அண்டப் பெருவெளியில் காலப் பரிமாணத்தில் மனித வாழ்வும் ஓர் மின்னலே...சில விசுக்கென போகும், சில பொசுக்கென போகும் சில பளிச்சிடும் சில வீறிடும், சில கீழிருந்து மேல் வரை கோடாய் இறங்கும் சில ஏறும்... சில மூலை வானில் சில நடு வானில் சில கீழ் வானில் சில மேல் வானில்... ஆனாலும் அதுவும் எதுவும் குறுகிய காலமே..சக்தியைப் பயன்படுத்துவார் புத்தியைப் பயன்படுத்துவார் பலப்பல ஆனாலும் எவருமே பல நூற்றாண்டு வாழ்வதில்லை. பேர் விளங்க பேர் விளக்க செய்வாரே வாழ்வாராம்.
உயிர்களின் ராசியிலே மனிதமே உன்னதம் அதுவே அதிக வக்ரமானதும்.
சிலர் நாட்டுக்காக வாழ்கிறார்
சிலர் வீட்டுக்காக் வாழ்கிறார்
சிலர் வாழ்வு வீட்டுக்காகவும் நாட்டுக்காகவும் இருந்து முடிந்து போகிறது
சிலர் இசைக்காகவே உயிர் விடுகிறார்
சிலர் நடிப்புக்காகவே வாழ்வை செலவிடுகிறார்
சிலர் காசுக்காகவே வாழ்ந்து சரியாக சாப்பிடக் கூட சரியாக செலவு செய்யாமல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகிறார்
சிலர் திருடியே பிழைத்து சாம்பல் ஆகிறார்
சிலர் காதலுக்காகவே வாழ்கிறார் இறந்த பிறகும் வாழ்வதாக...
சிலர் அரசியல் புகழ் என்று வாழ்ந்து அரசு, ஆட்சி என்று உன்மத்தம் பிடித்து அலைந்து செத்து சுடுகாட்டுக்குப் போன பிறகும் கறுப்பு, காவி, சிவப்பு என்று நிறமின்றி அலைகிறார்
சிலர் சாதிக்காக வாழ்கிறார்
சிலர் சாதிக்கவே என வாழ்கிறார்
சிலர் உறவுக்காகவும் நட்புக்காகவும் வாழ்கிறார்
சிலர் கொள்கைக்காகவே வாழ்ந்து உயிர் விட்டு உயர போகிறார்
சிலர் எம்மதம் என் கடவுள் என்றே வாழ்ந்து மறைகிறார்
சிலர் நம் நாடு என்று வாழ்கிறார்
சிலர் நம் உலகு என்றே வாழ்கிறார்
சிலர் விளையாட்டு என்றே வாழ்ந்து மடிகிறார்
சிலர வாழ்வே விளையாட்டு என்று ஓடுகிறார்
சிலர் பில்லி சூனியம் காற்று கருப்பு என்று இரவு தூங்காமல் எலுமிச்சையி உயிர் இருப்பதாக சாலையில் போட்டு சாபம் பெறுகிறார்
சில மதங்கள் உயிர்ப்பலி கூடாது என்கிறது
பல மதங்கள் வயிற்றுக்காக எதையும் வெட்டலாம் உண்ணலாம் என்கின்றன
சில மதங்களில் சில நாடுகளில் ஒருவனுக்கு ஒருத்தி ஆணுக்கு பெண் என்கிற நியதி
பல மதங்களில் பல நாடுகளில் பல இடங்களில் இவை வேறு வேறாக மாறுபாடாக... ஒரு ஆண் பல பெண்கள மணந்து நிறைய குழந்தைகளைப் பெறுக என்றும் சில நாடுகளில் உள்ள ஆதிவாசிகள் இன்னும் ஆடையே இல்லாமலும் சில நாடுகளில் இன்னும் குடிநீரே இல்லாமலும் சில நாடுகளில் இன்னும் உணவே இல்லாமலும் இப்படியே மனிதகுலத்தை தாங்கிய புவி அதைச் சுற்றிய நிலா அவற்றைக் கொண்டாடிடும் சூரியக் குடும்பம் அவை போன்ற கோடான கோடி சூரிய விண்மீன்கோள்கள் அவை பல்லாயிரம் கோடி கோடி மைல் வேகத்தில் சுழன்றாடி ஓடிட...மனிதம் தமது முடிவை எட்டுவதற்குள் எப்படி எல்லாம் வாழ்கிறது தாழ்கிறது உயர்கிறது ...
சிலர் சாப்பாடு சாப்பாடு என்றே வாழ்கிறார்
சிலர் துணி துணி என்றே அலைகிறார்
சிலர் வீடு வீடு என்றே புதைகிறார்
சிலர் சாலை ஓரத்திலே புளிய மரத்தடியிலும் ஒதுங்கி வாழ்கிறார்
சிலர் கோவில் கண்ட பணியே குலப்பணியே என்று வீழ்கிறார்
சிலர் மனிதகுலமும், உயிர்களும் உலகும் மேம்பட தமது ஆவியை ஆவியாக்குகிறார்
சிலர் அறிவியல், அறிவு என உயிரைப் புகுத்துகிறார்
நரையும் திரையும் கால் சோர்வும் கைஓய்வும் ஆகும் மனிதம் முதிய வயதில் கூட தமது பெற்றோரும் உற்றாரும் ஊரும் உறவும் போன வழிதான் நமது வழியும் என்று உணராமலே....
வாழ்வதுதான் என்னே?
எனவே
நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்போம்
நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருப்போம்
நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பூரணமான உண்மையைக் கடைபிடிப்போம்
பிறரிடமிருந்து ஏற்றுக் கொள்ளாதிருப்போம்.
கோபம் பொய்கள் கவலை பயம் வெட்கம் வேட்கை ஆகியவை தொடராதிருப்போம் பாரதியாம்
கர்வம், அதிகம் பேசுதல், தியாக சித்தமின்மை, சுயநலம், கோபம், துரோகம்...விதுர நீதியாம் இப்படி எப்படி சொன்னாலும் சில குண நலன்களை
கற்றுக் கொள்வதும்
விட்டுத் தள்ளுவதுமே மனித நீதி மனித நியதி இவை வேறு உயிர்களுக்கு பொருந்தாது
எனவே...இருந்தாரை நினவில் கொள்வோம்...நாமும் இருந்தார் என்ற பட்டியலில் இடம்பெறுவதற்குள் எதையாவது பதிவு செய்வோமே...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment