Friday, May 20, 2016

பதவி ஏற்காமல் ராஜினாமா செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை

பதவி ஏற்காமல் ராஜினாமா  செய்வார்களா தி.மு.க அணியினர்? : கவிஞர் தணிகை




தேர்தலில் ஜெயித்த தி.மு.க அணியினர் அனைவருமே மறு தேர்தல் நடத்தக் கோரி பதவி ஏற்காமல் பணநாயகத் தேர்தல் எதிர்த்து போராடும் முகம் தங்கள் பதவியை உதறி எறிவார்களா?

உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வார்களா?

தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு தேர்தல் கோருவார்களா?

குடியரசுத் தலைவரிடம் சென்று முறையிடுவார்களா?

தமிழ் நாட்டில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வுக்காக மறு தேர்தல் நடத்த மக்களிடம் சென்று மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவார்களா?

அரசு அலுவலகங்கள்,மாநில மத்திய அலுவலகங்களை முற்றுகை போராட்டம் நடத்துவார்களா? சசி பெருமாள் போல இலக்கு நோக்கி சாகும் வரை செல்வார்களா?



அதுவும் இன்னும் சில நாட்களிலே, அல்லது உடனே, அல்லது பதவி ஏற்பு வைபவத்துக்கு முன்பே இவர்களால் செய்ய முடியுமா?

அப்படி எல்லாம் செய்தால் நாட்டில் ஒரு அலை பரபரப்பு ஏற்படும். நாடே திரும்பி பார்க்கும், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம்,பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலவர் அலுவலகம் யாவுமே இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எனச் செய்வார்களா? நினைத்தால் செய்ய முடியும். ஆனால்..

அதெல்லாம் இவர்களால் முடியாது.




ஏன் எனில் இவர்கள் இவ்வளவு தொகுதிகள் பெற்றதே பெரிது என்று எண்ணுகிறார்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் இவர்களுக்கு போதும்.

ஏன் எனில் இவர்களும் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளார்கள். சில இடங்களில் கொடுக்க வில்லை...கொடுக்காத இடங்களில் தோற்றுள்ளார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களைக் கற்பித்துள்ள  நிலையில் தி.மு.க என்னும் பிரதான எதிர்க்கட்சிக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது.




பிரித்தாளும் சூழ்ச்சி அல்லது கொள்கையில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அதே சிங்கம் நாலு மாடுகள் கதைதான். நரிதான் யார் என்று தெரியவில்லை. ஆனால் திட்டம் வெற்றி அடைந்து விட்டது. அதுவே சரித்திரம் சாதனை என்றாகிவிட்டது. அதற்கு பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கோடி இந்திய பணம் அடித்தளம் ஆகியிருக்கிறது. இந்திய ஜனநாயகம் தமிழகத் தேர்தலில் மதுவுடனும், மாதுவுடனும், பணத்துடனும் போகத்துடனும் போதையுடனும் மடிந்து போய்விட்டது.

என்றுதான் எழுச்சி வருமோ? எமது குடிமகன்  கட்டிய லுங்கி இடுப்பில் இல்லாதிருப்பது அறியாமல் உள்ளாடை தெரிய உயிர் நிலை தெரிய தெருவிலும் சாலையிலும் குடித்து மயங்கிக் கிடக்கும் நிலை காட்சியில் இல்லாமல் போகுமோ? இயற்கை மக்கள் செய்யாததை செய்யட்டும்.

நடந்தது தேர்தலா? பணமே வாக்குக்கு கொடுக்கப்படவே இல்லையா?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகை

பண நாயகம் வென்றது ஜனநாயகம் தலை குனிந்து நின்றது: கவிஞர் தணிகை



ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியவர்களுக்கு நல்ல சாவே வராது. இது நாடா? இதற்கு ஒரு கேடாய்...மதுக்கடையை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் அதற்கு எதிராக‌ மது அடிமைகள் போட்ட போதை ஓட்டு இந்த தேர்தலை அதிகம் பாதித்திருக்கிறது.

500 முதல் 5000 வரை ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆளும் கட்சி நிறைய இடங்களில் வென்றிருக்கிறது. ஒரு இடத்தில் 40 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோற்றிருக்கிறது. தொல் திருமாவளவன் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்.

தேர்தலுக்கும் முன் சென்ற விஜய்காந்தின் சிங்கப்பூர் பயணமும், வைகோவும் இந்த தேர்தல் முடிவில் முக்கிய பங்கெடுத்து தமிழக அரசியலை நாசம் செய்து தமிழகத்துக்கு தலை குனிவை ஏற்படுத்தி பணநாயகம் வெல்ல வழிகாட்டியிருக்கிறார்கள்.அந்த இகழ் எப்போதும் இனி தரித்திர தமிழகத்தின் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும்.

கேடு கெட்ட அழகிரி அ.இ.அ.தி.மு.கவுக்கு வாக்களியுங்கள் எனச் சொல்லி விட்டு தி.மு.க தென்பகுதிகளில் நான் இருந்திருந்தால் வென்றிருக்கும் இந்த தோல்விக்கு யார் காரணம் என பிதற்றியிருப்பது அவரது சுயநலத்தை பளிச் என படம் போட்டுக் காட்டி இருக்கிறது. அவர் இல்லாமலே கட்சி நல்ல நிலைமைக்கு வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.

ராஜேஸ் லக்கானி விலைக்கு வாங்கப்பட்டு விட்டார் என்ற பேச்சும், தேர்தல் முடிவு வரும் முன்பே தலைமைச் செயலரை அழைத்து முதல்வர் மறு பதவி ஏற்புக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது எப்படி எனத் தெரியவில்லை. இந்த செய்தியை எமது நண்பர் ஒருவர் இது பற்றி சவுக்கு சங்கர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும் பாரதீய வங்கியின் 570 கோடி பிடிபட்டதாகச் சொல்லும் வாகனங்கள் உண்மையான பதிவு எண்ணுடன் பயணம் செய்யவில்லை என்பதும் உரிய ஒரிஜினல் ஆவணங்கள் இல்லை என்பதும், பா. சிதம்பரம்  நாட்டின் நிதி மந்திரி பொறுப்பை பல்லாண்டு வகித்தவரே இப்படி எல்லாம் மிகுந்த எண்ணீக்கையிலான தொகை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றப்படுவது வழக்கத்தில் இல்லை என கருத்துரைத்திருப்பது கவனிக்கத் தக்கது.

மோடி மந்திரமும் இடையே தமிழகத் தேர்தலில் இடையே ஊடாடி இருக்கிறது எனச் சொல்லப் படுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கட்சிகளின் பிரிவினை மந்திரம் தந்திரமாக பணத்தின் வல்லமையால் மாற்றப்பட்டிருக்கிறது. வைகோ விஜய்காந்த் போன்றோர் வலையில் கம்ப்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி. க போன்ற கட்சிகளும் கருவறுக்கப்பட்டுள்ளன.

மேலும் பா.ம.க வாக்கு சதவீதத்தில் 5 சதத்துக்கும்மேல் வந்து விட்டது. பா.ஜ.கவை விட டெபாசிட் போய் தோல்வி அடைந்த விஜய்காந்த் கட்சி கடந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது இம்முறை வினை விதைத்தவன் வினைஅறுப்பான் என அறுபட்டிருக்கிறது/ இந்த கேப்டனைத்தான் கலைஞர் கருணாநிதி கெஞ்சிக் கூத்தாடி அழைத்திருந்தார் கூட்டணிக்கு.

காங்கிரஸ் கட்சி இல்லாமலே  தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான மாற்று அணியாக நின்றிருந்தால் இன்னும் தொகுதிகள் பெற்றிருக்கும் என பேச்சுகள் இருக்கின்றன.

தேர்தல் ஆணையம் எல்லாம் நன்றாக செய்வது போல நடித்துவிட்டு பணப் பட்டுவடாவில் கண்டும் காணாமல் , தெரிந்தும் தெரியாமல் நடந்து  கொண்டிருக்கிறது ஒரு பாடம்.

இனி தேர்தல் நடத்துவது என்றால் ஆளும் கட்சி காலம் காலாவதி ஆன உடன் மத்திய ஆளுகை ஆளுஞர் ஆட்சி வைத்துக் கொண்டு அந்தக்  காலக்கட்டத்தில் எந்த கட்சிக்கும் சாதக பாதகம் இல்லாமல் தேர்தல் நடத்துவதென்றால் நடத்த வேண்டும் இல்லையேல் தேர்தல் முறைகள் விகிதாசாரம், ஜனநாயகம், திரும்ப அழைக்கும் உரிமை போன்றவை வரவேண்டும். நோட்டாவுக்கு 1.8 சதவீதம் அல்லது 5 இலட்சத்துக்கும் மேல் வாக்களிக்கப்பட்டுள்ளது பற்றி பரிசீலிக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள், வென்றவருக்கு எதிராக விழுந்த வாக்குகள் ஆகியவை பற்றி கவனிக்குட்படுத்தப் பட வேண்டும்.

வாக்கு எந்திரங்களே ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாற்றப்பட்டு எண்ணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்திகளும் இல்லாமல் இல்லை. அட்டையில் அ.இ.அ.தி.முகவுக்கு சின்னத்துடன் வாக்கு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டது பிடிபட்டுள்ளன.

அனேகமாக உச்ச நீதிமன்றமும் இப்படியே ஏமாற்றும் என நம்புவோமாக.

