Saturday, March 2, 2019

சத்தமில்லாத ஒரு சேவை: கவிஞர் தணிகை

சத்தமில்லாத ஒரு சேவை: கவிஞர் தணிகை

Image may contain: one or more people, people sitting and indoor


பிறவியிலேயே காது கேளாத வாய் பேச முடியாத 52 அரசுப்பள்ளி சேலம் சூரமங்களம் (ஜங்சன்) பள்ளி மாணவ மாணவியர்க்கு எமது விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி பொது பல் சமுதாயத் துறை நேற்று தமது சேவையை அர்ப்பணித்தது.

விரல் வழியே, சைகை வழியே பேசி வந்த அவர்களைப் பார்க்க நமது உள்ளத்தில் இருந்துதான் இரத்தக் கீற்றுகள் வெளிப்பட்டனவே தவிர அவர்கள் என்னவோ மிகவும் மகிழ்வுடன் தாம் இருப்பதாக அவர்கள் முகக்களை காட்டியது.

எங்களது கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மருத்துவர் பேபிஜான் அவர்கள் தலைமையில் இது போன்ற நிகழ்வுகளை சமுதாயத்துறை தலைவர் மரு.என். சரவணன் கொடுக்கும் ஊக்கத்துடன் முதுகலை மருத்துவர்கள்: டாக்டர் பரத், தீபலட்சும், வேங்கடலட்சுமி போன்றோர் தங்களது கனிந்த இதயத்துடன் அந்த தெய்வக் குழந்தைகளுக்கு பல் பரிசோதனை செய்து நோய் கண்டறிந்தனர். பயிற்சி மருத்துவர்கள் சாந்த ரூபன், அஸ்லாம், இலட்சுமணன், அருண் விக்னேஷ் போன்றோர் அந்தப் பள்ளி மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து வரும் பணியை செவ்வனே செய்தனர். உதவியாளர் சித்ரா, செவிலியர் ஜமுனா ஆகியோர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது பணிப் பங்கீட்டை செலுத்தினார்கள். குடிநீர் வழங்க கணபதி, மோகன் போன்றோர் முயற்சி எடுத்துக் கொண்டனர்.
Image may contain: one or more people, people sitting, people standing and indoor
ஆமாம் இப்படி எல்லாம் தெய்வம் எதற்கு ஏன் இப்படி செய்கிறது? குழந்தைகளை எல்லாம் இப்படி  வைத்துக் கொண்டு...சிட்டுகளாக கிளிகளாக குயில்களாக குரலை உயர்த்திப் பேசி ஆடி ஓடும் இன்பத்தை முடக்கிவைத்தபடி...பொதுவாகவே இது போன்ற உடல் குறைபாடு உள்ளவர்கள் அனைவருமே வேறு ஒரு திறத்தில் மேம்பட்டவர்களாக இருப்பர் என்று சொல்வது அறிவியல்.

பொதுவாகவே உடல் உறுப்புகள் இயல்பாக இல்லாமல் மாறுபட்டு இருப்பாரைக் கண்டாலே நமக்கு இந்தக் கடவுள் இருப்பது உண்மையா என்று கேள்விகள் கேட்கத் தோன்றும்,,,கேட்டால் இந்தமனிதர்கள் செய்த பிழைதான் இவர்கள் இப்படி ஆகிவிடக் காரணமும் என்ற பதில்களும் கிடைக்காமல் இல்லை.

அரசு நடத்தும் இந்தப் பள்ளி இன்னும் வாடகை கட்டடத்தில்தாம் இருப்பதாக இதன் அலுவலர்கள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிக்கு ஏன் இந்த நிலை...

இன்று ஒரு சிறு மாணவி தனது சேமிப்பு பணத்தை 1. 5 இலட்சத்தை சென்னை நகர காவல்துறை சிசிடிவி காமிராக்கள் வாங்க வழங்கியதாக...

வீரப்பனை வளைத்த விஜய்குமார் இன்று நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையின் தலைவர் என நினைக்கிறேன் அவர் ஒரு பேட்டியை பார்க்க நேர்கையில் அவர் கூட ஏன் இப்படி அரசு பேப்பர் எழுது பொருட்கள் வாங்கவும்  நிதி போதுமானவகையில் ஒதுக்குவதில்லை அப்படி இருப்பதால்தான் காவல்துறை பொதுமக்களிடம் கை ஏந்தி கெட்ட பேரை வாங்கி வருகிறது என்றும் தமது உரையில் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் நமது குடிகாரத் துண்டுகள் எப்படி எல்லாம் நாட்டை நாறவைக்கின்றன... சரி விடுங்கள்

இந்தக் குழந்தைகளை இந்த காது கேளா பேச முடியா குழந்தைகளை எமது கல்லூரிக்கு அழைத்து வந்து பல் பரிசோதனை செய்ததுடன், பல் மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய‌ விழிபுணர்வுக்கான படங்களையும்  போட்டுக் காட்டியது
Image may contain: 1 person, sitting, child and indoor
மேலும் அவர்களுக்கு பேஸ்ட் பிரஸ், பழச்சாறு, எழுத ஒரு பேனா போன்றவற்றை வழங்கி தேவைப்படுவார்க்கு இலவச மருத்துவ சேவையும் வழங்க எமது கல்லூரி தயார் நிலையில் உள்ளது. அதுபோலவே கண் பார்வையற்றோர்க்கும் பிரய்லி BRAILY METHOD முறையில் பல் மற்றும் வாய் சுகாதாரம் பற்றிய வெளியீடுகளை வெளியிட்டு அவர்களுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தகக்து
Image may contain: one or more people, people sitting and outdoor
மேலும் எமது கல்லூரியின் பல் கட்டும் பிரிவு கடந்த 23 ம் 24 ஆகிய நாட்களில் ஏற்காட்டில் சிறப்பான முகாமை நடத்தியிருக்கின்றது. இதில் விநாயாகா ஆய்வு  நிறுவனநிகர் நிலைப் பல்கலையாக உள்ள எமது கல்விக் குழுமத்தின் துணை வேந்தர் சுதிர் கலந்து கொண்டதாகவும் அந்தத் துறையின் தலைவர்  பேரா. மரு.ஜெயஸ்ரீ மோகன் அவர்கள் தெரிவித்தார்.

 அந்தக் காலக் கட்டத்தில் ஏற்காட்டில் மனிதர்கள் காட்டுத் தீ ஏற்படக் காரணமா இல்லை இயற்கையாகவேவா என்று சொல்லுமளவு காட்டுத் தீ பரவி அங்கு மின்சார வசதிகளைக் கூட துண்டித்து நிறைய பராமரிப்பு பணிகளும் மாவட்ட நிர்வாகம் தொடராக நடந்தது யாவும் பதிவுக்கு.

வருகிற மார்ச் .6 அன்று உலக பல் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மேச்சேரி அருகே உள்ள பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 4 திங்கள் கிழமையில் மாணவர்களின்  குழுவாக‌ நிற்றலின் அடிப்படையில் எழுத்துகள்  மற்றும் பல் வடிவம், உலக பல் மருத்துவர்கள் தினம் என்ற வாசகத்தின்  பதிவுக்காக புகைப்படிவ பதிவுக்காகவும் தயாராகி வானிலிருந்து புகைப்படம் எடுக்கவும் தயாராகி வ‌ருகிறது


இப்படி பலப் பல சொல்லவும் விருப்பம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment