Tuesday, August 21, 2018

பாலமலையில் பிளாஸ்டிக் அரிசி?! ...கவிஞர் தணிகை

பாலமலையில் பிளாஸ்டிக் அரிசி?! ...கவிஞர் தணிகை




பாலமலை சேலம் மாவட்டத்தில் மிகவும் கடைசி விளிம்பில் இருக்கும் ஒரு எவரும் எளிதில் எட்ட முடியாத மலை. இதில் சுமார் சிறிய சிறிய கிராமங்கள் முப்பது இருக்கும். மக்கள் தொகையோ சுமார் 4347 என தற்போதைய கணக்கு சொல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3927 அடி உயரமான மலையாகும்.


இங்கு போக்குவரத்து வசதி, ஏன் பாதிக் கிராமங்களுக்கு இன்னும் மின் வசதியே இல்லை.

இப்படி இருக்கும்  ஒரு மலைக்கிராமத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடக்கிறது. நடந்துள்ளது.

பிளாஸ்டிக் அரிசி என்பதெல்லாம் இல்லை. அறவே இல்லை. அதைத் தயாரிக்க அதிக செலவாகும் என்றெல்லாம் ஒரு சாரர் கருதுகின்றனர்.

ஆனால் இதை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு சில வேளை கழித்து வாங்கிய அரிசியைத் திருப்பிக் கொண்டு கொடுக்கச் சென்ற ஒரு சமூகத்தில் மதிக்கத் தக்க மாவட்ட ஆட்சியரின் நன் மதிப்பையும் பரிசையும் பெற்ற ஒரு செவிலியர் ஒருவரிடம்: இதுவரைக்கும் எந்தப் புகாரும் வரவில்லையே என்றே கடைக்காரர் சொல்லி விட்டு அந்த அரிசியை வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுத்திருக்கிறார். அந்த அரிசியின் பிராண்ட்: மூன்று கோடிட்ட நாமம் போட்டிருக்கிறதாம் அந்த அரிசிப் பைகளில். நாங்களும் கூட இதையே வாங்கி சாப்பிட்டு வருகிறோம் எந்தப் பிரச்சனையும் இல்லையே என்கிறாராம் ஒரு இளைஞர்.



ஆனால் இந்த நர்ஸ் அதை நன்கு பரிசீலித்துப் பார்த்து விட்டு உணவின் ருசியின்மை, உண்வருந்திய பின் வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை, தரையில் தட்டிப் பார்த்து பந்தைப் போல் அந்த உணவின் கவள உருண்டி எழும்பி மேல் செல்வது ஆகியவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டு முழு கவனத்துடனும் சமுதாயப் பொறுப்புடனும் பெரும் கவலையுடனும் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது பற்றி ஒரு கூட்டத்தில் பேச பேசுமளவு நா நுனி வரை சொற்கள் வந்து விட்டன எமது கூட்டத்தில் ஆனால் நாங்கள் அங்கு நடத்திய முகாம்களுக்கு உறுதுணையாக இருந்த கிறித்தவ நண்பருக்கு எந்த பின் விளைவும் ஏற்பட்டு விடக்கூடாதே என விட்டு வந்தோம்.



எந்த எட்ட முடியாத பகுதிக்கும், பான் பராக், குத்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களும், சிகரெட், பீடிகளும், மதுவும் அங்கேயே காய்ச்சும் கள்ளச் சாராயம் போன்றவையும் ஏன் எய்ட்ஸ் நோய்களும் கூட அங்கு பரவி சரளமாகி புழங்குகின்றன. தொலைக்காட்சிகளும் மின்சாரம் உள்ள பகுதிகளில் மக்களை அடிமைப்படுத்தி  விடுகின்றன. ஆனால் நல்லது மட்டும் எங்கேயும் அங்கேயும் போகாமல் இங்கேயும் இல்லாமல் அல்லாடிக் கொண்டே இருக்கின்றது...

பள்ளிகளையும் ஆசிரியப் பெருமக்களையும் கூட நாம் இந்த குறிப்பிட்ட சாராம்சங்களில் குற்றம் சொல்ல முடியாது. எல்லாமே இந்த மாக்கள் கையில் மட்டுமே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. கவிஞர் அவர்களே பிளாஸ்டிக் அரிசி என்பது ஒரு புரளி.

    //ருசியின்மை, உண்வருந்திய பின் வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை // இது தனி நபர் மனது மற்றும் உடல் நிலையை பொறுத்தது.

    //தரையில் தட்டிப் பார்த்து பந்தைப் போல் அந்த உணவின் கவள உருண்டி எழும்பி மேல் செல்வது // உண்மையான அரிசியில் செய்த சாதத்திற்கும் (பருவத்தை பொறுத்து) இந்த குணம் உண்டு.

    மேலும் நீங்கள் பதிவு ஏற்றியிருக்கும் படமும் (சில அரிசி மணிகள் நீரில் மிதப்பது போல) ஒரு தவறான உதாரணமே. சில நல்ல அரிசி மணிகளாலும் நீரின் அடர்த்தியை துளைத்து கீழே செல்ல இயலாது. ஆனால் சமைத்த சாதம் நீரில் மிதந்தால் அந்த அரிசி ஆராயப்படவேண்டியது தான்.

    தயவுகூர்ந்து புரளிகளுக்கு துணை போகாதீர்கள்.
    அன்புடன்
    கிறுக்கன்

    ReplyDelete
    Replies
    1. அன்பு கவின் நண்பர் கிறுக்கன் அவர்களுக்கு: வணக்கம்
      மிகத் தெளிவாக எழுதி இருக்கும் சிந்தனையாளராக இருக்கும் உங்களுக்கு எதற்கு இந்த கிறுக்கன் என்று பேர்?

      உண்மை நீங்கள் குறிப்பிட்டபடி, நான் தேர்வு செய்து போட்டிருக்கும் படத்தில் உள்ளபடி அரிசியைக் களையும்போதும் ஊறவைக்கும்போதும் மேலே பொட்டலான லேசான அரிசிகள் மிதப்பதை நானும் கண்டதுண்டு. மற்றபடி நீங்கள் கீழ் குறிப்பிட்ட செய்திகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே.

      ஆனால் சமைத்த சாதம் நீரில் மிதந்தால் அந்த அரிசி ஆராயப்படவேண்டியது தான்.
      //தரையில் தட்டிப் பார்த்து பந்தைப் போல் அந்த உணவின் கவள உருண்டி எழும்பி மேல் செல்வது // உண்மையான அரிசியில் செய்த சாதத்திற்கும் (பருவத்தை பொறுத்து) இந்த குணம் உண்டு.


      கேள்விப்பட்டிருக்கிறேன். இரு தரப்பு கருத்துகள் உள்ளன . ஆனால் என்னால் அதையும் இதையும் ஏற்கவும் முடியவில்லை . நம்பவும்முடியவில்லைதான். மேலும் வாட்ஸ் ஆப் செய்திகளில் செயற்கை முட்டை,அசிங்கமான அசுத்தமான நீரை ஊற்றி சாக்கடை அருகே தயார் செய்வது போன்ற படங்கள் எல்லாம் உள்ளனவே. அருவறுக்கத் தக்க நிலையில்....

      பதிவு பற்றிய உங்களின் பிரதிபலிப்புக்கு நன்றி. வணக்கம். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுக. அதில் உண்மையிருப்பின் ஏற்றுக் கொள்வதில் எந்தவித மாறுபட்டக் கருத்தும் காட்டமாட்டேன். எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின் எமதாக்கிக் கொள்வோம்.

      Delete