Friday, August 17, 2018

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலின் மாலை 17 மணிக்கு புறப்படும் நேரத்தை மாற்றுக: கவிஞர் தணிகை

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலின்  மாலை 17 மணிக்கு புறப்படும் நேரத்தை மாற்றுக: கவிஞர் தணிகை
Image result for salem mettur dam passenger train



சேலத்திலிருந்து மாலை 5. 30 (17.30) மணிக்கு சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த மேட்டூர் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 15 ‍ 2018 முதல் மாலை 5 மணிக்கே அதாவது 17 வது மணிக்கே புறப்பட்டுச் செல்ல நேரம் முன்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாயில்லை. ஏன் எனில் கல்லூரி மாணவர்கள் அனைவர்க்கும் மாலை 5 மணிக்குத்தான் கல்லூரி முடிகிறது என்பதும், அரசுமற்றும் தனியார் அலுவலகம் செல்வோர் அனைவர்க்குமே பழைய நேரமே சரியாக இருந்தது என்பதாலும்.

ஏன் மேட்டூர் ரயிலை மட்டுமே குறி வைத்து இது போன்று செயல்கள் நடைபெற்று வருகின்றன என்றால் தனியார் பேருந்து முதலாளிகளுக்கு  தற்போதைய கட்டண உயர்வால் இரட்டிப்பு இலாபம் அடைந்தும் இன்னும் போதவில்லை என்றே தோன்றுகிறது.

ஏன் எனில் பழைய நேரப்படி கல்லூரி  மாணவர்களும், அனைத்து தரப்பினரும் 10 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்திலேயே மேட்டூர் சேலம் வந்தடைந்து சென்ற வண்ணம் இருந்தனர். மாதம் ஒன்றுக்கு சீசன் பாஸ்: ரூ.185ம் 3 மாதத்திற்கு 500 எனவும் மிகவும் கட்டணச் சலுகையாய் இருந்து வந்தது...பேருந்துக்கு ஒரு வழிக்கே 29 முதல் 35 வரை கொடுக்க வேண்டும்.

மேட்டூர் செல்வோராக இருந்தாலும் ரயிலுக்கு ரூ. 10ம் மேட்டூர் ரயில்வே நிலையத்தில் இருந்து ரூ. 10 புற நகர் அல்லது நகர பேருந்துக்கும் கொடுத்தாலே போதுமானது. ஆனால் பேருந்தில் ரூ. 35.

எனவே சேலம் கோட்ட ரயில் நிலையத்தார் இதைக் கவனித்து உடனடியாக வழக்கம் போல ஏற்கெனவே இருந்தாற்போல ரயில் நேரத்தை மாலையில் 5. 30 மணிக்கு அதாவது 17. 30 மணிக்கே மாற்ற வேண்டும். ஏன் முன்பிருந்த நேரப்படி கூட கோவை விரைவு ரயில் வரும் நேரமும் மேட்டூர் ரயில் நேரமும் ஒரே காலத்தில் இருந்தாலும் அதனால் மேட்டூர் ரயில் நேரம் தாமதப்பட்டாலும் அதைப்பற்றி எவருமே கேள்வி கேட்டதில்லை. அப்படி இருந்தபோதும் ஏன் இந்த நிலையை இப்படி செய்து மக்களின் துன்பத்தை விலைக்கு வாங்கிக் கொள்கிறது இந்த ரயில்வே நிர்வாகம் எனத் தெரியவில்லை.
Image result for salem mettur dam passenger train

Image result for salem mettur dam passenger train


மக்களின் கருத்தை நலத்தை சிறிதும் கவனத்தில் கொள்ளாது இது போன்று இவர்கள் செய்து விடுவதால் பொது மக்களின், அன்றாடம் இதை நம்பியே பயணம் நடத்தி பிழைப்பு நடத்தி வாழ்ந்து வரும் குறைந்த ஊதியம் ஈட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்படும் என்பது நிச்சயம்.

அதைப்பற்றி எல்லாம் மோடி அரசுக்கும் தமிழக அரசுக்கும் கவலை இல்லை. இனி எதிர்வரும் தேர்தல் மேல் இப்போதிருந்தே இவர்கள் கவனம் எல்லாம் இருப்பதால்...

இப்படியே சொல்லாமல் கொள்ளாமல் நேரத்தை மாற்றி மாற்றி பயணிகள் எவரும் வருவதில்லை என்று காரணம் காட்டி இந்த ரயிலை நிறுத்தி விடலாம் என்றே இவர்கள் திட்டம் என நினைக்கிறேன். அப்போதுதானே தனியார் முதலாளிகள் ஒரேயடியாக கல்லா கட்ட முடியும்...சரியான பங்கு இவர்களுக்கு இருக்கிறதோ என்னவோ?

முதலில் காலை நேரத்தை மாற்றி உருப்படியாக இல்லாமல் செய்தார்கள்...அதன் பின் வாரம் ஒரு முறை, இருமுறை வண்டி இல்லாமல் செய்து பார்த்தார்கள்...அப்போதும் விடாமல் பயணிகள் இந்த ரயிலில் பேருந்து கட்டணம் ஏற்றியது முதல் நிறைய வந்து கொண்டிருப்பதால் அதற்கும் வேட்டு வைத்து இப்போது நேரத்தை முன் கூட்டியே மாலை 5 மணிக்கே புறப்பட மாற்றி அமைத்து எல்லாப் பயணிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்திருக்கிறார்கள்...

Related image


மக்களுக்காக ரயிலா? ரயிலுக்காக மக்களா? எந்த்க் கல்லூரியில் எந்த அலுவலகத்தில் 3 மணிக்கே விட்டு 5 மணிக்கெல்லாம் ரயிலில் செல்லுங்கள் என அனுப்பி வைக்கப் போகிறார்கள்? ஏன்டா உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றிலேயே எல்லாம் அடிக்கிறீங்க?

மாற்றிக் கொள்க...மக்களை வாழ விடுங்கள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment