Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி ஊரும் பேரும் தலைப்பு செய்தியாகிப் போச்சு: கவிஞர் தணிகை

பொள்ளாச்சி ஊரும் பேரும் தலைப்பு செய்தியாகிப் போச்சு: கவிஞர் தணிகை

Image result for pollachi news

பொள்ளாச்சி மாபெரும் ஊர். மரவியாபாரத்துக்கு பிரபலமான ஊர்.மேலும் பொள்ளாச்சி சந்தைதான் தமிழ் நாட்டில் பெரிய சந்தை என்றும் பேர் வாங்கியது. பொள்ளாச்சியை மையமாக வைத்து செழிப்பான விவசாய நடைமுறைகள் உண்டு. அங்குள்ள மக்களும் மிகவும் மரியாதையாகத்தான் அந்நியரிடமும், அடுத்தவரிடமும் பழகுவார்கள், ஏனுங்க , போங்க வாங்க என்ற வார்த்தை தவறாதவர்கள் பேருந்தில் பணிபுரியும் நடத்துனர் உட்பட. பொள்ளாச்சியையும் அதைச் சுற்றியுள்ள இடங்களில்தான் மிகவும் முக்கியாமக சினிமா பட ஷூட்டிங் எல்லாம் நடைபெற்று இடம்பெறும்...

மக்களைப் பெற்ற மகராசியில் மணப்பாறை மாடுகட்டி...பாடல்  பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே நீயும் விருதுநகர் வியாபாரிக்கு வித்துப் போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு செல்லக் கண்ணு என்ற பாடல் மிகவும் பிரபலம்
எனது சகோதர நண்பர் வீட்டில் உள்ள மரம் முழுதுமே  தேக்குமரத்தால் ஆனது அதுவும் ஒரே மரம் பொள்ளாச்சியில் சென்று எடுத்து வந்தது என் எனது மதிப்பிற்குரிய நண்பரின் துணைவியார் பெருமை பிடிபடச் சொல்லியதுண்டு.

இத்தனைக்கும் காரணமான எங்கு நோக்கினும் பசுமையாக விளங்கும் பொள்ளாச்சி இப்போது வேறு காரணத்தால்  ஊடகங்களில் எல்லாம் தலைப்புச் செய்தியானது கண்டு பொள்ளாச்சி பற்றி அறிந்தவர்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

ஏன் எனில் நிலானி சொல்வது போல ஒவ்வொரு நாளுக்கும் ஒன்னரை ஜிகாபைட் இலவசமாக மோடி அரசும் ரிலையன்ஸ் ஜியோவும் வழங்கி வரும்போது இப்படி எல்லாம் நடக்காதிருந்தால்தான் அது அரிது.

என்ன ஒரு பெண் சொல்கிறார் எனில்: நீங்க சொல்லித்தானேண்ணா வந்தேன். அடிக்காதீங்கண்ணா, அடிக்காதீங்க, நானே கழட்டிற்றேன் என தனது ஆடைகளை கழட்டி விட்டு படம் பிடிக்கத் தயாராக இருப்பதாக கதறுகிறார் என்கிறார்கள் வீடியோ காட்சிகளைப் பார்த்தவர்கள்.

நானும் பார்த்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆண் குரல் பெண்குரலெல்லாம் கேட்கிறது மிரட்டுகிறது கெஞ்சுகிறது ஆனால் தெளிவாக புரியவில்லை.

 இன்று நாட்டு நடப்பு இப்படி இருக்கையில் ஒரு விவாதம்: அந்தப் பெண்கள் ஏன் அந்த ஈனப்பிறவிகளுக்காக அவர்களின் சொல் வார்த்தை கேட்டு அங்கு போனார்கள் என்பதுவும்...

ஒரு வேளை அவர்களும் தரம் தாழ்ந்தவர்களோ என்று கேள்வி எழுப்புவாரும் உண்டு அவரது நியாயத்தையும் எம்மால் பேச்சுக் கொடுத்துப் பார்த்தபின் மறுக்க முடியவில்லை.

அரசியல் , கட்சி, தேர்தல் எல்லாம் சரிதான் அதன் தாக்கம் இருக்கும்தான். இதுபோல் எல்லா இடங்களிலும் நடக்கலாம் தான்...அனால் வெளிவந்துவிட்ட இந்த செய்தியின் பின்னணி உண்மை என்ன அதை சரியான அரசாக இருந்தால் தேடிக் கொண்டு வந்து மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய கடமை அதற்கு உண்டு.

இந்த விடலைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் , சகோதர சகோதரிகள் எவருமே இவர்களின் தவறை எப்படி வளரவிட்டனர்.  என்றைக்கு மேலை நாட்டு கலாச்சாரமும், மதுவும் போதையும், வலையமும் இணையமும் வந்து இந்த நாட்டை ஆக்ரமித்ததோ அதை எந்தவித கட்டுப்பாடுமின்றி இந்த அரசுகள் அனுமதித்ததோ பள்ளிகளில் எல்லாம் கூட மடிக்கணினியும் இணைய இணைப்பும் சுலபமான வாய்ப்புகளாகிவிட இன்று நாடே நாறிக் கிடக்கிறது ஒரு ஊரின் பேர் சொல்லி.

இவன்களுக்கு வேறு எந்த வியாபாரமுமே கிடைக்கவில்லையா? இவனுங்க அதற்காக அடித்து சித்திரவதைப்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்வார்களா? அதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்புமில்லை என மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சொல்வது முற்றிலும் உண்மையா/ நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பாதிக்கப்பட்டது உண்மையா? அல்லது வெறும் 4 குறுந்த்தகடுகள் மட்டுமேதான் உள்ளனவா?

இப்படி புரிபடாத நிறைய புதிர்க்கேள்விகள்...வயசுக்கு வந்த பெண் எப்படி ஒரு நிறுவனம் சாராமல் பெற்றோர் குடும்பம் சாராமல் தனியாக இந்த போதைக்கார நாய்கள் கூப்பிட்டார்கள் என எதற்காக சென்றார்கள் ஏன் சென்றார்கள் இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லையே

எப்படியோ மக்களை சிந்திக்க விடாமல் இது போல போதை ,மது, காமம் என திசை திருப்பி விட்டு அரசும் அரசுகளும் ஆட்சியும் கட்சிக்ளும் பொதுமக்களை பிரித்தாண்டு சூழ்ச்சி செய்து சுழலவிட்டு  தங்களது விருப்பம் நிறைவேற பயணம் நடத்திக் கொண்டிருந்தாலும் போதும் இப்போது ஒரு பொள்ளாச்சி இனி அப்படி எத்தனையோ வெளி வந்தது இது வெளிவராமல் எத்தனையோ....

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பான் பாரதி...

No comments:

Post a Comment