ஒரு நண்பர் காத்திருக்கிறார்.
மறுபடியும் சந்திப்போம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, May 16, 2016

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை

2016 மே‍ 16 தமிழகத் தேர்தல் திருநாள்: ஜனநாயகக் கோடுகளும் கேடுகளும்: கவிஞர் தணிகை




திருவண்ணாமலையில் அ.இ.அ.தி.மு.கவும் தி.முகவும் மோதல் 3 பேர் மண்டை உடைந்தது, கோவையில் அ.இ.அ.தி.முகவும் பாஜகவும் மோதல் கார் கண்ணாடி உடைந்தது...தேர்தல் திருவிழா நோம்பிக்காசு போல 200 ரூபாய் முதல் 7000 வரை இடத்துக்குத் தக்கபடி பட்டுவடா.கள்ளச் சந்தையில் மதுவின் விற்பனை அமோகம்.இன்னும் சில‌

1.3 நாள் மதுக்கடைக்கு விடுமுறை தேர்தலுக்காக என்றார்கள்.ஆனால் விடுமுறை நாள் ஒன்றுக்கு ஒரு கோர்ட்டர் வீதம் வழங்கலாம் என்றது தேர்தல் ஆணையம் அதை மீறி இன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகம் என்று செய்திகள் வருகின்றன.. தேர்தல் பிரச்சார நாட்களில் மது விற்பனை சுமார் 40 சதவீதம் அதிகம் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.தேர்தல் ஆணையம் அதை ஒப்புக்கொண்டுதான் தேர்தல் ஒழுங்காக அமைதியாக நடக்க வேண்டுமானால் மதுக்கடை விடுமுறை வேண்டும் என 3 நாள் மூடியது. பயனில்லை.தமிழ‌கத் தேர்தல் நிலை பாரீர்.

2. இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது போலவே வாக்குக்கு காசு வாங்கினால் 2 ஆண்டு சிறை என்றது தேர்தல் ஆணையம். கொடுப்பவர்க்கு எத்தனை ஆண்டுகள் என்ன நடவடிக்கை என்று சரியாகத் தெரியவில்லை.ஜனநாயகம் நிர்வாணப்பட்டு கற்பிழந்து மானமிழந்து அவமானப்பட்டு துணி அவிழ்க்கப்ட்டு முச்சந்தியில் சிரித்துக் கிடக்கிறது. சிரிக்கக் கிடக்கிறது. எத்தனை வாங்கிய பேரையும் எத்தனை கொடுத்த பேரையும் சிறைக்கு அனுப்பியது இந்த அரசும் தேர்தல் ஆணையமும் எனத் தெரியவில்லை.ஜனநாயகத் தேர்தல் நிலை பாரீர்.

3. எமது வீதி வரை பணம் பாய்ந்தது உண்மைதான். ஆனால் வாங்கியவரும் கொடுத்தவரையும் நம்மால் நிரூபிக்க முடியாது. ஏன் எனில் இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் வாங்கிய போது எப்படி அதை நிரூபணபடுத்த முயன்று நாம் அவமானப் பட்டு நின்றோமோ அதே அனுபவம் இதிலும் ஏற்படும் . ஜனநாயகம் பாரீர்.

4. முகநூலில் தேர்தல் அலுவலர் முன் ஒரு வேட்பாளர் குமுறுகிறார் நான் என்ன முட்டாளா கிழவிகளின் காலில் எல்லாம் விழுந்தபடி இருக்க இவங்க 2 கட்சியினரும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டால் என்ன இது ஜனநாயகம் என கேட்கிறார், காவல் துறையையும் சேர்த்து ஏசுகிறார். இது வரை என்ன நடவடிகை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது எமது உசிதமான புகாருக்கு என கர்ஜிக்கிறார். அரசு அலுவலர் பேசாமல் மௌனமாக இருக்கிறார்.பண நாயகம் பாரீர்.

5. தேர்தல் ஆணையம் 50 % வெற்றி பெற்றிருக்கிறது சுவர் விளம்பரம்,சத்தம், ஆர்ப்பாட்டம், கொடிகள் கம்பங்கள், பூத் சிலிப் தருதல்,போக்குவரத்து இடைஞ்சல் போன்றவையுடன் ப்ளக்ஸ் கலாச்சாரம் போன்றவை முற்றிலும் தடைப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பணப்புழக்கத்தை அதனால் பெரிதும் தடை செய்ய இயலவில்லை. செயல் பாடின்மை பாரீர்.

6. மகன் மணியத்தையும் அவரது நண்பர் ஒருவரையும் தமது வாகனத்தை நிறுத்தி மேட்டூர் கோட்டாட்சியர் வாக்குக்கு பணம் அளிக்கிறார்களா எனக் கேட்டிருக்கிறார். அவர் அய்யா எனக்கு வாக்கு இல்லை அது பற்றி ஏதும் தெரியாது என மறுமொழி கொடுத்து வந்தார்.முயற்சிதான்... ஆனாலும் பாரீர்.

