ஜனநாயகப் பாதையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம்: கவிஞர் தணிகை
தேர்தல் ஆணையம் ப்ளக்ஸ் போர்ட் மற்றும் விளம்பரங்கள் செய்யக் கூடாது என இந்த தேர்தலில் ஆணை விதித்துள்ளது பெரிதும் பொது மக்களால் வரவேற்கப்படுகிறது.
மோடி டிஜிட்டல் மணி என மக்களை கசக்கிப் பிழிந்த பின் சில ஆண்டுகள் ஆனபின்னும் வீடு தேடியும் , வாகன சோதனையிலும் உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பரிவர்த்தனையை முடக்கி தேர்தல் ஆணையம் அவற்றை பரிமுதல் செய்து வருகிறது...இதுவே மோடி அரசின் தோல்வியை சொல்லாமல் சொல்லி பறை சாற்றி வருவதைக் காணலாம்.
மேலும் தேர்தல் ஆணையம் வங்கிகள் எல்லாவற்றிடமும் பெருத்த பணப் பரிவர்த்தனை நடைபெறுவது குறித்து தகவலும் கேட்டு வருகிறது....
நிலை இப்படி இருக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி நேர்ந்தது: பிரதான வழி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடை செய்யப்பட்டு காவல் கட்டுக்குள் இருந்தது... அது வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்க்கு மட்டுமாம்.
அந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வாக்களர்களை எலலாம் வந்து கெஞ்சி காலில் விழுந்து காசளந்துதானே போய் பதவி என அமரப்போகிறவர்கள் அவர்களுக்கு என்ன தனி வழிகள்? அவர்கள் கூட்டணி சேர்வதற்கே சொல்லிய வார்த்தை எல்லாம் வாக்கை எல்லாம் இந்த வாக்கைப் பெறுவதற்காக அவர்கள் சொன்ன வாக்கை எல்லாம் இல்லை என்று சொல்லும் அயோக்யர்கள்தானே...அவர்களா இந்த மக்களுக்கு நன்மை செய்யப் போகிறவர்கள்...மேய்ச்சல் நிலம் மேயவிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வழிகளும், கோரிக்கை தாங்கி அன்றாடம் செல்லும் மக்களுக்கு வேறு வழி காண்பிப்பதுமாய் இருப்பதிலேயே நமது ஜனநாயகக் கடமை எவ்வளவு நழுவிக் கீழ் விழுகிறது என்பதைக் காணலாம். அவர்களை பக்க வாயில் வழியே செல்ல ஆணையிடுவதை விட்டு விட்டு பொதுமக்கள் பணியாளர் ஏனைய அனைவரும் பக்க வாயில்கள் வழியாகவே வரவும் போகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
காரணம்: வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்களாம். வருகிறார்களாம். வந்தார்கள். யார் என எனக்குத் தெரியவில்லை ஒருவரை சுற்றி காவலர்கள் அதன் பின் காமிரா ஊடகம் என...
எல்லாம் இங்கு தலைகீழ். பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய பாதுகாவல்சக்திகள் இவர்கள் பின்னால் போய்க்கொண்டு....மேய்ச்சல் நிலத்தை பதுகாக்க வேண்டிய சேவையாளர்களுக்கு மட்டுமே இனி இந்த நாடு பாதுகாப்புத் தருவதாக இருக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் நேரு காமராசர் காலத்திற்கும் பின் எளிமை என்பது போய்விட்டது சேவை செய்ய வருவார்க்கு எதற்கு பாதுகாப்பு....எல்லாவற்றிலும் ஒரு பயம் ஊடுருவி உள்ளது புழங்கும் மக்களிடமும், ஆள ஆட்சியாளராக தேர்தலில் போட்டியிட வருவாரிடையும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது...ஆள்வோரிடையேயும், ஆளப்படுவாரிடையேயும் ஒரு பயம் இருந்தபடியே இருக்கிறது. இந்த பயம் ஜனநாயகத்தில் இருக்க வேண்டியதல்ல... அப்படி ஆனால் இந்த ஜனநாயகம் இந்தியாவின் ஜனநாயகம் உலகின் மாபெரும் ஜனநாயகம் இன்னும் அடக்கி ஆளும் நிலை விட்டு வெளியே வந்து மக்களின் பிரதிநிதித்துவம் நோக்கி நகரவே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் அளவு புழு நகரும் அளவில் தானே இருக்கிறது?
ஆங்கிலேயன் கட்டிய சேலம் மத்திய சிறைக்கு முகாம் செய்ய சென்றிருந்தோம் எங்களது மருத்துவர்கள் குழு. அது 1862 ஆம் ஆண்டு கட்டியது. உள்ளே 25 ஏக்கர் பரப்பு கொண்டதாக விளங்குகிறது ஆனால் அந்தக் கட்டடம் யாவுமே நாம் அடிமையாக இருந்தபோது அடிமையாக இருக்கவே அடித்து நொறுக்கி கசக்கி காய வைத்து தொங்கப்போடவும், அங்கேயே தூங்கவும், வாழவும், மலம் கழிக்கவுமான சினிமாவில் காணும் அமைப்புடன் அப்படியே இருப்பது ....கேள்விகளை எழுப்ப...
சுதந்திர இந்தியாவில் நமது சகோதர மனிதர்களுக்கும் அதுவே அளவுகோலாக அதே சிறைக்கூடங்கள் இருப்பது நாம் ஜனநாயகத்தில் எப்படி எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை காண்பிக்கிறது அவற்றை அடித்து நொறுக்கித் தள்ளி விட்டு குடியரசு இந்தியாவின் அடையாளமாய் அவை எல்லாம் அறிவியல் முறைக்கு மாற வேண்டாமா?
தேர்தல் எந்திரமும், யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியவும் உதவிடும் அறிவியல் நமக்கு பொல்லா(ர்)ட்சி யாய் பொள்ளாச்சிகளும் நாக(ர்) கோயில்களும் குற்றவாளிகளைத் தோற்றுவிக்காமல் இருக்க என்ன என்ன நடவடிக்கை முன் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தராதா? எதுவும் நடந்த பிறகுதான் நாம் அவற்றின் மேல் எல்லாம் கவனம் செலுத்த வேண்டுமா?
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment