பூனை நாய் பெண்பாலாக இருந்தால் வேண்டாம் என்பார் ஆடு மாடாக இருந்தால் வேண்டும் என்பார்: கவிஞர் தணிகை.
மனிதக் கணக்கீடுகள் எப்போதும் பொருளாதாரத் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உயிர்களின் தொடர்பும் நேசமும் அப்படி இருப்பதில்லை. நேற்று முன் தினம் எங்கள் வீட்டின் பெண் நாய் ஒன்று இறந்து போனது. சொல்ல முடியாச் சோகம்.
குடிநீர் வந்தால் குரல் கொடுத்து சொல்லி நீர் பிடிக்கச் சொல்லி அழைக்கும். நீர் கீழே விரயமாகப் போய்க் கொண்டிருந்தால் அந்த நாய் குரைப்பதை நிறுத்தாது. அக்கம் பக்கம் வீட்டார் கூட இந்த நாய் குரைப்பதைக் கேட்டவுடன் நீர் பிடிக்கத் தயாராகிவிடுவார்கள்.
ஆனால் இனி அந்தக் குரல் கேட்கப் போவதில்லை.
பைக்கின் மேல் போட்டு மூடி இருக்கும் சேலைத்துணியை இழுத்துப் போட்டு படுத்துக் கொள்ளும். சமையல் கட்டு திறந்திருந்தால் உள்ளே வந்து புகுந்து தக்காளி போன்றவற்றை தூக்கி வெளியே சென்று விடும். எந்தப் பேப்பராக இருந்தாலும் துணி கிடைத்தாலும் கிழித்து சுக்கல் சுக்கலாகப் போட்டுவிடும்.
பிளாஸ்டிக்கை வேறு கடித்துத் தின்று பழகி இருந்தது.
தேவையில்லா இடங்களில் எல்லாம் சிறு நீரும் , மலமும் இருந்து கழித்து விடும் ஏகப்பட்ட குளறுபடி...ஆனால் வெளியே எங்கும் ஓடாது. தப்பித்தவறி ஓடினாலும் கூப்பிட்டவுடன் வந்து விடும். நாம் சாப்பிட்டு மீதம் வைக்கும் சப்போட்டா, கொய்யா, பழம் போன்றவற்றையும் சாப்பிடும், கோசப்பழம் போன்றவற்றின் தோலையும் விடாது.. முன் ஜென்மத்தில் ஆடாக இருந்திருக்கும் என கேலி செய்வோம்.
முன்பு ஒரு அப்பு என்ற ஆண் நாய் வளர்த்து வந்தோம் அது அடிக்கடி டிமிக்கி கொடுத்து விட்டு ஓடி விடும்.கண் தெரியவே ஓடிக் கொண்டே இருக்கும் கூப்பிட்டால் வராது. பின் களைத்துப் போய் பிஸ்கட் அது இது என்று தாஜா செய்து கூட்டி வருவதற்குள் பாடாகப் போய்விடும்
ஆனால் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்கிறோம் எனில் வாசலைத் தவிர வேறு எங்குமே போகாது...நாம் வரும் வரை வாசலிலேயே தவம் கிடக்கும்...என்ன ஜென்மங்கள் இவை...
நாங்களும் முடிந்தவரை வாரா வாரம் குளிக்க வைத்து பவுடர் கூடப் போட்டு வளர்ப்போம் என்றாலும் பெரும்பலும் சைவம் என்பதால் அதற்கான வேட்டை கிடைக்காது.
இந்த நாய்கள் பூனைகள் எல்லாமே கடைசியில் உயிர் இருக்கும் வரை நம்மை நினைவில் வைத்து வாலாட்டியபடியும் நமது குரல் பரிச்சயம் வைத்து நம்மிடம் நன்றி பாராட்டுவதும், நம் காலில் வந்து தலையை வைத்து சல்யூட் செய்வதுமாக...
ஒரு முறை கம்பளி நல்ல துணி எல்லாம் கடித்து வீணாக்கி விடுகிறதே என ஒரு பெண் பெரிய பூனையை சுடுகாட்டு கம்பெனியுள் தெரிந்த உறவினரின் கம்பெனிதான் விட்டு விட்டு வந்து விட்டோம் மூடி எடுத்துப் போய் ஆனால் அது சில நாள் கழித்து நிறம் மாறிப்போய் ஒர் விடியல் காலை வீட்டில் வந்து நின்றது... மறுபடியும் ஆறு தாண்டி மேட்டூர் சென்று எனது துணைவியார் விட்டு விட்டு வந்தார்கள் 8 கி.மீ தாண்டி...
ஆடு மாடு கூட விட்ட தடம் மாறாது திரும்பி வீடு வந்து சேர்ந்துவிடும் என்பார்கள்...அப்படி நடந்த கதைகளும் கதையல்ல உண்மைச் சம்பவங்களும் நிறைய நடந்திருக்கிறது..
ஆனால் இவை எல்ல்லாம் கடைசீ காலம் வந்து விட்டால் நம்மால் அதைப் பார்க்க சகிக்காது வேதனையில் துடித்துப் போவோம் அதற்காகவே நாங்கள் அதை அப்படி வளர்ப்பதில்லை என்றார் அலிராக்ஸ் அபராஸிவ்ஸ் என்ற கம்பெனீயின் மேலாளராய் இருந்து ஏற்காட்டில் இருந்து எனக்கு ஒரு பொமரேனியன் நாய்க்குட்டியை ரூபாய் 650க்கு வாங்கிக் கொடுத்த எனது நண்பர் அவர் இப்போது இல்லை இந்த நாய்களும் பூனைகளும் கூட
இப்போது ஒரு நாயும் பூனையும் மட்டுமே இருக்கிறது...
அந்த பெண் நாய், பெண் பூனை இவற்றை பால் இனம் பார்க்காது நாங்கள் வளர்ப்பதன் ஆர்வம் கண்டு எங்களை சில நண்பர்கள் பாராட்டியதும் உண்டு.
இந்தக் காலத்தில் இது போல் நாய் பூனைக்கெல்லாம் மருத்துவம் பார்க்க கால் நடை மருத்துவரை நாம் அழைத்தால் அவர்கள் அவ்வளவு ஆர்வத்துடன் வருவதில்லை. ஆடுமாடுகளுக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கு பயன். எல்லாம் பொருளாதாரம்தான்..
அப்படி சில உயிர்களை நான் இழந்திருக்கிறேன். இதனுடனெல்லாம் இருந்து விட்டு கழிவறையில் உள்ள மலத்தொட்டியில் ஒர் எறும்பு இருந்தால் கூட அதைக் காப்பாற்றி விடலாமே உயிர் அரியதே..அதை நம்மால் உயிர்ப்பிக்க முடியாதே என்று...
நேற்று முன் தின்ம் இறந்த அந்த நாயை சோற்றுக் கற்றாழை வைத்திருக்கும் பகுதியில் குழி நோண்டி புதைத்து ஒரு பெரிய கல்லை எடுத்து கனமாக வைத்து சமாதிக்குள்ளாக்கினேன்.
மகளிர் தின வாழ்த்துகள்....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment