Sunday, March 31, 2019

தேர்தலை நிறுத்தலாம் (அ) வேட்பாளரை நீக்கலாம் (அ) கட்சியைத் தடை செய்யலாம்: கவிஞர் தணிகை.

தேர்தலை நிறுத்தலாம் (அ) வேட்பாளரை நீக்கலாம் (அ) கட்சியைத் தடை செய்யலாம்: கவிஞர் தணிகை.

ரெண்டும் ஒரே குட்டைலே ஊறின மட்டைன்னேன்...காம‌ராசர்

Image result for election 2019


சபேசன் என்னும் அ.இ.அ.தி.மு.க  மந்திரியின் பினாமியிடம் 16 கோடி பிடித்தது தேர்தல் செலவு செய்ய வைத்திருந்த பணம்தாம் என்று மாநில தேர்தல் ஆணையர் ஒப்புதல் செய்திருக்கிறார்

அவர் மின் துறை மந்திரிக்கும் தமிழக முதல் மந்திரிக்கும் வேண்டப்பட்டவர் என்று அரசியல் வட்டாரங்களின் தகவல்கள்

கனி மொழி தேர்தல் வாக்கு சேகரிக்க செல்கையில் ஆரத்தி எடுப்பாருக்கு அருகிருக்கு ஒரு நபர் பணத்தை தவறாமல் அளித்து வந்ததை காணொளி காண்பிக்கிறது

துரைமுருகன் மகனது வீடு பள்ளி கல்லூரி வளாகங்களில் சோதன செய்யப்பட்டு தேர்தல் வேட்பு மனுவில் கை ரொக்கம் 5 இலட்சம் தாம் சொல்லப்பட்டுள்ளது இப்போது எப்படி வீட்டில் 10 இலட்சம் உள்ளது எனக் கேள்விகளும் பதில்களுமாக...

இதெல்லாம் இன்றைய பதினேழாவது  லோக்சபா தேர்தல்களின் சில தமிழகக் காட்சிகள் மட்டுமே...

72 ஆண்டு ஆச்சு சுதந்தரம் பெற்று, 69 ஆண்டு ஆச்சு குடி அரசாகி குடிக்க குடி நீருக்கு உத்தரவாதமில்லாம செயற்கைக்கோள் அழிக்க ஏவுகணை ஏவி சீனா அமெரிக்கா ரசியாவுக்கு அடுத்து நாலாவது நாடோனோம் இந்த பூமிப்பந்தில் ....புல்லரிக்குது மோடிஜி.... வல்லரசாக மாறும் குடி மக்கள் பட்டினியாக மாறியும்...


அதே போல உபி முதல்வர்  யோகி ஆதித்யநாத் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க பேர்கள் names வாசிக்கப்பட கீழ்த்தட்டு மக்கள் அனைவரும் வரிசையாக வந்து பணம் பெற்றுக் கொண்டு அவரது காலை முட்டிக்காலைத் தொட்டு வணங்கிச் செல்வது காட்டும் காணொளிகள்....

இந்தியாவில் இதே போல பல மாநிலங்களிலும் தேர்தல் கால பணத்தை பிடித்து அதில் தமிழகம் முதல் இடம் 107 கோடி உ.பி இரண்டாம் இடம் 104 கோடி என பட்டியல் இடுவதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்து விடுகிறதா?

கிருஷ்ணமூர்த்தி என்னும் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பாரை நாய்கள் என்றெல்லாம் பேசி இருப்பார் ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது மக்கள் தாம் எடுத்தாக வேண்டும் என்று முடித்திருப்பார்.

தேர்தலின் போது இவ்வளவு பணம் பிடிப்பட்டது உண்மை எனவே தேர்தலை நிறுத்துங்கள், கட்சியைத் தடை செய்யுங்கள், வேட்பாளரை மாற்றுங்கள் என எல்லா மக்களும் வெகுண்டு எழுந்து டில்லியில் மோடிக்கெதிராக எலிக்கறி தின்றும் நிர்வாணமாக சென்றும் போராடிய விவசாயிகள் போல் எல்லா மக்களும் அரசு அலுவலகங்கள், சாலைகள், பொது சந்திப்புகள் பொது இடங்களில் எல்லாம் சென்று போராடவேண்டுமா அதன் பின் தாம் அதற்கு விடிவு வருமா.... தேர்தல் ஆணையமும் அரசும் மக்களுக்கு வழி காட்ட வேண்டுமல்லவா,,, மக்கள் வழி காட்ட வேண்டும் என எதிர் பார்ப்பது எந்த நியாயம்? இல்லை தூத்துகுடி ஸ்டெரிலைட் காப்பர் ஆலைக்கு எதிராக கூட சுடப்பட்டு இறக்க வேண்டுமா அல்லது மெரினாவில் கூடி உலக தமிழக வரலாறை எழுதி கடல் கரையில் கூடி கடலை போட வேண்டுமா....இவை எல்லாம் இல்லாவிட்டால் ஏதும் செய்யாதா?

அமித் ஷாவின் சொத்து 4 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது என்றும், அவரது இல்லாத மகனது கம்பெனி கோடியாய் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டி வருகிறது என்றும் செய்திகள் உள்ளன.

ஏன் தமிழக முதல்வர்  தலைமைப் பதவி ஏற்ற புதிதில் அவரது உறவினர் இளங்கோ என்பார் இவர் சேலம் கூட்டுறவு வங்கியில் மேலாளர் அப்போது சேலத்திற்கு நான் வி கார்ட் கம்பெனிக்கு அந்த வழியாக ஸ்டெபிலைசர் ஒன்றை சரி செய்ய சென்றிருந்த போது அந்த வங்கியில் சோதனை அச்சோ போச்சு போச்சு என ஏகப்பட்ட மக்களின் குரல் அதிர்வலைகள் ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை மோடி அரசின் மிரட்டல்வழிகளில் ஒன்று என ஓரங்கட்டப்பட்டது இன்றளவும் அதே இளங்கோவன் அரசு விழாவில் முதல்வருடன் கலந்து வருவதை ஊடகத்தின் காட்சிகள் காண்பித்து வருகின்றன.... எல்லாம் பேரம்

ஜெ மறையவும், ஓ.பி.எஸ் இறக்கப்படவும், சசி சிறை புகவும், எடப்பாடியாருக்கு அடித்த யோகம் மாதிரி எவருக்குமே இந்திய சரித்திரத்தில் இடம் இல்லை. ஏன் எனில் எந்த தேர்தலும் வெற்றியும் இன்றி கட்சியின் தலைமை நெருக்கம் மட்டுமே காரணமெனக் கொண்டு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் முதல்வரான வரலாறு அ.இ.அ.தி.மு.கவில்... அதில் மோடியின் சரண் புகுந்ததும் ...

மாபெரும் தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோற்ற சரித்திரங்கள் உண்டு. ஆனால் சிலர்  வெற்றியே பெற்று வந்திருக்கிறார்கள்...

அரசியல் நடத்த வேண்டுமெனில் கட்சி நடத்த வேண்டுமெனில் இப்படி ஒப்பந்ததாரர் அரசுப்பதவியினர் எல்லாம் கைக்கொண்டு திரண்ட செல்வம் வேண்டும் அதை முதலீடு மறு முதலீடு செய்தாக வேண்டும் அப்படித்தான் அரசும் கட்சியும் தேர்தலும் என்று இந்திய ஜனநாயகம் சொல்லித் தந்து வருகிறது.

கமல் கூட கமீலா நாசர், ஸ்ரீபிரியா, சினேகன், கோவை சரளா இப்படி அவரை சுற்றுகிற நபர்களையே தேர்தல் வேட்பளாராக்கியதை கவனியுங்கள்
நேராக களத்தில் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் இறங்கி களம் புகாதைதயே இதெல்லாம் காட்டுகிறது.

பேசாமல் அரசும் தேர்தல் ஆணையமும் வாக்காளர்க்கு வாக்களிக்கும் தினத்தில் ரூபாய் நூறு முதல் ஐநூறு வரை தந்து விருப்பப்படி வாக்களித்து விட்டு  வாருங்கள் எனச் சொல்லி கட்சிகளைக் கட்டுப் படுத்தலாம்

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதோடு முடிந்தது வேட்பாளரை வெளிப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே தகுதி என்றும் நிர்ணையித்து நேரடியாக சென்று வாக்களரைச் சந்திக்கும் முறையையே கூட கட்சிகளிடம் இல்லாதபடி தடைப்படுத்தி விடலாம்.

தேர்தலை நிறுத்தலாம் அல்லது வேட்பாளரை மாற்றலாம் அல்லது கட்சியைத் தடை செய்யலாம் அதை எல்லாம் விட்டு விட்டு வெறும் கணக்கு தந்து கொண்டு தேர்தல் பயணத்தை நடத்தி வருவது உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் தேர்தல் மேளா, தேர்தல் திருவிழா, தேர்தல் கூத்து  ஜனநாயகம் என்பதை ஒரு கேலிக்கூத்தாகிவிடுகிறது.

இதில் எல்லாரும் தவறாம வாக்களியுங்கள் இது ஒரு ஜனநாயகக் கடமை இல்லையேல் நீங்கள் எல்லாம் முட்டாள்கள், மடையர்கள் ஜனநாயகத் துரோகிகள் என்றெல்லாம் பட்டம் வேறு...

தி.மு.கவின் இருபது பேரில் அதே இராஜா, கனிமொழி, தயாநிதி,துரைமுருகன் மகன் இந்த  புதுமுகம் பொருளாளருக்கு அங்கீகாரத்துக்கு..(. பொருளாளர் பதவியையே குடும்பத்துக்கு வெளியில் கொடுத்ததே பெரிய சாதனையாச்சே....)
டி.ஆர் .பாலு  ஜெகத் ரட்சகன் இப்படியாக... இவர்கள் எல்லாம் விட்டால் வேறு எவருமே பாராளுமன்றம் போகத் தகுதியானவர் இல்லை...ஏன் எனில் அப்பாவே மகனுக்கு முதல்வர் பதவியையும் கட்சித்தலைமைப் பதவியையும் கடைசி மூச்சு வரை விட்டுத் தராத போது கட்சி எப்படி அடுத்தவர்க்கு விட்டுத் தரும்?

அப்போது தி.மு.கவை வரவே விடமாட்டேன் என்ற வைகோ   போன்றோர் இன்று தி.மு.கவிடம்...வீரமணிக்கெதிராக புதிதாகக் கண்டு கொண்ட கிருஷ்ண லீலைகள்...

காமராசரும் அண்ணாதுரையும் தோற்ற தேர்தல்கள்தாம் கருணாநிதி எடப்பாடி போன்றவர்கள் தோற்காத தேர்தல்கள் தாம்...

பார்ப்போம் இன்னும் ஒரு பதினைந்து நாட்கள்....
Related image
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



2 comments:

  1. அருமையான பதிவு. நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. thanks vanakkam. please keep contact

    ReplyDelete