Sunday, August 26, 2018

மாண்புமிகு அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவுதானே? கவிஞர் தணிகை.

 மாண்புமிகு அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவுதானே? கவிஞர் தணிகை.

குடிகார மணிகளுக்கு வீரமணியின் ஆதரவு...

Related image


அன்று காந்தி என்ன சொன்னார்?
எல்லா பாவங்களுக்கும் மதுவே அடிப்படை என்று சொன்னார்...

இன்று வீரமணி என்ன சொன்னார்?
எல்லா ஆசிரியர்க்கும் சம்பளம் கொடுக்க மதுவே தருது வருமானம் என்று சொன்னார்.

காந்தியை எடுத்துக்கறவங்க காந்திய எடுத்துக்கங்க‌
வீரமணியை எடுத்துக்கறவங்க வீரமணியை எடுத்துக்கங்க..
.வீரமா நிற்க முடியாது மது போதையால்... தள்ளாட வைக்கும்
அது ஒன்னுதான் இடிக்குது..


வேலூர் மாவட்டம் சின்ன மூக்கனூர் கிராமத்தில் பள்ளியைத் துவக்கி வைக்க 25.08.2018 சென்ற வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி குடிகாரரை குடிக்காதே என்று சொல்ல முடியாது, அவர்கள் தரும் வருவாயில் தாம் இது போன்ற பள்ளிகள் எல்லாம் உருவாகிறது, அதிலிருந்துதான் ஆசிரியர்க்கு எல்லாம் ஊதியம் அளிக்கப்படுகிறது, குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இது போன்ற பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும் என பேசியிருக்கிறார். இவர் வணிகவரித்துறைக்கு வரும் வருவாய் எல்லாம் இதிலிருந்துதான் வருகிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

Related image


இவர் தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க அரசின் கொள்கை முடிவைத்தான் வெளிப்படையாக பேசி இருக்கிறார். ஏன் எனில் தமிழக அரசின் நிரந்தர முதல்வர் ஜெ மதுவுக்கு எதிராக ஒரு  வார்த்தையும் பேசியதில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவே சாலையோர நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டனவே அல்லாமல், பெண்களின், பொதுமக்களின் மதுவுக்கு எதிரான எழுச்சி காரணமாக டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றப்பட்டதே அல்லாமல் அரசுக்கு கடைகளின் மேல் கை வைக்க எப்போதும் விருப்பமே இல்லை. சொல்லப் போனால் இந்த தற்போதிருக்கும் அரசு மதுவின் ஒத்துழைப்பாளர்களின் வாக்குகள் காரணமாகவே அரசு பதவியை பிடித்தது என்றும் சொல்லலாம்.

ஏன் எனில் சசிபெருமாள் மதுவிலக்குப் போராளி... கலைஞர் கருணாநிதியை சந்திக்க வேண்டுகோள் விடுக்க வாய்ப்பளித்து தமது தி.மு.க கட்சி வென்றால் பதவிக்கு வந்தவுடன் முதல் கை எழுத்து மதுவிலக்குக்கு ஆதரவாக அரசின் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதுதான் என்று வெளிப்படையாகவே சொல்லியதன் எதிரொலியாகவே இந்த மனிதர் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும் ஒருரூபாய்க்கு நியாயவிலைக்கடைகளில் அரிசி போடுவதற்கான கையெழுத்தைப் போட்டது போல செய்து விடுவார் என்ற காரணம் பற்றியே இந்த நாட்டின் தமிழ் நாட்டின் உண்மையான குடிமகன்கள் ஜெ வை அரசுக் கட்டில் ஏறவைத்து விட்டார்கள்... அந்த வித்தியாசமான வாக்குகளே தி.மு.கவை விட அ.இ.அ.தி.மு.கவுக்கு அதிகம் நன்மை செய்தது. கிடைத்தது ஆட்சிக்கட்டின் பொற்கனி.
Related image
இந்த ஒரு காரணம் போதும் எழுச்சி பெற்ற மக்களாய் இருந்தால் இந்த மந்திரியை எந்திரி என்பதற்கும் இந்த அரசை பதவியிலிருந்து விலக்கி வைக்கவும்

செப். 5 ஆசிரியர் தினம் அருகே வரும் தருவாயில் ஒரு முக்கியமான மந்திரியின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டிருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் இந்த டாஸ்மாக் வருவாய்  ஒன்றைத் தவிர தமிழகத்தில் வேரு எந்த வருவாயுமே இல்லாதது போல ஒரு காட்சியை ஒரு பொய் பிம்பத்தை  இந்த அ.இ.அ.தி.மு.க அரசு ஜெ காலத்திலிருந்தே உருவகப்படுத்தி வருகிறது.

டாஸ்மாக் கடைகளை எடுத்துத் தான் பார்க்கட்டுமே...தமிழகம் அந்த வருவாய் ஒழிந்ததால் அழிந்து விடுகிறதா என்றுதான் பார்ப்போமே...சொல்லப்போனால் அழியும் குடும்பங்கள் மதுக்குடியால் அழிந்து வரும் குடும்பங்கள் நற்பாதைக்குத் திரும்பும். நல்ல மக்கள் வாழ்த்துவர். எல்லாரும் செத்தா விடுவர்? அப்படிப்பார்த்தால் எல்லாரும் ஒரு நாள் செத்துதானே ஆகவேண்டும்...

