தேர்தல் களை கட்டும் ஜனநாயகப் பிழைகள் தேர்தல்களை கட்டும் ஜனநாயகப் பிழைகள்: கவிஞர் தணிகை
ஒரு எவர் சில்வர் குடம் ஒரு சேலை கொடுத்து கூட்டத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார்கள் எங்க தெருவே யாரும் இல்லாமல் காலியாகி கூட்டத்திற்கு போய் இருக்கிறது என்றான் ராகுல்
அவர்களுடையது ஒரு நகர் ஒரு ஊரின் பகுதி. கூட்டம் நடைபெறும் இடம்: காமராஜருக்கு சிலை இருக்கும் ஊர்
அதற்கு கூட்டம் சேர்த்த வேறு கட்சியில் இருந்து புதிதாக இந்தக் கட்சிக்கு வந்த சரித்திர மஹா புருசன்கள்.... பேர் கொண்டவர்கள்...
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.ம.மு.கவின் தினகரன் எல்லா மாநில மத்தியக் கட்சிகளையும் விளாசித் தள்ளி வென்றது இந்திய ஜனநாயகத்தின் ஒரு விளிம்பு.
அங்கு என்ன நடந்தது என்று எல்லாம் தெரிந்தும் அது தேர்தல் ஆணையத்தினரின் கடமை மட்டுமே அல்ல ஒரு ஜனநாயகத்தில் பெருவாரியான மக்களின் கடமையே அது என ஒரு ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் வாக்குக்கு கையூட்டு பெற்ற மக்களை எல்லாம் நாய்கள் என்றே குறிப்பிட்டு பேசியிருந்தார் அவர் கிருஷ்ணமூர்த்தி என்றே நினைக்கிறேன்.
இப்போது எல்லாக் கட்சிகளும் அணிவகுத்திருக்கின்றன இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதிருக்கும் நிலையில் தேர்தல் களை கட்ட ஆரம்பித்து விட்டது. தேர்தல்களை கட்ட ஆரம்பித்துவிட்டன.
முன்பெல்லாம் பாராளும்ன்றத் தேர்தல் பற்றி பெரும் அலட்டல் எல்லாம் இருக்காது ஏன் சில இடங்களில் தொகுதியின் சில கட்சியின் வேட்பாளர்கள் வருவதற்கும் கூட நேரம் இல்லாமல் விட்டு விடுவார்கள்...ஆனால் இது போன்ற தேர்தல் வரும்போதெல்லாம் கூட்டம் சேர்த்தும் இடைத்தரகர்களுக்கு ஒருவகையில் வாழ்க்கை மலர ஆரம்பிக்கிறது.
சிமெண்ட் எந்தவித முன்னறிவிப்புமின்றி முறையின்றி விலை ஏற்றப்பட்டிருப்பதாகவும் அது போன்ற கம்பெனிகளிடமிருந்து சுமார் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் கோடிகள் தேர்தல் நிதிக்கு குறிக்கோள் வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவேதான் இது போன்ற காரணங்களாலே போக்குவரத்து ரயில்கள் நிறுத்தம், பேருந்து பெருக்கம், மக்கள் நெருக்கம் இப்படிப்பட்ட காரணங்களும் நிகழ்ந்து வருகின்றன....
ஒட்டுப்பள்ளம் என்ற இடத்தில் சில சாலைகள் சந்திக்கின்றன நேற்று நடைப்பயிற்சியின் முடிவில் பார்த்தால் ஜெகஜ்ஜோதியாக தினகரன் அணியினரின் முக்கியமாக அவரின் முகம் மிகவும் பெரிதாக எல்லாப்பக்கங்களிலும் போஸ்டர்களாக வண்ண வண்ண விளக்குகுகளுடன்..
அதைப் பார்க்கவே போகலாம் போல...மேலும் அது முதல் கூட்டம் நடக்கும் ஊர் வரை மின் விளக்குகள் தொடர்ச்சியாக....எல்லாம் பணமய்யா பணம்...
அதிலும் அம்மா ஜெயிச்சா இலஞ்சம் போகும், பஞ்சம் விலகும் என்றும் இரட்டை இலைப் பாடல்களே ஒலித்தபடி இருந்தன...கொஞ்சம் நேரம் கழித்தவுடன் அது எம்.ஜி.ஆர். ஜெ சினிமா பாடல்களாக ஒலித்தன...
ஒரு பத்திரிகையாளராக கூட்டம் சென்று பார்க்கலாமா என்ற ஒரு நினைவுக் கீற்றை வயதின் முதிர்ச்சி, பொறுப்பு, பணிச் சோர்வு ஆகியவை தடுத்து நிறுத்திவிட நடைப்பயிற்சியை முடித்து வந்து சேர்ந்தேன். எல்லா இடங்களிலும் சாலை விரிவாக்க, மேம்பாலப் பணிகள் வெகுவிரைவாக நடைபெற்று வருகின்றன....
தலைவர்கள் வர வேண்டுமல்லவா சாலைகள் நன்றாக இருந்தால் தானே...
இன்றும் நாளையும் வாக்குச் சேர்க்கை திருத்தம் பதிவு பற்றிய அரசுப் பணிகள் தேர்தல் மையங்களில் நடைபெறா கல்லூரி பள்ளிகளில் தேர்வு நாட்கள் அருகாமைக்கு கொண்டு வந்து சேர்த்த... இந்த தேர்தல் அதுவும் தமிழகத் தேர்தல் மிகவும் அரிய காட்சிகளுடன் பல்வாறாக பிரிந்து ஏராளமான காட்சிகளுடன் அரங்கேற இருக்கிறது...காட்சிக்கு காட்சி மெருகேறும் ஆனால் ஜனநாயகத்தில் பெரும் சோர்வும் சோகமும்...தேர்தல் என்றாலே ஜனநாயகத்தின் மலர்ச்சி வடிவம்தானே என்று கேட்கிறீர்கள் அதுவும் சரிதான் ஆனால் அது மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும்போதுமட்டுமே...
இந்த அறிவிலி மக்களிடம் இருந்தே சிமென்ட், குடிநீர், பேருந்துக் கட்டணம், தனியார் கம்பெனிகளிடம் தேர்தல் நிதி இப்படி அவர்களிடமிருந்தே அவர்க்கு அறியா வகையில் அவர்கள் பணத்தையே சுரண்டி அவர்களுக்கே தருவது போல கொஞ்சம் கொடுத்து விட்டு பூனை குரங்கு அப்பம் கதை போல பெரும்பகுதியை தமது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ளும் இந்த அமைப்பில் தேர்தல் களை கட்டினாலும் தேர்தல்களை கட்டினாலும் இந்த ஜனநாயகப் பிழைகளால் அடித்தட்டில் அறியாமல் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு எந்த நல்லதுமே நடந்துவிடப் போவதில்லை வெறும் காட்சிப் பிழைகளையன்றி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment