரெகுலராக இருக்கும் என்றார்.

ஆனால் அந்த ஊர் சேலம் ஜங்சன் அருகே அதாவது மேட்டூர் சேலம் ரயில்வே இருப்புப் பாதைக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதது. சேலம் சந்திப்பில் மேட்டூர் செல்ல வேண்டிய ரயிலும் நின்று கொண்டிருக்கிறது...ஆனால் காரணம் வேறு. காரியம் வேறு.

சேலம் சந்திப்புக்கு அருகே நடைபெறும் இந்தப் பணியின் காரணம் காட்டி நினைத்தால் அல்லது நினைத்தபோதெல்லாம் ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்ற இழி மொழிப்படி மேட்டூர் பயணிகள் ரயிலையே குறி வைத்து நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.

இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி இந்த ரயிலைத்தான் நிறுத்தி வைக்கிறார்கள். மேலும் கோவை விரைவு வண்டி வரும் வரை அது எவ்வளவு தாமதமானாலும் காத்திருக்க வைப்பது , நிறைய நபர்கள் இறங்குகிறார்கள் எனத் தெரிந்தபோதும் வண்டிப் பெட்டிகளை சிக்னல் அருகே கூட விரைவாக நகர்த்துவது, அதுவே ரெயில்வே ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு வேண்டும்படி மாற்றிக் கொள்வது...ரயில் மக்களுக்காகவா? மக்கள் ரயிலுக்காகவா? எந்த காலவரம்பும் இல்லாமல் உதவாத நேரத்தில் இதன் நேரத்தை வைத்திருப்பது...காலையில் மேட்டூரில் இருந்து 9மணிக்கு பக்கமாக சேலத்துக்கு எடுப்பது...இதை எல்லாம் பார்த்தால் மேட்டூர் சேலம் பஸ் ஓனர்கள் நன்கு கவனித்து வருகிறார்களோ என்று சந்தேகம் எழாமல் இல்லை....
Image result for salem to mettur train

எல்லாவகையிலும் சூது செய்து இந்த பயணிகள் ரயிலை நிறுத்தி விடலாம் என ரயில்வே நிர்வாகம் எண்ணி இருக்கிறதோ என்னவோ? மாதா மாதம் பாஸ் அல்லது சீசன் டிக்கட் எடுத்தவர்களின் நிலை என்ன? பேருந்து கட்டண உயர்வின் காரணமாக மிக நன்றாக மக்களும் ரயில் பயணம் நோக்கி  திரும்பி வரும் இந்தக் காலக் கட்டத்தில் இந்த ரயிலுக்கும் இதில் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள மக்களுக்கும் வாழ்க்கையில் இவ்வளவு இடையூறு செய்து விட்டு...வெண்ணிற உடையுடன் ஒரு சாரி சொல்லி விட்டால் கடமை முடிந்தது அவ்வளவுதானே....

இன்று ஹன்ஸ்ராஜ்வர்மா கோட்ட மேலாளருக்கு பதிலாக சுப்பாராவ் என்றவர் பொறுப்பேற்கிறார்...எப்படி இருக்கிறது இவரது மேலாண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Image result for salem to mettur train
பொறுப்பில்லாத நிர்வாகம், பொறுப்பில்லாத ஆட்சி, கட்சிகள், மக்கள்...

நின்று கொண்டிருக்கும் ரயிலில் வந்து அசுத்தம் செய்து விட்டு தமது தேவையை முடித்துக் கொண்டு அசுத்தம் சுத்தம் பற்றி எல்லாம் கவலைப்படாத பல வகைப்பட்ட மக்கள், நீர் வசதி சமயத்தில் செய்து வைக்காத ரயில் நிர்வாகம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, April 19, 2018

அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

 அவர்கள் ஏன் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை.

Image result for asibaa kasmir raped 8 year old child



மேட்டூர் பயணிகள் ரயிலில் ஏறி அமர சிவப்பு நிற ஈரலைத் துண்டையும் இரு தோள்களில் மாட்டும் பையையும் வைத்து விட்டு வெளியில் வந்த கொஞ்ச நேரத்தில் சீட் மேல் போட்டிருந்த துண்டைக் காணோம்.

அப்போதுதான் அந்த கடைசிக் கம்பார்ட்மென்டில் ஏறியிருந்த 3 பெருங்கூட்டுப் பெண்களில் இருவர் படுத்துக் கொண்டிருந்தனர் ரயில் சீட்களில், இரண்டு சிறுவர் சிறுமிகள்...ஆண் ஒருவர்...

அவர்களைக் கேட்டால் அவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என எல்லாருமே ஒரே  மாதிரி குரலில் கூறினர்....நான் விடாமல் தீவிரமாகத் தேட ஆரம்பித்து வாய்க்குள் முணகலாக திட்ட ஆரம்பித்த நேரத்தில் ஆரம்பத்தில் பார்க்கவே இல்லை, நாங்கள் எடுக்கவே இல்லை என்றவர்கள்...என்ன தோன்றியதோ எங்கள் துண்டு மாதிரியே இருந்தது என எடுத்து வைத்துக் கொண்டோம் என பையிலிருந்த துண்டை எடுத்துக் கொடுத்தார்கள்...உடனே அதை இன்று துவைக்க ஊறவைத்திருக்கிறேன். நாளைதான் அதை துவைக்க வேண்டும்.

அந்த குடும்பத்து சிறுவன் ஓடி ஆடிக் கொண்டிருந்தான், நல்ல வேளை விழவில்லை எங்கும். ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே படியருகே எல்லாம் சென்றான் நான் என்னையறியாமல் கத்தி எச்சரிக்கை செய்தேன்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் அந்த வாந்தியை நீர் கொண்டு கழுவி விடாமல் ரயிலின் இரண்டு ஓய்வறைகளிலுமே அசுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்..அதைப் பற்றி எந்தக்கவலையுமே சுத்தப்படுத்தல் பற்றி அவர்களுக்கு இல்லை.

அவர்கள் பேச்சும், நடையும், ஏன் இன்னும் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள் ஏன் இவர்களுக்கு தூய்மை பற்றி சிந்தனை இன்னும் வரவே இல்லை... இந்த திருட்டுக் குணம் அல்லது பொய் சொல்லும் போக்கு எல்லாம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது...

நான் இவர்களுக்காக பல்லாண்டு காலம் சேவை செய்தேன்...எல்லாரும் செய்திருக்கிறார்கள்...


Image result for asibaa kasmir raped 8 year old child

அதே போல அந்த காஷ்மீரக் காடுகளில் திர்ந்த அசிபா கதை...கால்கள் முறிக்கப்ப்ட்டு மாத்திரை கொடுக்கப்பட்டு, முதுகெலும்பு ஒடிக்கப்பட்டு, தலையில் கற்களை போட்டு அந்த உடலை தூக்கி எறிந்து இறுதியாக நல்லடக்கத்துக்கும் வழி தராமல் துரத்தி அடித்து...தேசியக் கொடியை பிடித்து...காவலர்கள் என்று போர்வை போர்த்தி,...அரசு ஊழியர்கள் எனப் பாசாங்கு செய்து இந்து என்ற மதமாச்சரியம் செய்து....விலங்கையும் விட கேவலமான பொல்லாங்கு செய்து கோவில் இவர்களுக்கு எல்லாம் ஒரு கேடு, சாமி ஒரு பாடு என...இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் இப்படியே இருக்கிறார்கள்?

தினசரிகளில் ஒன்றிரண்டு செய்திகளாவது தினமும்...சொந்த தாத்தாவே பேத்தியை 6 வயது பேத்தியை என்றெல்லாம். அந்தக் கிழவனுக்கும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு தண்டனையாம்..
Image result for asibaa kasmir raped 8 year old child



என்னடா நடக்குது நாட்டுல? இது நாடா வெறும் காடா? நாதி இல்லையாடா கேட்க என்னடா ஒங்களுக்கு மதம் போட்டுக் கிழிக்குது...

வேலை படிப்பு எல்லாவற்றிலும் இட வசதி...இப்படியாக 70 ஆண்டுக்கும் மேலாக செய்தும்...ஏன் இவர்கள் எல்லாம் இப்படியே இருக்கிறார்கள்...ஆய்வு செய்ய வேண்டிய நிலை...ஐநாவில் இதுவரை இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் எழுபத்தி ஏழாயிரம் பேர் என்று கணக்கு கொடுத்துவிட்டு அந்த நபர் அழுகையை நிறுத்த முடியவில்லை என வீடியோ காண்பிக்கிறாது...பாக்கிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை எல்லாம் குற்றம் சொல்ல இந்தியாவுக்குத் தகுதி இருக்கிறதா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.