7. தேர்தல் முடியும் வரை மின் நிறுத்தம் இருக்கக் கூடாது என அரசை கண்டிப்புடன் வலியுற்த்தியது தேர்தல் ஆணையம். ஆனால் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை எமது ஊரில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.ஆணை எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்று பாரீர்...



திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

பெரியார் சொன்னபடி

அயோக்யன் தேர்ந்தெடுக்கபடுகிறான் எனில்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் ....உண்மைதானே!

ஒழுக்கமில்லா ஜனநாயகம், கட்டுப்பாடில்லா சுதந்திரம், தியாகமில்லா சாதனைகள்...ஒரு நாட்டை விளங்க வைக்காது...தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்...

ஒரு பொதுக் குடி நீர்க் குழாயில் தனி நலம் பாராட்டி எவரும் தமது வீட்டுக்கு நீளமான (ஹோஸ்) குழாய் போட்டு நீர் ஏற்றிக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி செயல்படுத்த படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அதற்கும் கூட கண்குத்திப் பாம்பாக உறங்காமல் இருக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுப்பாடில்லா நாட்டில் ஒழுக்கம் இல்லா நாட்டில், தியாகம் இல்லா நாட்டில் எந்த நல்லதையும் செய்வது மிகக் கடினமானது.

வெகு ஜனவாதி பொது ஜன விரோதி.பொது ஜனவாதி வெகு ஜன விரோதி.

காமராசர் முதல்வராக இருக்கையிலேயே தமது தாய்க்கும் கூட ஊராட்சி குடி நீர்க் குழாயை தமது வீட்டு வாயில் முன் புதிதாக போடப்பட்டிருந்ததை அனுமதிக்கவில்லை...

அது போன்ற புண்ணீய புருசன்கள் பிறந்த நாட்டில் இந்த அவலங்கள் இப்படிக் கேடுகள்...

அய்யா இந்த தேர்தல் இவ்வளவு ஜனநாயக நசுங்கல்கள் கசங்கல்களுக்கு இடையே நடந்த போதும் ஆளும் கட்சி தூக்கி எறியப் பட்டால் அது எமக்கு மகிழ்வே.

அடுத்த தேர்தல் விழா ஊராட்சி, நகராட்சி இன்னும் ஓராண்டில் அதை அடுத்து பாராளுமன்றத்திற்கு. அடுத்து சட்டமன்றத்திற்கு அடுத்து ....இப்படியே போய்க் கொண்டே இருக்கும் இந்தத் திருநாள்கள்....ஜனநாயகம் ....தேர்தல் ஆணையம் தம் பணியில் ஒவ்வொரு படியாய் மேல் ஏறிக் கொண்டிருக்கட்டும்... நாமும் இருக்கும் வரை பேசுவோம். எழுதுவோம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Sunday, May 15, 2016

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை




தகித்த வெயிலில் பச்சை செடி கொடி இலைகள் யாவும் தாகத்தில் கிடக்க ஒற்றை ரோஜா மட்டும் சிலிர்த்துக் கிடந்தது.காதலுக்கும் கவிதைக்கும் நிரந்தர ஓய்வு இல்லை.அவ்வப்போது பூக்கிறது நினைவைக் காய்க்கிறது. நடைமுறைக்கு சாத்தியமில்லாதபோதும். நதி ஜீவ நதியாய் வலைந்து வளைந்து வளர்ந்து ஓடியபடியே....

எங்கும் பச்சையாய் இருக்க இளஞ்சிவப்பு நிறம் தனித்துத் தெரிந்தது.விழிகள் சாளரங்கள், இமைகள் கதவுகள். நெஞ்சில் ஓடும் நினைவு மின்சாரம் இருவரையும் உள்ளுணர்வால் இருவரையும் பிணைக்க சுமார் ஒரு மணி நேரம் 60 மணித் துளிகள் 360 நொடிப் பொழுது கண நேரத்தில் இருவரும் சேராமலே சேர்ந்திருந்தார்கள்.

பார்க்காமலே பார்த்து வந்தார்கள். ஓர விழிகளில் பார்த்த அவள் நேர் பார்வைக்கு வருமுன்னே விலக்கிக் கொண்டார் அவர் இது எந்த விதியிலும் சேராத விதையாய் இருக்கிறதே என. பக்கத்தில் கனமான அவள் தாய் பாதுகாப்பாய் அமர்ந்திருந்தார். பல அடிகள் இடைவெளி இருந்தபோதும் இருவருமே மிக அருகே அந்தக் கணங்களில் வாழ்ந்து வந்தனர். அவளது சிரிப்பு, புருவ வலை, முகம் சாயும் கவிதை, இதழ்கள் யாவும் மனப்பாடமாகியிருந்தது இவருக்குள்.மனிதப் பதர்கள் சுற்றி இருக்க ஒரு செடி முளை விட்டிருந்தது.



எண்ண வலிமை என்னவோ செய்ய அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். ஆனால் விழிகள் மூலம் பார்வையை கோர்த்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள். அங்கே அந்த இருவருக்குள்ளும் ஒரு பொதுப்புலம் ஏற்பட்டிருதது எந்த வித ஒற்றுமையும் இருவருக்கும் இல்லாமலே...

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. முகம் தானே மனத்தின் முன் வாசல் ...சூரியானாக சுடர் விட்டபடியும் அதே நேரத்தில் ஒரு குளிர்ச்சியுடனும்...இப்படி எல்லாம் பார்க்கக் கூடாதுதான் நெறி இல்லைதான். ஆனாலும் முகமும், விழிகளும் பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது .வாய்ப்பு தூண்டுகிறது.





(இதெல்லாம் கேவலமானது என மறைகள் சொல்லும், தம்பியும் சொல்வார், ஆனால் முறைகள் வேறாக சொல்கிறதே. கண்கள் தவறு செய்தால் கண்களைப் பிடுங்க வேண்டும் ஆனால் ஒரு அழகிய பூவை பார்த்து இரசிப்பதில் முறைகேடான தவறுகள் ஏதும் நேர்ந்து எதுவும் முறிந்து விடப் போவதில்லைதான்..இதை எல்லாம் எவருக்கும் புரியவைக்கவோ உணர்த்தவோ வேண்டிய அவசியமே இல்லை.) ஆனால் இதெல்லாம் தான் எழுத்து, இலக்கியம். கவிதை, காவியம். இயற்கை என்றால் அது சரி. மனிதர் என்று வந்து விட்டால் அது தவறு. உறவுக்கு ஊறு விளையாமல் விளைக்காமல் விட்டு விடுவதும் கொச்சைப் படுத்தப் பட வேண்டிய மனித எச்சம்தானா?

ரேபானுக்குள்ளிருந்து அவர் விழிகள் அடிக்கடி அங்கு சென்றதை அருகே நின்று கொண்டிருந்த ஓரிருவர் கவனித்ததை அறிந்த அவர் நாகரீகமாக நடந்து கொள்வதாக பார்வையை விலக்கிக் கொள்வதாக பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்தார்.


ரஜினிகாந்த்,பார்த்திபன் போன்ற கருத்த நடிகர்களை சிவந்த நடிகைகள் நாயகர்களாக ஏற்றுக் கொண்டது இடைக்காலத்தில்  அதிகமாக அழகிய பெண்கள் நிறமில்லாத ஆண்களை எல்லாம் கூட ஏற்றுக்கொண்டதை சினிமா ஒரு துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது.சமுதாயத்திலும் நடைமுறையிலும் அப்படிப்பட்ட மாறுதல் நிறைய நேர்ந்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அது போல இது எதற்கும் உட்பட்டதல்ல.

இந்தியா மேலை நாடுகள் வரிசையில் இனி பருவம், வயது தாண்டியும் காதல் செய்ய ஆரம்பித்துவிட்டது. (காதல் என்ற வார்த்தை சரிதானா? சரியான பொருள் கொண்டதா? இதற்கு என்ன பெயர் தமிழில் உள்ளது?)இவருக்கு இடம் கிடைத்து 15 நிமிடங்கள் ஆகி  வாகனத்திலிருந்து இறங்கி இருப்பிடம் வருமுன் கடைசி இருக்கைக்கும் முன் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த‌ அவளை முன் வாசல் வழி இறங்கி பின் வருகையில் ஒரு சிறு பொறி பார்வையில் பார்க்க அவளும் பார்த்தபடியே இருந்து விடைபெற்றுக் கொண்டனர். இனி வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொள்ளப் போவதே இல்லை. என்றாலும் நினைத்துக் கொள்வார்கள்.உள்ளுணர்வுக்கு வலிமை உண்டு.




இது வேறு:
எளிமையாகவே இருந்தாள். கைகள் முழங்கை வரை மேல் சட்டை (ஜாக்கெட்) முதுகில் ஒரு சிறு இடம் கூட தெரியாமல் முழுதாக மறைந்திருந்தது ஆண்கள் சட்டை போல...அனேகமாக தமது உடல் முகம் தவிர வேறு ஏதும் தெரியாதபடி அவள் ஆடை அணிந்திருந்ததே அபூர்வமாக இப்படியும் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என சிறப்புக் கவனம் அவர் மேல் கொள்ள வழி வகுத்திருந்தது.




 இது வேறு:
எல்லாமே உயர் நிலையில் உள்ள பெண்கள் கூட்டம். அவள் மட்டும் சிகையலங்காரத்தை தொழில் முறைக்கேற்ப எடுத்து வளைத்து இறுக குடுமியாக்கி தினம் வருவதும் அவளுக்கு ஒரு சிறப்புதான்... தனித்துவம் எங்கும் சிறக்கிறது....பொதுவாக இது போன்ற குடுமிகள் வயதானவர்கள் தான் போட்டுக் கொள்வார்கள். என்றாலும் இந்த தனித்துவம் இவளுக்கு மெருகூட்டி இவளது அழகை மேலும் கூட்டி இருந்தது.

பி.கு.: தேர்தல், வாக்குப் பதிவு, பாரதீய ஸ்டேட் வங்கியின் 570 கோடி, மறுத் தேர்தல் அரவக் குறிச்சி தேர்தல் 23க்கு தள்ளி வைப்பு,கடும் வெயில், மேட்டூர் நீர் அளவு 48 அடி எல்லாமே பிரச்சனையாகிவிட அவை எல்லாம் நீக்கி கொஞ்சம் பாதம் பதித்து இருக்கிறோம். மனோமயக்கத்திற்காக, வாழ்வின் இலயத்திற்காக சில நேரங்களில் சந்தனத்தை தொட்ட வாசம் அதை வைத்து விட்ட போதும் கைகளில் எஞ்சியிருப்பது போல, வாசனைத்திரவியங்கள், மகரந்தக்கேசரங்கள், சில பூக்கள், காய்கள்,கனிகளை வைத்துவிட்ட பிறகும் அதன் வாசம் கொஞ்ச நேரம் நம் கைகளில் ஒட்டி இருப்பது போல சற்று நேரம் நம்மை விட்டு நீங்காதிருப்பது போல இந்த மணத்தை (ஃபிராக்ரன்ஸ் Fragrance) உங்கள் மேலும் தெளித்து விட இந்த வடிகாலான எழுத்து)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Friday, May 13, 2016

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.

சில நேரங்களில் சில தவறுகள்: கவிஞர் தணிகை.




தி.மு.க இம்முறை ஆட்சி அமைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. என்.டி.டி.வி கூட அப்படித்தான் சொல்லி இருக்கிறது. அதை ஒரு ஊடக நண்பர் மாற்றி கூறியதை நானும் நம்பி நேற்றைய பதிவின் மூலம் கவலை தெரிவித்திருந்தேன் அதற்கு என் மனதார்ந்த மன்னிப்பும், வருத்தமும்.

உளவுத் துறையும் தி.மு.க தான் என்று சொல்லியதாக ஒரு காவல்துறையின் நண்பரின் அலுவலக ரீதியில் இல்லாத கருத்து தெரிவிப்பு உள்ளது. அதை மாற்ற  அ.இ.அ.தி.மு.க எவ்வளவோ தவறான வழிகளை எல்லாம் கையாள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அட்டையால் செய்யப்பட்ட வாக்குப் பதிவு எந்திரம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பேருடன், மேலும் பல்வகையிலும் பணப்பட்டுவடா என்றெல்லாம்.ஆனால் அவை எல்லாம் முடிவை எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை.

மேலும் ஒரு இடத்தில் விழுந்த சுமார் 2000 தபால் வாக்குகளில் 1940 வாக்குகள் தி.மு.க சார்பாகவே இருந்ததாகவும் இருக்கக் கூடும் என்றும்(பொதுவாகவே அரசு அலுவலர்கள் தி.மு.கவுக்கே வாக்களிப்பது அனைவரும் அறிந்ததே) மீதமுள்ள 60 வாக்குகள் மட்டுமே மற்ற கட்சிக்கு சென்றிருப்பதாகவும் அறிந்திருப்பதாக தாம் கேள்விப்பட்டதாக ஒரு நண்பர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு யூகத்தை அல்லது பிறர் சொல்லியதை எல்லாம் நம்பி நாம் எழுதி விடக் கூடாது என்பதற்கான பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம்

மேலும் இப்போதெல்லாம் முன் போல் நேரம் கிடைக்காததால் இது போன்ற பதிவுகளையே நாம் வெளியிட வேண்டியுள்ளது உங்களிடம் இருக்கும் எமது தொடர்புகள் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவே.உடற் சிரமத்துக்கிடையேயும் எழுதுவதை தொடர்கிறேன்.

ஆனால் இது போன்ற தகவல்கள் அல்லது சிறு சிறு தவறுகள் எப்படி ஒரு பெரிய மிகப் பெரிய தவறுகளுக்கும் அழிவுக்கும், விபத்துகளுக்கும் அடியிட்டுக் கொடுக்கும் வழி கோலும் என்பதற்கான சான்றுகள் பல காலம் காட்டி இருப்பதை நாம் அனுபவ  அடிப்படையிலும், படிப்பினை வழியாகவும், படித்தது வழியாகவும் அறிந்துள்ளோம். எனவே இந்தப் பதிவு அதற்காகவே.

வரக்கூடிய முடிவு மக்களுக்கானதாக நல்ல முடிவாகவே இருக்கும் என நம்புவோமாக!




மேலும் அன்றைய முடிவுகள் கண்டு எந்தவித போக்குவரத்து இடைஞ்சல்களும், வன்முறைக்கும் இடம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழகம் எப்போதும் போல அமைதிப்பூங்காவாகவே விளங்க வேண்டும் என்றும் இயற்கையை பிரார்த்திக்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

Thursday, May 12, 2016

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

ஏழைகளின் குறும்பில் இறையைக் காணோம் இயற்கையைக் காணோம்,இரையைக் கண்டோம்,இறையக் கண்டோம்: கவிஞர் தணிகை

தேர்தலில் வாக்குப் பதிவுக்கு ஒரு வாரம் டாஸ்மாக் விடுமுறை விட்டால்தான் குளறுபடி இல்லாமல் தேர்தல் நடத்த முடியும். 37 சதவீதம் மது அதிகம் தேர்தல் வாக்கு சேகரிப்புக் காலத்தில் விற்பனை கூடியதாக தேர்தல் ஆணையமே அறிக்கை.ஆக தேர்தலில் பணம் விளையாடி வருவதை குருட்டுப் பூனைகளுக்கும் தெரியும் தானே?

பொதுவாகவே சில காட்சிகள்: எந்த வித பெரிய மாவட்ட அளவிலான பேருந்து நிறுத்தங்களில் முக்கியமான பஸ் நிறுத்தங்களில் நிற்க முடியாத அளவு துர்நாற்றம்,குப்பைக் கூளங்கள் என்னதான் எப்படித்தான் தூய்மைப்பணி நடைபெற்றபொதும்.



எடுத்துக்காட்டாக சேலம் பேருந்து நிலையம், 5 ரோடு போன்றவைகளில் அதிகாலையிலேயே பேருந்துக்கு காத்து நிற்க முடியவில்லை.அவ்வளவு துர் நாற்றம். முடை நாற்றம்.

அழுக்குப் பிரியன்கள் சாலையிலேயே எச்சில் துப்பி அனைவர்க்கும் வியாதி பரப்புவார்களாகவும், அங்கேயே சிறு நீர் கழிப்பார்களாகவும் இலவச சிறு நீர் கழிக்க மறைவிட கழிப்பகத்துக்கு சென்றாலோ மயங்கி விழுந்து விடக் கூட நேரிடும். கொடுமை. மனிதா மனிதா இந்தக் கொடுமை என்று தீர்வது?

இதன் ஒரு ஒட்டு மொத்த சேர்க்கையாகவே தேர்தல் களமும் இருக்கிறது என்பது மறுப்பதிற்கில்லை. பணம் பட்டுவடாப் பற்றி சர்வ சாதாரணமாக செய்தி ஊடகங்களில் அனுபவச் செறிவுகள் பகிரப்படுகின்றன.

https://www.facebook.com/anbalaganfb/videos/10153832610808303/



தேர்தல் ஆணையம் எப்படித்தான் செயல்படுகிறது? ஏன் இந்த ஜனநாயகத் தோல்வி..இதன் எதிரொலி, எதிரொளி தேர்தலின் பின் தெரியலாம்..இன்னும் எப்படி செயல்பட வேண்டும்? இன்னும் எப்படி செயல்படுவது? போன்றவை விவாதிக்கப்பட வேண்டும்.. அமல்படுத்தப் பட வேண்டிய அவசியங்கள் இந்தியாவில் .



ஒரு பாட்டி சிறு காற்றாடி ஒன்றை வண்ணத் தாள் ஒட்டியதை இளங்காலையில் எடுத்துப் பத்திரப் படுத்தி வைக்கிறாள் பேரனுக்காக.

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...

இன்னும் பொழுதே சரியாகப் புலரவில்லை.



பேருந்தில் வண்ண வண்ண ஆடைகளுடன் பின்னால் ஒவ்வொரு பெண்ணும் ஒருவித பின் புற அலங்காரச் சட்டை அணிந்து அனைவரும் பார்க்கட்டும் என நெருங்கி நெருங்கி நிற்க முயல்கிறார்கள்....

பொது வாழ்வும், பொது இடங்களில் பயணமும் யோகத்திலிருப்பார்க்கு அவசியமில்லை பொருத்தமில்லை என்றபோதும் இந்தக் காட்சிகள் வாழ்க்கைத் தேடல் தேடுவார் முன் காட்சிகளாக விரிகிறது...

இதை எல்லாம் கடந்துதான் இலட்சியம் நோக்கி பயணங்கள் நடத்த வேண்டி இருக்கிறது...ஏழையை கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்ற நமது தமிம் முதுமாது இந்த உலகக் குப்பையை உருவாக்கும் ஏழையைக் காணவே இல்லை.

