Monday, April 23, 2018

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி: கவிஞர் தணிகை

Related image


அது ஒரு உலக அளவிலான சேவை நிறுவனம். மணி அதில் கம்யூனிட்டி ஆர்கனைசர் ஆப் ரூரல் என்விரான்மென்ட் ஆபிசர்.அது பயிற்சிக்காலம். பதிவு அலுவலகம் புது டில்லியிலும், தேசிய மத்திய அலுவலகம் போபாலிலும். ஆந்திராவிலும் அதன் கிளைகள் 12 மாவட்டங்களில் வேரோடி இருந்தன. அதில் ஒன்று கம்மம் மாவட்டம் பிரிவு. ஹெட்கோட்டர் கம்மம் அங்கு தலைமை நிர்வாக அலுவலகம் அமைந்திருந்தது.

 அங்கு தான் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை சந்தித்தான். மாநிலங்கள் வேறாக இருந்தபோதும் நல்ல தோழமை நட்பு. இன்றையமையா உதவி. அவர் நெல்லூர். பெற்றோரை விட்டுப் பிரிந்து இங்கு சேவை செய்ய வழக்கறிஞராக வந்தவருக்கு, நீதிமன்றங்கள், காவல் நிலையங்கல் எல்லாம் நல்ல தொடர்பு. மணி பல மாநிலங்களுக்கும் மாறுதலாகி பயிற்சி முடிந்து திட்ட அலுவலராகி உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி...தீபக் மிஸ்ரா அல்ல...அவருடன் எல்லாம் கலந்து கொண்ட காலத்தில்...நெல்லூர் ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி மறக்காமல் திருமணப் அழைப்பிதழ் அனுப்பி அழைத்தது வரை இவர்கள் நட்பு அப்படியே இருந்தது.. .என் இன்னும் சொல்லப்போனால் அந்த நிறுவனத்திலிருந்து மணி விலகும் வரை என்றும் கூட சொல்லலாம்...

Related image
ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி அங்கிருந்த ஒரு லீகல் செல்லில் லாயர். ஆள் குள்ளையாக, கறுப்பாக‌ கட்டையாக இருப்பார். படு சுறு சுறுப்பு. சிகரெட்டும் கையுமாகவே பார்க்கலாம். வயது இருந்தால் 30க்குள் இருக்கும்.  பிரதிக்கட்டணா அதாங்க பூ ஒன்று புயலானது என தமிழில் விஜய்சாந்தி நடித்து பிரபலமானதே அந்தப் படம் அப்போது ஆந்திராவில்... அப்போது இரண்டு மாநிலமாக பிரியாத...என்.டி.ஆரை கடவுளாக வணங்கிய ஆந்திரா...சிவபார்வதியை கல்லூரி பேராசிரியையை பேரன் பேத்தி எடுத்த பின்னாலும் கூட இருவரும் மணந்து கொண்ட போதும் கூட கடவுள் கடவுள்தாம்... ஆந்திராவில் சினிமா மோகம் எப்போதும் அதிகமோ அதிகம் தான்...

அந்தப் பிரதிக்கட்டணா படத்தில் அந்த தாடி வைத்த ஜெய்ஜாண்டிக்கான வில்லன் ஒரு பைஜாமா குர்தா ஒரே கலரில் அணிந்திருப்பார்..அதாவது கோல்டு, பிங்க், இப்படிப்பட்ட லைட் கலரில்...அதை அப்படியே ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தியான‌ இவர் அணிவார் தோளில் ஒரு சால் வேறு அதே கலரில் காலில் ஒரு ஷீ...ஊருக்குள் சென்றால் எல்லாம் இவரையே பார்ப்பார்கள்...கறுத்த மூஞ்சி கட்டை குட்டை விரல் பற்றி எல்லாம் இவர் கவலைப் படவே மாட்டார்.... பணம் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. பணத்துக்கும் பஞ்சம் இல்லை போல் இருக்கும்.

சரண்ராஜ் கூட அப்படிப்பட்ட ஒரு படத்தில் இருந்து வில்லனாக நடிகராக நட்சத்திரமாகத் தோன்றியவர்தாம் அந்தக் காலக் கட்டத்தில்...


Image result for prathighatana telugu movie

அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மணிக்கு  ப்ரண்ட் இன் டீட் இஸ் ப்ரண்ட் இன் நீட் என்பதற்கு ஏற்ப நிறைய உதவிகள்...தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் ஆபிசர் என ...அதில் இரண்டு மட்டும் இங்கே...ஒன்று ஒரு முறை கம்மம் மமதா ஹோட்டல் அது இப்போது இருக்கிறதோ என்னவோ...சாப்பிட்டு விட்டு மடக்கும் குளிர் கண்ணாடி ஒன்றை மறந்து வைத்து விட்டு வந்து விட்டார்... திரும்ப போய்ப் பார்த்தால் காணோம். ஹோட்டல் முதலாளியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொன்ன சிறிது நேரத்தில் உள்ளூர் காவல்நிலையத்தின் காவல் துறை உதவி ஆய்வாளருக்கு போன் செய்து அரை மணி நேரத்தில் கண்ணாடி கைக்கு வந்து சேர்ந்த மாயத்தை செய்தவர்...

மணியால் ஒரு திருட்டு டிரைவரை வேலையை விட்டு நிறுவன அலுவலகம் அனுப்ப, அதற்கு பழி தீர்க்க அந்த திருட்டு டிரைவர் பேர் சத்யம்...இவன் எப்போது அந்த ஊர் வருவான் அவனைப் போட்டுத் தள்ளலாம் என கத்தியுடன் திரிய அவன் இவன் சாப்பிட சென்றால் கூட பின் தொடர்வதை அறிந்த மணி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் சொல்ல மறுபடியும் காவல் உதவி ஆய்வாளர்கள் தொடர்பால் சத்யத்தைப் பிடித்து மிரட்டி மணிக்கு நேர இருந்த ஆபத்தை நீக்கினார் ஸ்ரீ ராமச் சந்திரமூர்த்தி... எப்படி அப்படி எல்லாம் உதவியிருப்பார்.

ஒரு வேளை ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு இயல்பாகவே உதவும் குணம் உண்டா அல்லது பின் வரும் சம்பவத்துக்கு பிராயச் சித்த உதவியாக அவர் மணிக்கு சில பல உதவிகள் செய்திருக்கக் கூடுமோ...

அது மணி அந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்த புதிது. மத்திய அலுவலகத்திலிருது கம்மம் அலுவலகம் செல்கிறார். அலுவலகப் பணியாக ஒரிஸ்ஸா செல்ல வேண்டியவர் இடையில்..

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அப்போது மணி மாலை 6 இருக்கும். இருள் கவிந்து இரவு வரும் நேரம். மணி ஒரிஸ்ஸா தனது களப்பணித் திட்டத்திற்கு செல்லும் முன் கம்மம் வழி என்பதால் அங்கு சென்று தங்கி விட்டு மறு நாள் கிளம்பலாம் என அங்கு சென்றார்.

அப்போது அவனிடம்  முன்பே அலுவலகத்தை விசாரித்தபடியே ஆஸ்திரேலியா அல்லது நெதர்லாந்தை சேர்ந்த ஒரு அயல் நாட்டுப்  பெண் இளைமையும், அழகும் உடன்..வேறு யாரும் இல்லா தனி...என்னுடன் கேட்டு எனைப் பிடித்தபடி அவளும் அந்த அலுவலகம் வந்தாள். அதெல்லாம் அங்கு சகஜம்...

மணி, அந்தப் பெண், ஸ்ரீராமச் சந்திரமூர்த்தி...மூவர்தாம்...அவ்வளவு பெரிய அலுவலகத்தில்...
மணி ப்ளீஸ் நீ கொஞ்சம் எனக்கு வாய்ப்பு கொடேன், வெளியே சென்று ஒரு சினிமா பார்த்து விட்டு வாயேன், அல்லது ஒரு மணி நேரம் கழித்து வாயேன் ப்ளீஸ் எனக் கெஞ்சினான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி..

மணி வெளியே சென்று விட்டார். காலம் கடந்த பின் மறுபடியும் அலுவலகம் வந்தார் தங்கிக் கொண்டார். மறு நாள் ஒரிஸ்ஸா சென்றார்.

ஸ்ரீராமச் சந்திரமூர்த்திக்கென தங்குவதற்கென அந்த அலுவலகத்தில் ஒரு அறை  எப்போதும் உண்டு...அந்த அறைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த அயல் நாட்டு அழகு மங்கை , எளிதாக இயல்பாக நட்புறவுடன் பேசி நடந்து கொண்ட அந்த மங்கை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி...இருவர் மட்டுமே அந்த அலுவலகத்தில் அந்த நேரத்தில் அங்கு இருந்தனர்...ஆங்கில மொழி உதவி வேண்டும்... இருவருக்கும் அது ஒன்றே பொது தொடர்பு... மேலும் ஆண் பெண் என்ற இருபால் கவர்தல்...இருவரின் இளமை...அதற்கு மேல் கற்பனை செல்ல வழி இல்லை.. அந்தப் பெண் இரவிருந்து மறு நாள் காலை செல்ல வேண்டிய இட சென்றாரா....அல்லது அன்றே சென்றுவிட்டாரா என்பதெல்லாம் மணிக்கு நினைவில்லை...

ஆனால் ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்தி எப்போதும் நினைக்க நல்ல நண்பராகவே இருக்கிறார். அந்தப் பெண்...முகம் மறந்து போன அந்தப் பெண் எந்த நாட்டிலோ...என்ன ஊரிலோ, என்ன பேரிலோ...எல்லாம் ஒரு நேரம்...அதைத்தான் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் எனச் சொல்லி இருக்க வேண்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete