சாவடியூர் பொட்டனேரி அருகே பெட்ரோல் டேங்கர் சாய்ந்து பதற்றம்: கவிஞர் தணிகை
போய் சேர்வதும் வந்து சேர்வதும் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது: கவிஞர் தணிகை.
சேலம் செல்ல காலை 6.25 மணிக்கான பேருந்தை வழக்கம்போல் ஏறிப் பிடித்தேன்....சில கிமீ சென்றிருக்கும் வாகன வரிசை நிறுத்தப்பட்டது. என்ன என இறங்கிப் பார்த்தோம். பெட்ரோல் டாங்கர் ஒன்று சாய்ந்து பெட்ரோல் வழிந்தோடிக் கொண்டிருந்தது பாதையோரத்தில். மிகவும் அபாயகரமான நிலை.
அதை ஓட்டிய வாகன ஓட்டுனர் அங்கேயே மரணமடைந்ததாகவும் மதியம் திரும்பி வருகையில் செய்திகள் உறுதிப்படுத்தின.
எல்லா வாகனத்தையும் நிறுத்திய காவலர் தீ அணைப்பு வாகனத்தை மட்டும் வரவழைக்க...அதன் பின் அவர்கள் நீரை அந்த சாய்ந்து கிடந்த பெட்ரோலிய வாகனத்தின் மேல் பீச்சி அடித்துக் கொண்டிருந்தார்கள்.
காலம் வெகு வேகமாக சென்று கொண்டிருக்க....அனைவரும் கல்லூரி பள்ளி அலுவலக வேலை கட்டட வேலி என்று செல்வாரின் அதிகாலைப் பேருந்து எனவே பின்னால் பேருந்தை திருப்ப முடியாமல் திருப்பி வந்து வலது புறம் இருந்த சாவடியூர் சென்று வலைவுகளில் புகுந்து சற்று எட்ட இருக்கும் ஒர் சாலை மார்க்கத்தில் இணைந்து முதல் பேருந்து வெகு வேகமெடுத்தது. என்றாலும் வலைவு நெளிவுள்ள கிராமியச் சாலை ...சாலை முனையில் ஒரு பெரிய கோவிலும் உருவாகி உள்ளது எப்படியோ மறுபடியும் முக்கிய சாலையை எட்டியது.
எங்கேயும் நிறுத்தாமல் மேச்சேரி ஓமலூர் மட்டுமே நிறுத்த உள்ளோம் என்று சொல்ல மேச்சேரியிலேயே சுங்கச் சாவடிக்குச் செல்லும் நேரம் ஆகிவிட அப்படியும் வாடிக்கையாக ஏறும் நவயுக கிருஷ்ணன் ஒருவரை வேகத்தடையின் அருகே நிற்கச் சொல்லி ஏற்றிக் கொண்டே சென்றது. இன்னொருவரை சேலத்தில் 5 ரோடு பஸ் நிலையம் மட்டுமே நிறுத்துவோம் என்று சொன்னபோதும் குரங்குச் சாவடியில் மதிப்பிற்குரிய ஒருவரை இறங்குகிறீர்களா என இறக்கி விட்டே சென்றது. இதெல்லாம் என்ன ஆத்திரம் அவசரமாக இருந்த போதும் சில முக்கியமான நபர்களுக்கு கிடைக்கும் மரியாதை அந்த அவசியமான நேரத்தில் கிடைக்கிறது என்பதைக் குறிப்பிடவே சொன்னேன்.
பேராபத்து தவிர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் கடமையும் நடத்துனரிடமும் ஓட்டுனரிடமும் இருந்தன. மேலும் குறித்த நேரத்தை சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கமும்...
அந்த இடத்தில் சிறு நெருப்புப் பொறி ஒன்று சிந்தி இருந்தாலும் அந்த டேங்கர் வெடித்தால் அங்கு நின்றிருந்த வாகனம் மனிதர்கள் எல்லாமே அதோ கதிதான். எப்படி ஆயிற்றோ அந்த அதிகாலையில்...
மேச்சேரி புதன் சந்தை ஆடு மாடு கோழி சந்தை சாலையோரத்தை விட்டு அவர்களும் வாகனங்களும் மொய்த்துக் கிடக்க அங்கு சற்று கால தாமதம் அடுத்து எமது ஏமாற்றுகிற மேட்டூர் பயணிகள் வர ஓமலூரில் ரயில்வே கேட் ஆக இப்படியே...
அனால் உரிய நேரத்தில் சென்றடைந்து எமது கல்லூரிப் பேருந்தை பிடித்து விட்டேன் என்பதுதான் ஆச்சரியமானது.
கல்லூரியில் சுமார் 25 ஆண்டுக்கும் மேலாக என்னுடன் இருந்த் ரே பேன் அட்டோமேட்டிக் ஸ்பெக்ட்ஸ் ப்ரேம் ஒடிந்து கீழே கிடந்தது. அது எப்படி நடந்தது என்றும் தெரியவில்லை...
அதன் பின் அரசுப் பள்ளியில் படிப்பதாக ஒரு பெண்ணும் சிறுவனும் என்னிடம் முரண்பட்ட தகவல் தந்து சலுகை பெற ஆவலாக இருந்தார்கள்...
இன்று காலை நான் செய்த முதல் வேலையான வாசலைப் பார்க்கும் போது கதவு திறந்தால் ஒரு பூரானாக இருக்க வேண்டும் அதைச் சுற்றிலும் எறும்புக் கூட்டம் வேறு வழியின்றி அதை பெருக்கித் தூரத் தள்ளியாக வேண்டிய நிர்பந்தம்.
ஆனால் எனது எண்ணம் காலையில் முதல் வேலையாக இத்தனை உயிர்களின் உணவைப் பறித்து விட்டேனே என அடித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது...
வழியில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கொடியை ஒடிப்பதாக இருந்தாலும் மனது வலிக்க ஆரம்பித்துவிட்டது...
இராமலிங்க வள்ளலார் சொன்னபடி ...நானும் மிக மென்மையானவனாக மாறிவருகிறேன் என நினைக்கிறேன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாட...
மழையே இரங்கும் எமது உயிரினத்துக்கு யாவுமே மழையே நீயே உயிர் தருகிறாய் ... மழையே வருக...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:
Post a Comment