இவர்கள் இரைக்காக எதையும் செய்வார்கள், இவர்கள் எந்த செய்தியையும் இறைய விடுவார்கள்....நொண்டிக்கு நூறு குறும்பு என்பார் பழமொழியாய்...

இந்த நொண்டிச் சமுதாயமாயிருக்கும் இந்த சமுதாயத்தில் நூறு அல்ல எண்ணற்ற குறும்பு இருக்கிறது...எனவே இறையை, இயற்கையை காணமுடியவில்லை, இரையை, தீச்செய்திகள் இறைவதைத்தான் காணமுடிகிறது...

உங்கள் பொழுதை நீங்கள் எடுத்துப் பத்திரப் படுத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ள வில்லை எனில் இந்தக் குப்பையுள் அசுத்தக் கூடாரத்துள் அமிழ்ந்து மூச்சு முட்டி நீங்களும் ஒரு குப்பையாக நிறைந்து போய் விட வேண்டியதுதான்...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, May 11, 2016

உடல் என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை

16 மே முதல் 28 ஜூன் வரை கோடைக்கால உச்ச நீதி மன்றம்  விடுமுறை என்பதால் அம்மா வழக்கு தேர்தலில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தப் போவதில்லை.

. உடல் என்னும் எந்திரம்: கவிஞர் தணிகை




தேர்தல் முழக்கங்கள் ஆங்காங்கே.. எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல். வீடு வந்து வாக்கு சேகரித்து சென்றதாக வீட்டில் செய்தி.
கலைஞர் கருணாநிதி தமக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என சொல்லிய சேதி நேற்று முதல் பிரபலம்.இதை எல்லாம் விட உடல் ஒத்துழைத்தல், ஒத்துழையாமை பற்றி சொல்ல விழைகிறேன்.

கல்வி பற்றி சொல்ல கவிஞர்கள்: கல்வி கரையில கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கின் பிணி பல...என்பார். நீங்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்து அதன் பின் தளர்ந்து மடிந்து போகத் தயாராகி விடுகிறது.

அதற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் சொல்லலாம். உணவு காரணமென்பார் , பழக்க வழக்கங்கள் காரணமென்பார், எண்ணம் , சொல், செயல் காரணங்கள் என்பார். ஆனால் எந்த காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உயிருள்ளவை அனைத்துமே உடல் நீக்கியே ஆக வேண்டும்.

அது நானாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும்...

இதில் கலைஞர் என்ன, ஸ்டாலின் என்ன, ஜெ.ஜெயலலிதா என்ன எல்லாம் இந்த ஒரு விதியில் அடக்கம்.



உடல் என்னும் எந்திரம் தேய்மானம் அடைந்து,துருப்பிடித்து வியாதியுற்று செயல் இழக்க நேரிடுகிறது. இதையே சித்தர்கள் சீக்கிரம் சீக்கிரம் ஏதாவது செய்து முடிப்பீர் எனச் சொல்வார்கள். இல்லையென்றால் இந்தப் பை , இந்தப் பாண்டம், இந்தத் தோண்டி எதற்கும் உதவாமல் போய்விடுமென்பார்.

உடல் என்னும் எந்திரத்துக்கு மறுபடியும் நல்ல சுமை அழுத்தம் கொடுத்து வருகிறேன். உண்மையான சேவையாளர்கள் கடைசியில் உடலையும் உயிரையும் கூட ஏதாவது ஒரு பயன்பாட்டுக்கு கொடுத்துச் செல்கிறார்கள்.

உடல் என்னும் கருவி, எந்திரம் நாம் சொன்னபடி 40க்கும் மேல் கேட்பதில்லை சிலர் 100ஐயும் மீறி பேறு பெறுகிறார்கள். ஆனால் செய்வது செய்தது பற்றியே பெருமை. எவ்வளவு இந்த உடல் இழுபடுகிறது என்பதில் அல்ல.

மறுபடியும் பூக்கும்வரை

கவிஞர் தணிகை

பி.கு: என்.டி.டி.வி,பிபிசி போன்ற புகழ் பெற்ற கட்சி சாரா செய்தி ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.கவே அதிக இடங்களில் வெற்றி பெறும் எனச் செய்தி வெளியிட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். உள்ள படியே இது வருத்தத்திற்குரியது. அவ்வாறு நேராது. நேரக் கூடாது என நம்புவோமாக.எமது தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு செம்மலை அவர்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சியின் மக்கள் சந்திப்புக்கு வர இயலாதவர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் மேட்டூர் பிளான்ட். எண் 2 ஆலைக்கு இதுவரை
2 முறை வந்து சென்றிருக்கிறார். பணப்பெட்டி சூட்கேஸ்கள் கை மாறி இருக்கலாம் என பார்த்த தொழிலாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.