பள்ளியின் தலைமை ஆசிரியரே குடித்துவிட்டு பள்ளியில் விழுந்து கிடக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது இந்த அரசு.  இது போன்ற ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளும் குறுக்கு வழியில் கட்சி, சாதி, மதம் , பரிந்துரை, அது நம்ம ஆளு என்ற நியாயத் தராசிலிட்டு கொடுத்து மற்ற ஆசிரியர்களை அவமதித்து வருகிறது. பள்ளியை அயோக்யத்தனமாக நடத்தி வரும் ஆசிரியர் பணிக்கே இலாயக்கற்ற மனிதர்கள் நல்லாசிரியர் விருதை பெற்றிருக்கிறார்கள். சில நல்ல ஆசிரியர்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது கிடைக்கிறது என்பதெல்லாம் வேறு வேறு விஷயங்கள்.

மேலும் இனி மத்திய அரசால் தமிழகத்துக்கு ஒரு நல்லாசிரியர் விருது மட்டுமே இருக்கும் என்ற அறிவிப்பும் தற்போதைய செய்தியாக வந்திருக்கிறது.


Related image

இது போன்ற வசைமொழிகளின் வழியே வாழ்வு நடத்த ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அரசின் கீழ் பணி புரிய வெட்கப்படவேண்டும்.அதாவது அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள்: குடும்பங்களை சீரழித்து இந்த குடிகார வெறி பிடித்த மனிதர்கள் தரும்  பாவப்பட்ட காசில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்குகிறோம் அதைக் கொண்டுதான் நீங்களும் உங்கள் குடும்பமும், பிள்ளைகளும் வாழ்வு நடத்துகிறீர் என...இதை விட வேறு அவலம் வேண்டுமா...? ஒரு நல்ல ஆசிரியர்க்கு...உடனே எல்லா ஆசிரியப் பெருமக்களும் இந்த அரசுக்கு எதிராக தங்களது ஒத்துழையாமையை வெளிப்படுத்த வேண்டும் அரசை, அமைச்சரை பதவியிலிருந்து தூக்கி எறிய ஒரு இயக்கமாக பேரியக்கமாக மாற வேண்டியதவசியம். இல்லையேல் எந்த ஆசிரியருமே பணி செய்யக்கூடாது.

 இந்த அரசின் கீழ் பணிபுரிவதிலிருந்து நல்ல மனிதர்கள் எந்தத் துறையிலிருந்தாலும் அவர்கள் பதவியைத் துறக்க வேண்டும். நல்ல வேளை நான் ஒரு ஆசிரியனான பணி புரியவில்லை. மேலும் அவர்கள் துறக்கும் பணிக்கு வேறு எவருமே ஆசிரியப் பணி அல்லது அரசுப் பணிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளும் இயக்கங்கள் கட்டி அமைக்கப்படல் வேண்டும். ஆனால் அப்படிப் பட்ட மக்கள் இருக்கிறார்களா? அப்படிப்பட்ட இயக்கங்கள் இந்த நாட்டில் கட்டப்பட்டு நாடும் மக்களும் உயர்வார்களா? இதெல்லாம் நடக்குமா?

நல்ல முறையில் செய்வதாக கூறிக்கொள்ளும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர் இது பற்றி என்ன சொல்லப்போகிறார்>? முதல்வர் என்ன செய்யப் போகிறார்?

இப்படிப் பேசலாமா ஒரு அமைச்சரே இப்படிப் பேசலாமா அதுவும் ஒரு பள்ளியின் துவக்க விழாவில் பேசலாமா?இந்தக் கட்சியின் ஆட்சியை வரவழைக்க கடந்த தேர்தலின் போது எல்லாமே பிரிவினை வாதம் செய்தார்கள்...அவர்களில் ஒரு தலைவருக்கு சிறந்த தேசிய குடி மகன் விருது வேறு வழங்கப்பட்டிருக்கிறதாம்...கொடுக்கப்பட அவர் பொருத்தமானவர்தான்.

இப்படிப்பட்ட நாடும், கட்சிகளும், தலைவர்களும் மக்களும்...

உருப்பட்டு விடும்..

நல்லா சொன்னேள் போங்கோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks:
One India Tamil
Posted by: Lakhsmi Priya Aug.26. 018. 9.53  IST

அவிங்க குடிச்சாதாங்க ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியும்- தமிழக அமைச்சர் பேச்சால் சர்ச்சை 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-veeramani-speaks-like-he-supports-tasmac-328293.htmlதிருப்பத்தூர்: டாஸ்மாக் வருமானத்தில்தான் புதிய பள்ளிகள் கட்டப்படுகின்றன, பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்று வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேதியதால் சர்ச்சை எழுந்தது. பொதுமக்கள் குடித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்- அமைச்சர் வீரமணி வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் நேற்று பள்ளித் திறப்பு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார். புதிய பள்ளிகள் திறப்பு அப்போது அங்கு குடித்துவிட்டு முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. குடிக்க வேண்டாம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது ரகளையில் ஈடுபட்ட அந்த முதியவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. படிப்படியாக மூடல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியிலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படுவது என்பதுதான் என்பதை அமைச்சர் மறந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ. கூறியிருந்தது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தாய்மார்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வாறு திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை டிஎஸ்பி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டாஸ்மாக் கடைகளை அகற்றினால் மக்கள் கள்ளச்சாராயத்தை நாடி சென்றுவிடுவர் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். சலசலப்பு எனினும் மக்களின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் அமைச்சர் வீரமணியோ மக்கள் குடித்து நாசமானாலும் பரவாயில்லை, வருமானம் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற தொனியில் பேசியது ஆச்சரியத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment