Monday, March 4, 2019

ஏர் விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி என்னால் ஏன் எழுத முடியவில்லை? கவிஞர் தணிகை

ஏர் விங் கமாண்டர் அபிநந்தனைப் பற்றி என்னால் ஏன் எழுத முடியவில்லை? கவிஞர் தணிகை

Image result for wing commander abhinandan

புதுசாம்பள்ளி ரயில்வே குறுக்கு வெட்டுச் சாலையின் ரயில் சாலை அருகே இரண்டு சாலையோர காய்கறி விற்கும் பெண்கள் மற்றொரு பெண்ணை நீயும் வந்து இங்கேயே  கடை போடுகிறாயா? ஏதோ ஒரு நாள் போனால் போகட்டும் என விட்டால் வந்துர்ராளுக, நாங்க எப்படி பிழைப்பது ? என சாடல் பேச்சு...

இதற்கும் தலைப்புக்கும் என்னடா தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது சீனா பாகிஸ்தானை ஆதரிப்பதும் அமெரிக்கா அங்கேயும் இங்கேயும் சாய்வதும் ரஷியா இஸ்ரேல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்றவை இந்தியாவை ஆதரிப்பதும் இப்படியாக உலக நாடுகளின் நிலைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஏதாவது ஒரு வியாபாரக் காரணம் இருக்கும் என்பதை எவருமே மறுக்க முடியாது...

சுமார் 200 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட ஐரோப்பியர் நாட்டை கூறுபோட்டு 70 ஆண்டுகளாக இரு நாடுகளுக்குள்ளும் தீராத பங்காளிபகையை ஏற்படுத்தி விட்டனர். காந்தி போன்ற நபர்கள் மறுபடியும் சகோதரரை பகையை நீக்கி தழுவிக் கொள்ள வைக்க முடியுமா என்று முயற்சிக்கும்போதே அவர் சுடப்பட்டு ஒரு முடிவு கட்டப்பட்டது. முகமது அலி ஜின்னா போன்றோர் ஆரம்பித்த அந்த நாடும் கிழக்கு மேற்கு எனப் பிரிந்து பங்களா தேஷ் என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிந்து போனது.

பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் மக்கள் தொகையைப் போலவே இந்தியாவிலும் முஸ்லீம் மக்கள் தொகை அதிகம். இரண்டு நாடுகளுக்கும் புள்ளிவிவர அடிப்படையைச் சொன்னால் முதலில் இந்தோனேசியா இரண்டாவது பாகிஸ்தான் மூன்றாவதாக இந்தியா ...பாகிஸ்தானில் 11 சதம் முஸ்லீம் என்றால் இந்தியாவில் 10.9 சதம் இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

பாகிஸ்தான் வசப்படுத்தி உள்ள ஆசாத் காஷ்மீர், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் இதில் உள்ள மக்கள் இந்தியாவை ஆதரிப்பார், பாகிஸ்தானை ஆதரிப்பார் இரு அரசுகளுமே வேண்டாம் என தனி நாடாக விட்டு விடலாம் என்பார் இப்படி மூன்று ரகத்திலிருக்க  அவை அப்படியே நீடிக்குமளவு எல்லா அரசுகளும் ஆட்சி செய்து கொண்டிருக்க இந்திய ராணுவ வீரர்களை மகா கேவலமாக அவமானபடுத்தி வரும் மக்களின் காட்சிகளை எல்லாம் தற்போதைய சமூகவலை தளங்களின் பகிர்வுகள் அம்பலப்படுத்தி வருகின்றன.


இப்போது இது போல நடக்கும் என ஏற்கெனவே இரு மாதங்களுக்கும் முன்பாகவே பாரதிய ஜனதா ஒன்று வாக்குக்கு பணம் அல்லது இரண்டாவதாக பாகிஸ்தானுடன் போர் இந்த இரண்டு நிலையை வைத்து மக்கள் செல்வாக்கைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்ட செய்திகளாக வெளிவந்தது.

இப்போதும் கூட மமதா பானர்ஜி, நவ்ஜோத் சிங் சித்து, போன்றோர் இந்த அரசியல் தில்லுமுல்லு அண்டை நாட்டில் எதிரொலித்திருக்கிறது என...இந்த சம்பவங்களில் இம்ரான்கான் நன்றாக கையாண்டு அபிநந்தனை விடுவித்து உலக அரங்கில் நல்ல பேரை வாங்கியிருக்கிறார் என்பதும்.

மனித வெடிகுண்டு சுமார் 300 கிலோ வெடிமருந்துடன் அதை ஊக்குவிக்கும் நைட்ரஜன் 80 முதல் 90 கிலோ அமோனியம் நைட்ரேட்டுடன் ஈக்கோ வாகனத்தை 10 நாளுக்கும் முன் தான் இதற்காகவே வாங்கி உள்ளார்கள். வாங்கிய உடனே பயன்படுத்தி வாகன அணிவகுப்பை சிதைத்து  44 மத்திய துணை நிலை ராணுவப்படையை சார்ந்த வீரர்களை ஒரு சிறு வாகனத்தில் ஒரு மனிதவெடிகுண்டை வைத்து வெடித்து விட்ட நிலையில்... ஜெய்ஷ் இ முகமது என்னும் இயக்கம் இதை செய்ததாக ஏற்ற நிலையில்...

மோடி அரசு துல்லியமான தாக்குதல் என்ற நிலையில் 300 தீவிரவாதிகளை பாகிஸ்தான் பிடியில் உள்ள காஷ்மீருக்கு சென்று வான் வழி போர் விமானங்கள் வழி சென்று அழித்து வந்தது என்று சொன்ன நிலையில் அது பற்றி எந்த வித ஊடக செய்திகளும் வரா நிலையில்

நமது நாயகன் அபிநந்தன் பற்றி விழுந்தது, எழுந்தது, பேசியது ,தேநீர் அருந்தியது ,பதிலை சொல்ல நாசூக்காக நாகரீகமாக மறுத்தது, அதன் பின் அவர் அந்தப் பக்கமிருந்து இந்தப் பக்கம் வாகா எல்லைப் பகுதிக்கு டாக்டர் பர்ஹா என்றவரால் அழைத்து வரப்பட்டு விட்டுச் செல்லப்பட்டது, அதன் பின் மருத்துவ சோதனைகள்....அனைவரின் பாராட்டும் செய்திகளும்

ஒரு இராணுவ வீரர் ஊடகத்தை கூட ஒரு பிடி பிடித்திருந்தார்  அபிநந்தனின் அவரின் ஊர் திருவண்ணாமலை அவரது குடும்பம் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருந்தது பற்றி அவரே அதை தெரிவிக்காத நிலையில் நீங்கள் எல்லாம் ஏண்டா புரியாதா உங்களுக்கு முட்டாள்களாடா நீங்கள் , நாளை தீவிரவாதிகள் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது ஒன்று என்றால் நீங்களாடா பார்ப்பீர்கள் என்றும் அரசு அதை எல்லாம் பார்த்துக் கொள்ளும், நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கடா என்றெல்லாம் தனது கோப அதிர்வலைகளை கொட்டி இருந்தார்.

வியாபாரம் செய்து கொள்வார்கள், மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்வார்கள், விளையாடிக் கொள்வார்கள், ரயில் விட்டுக் கொள்வார்கள், சாலை வசதியில்,இணைத்துக் கொள்வார்கள் அங்கிருந்து இங்கு வந்து சுற்றி பார்ப்பார்கள் எல்லாவற்றுக்கும் ஒரு அனுமதி துண்டுச் சீட்டு, அல்லது டிஜிட்டல் ஆன்லைன் காட்சி வடிவம் அதில் பேர் அனுமதி விசா பாஸ்போட் என ...மற்றபடி தெரியாது எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டால் அடித்துக் கொள்வார்கள், எல்லையில் இருந்து சுட்டுக் கொல்வார்கள்...


எல்லாவற்றிலும் ஒரு சுயநலம் இருப்பதை நன்றாக ஊன்றிப் பார்ப்பார்க்குத் தெரியும் ஆட்சி, சாதி, அரசு, மதம் நாடு எல்லாவற்றிலும் மனிதம் ஊடுருவி இருப்பதற்கும் மேலாக சுயநலம் ஊடுருவி இருப்பதை உணர்வார் எவரோ அவரே மனிதம் . இதை எல்லாம் கடந்த மனிதம்....

நாடு,,இடம், மதம், மொழி, இனம், சாதி என்ற பேரால் ஒருவரை ஒருவரை அடித்துக் கொன்று கொல்வது அது எனது எல்லை இது எனது எல்லை என்று அடித்துக் கொல்வது சிறிய அளவில் வீடுகளில் காடுகளில் வரப்புகளில் நிகழும்போது காவலர்கள் வந்து அதைகேட்கிறார்கள், நீதிமன்றத்தில் நீதிபதிகள் நீதி செய்ய முயல்கிறார்கள்...அனால் அதுவே பெரிய பெரிய அளவில் நாடு தழுவிய அளவில் நடக்கும்போது எந்த ஐ.நா சபையும் கூட ஒன்றும் செய்ய முடிவதில்லை...  மனிதர்கள் அன்று மிருகங்களாக கரடு முரடான கற்களையும், மரத்தின் கிளைகளையும் மரத்தையும் ஆய்தங்களாக பயன்படுத்தி கொன்று  கொண்டிருந்தார்கள் அது கூர்மைப்படுத்தப்பட்ட கல்லாகி, உலோகமாகி, இன்று வெடிமருந்தாகி, குண்டுகளாகி இருக்கின்றனவே தவிர இவர்கள் இன்னும் அதே  மிருகங்களாகவே இருக்கிறார்கள்...

ஒரு கேள்வி கேட்டார்கள் : கர்நாடாகாவிலும், தமிழகத்திலும் எல்லா மதத்தினரும் கட்சியினரும், சாதியினரும் இருக்கிறார்கள் ஆனால் இங்குள்ளாரும் அங்குள்ளாரும் சேர்ந்து அவர்களால் இவர்களுக்கு அவர்களின் சொந்த சகோதரர்களுக்கும், சொந்த உறவினர்களுக்குமே கூட குடிக்க ஒரு ஆற்றின் தண்ணீரைக் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாது அங்கு வந்து பகைமை ஒட்டிக் கொள்கிறது

அதுமட்டுமில்லாமல் ஒரு கடையில் ஆங்கிலம், தமிழ் அதுவும் ஒரு ஓரத்தில்தான் மற்றும் கன்னடம் இடம் பெற்றிருக்க கர்நாடகத்தில் அதை அந்த மண்ணின் மைந்தர்களாம் சென்று ஆங்கிலம் இடம் பெற்றிருக்கலாமாம் ஆனால் தமிழ்தான் இடம் பெற்றிருக்கக் கூடாது என அந்தப் பகுதியை மட்டும் கிழித்து விடச் செய்கிறார்கள் ... அதே போல பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் மனிதர்கள் ஒரு விமானியை தவறி விழுந்தாரை அடித்துக் கொல்கிறார்கள்... இந்தப்பக்கமும் ஒன்றும் யோக்யமல்ல இங்கும் அவர்களைக் கொல்வது பற்றி மகிழ்கிறார்கள் ஆனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பது சற்று சிந்திக்கத் தக்கதுதான்.

அனைவராலும் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ள முடிகிறது ஆனால் அண்டை மாநிலத்து சகோதரனின் மொழியை அவனால் பல்வகைப்பட்ட வியாபாரமும் தொழிலும் செழித்து அவனால் பணம் கொழித்தாலும் அவனது மொழியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

அதே நிலைதான் இன்றைய பாகிஸ்தான் இந்தியப் பிரச்சனையும்...கல்வி அடிப்படையில் இவர்களிடம் எந்த மாற்றத்தையும் விளைவிக்க இல்லை போலும்

குடிப்பதற்கு நீர் இல்லாமல் தர்மபுரியில் சாலை மறியல் செய்கிறார்கள் இன்னும் குடங்களை வைத்தபடி பொது மக்கள் அதிலும் முக்கியமாக தாய்மார்கள் இன்னும் கொள்கை கூட்டணி பேசிக்கொன்டிருக்கிறார்கள் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுபடியும் பாராளுமன்ற உறுப்பினர்களாகிட...

இவற்றில் எல்லாம் அடிப்படையில் வேர்களிடமே ஏதோ தவறுகள் இருப்பது போல் இல்லை...சாதாரண மனிதர் சொல்கிறார் முதலில் புகையை தயாரிக்கும் சிகரெட், பீடி, குத்கா, பான் பராக், மதுவைத் தயாரித்து வடித்தெடுக்கும் ஆலைகள், பிளாஸ்டிக் பைகளை ஒரு முறை பயன்படுத்தும் உறைகளை தயாரிக்கும் ஆலைகளை, குடி நீர் அடைத்து விற்கும் ஆலைகளை எல்லாம் முதலில் நிறுத்தி விட்டால் பல நல்ல பொது பிரச்சனைகள் தீருமே என்று..

அதை தயாரிக்கச் சொல்லி விட்டு விற்பனையும் செய்து கொண்டு அதை தடுப்பதாகவும் நாடகமாடும் இரட்டை வேட அரசுகள் ஏழை எளிய மக்களின் பணத்தை வங்கிகளில் போட வைத்து ஆண்டுக்கு இவ்வளவு ஏடிஎம் அட்டைக்கு , சேவை வரிக்கு என இவ்வளவு என பிடித்தம் செய்தபடி அவர்கள் பணத்தையே அவர்கள் புழங்கவிடாமல் செய்தபடி அவர்களும் அந்த நிறுவனங்களும் அரசும் எடுத்துப்புழங்கியபடி பணமுதலைகளுக்கு எடுத்து வீசிவிட்டு அவர்களால் கட்ட முடியவில்லை என அவர்களுக்காக தள்ளுபடி செய்து விட்டு கொசுறுக் காசை தேர்தல் என்ற் பேரில் அந்தக் காலம் வரும்போது மட்டும் வாக்கு வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வீசி எறிந்தபடி நல்லது செய்வதாக காட்டீ வேஷம் போடுகிறதே இதில் எல்லாம் எத்தனை அபிநந்தன்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்...எண்ணிலடங்கா நூற்றுக் கணக்கான கோடி மக்களுக்கு முதலில் குடிக்க நீர்  கொண்டு வந்து தரட்டும்...



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment