அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை: கவிஞர் தணிகை
இசை பேசியது
அந்த கறுப்புப் பூனையும் நானும் விழித்தபடி இரை தேடிக் கொண்டிருந்தோம்
உலகெலாம் ஒரு குடையின் கீழ் வந்திருந்தது
உறக்கம் வர்ல கனா வந்தது
எல்லாமே நல்லாய்ட்ட மாதிரி
எல்லோருமே நல்லவங்க ஆயிட்டாங்க
இனிமேல் கெட்டதே நடக்காது,
எல்லோருக்குமே நல்லது நடக்குது
உலகிலெங்குமே பசியே இல்ல,
தண்ணீ(ர்) எல்லாத்துக்கும் எல்லோருக்கும் கெடைக்குது
விலைவாசியா அப்படீன்னா?
இலஞ்ச ஊழல் ஏதுமில்ல
கேட்டதெல்லாம் கெடைக்குது
வரியா அப்படி ஏதுமில்லையே!
அட அமெரிக்காக்காரங்க கூட ஈரானை நட்பு கொண்டாடறாங்க
உக்ரேனும் புடினும் ஒன்னாய்ட்டாங்க
அல்லாவும் ஜீஸசும் சிவ கிருஷ்ணனும் விநாயக முருகனும் ஒன்னாய்ட்டாங்க
ஒரே உருவாத் தெரியறாங்க!
நாத்திகம் ஆத்திகம் எல்லாமே ஒன்னாய்டுச்சி
பூமியே போதும். நிலா, செவ்வாய் எல்லாம் எதுக்கு...சோதிடம் அதுக்கு
ஒடம்பு நல்லாய்டுச்சி, அல்சர் அதிகாலை வயிற்று காந்தள் கூட இல்ல
கொசுக்களை எல்லாம் ஒழிக்கனும் வாங்க சேரலாம்
சினிமா, மது போதை எல்லாம் போயிடுச்சி
காத்து, தண்ணி, நிலம், ஆகாசம், நெருப்பு எல்லாமே தூய்மை ஆயிடுச்சி
70 வயதுக்கும் மேலானா கூட சுஜாதா கேட்ட மாதிரி வெளிக்கு எல்லாம் நல்லா போவுது
இனி இங்க எப்பவுமே தீமை இல்ல
தீய சக்தி என்பதே இல்லை
பிறந்த குழந்தையாட்டம் எல்லாமே ஆயிட்டாங்க
சிதைந்த வழியெலாம் சித்திரமா பூ பூத்து ஒளியாச்சு,
சிந்தை தெளிவாச்சி
நேபாள, பீகார், அஸ்ஸாம் வெள்ளம் எல்லாம் இனி பாதிக்காது
தமிழ் முனை வரை ஒரே பாசனம், இந்திய நதியெல்லாம் இணைஞ்சிடிச்சி
3 ஆம் வகுப்பு குழந்தை தப்பில்லாம தமிழ் எழுதுது, பேசுது
உச்சரிப்பில் சிகரம் போகுதுங்க
வள்ளுவரும் பாரதியும் இராமலிங்கரும் , அவ்வையும் இனி தேவையே இல்லை
தமிழும் காந்தியும் இன்னா செய்யாமை சொல்ல வேண்டியதில்லை
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானியரும்
புத்தரும் யேசுவும்
உத்தமராம் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
என்ற பட்டுக் கோட்டையின் சிந்தை தெறிப்புக்கு எல்லாம் அவசியம் இல்ல
எல்லாம் படிச்சாச்சு, படிச்சி முடிச்சாச்சி,
பண்ணிப் பண்ணிக் கிழிச்சாச்சி
இனி எலாம் ஏகாந்தம்,
படிக்க ஏதும் பாக்கி இல்ல!
SHUT DOWN
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment