Friday, April 27, 2018

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை

ஜெ படமும், 11 எம்.எல் .ஏ வழக்கு தீர்ப்பும்: கவிஞர் தணிகை


Related image


உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெவின் படம் தமிழகத்தின் சட்டசபையில் இடம் பெற்றிருப்பது  அதை நீக்க தேவையில்லை எனத் தீர்ப்பளித்தன் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறது....

மேலும் சொல்லப் போனால் இது போல தமிழக அரசு முப்பதினாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இருப்பதாகவும் வட்ட மேஜை என்னும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் பற்றிய விவாத மேடையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் பேசி புள்ளி விவரம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை இழு இழு என ஊழல் இலஞ்சத்தால் இழு இழு என இழுத்து விட்டு இந்திய நீதி கடைசியில் ஜெ வின் மரணத்துக்கும் பிறகு வழக்குக்கு தீர்ப்பளித்து அதில் முதல் குற்றவாளிக்கு சட்டசபையில் படம் வைத்து ஆட்சீ நடத்துவது எவ்வளவு நீதி நேர்மையானது என்று உணருமளவு நமது குடி மக்களுக்கு நேரமில்லை...

மேலும்  அந்த 11 எம்.எல்.ஏ சட்டசபையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட வழக்கிலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவை  உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட இருப்பது யாவுமே மக்களை எல்லாம் மடமையாக்குவது, தாமதிக்கப்பட்ட நீதியும் தீர்ப்பும் மறுக்கப்பட்ட நீதி என்று
என்றுதானே மானிட நீதி சொல்கிறது.

அதன் படி எல்லாம் பார்த்தால் ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வர் ஆகி இருப்பதும் எவ்வளவு தவறான செயல் என்பதை இந்த சட்டம் நீதி எல்லாம் சொல்லவில்லையா?  இந்த எடப்பாடி அரசு தற்காலிக வெற்றிகளை இது போன்ற தீர்ப்பை   சாதகமாக‌         பெற்றிருப்பது  எல்லாம் பார்க்கும்போது... மக்களிடம் நீதியின் மேல் கொஞ்ச நஞ்சம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் குழி நோண்டி ஆழத்தில் அழுத்தி அழுத்தி மேலும் ஆழத்தில் கொண்டு போய் ஆழ்த்தி இருக்கிறது என்பதை எவருமே மறுக்க முடியாது....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

No comments:

Post a Comment