சேலம் கோட்டத்தின் செயல்பாடுகளில் மேட்டூர் சேலம் பயணிகள் ரயில் புறக்கணிப்பு ஏன்?: கவிஞர் தணிகை
20.04.2018 அன்று மாலை சேலத்திலிருந்து மேட்டூருக்கு 5.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் எண்: 56102 ரத்து செய்யப்பட்டது . இது குறித்து துணை மேலாளர் வணிகத்தை தொடர்புகொண்டேன் அவரோ போடிக்கவுண்டன்பட்டி(பெயர் மறந்து விட்டது: ஒரு வேளை போடி நாயக்கன்பட்டியோ!) பால வேலைகள் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேலத்துடன் இணைக்க நடக்கிறது இந்தப் பணி. பொறுத்துக் கொள்ளுங்கள் நாளை அதாவது இன்று முதல் ரயில் ரெகுலராக இருக்கும் என்றார்.
ஆனால் அந்த ஊர் சேலம் ஜங்சன் அருகே அதாவது மேட்டூர் சேலம் ரயில்வே இருப்புப் பாதைக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாதது. சேலம் சந்திப்பில் மேட்டூர் செல்ல வேண்டிய ரயிலும் நின்று கொண்டிருக்கிறது...ஆனால் காரணம் வேறு. காரியம் வேறு.
சேலம் சந்திப்புக்கு அருகே நடைபெறும் இந்தப் பணியின் காரணம் காட்டி நினைத்தால் அல்லது நினைத்தபோதெல்லாம் ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்ற இழி மொழிப்படி மேட்டூர் பயணிகள் ரயிலையே குறி வைத்து நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.
இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி இந்த ரயிலைத்தான் நிறுத்தி வைக்கிறார்கள். மேலும் கோவை விரைவு வண்டி வரும் வரை அது எவ்வளவு தாமதமானாலும் காத்திருக்க வைப்பது , நிறைய நபர்கள் இறங்குகிறார்கள் எனத் தெரிந்தபோதும் வண்டிப் பெட்டிகளை சிக்னல் அருகே கூட விரைவாக நகர்த்துவது, அதுவே ரெயில்வே ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு வேண்டும்படி மாற்றிக் கொள்வது...ரயில் மக்களுக்காகவா? மக்கள் ரயிலுக்காகவா? எந்த காலவரம்பும் இல்லாமல் உதவாத நேரத்தில் இதன் நேரத்தை வைத்திருப்பது...காலையில் மேட்டூரில் இருந்து 9மணிக்கு பக்கமாக சேலத்துக்கு எடுப்பது...இதை எல்லாம் பார்த்தால் மேட்டூர் சேலம் பஸ் ஓனர்கள் நன்கு கவனித்து வருகிறார்களோ என்று சந்தேகம் எழாமல் இல்லை....
எல்லாவகையிலும் சூது செய்து இந்த பயணிகள் ரயிலை நிறுத்தி விடலாம் என ரயில்வே நிர்வாகம் எண்ணி இருக்கிறதோ என்னவோ? மாதா மாதம் பாஸ் அல்லது சீசன் டிக்கட் எடுத்தவர்களின் நிலை என்ன? பேருந்து கட்டண உயர்வின் காரணமாக மிக நன்றாக மக்களும் ரயில் பயணம் நோக்கி திரும்பி வரும் இந்தக் காலக் கட்டத்தில் இந்த ரயிலுக்கும் இதில் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள மக்களுக்கும் வாழ்க்கையில் இவ்வளவு இடையூறு செய்து விட்டு...வெண்ணிற உடையுடன் ஒரு சாரி சொல்லி விட்டால் கடமை முடிந்தது அவ்வளவுதானே....
இன்று ஹன்ஸ்ராஜ்வர்மா கோட்ட மேலாளருக்கு பதிலாக சுப்பாராவ் என்றவர் பொறுப்பேற்கிறார்...எப்படி இருக்கிறது இவரது மேலாண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பொறுப்பில்லாத நிர்வாகம், பொறுப்பில்லாத ஆட்சி, கட்சிகள், மக்கள்...
நின்று கொண்டிருக்கும் ரயிலில் வந்து அசுத்தம் செய்து விட்டு தமது தேவையை முடித்துக் கொண்டு அசுத்தம் சுத்தம் பற்றி எல்லாம் கவலைப்படாத பல வகைப்பட்ட மக்கள், நீர் வசதி சமயத்தில் செய்து வைக்காத ரயில் நிர்வாகம்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வணக்கம்,
ReplyDeletewww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US