மே தினத்தில் இந்தியா 2018. கவிஞர் தணிகை.
மே தினம் ஒரு நாள் விடுமுறை. அதற்கும் மேல் ஆய்ந்தால் எதுவுமே மிஞ்சாத தேசம், மாநிலத்தில் நானும் எனது எண்ணங்களும். உழைப்பாளர் நாள் என்பார் உழைப்புக்கு மரியாதையே செய்யாத நாடும் மாநிலமும் எமது.
விவசாயி தினம் தினம் செத்து செத்து மடிய அவன் விளைபொருட்களுக்கு இடைத்தரகர் பலனடைந்து கட்டடங்களாக, காராக, ஏசியாக அவனது உழைப்பு வேறொரு கைகளில் சென்று மறைந்திருக்கும்.
அதுவும் இந்த மோடியின் கைகளில் நாடு வந்த பின்னே கல்வி உழைப்பு என்பதெல்லாம் கோடான கோடி அதல பாதாளத்திற்க்கு தள்ளப்பட்டுவிட்டன.
காங்கிரஸ், வாஜ்பாயி காலத்தில் எல்லாம் கூட தனியார் மயத்துக்கென்றும் பொதுத்துறை மையங்களை பிரித்து விற்பதற்கென்றும் தனியாக துறை நியமிக்கப்பட்டு அதற்கென மந்திரிகள் அருண் ஷோரி போன்றோர் வீரியம் மாறி செயல்பட்டதுண்டு. என்றாலும் அம்பானிகளும், அதானிகளும், மல்லையாக்களும், லலித் மோடிகளும் ஸ்டெரிலைட் குழுமம் போன்றவையும் துணிந்து மோடியின் தோள் இருக்கிறது என தாலாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் என்ன மேதினம் இந்தியாவில் தமிழ் மண்ணில் தமிழி மண்ணில் வேண்டிக்கிடக்கிறது என்கிறீர்களா? அது சரிதான்.
இன்னும் உயிரும், உடலும் உணர்வும் கொஞ்சம் சிவப்பு வண்ணம் ஏதாவது சாதித்து அனைவர்க்கும் நன்மை பயத்து விடாதா என்ற நப்பாசையில் சிலரது பயணம்.
திரிபுரா புதிய முதல்வர் இந்த கட்சிக்காரர், அரசியல் செய்வோர் பின்னால் இளைஞரை அலையாதீர் அரசுப் பணிக்கு பதிலாக மாடு வாங்கி பால் கறந்து வியாபாரம் செய்தும், பெட்டிக்கடை வைத்தும் பிழைத்துக் கொள்வீர் இளைஞர்களே என வெளிப்படையாகவே பேசுகிறார்.
காஷ்மீரத்து துணை முதல்வர் அசிஃபா சம்பவம் சாதரணமானதுதான் என்கிறார் இங்கே தமிழகத்து எடப்பாடி ஆட்சியிலும் தினசரிகளில் வயது பழுத்த கிழங்கள் அரும்பாத சிறு பிஞ்சுகளை காம வன்முறையில் வீழ்த்தும் செய்திகள் ஒன்றிரண்டாவது தினமும் தென்படுகின்றன.
அதற்கு சட்டத்தில் கடும் தண்டனை தூக்கு தண்டனை என பாராளுமன்றம் மசோதா தாக்கச் செய்து அரங்கேற்றியதை நுட்பமாக ஆய்ந்தால் அதில் மறுபடியும் நெளிவு சுளிவுகள் இருக்கின்றன. ஓட்டை வழியே தப்பி செல்ல குற்றவாளிகளுக்கு இடம் இல்லாமல் இல்லை...ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்...என்ற ரஷ்யாவின் அவாரியப் பழமொழி நினைவுக்கு வர, அதற்கு மாறாக மொக்கையான சட்டமும் தண்டனையும்...
ஒரு தொழிலாளிக்கு குறைந்த பட்சம் மாத சம்பளம் 16,600 என நீதிமன்றமும், நாட்டின் தொழிற்சட்டங்களும் சொல்லில் ஏன் ஏட்டில் சொல்லி இருக்க ஒரு பொறியாளருக்கும், மருத்துவருக்கும் கூட சில ஆயிரங்கள் ஊதியம் இருக்குமளவு நாடு கேடு கெட்டு விட்டது.
ப்ளஸ் டூ கூட தாண்டாத தேறாத ஒரு இளைஞர் துபாய் போன்ற எண்ணெய் வள நாடுகளில் சுமார் எண்பதாயிரம் வரை ஊதியம் பெறுகிறார்.
கொத்துவேலை செய்வோர், மரத்தச்சு வேலை செய்வோர், மின் பணியாளர் போன்ற தனித்திறமை வாய்ந்தவர்க்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு நாளைக்கு சரியாக ஆயிரம் வரை கூட ஈட்டும் நிலையும் உள்ளது.
ஆனால் இவர்களுக்கு தொடர்ந்த வேலையில்லை...கிடைக்கும் ஊதியத்தை உறிஞ்சிக் குடிக்க மதுக்கடைகளை அரசே பரப்பி புகையை மூட்டி சீக்கிரமாக சுடுகாட்டில் கொண்டு வைக்கவும் அவர்கள் குடும்பத்துக்கு எவ்வளவு விரைவாக பாடை கட்டமுடியுமோ கட்டி வருகிறது.
ஒரு மனிதர் எப்படி குடும்பம் நடத்துவார், எப்படி பணிக்கு பேருந்தில் கட்டணம் செலுத்தி வருவார், போவார், எப்படி உடை உடுத்துவார், எப்படி கல்வி மருத்துவத்துக்கான சுருக்கமாக சொன்னால் அவரது அன்றாட அத்தியாவசியத் தேவைகளை சிறிது கூட நிறைவு செய்து கொள்ள முடியாத அதைப் பற்றி சிறிதும் யோசனை, சிந்திக்காத தனியார் மயம், தாரளமையம், உலகமயம் அதில் மத்திய மாநில அரசுகளும் தனியார் முதலாளித்துவமும் உழைப்பளரை கசக்கிப் பிழிந்து வரும் காலச் சூழல்.
விவசாயிகளுக்கு எந்த வித எதிர்காலமும் இல்லை. கிராமங்கள் நிலை மகாக் கேவலம். மண்ணில் கைவைக்க நினைக்காத கல்விக்கும் , மண்ணில் கை வைக்க வேண்டிய தொழிலுக்கும் எந்தவித மதிப்புமே இல்லாமல் இருக்கும் நிலை.
2016 நவம்பரில் நள்ளிரவில் செல்லா நோட்டு என மோடி அறிவித்ததன் பயன்பாட்டில் ஒரு பலனும் விளையாமல் ஏழை எளியாரின் செல்வம் வங்கிக்குள் போக அத்தனையும் பணக்கார முதலைகளுக்கு கடனாக வாராக் கடனாக சென்று விட...
ட்ராக்டர் என்ற ஒரு எந்திரம் வந்து விவசாயத்தில் உடல் உழைப்பின் உழவு என்ற பதத்தை கெடுக்க, பொக்லைன் எந்திரங்கள் நிலத்தை பறித்து வாய்க்கால் , அடிக்கால் எடுக்க பயன்படுட்டு நிலத்தை தோண்டுவாரின் உழைப்பை அடியோடு எடுக்க
விவசாயிகளுக்கு சென்று உறுதுணை புரிந்து கொண்டிருந்த விவசாயக் கூலிகளின் ஒத்துழைப்பை நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற பேரில் எல்லாம் கெடுக்க...
இதை எல்லாம் சொன்னால் கூட மிக வறட்சியாக கவர்ச்சியாக இருக்காது படிக்க...ஏன் எனில் உழைப்பும் வியர்வையும் எப்போதும் கடினமானது வியர்வை நாற்றமுள்ளது..
கடின உழைப்பை விட புத்திசாலித்தனமான உழைப்பே வருவாய் பெருக்கும் என்றார்கள்...ஆனால் இப்போது எந்த படிப்புக்குமே முக்கியமாக பொறியியல் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
இது பற்றி ஒரு விவாதத்தில் ஒளி ஓவியர் தங்கார் பச்சான் கூட கடுமையாக பல்கலைகளையும் அதன் தலைவர்களையும் சாடி இருப்பார்.
இப்படி எவர் தாம் என்னதான் சொன்னாலும் இந்த நாட்டில் திருத்த ரேகை காணப்படவில்லை. மொழியியலில் தாய் மொழியை பின் தொடரும் ஜப்பான், சீனா, எண்ணெய் வள நாடுகள், ஜெர்மன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் முன்னணியிலும் உழைப்பை மதிப்பதிலும் சிறந்து விளங்க, மதம், மொழி , சாதீ சதி தீ என இந்தியா இன்னும் கீழ் இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது
மத்திய மாநில அரசைக் கேட்டால் மிக முன்னேறியதாக புள்ளி விவரம் தருவார்கள்...ஆனால் கலாம் கண்ட 2020 இந்தியக் கனவு கிடப்பில். வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது...
இந்நிலையில் உழைப்பாளர் தினம் மேதினம் உலக அளவில் கொண்டாட இந்தியாவும் பங்கெடுத்தபடி மந்திரிமார்கள் எல்லாம் வாழ்த்து சொல்லிக் கொள்வதும், சிலை வணக்கம் செய்வதும், மேதினச் செய்தி தருவதும் மகாக் கேவலமானது , இழிவானது , வெட்கக் கேடானது...அதை முன்னேற்ற எந்தப் பணியுமே உருப்படியாக செய்யாமல் இருந்து கொண்டு தேய்ந்தபடியே இருக்கும் இத்தேசத்தில் வாழ்தலும் கேடு சாதலும் நன்று...
நல்ல தலைமைக்கு முன்னுரிமை தராமல் மக்களை இழி நிலையில் வைத்து வாக்கு வங்கி கொண்டு பிரித்தாண்டு பதவிக்கு வருவதையும் கடவுள் என்ற பேரில் அனைவரையும் ஏய்த்தபடியுமே இருக்கும் நாடுகளில் விதை தூவ இன்னும் எமக்கு காலமும் நேரமும் வாய்ப்பும் இருக்கிறது. அதில் ஒன்றாகத்தான் இந்தப் பதிவும்
அண்மைய காலத்தில் எனக்குத் தெரிந்த அளவில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது அதன் கோரிக்கை பற்றி பேச முதலாளிகள் இறங்கி வந்தனர் என்ற ஒரு செய்திதான் உழைப்பாளர் தினமாக நேர்மறையாக எனக்கு கிடைத்தது...அத்துடன்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment