Wednesday, August 15, 2018

சுதந்திர நாட்டில் ஒரு அடிமையின் தேசிய கீதம்: கவிஞர் தணிகை

சுதந்திர நாட்டில் ஒரு அடிமையின் தேசிய கீதம்: கவிஞர் தணிகை

Related image



Related image


விண்ணுக்கு மனிதரை 2022க்குள் அனுப்புவோம் என்ற பிரதமரின் செங்கோட்டை பேச்சு உலக அரங்கில் இந்தியாவுக்கு  நாலாவது  நாடு மனிதரை விண்ணுக்கு அனுப்புவதில் என்ற பேரை அளித்திருக்கிறது. காரில் செல்லும் மனிதர்க்கு வேறு சுதந்திரமாகவும், கால் நடையாக பேருந்தில் செல்வோருக்கு வேறு சுதந்திரமாகவும் இருக்கிற‌ நாட்டில்.. ஒரு பக்கம் பேசினலே போதும் சிறைக்கு அனுப்பப் படுகிறார்கள். மறுபக்கம் பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளைக் காப்பாற்ற அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு பாமர மக்களைக் கொன்று குவித்து விட்டு மண்ணுக்கு அனுப்பி விட்டு    கோட்டைக் கொத்தளத்தில் கொடி ஏற்றுகின்றனர். செல்பேசி 100 கோடிக்கும் மேல் இருக்க கழிவறைகள் 33 சதவீதம் பேரிடமும் நல்ல குடி நீர் 18 சதவீதம் பேருக்கும் கிடைக்கிறது என்கிறது ஒரு இந்திய நியதியின் புள்ளி விவரம்.

குடி நீர் விற்பனை என்பது மதுபான விற்பனையை விட பேராபத்து என்பது தெரியாமலே கோக் பெப்சி நல்ல கெமிகல் கழிப்பறை கழுவ என்பது தெரியமலே எங்களது ஊடகத்தில் பிரதானமான சுதந்திர தின விளம்பரங்களும் அதன் மாட்சிமைகளும் இடம் பெற்று வருகின்றன...

காவிரியின் நீர் கரை புரண்டு கடலுக்கு ஓடி வீழ, இங்கே குடிக்கவும் இன்னும் நீருக்கு வாழப்பாடி அருகே குடி நீரே கிடைக்கவில்லை என வெள்ளாளகுண்ட கிராம மக்கள் போராடி வருகிறார்கள்.

Related image

அடிப்படைத் தேவைகளான குடிநீர், உணவு, உறையுள், உடை, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு எந்த முக்கியத்துவமின்றி முகாந்திரம் அளிக்காமல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு 72 வது சுதந்திர தின உரையை வீறுகொண்டு வீசுகிறோம். வெட்டிப் பேச்சுப் பேசுகிறோம் வானளாவ மூவர்ணக் கொடியை பறக்க விடுகிறோம். அமெரிக்காவின் டாலருக்கும் முன்னே நமது இந்தியப்பணம் 70 ரூபாயாக வீழ்ந்து பட...

இவர்கள் நினைத்தால் போதும் நள்ளிரவு முதல் உழைத்த பணமே செல்லாது. அதை சரி செய்ய நாட்கணக்கில் வரிசையில் நின்று உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும், பணக்காரர்களும் அரசியல் பிரமுகர்களும் வங்கி மேலாளர் இடைத்தரகரைக் கொண்டு எந்த வரிசையிலும் நிற்காமல் தஙகளது பணத்தை மாற்றிக் கொள்ள முடியும்...

நடிகர் மகனுக்கு ஒரு சட்டம் நீதி, அரசியல் பிரமுகருக்கு ஒரு சட்டம் நீதி, பாமரனுக்கு ஒரு சட்டம் நீதி. இப்படி ஒன்றும் அம்பேத்கார் சட்டம் செய்ததாக இல்லாமல் போனாலும்...

முதலில் நமது மாணவர்களுக்கு: சோறு எப்படித் தட்டில் வருகிறது என்று கற்பித்தாகவேண்டும்
Related image
இரண்டாவது குடிநீர் எப்படி நமக்கு குடிக்கக் கிடைக்கிறது என்று விளக்கிச் சொல்லப்பட வேண்டும் அந்த இயற்கையின் கொடையான பொதுச் சொத்தை எப்படி எவரெவர் யார் மூலம் கொள்ளை அடித்து சம்பாதிக்கின்றன்ர் என்பதும்  சொல்லப்பட்டாக வேண்டும்

மூன்றாவது வாகன விதிகள் என்ன, சாலை விதிகள் என்ன சாலை என்றால் எதற்கு,, வாகனம் எப்படி தயாராகிற ஒரு எந்திரம் அதன் இயக்கம் அதை மனிதர் எப்படி கையாண்டாலும் அந்த வாகனத்தின் மூலம் எப்படி எவ்வப்போது எப்படி உயிர் போகும் அபாயங்கள் என்ன என்பதெல்லாம் விளக்க கல்வி வேண்டும்.

நாலாவது எரிபொருள் என்றால் என்ன? அது வாகனம், வீடு, நாடுகளில் எப்படி பயன்பாடு என்பதெல்லாம் சொல்லப்பட வேண்டும்.

பொதுவாக மேல் படிப்பில் கற்றுக் கொள்ளும் தனித்துவமான சிறப்புக் கல்வி என்பதற்கு மாறக அத்தியாவசியமான தேவைப்படும் அவசியக் கல்வி முறை  கீழ் நிலையிலேயே அளிக்கப்பட்டாக  வேண்டும்...

மனப்பாடக் கல்வியும் அதை பிதற்றி தேர்வன்று எடுத்து வெளியில் கொட்டி விட்டு அப்பாடா இனி அதைப்பற்றி கவலை இல்லை என்ற நிலையுறும் கல்விகள் அகற்றப்படல் வேண்டும். முதலில் தனியார் கைகளில் கல்வி, மருத்துவம் போன்றவை இருப்பது அறவே தடை செய்யப்படல் வேண்டும்.

இங்கு உடற்சார் உழைப்புக்கும் அறிவு சார் உழைப்புக்கும் மலைக்கும் மடுவுக்குமான ஊதிய வேறுபாடு இந்த இடைவெளி களையப்பட்டு சமச்சீராக்கப்பட வேண்டும்.
Related image
எல்லாவற்றையும் விட முக்கியமாக சுதந்திரம் என்றல் என்ன, குடியரசு என்றால் என்ன தியாகம் என்றால் என்ன ஒழுக்கம் என்றால் என்ன என்பதெல்லாம் 10 வயதுக்குள் உடலுக்குள், மூளைக்குள், இர்த்த நாளங்களுக்குள் கல்வியாய் என்றும் மாறாத விதையாய் விதைக்கப்பட வேண்டும்...இல்லையேல்...நாம் காணும், கண்டு வரும் விளைவுக்கும் மேல் அவர்கள் காணுவார்கள்...

நேற்று காரைக்குடியிலிருந்து கதைக்களம் இராஜசேகர் என்னும் அரசுப்பணியாளர் கேட்கிறார் என்ன சார் எழுதுவதே காணோம் என்று? எப்படி முடியும்?

தியானம் செய்வது, நடைப்பயிற்சி செய்வது, எழுதுவது படிப்பது போன்ற எவற்றுக்குமே நேர‌மின்றி எனது பொழுதுகள் உறிஞ்சப்பட்டு எனது உடல் ஒத்துழைப்பு அனைத்தும் இழுத்துக் கொள்ளப்படும்போது ஒரு அடிமையாய் பேருந்திலும் ரயில் பயணத்திலும் சென்றபடி ஒரு வாழ்வை மேம்படுத்த உழன்று கொண்டிருக்கும்போது எப்படி ஒரு மனிதரால் நினைத்த வழி செல்ல முடியும்>?

நேற்று ஒரு வாகனத்தில் வழி தெரியாது எனது வீடு வரை வந்து விட்ட இளைஞர்களில் நான் வழி இல்லையே இப்படிச் செல்ல் என்றதற்கு வாகனம் ஓட்டி வந்தவர் கேள்வி: சுடுகாட்டுக்கு போகணும்...

சுடுகாட்டுக்கு போவதற்கு என்னை எதற்கு கேட்கிறார்கள் என யோசிக்கும்போது.

பின்னால் அமர்ந்தவர்: அரசு மதுபான கடைக்கு....

ஓ!. இரண்டும் ஒன்றுதான்....உண்மைதான்...எங்கள் ஊரில் இரண்டும் ஒரே இடத்தில் இருக்கிறது. மேட்டூரிலிருந்து 8 கி.மீ தள்ளி இங்கு வந்து பயணத்தின் இடையே கேட்கும் இரு இந்திய தமிழக இளைஞர்கள்...

நேற்று: சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலில்: முளைத்து மூனு இலை விடாத இரகம், தடுமாறுகிறது..ஏற்கெனவே குடி நாற்றம் , அதன் பின் ரயிலில் அமர்ந்து மதுபுட்டியிலிருந்து குடிக்க் ஆரம்பிக்க நான் வெளியில் நடந்து கொண்டிருந்தவன் ரயில் உள் நுழைந்து என்ன செய்கிறாய் என மிரட்ட...( அவன் என்னை மிரட்ட முடியாத அளவு இருந்ததால்) உடனே அவன் விருத்தாசலம் போகுமா எனக் கேட்டுக் கொண்டே உடனே நான் சொன்ன விருத்தாசலமும் போகாது ஒன்னும் போகாது போ கிளம்பு எனச் சொல்ல ரயிலில் இருந்து வெளியேறுகிறான்...சுதந்திரம் சுடர் விடுகிறது: 72 ஆண்டுகளாக.

அடுத்து நான் பேர் அறிந்த மற்றொரு குடிகார ரயில்வே ஊழியர் அவரும் பயணிதான் மகாக் கொடுமையான‌ கெட்ட வார்த்தைகளில் பேசியபடியே அதில் வேறு எனக்கு வணக்கமும், நட்பறிதலும் செய்தபடி மோடியை ஜெவை வர்ணித்தபடி...ரயில் தாமதப்போக்கை சாடுகிறார்....

ரயில்வேயில் சாதனைப்பட்டியல் வேறு ரெயில்வே நிலைய முகப்பில் ஓடிக் கொண்டே இருக்கிற்து...

நீண்ட நாட்கள் எழுதவில்லை..நண்பர் ஒருவர் என்னை திண்டுக்கல் பேச அழைத்து சிறப்பு செய்தமையைக் கூட உங்களுடன் பகிர்ந்தளிக்கவில்லை...

அது முதல் நான் எழுதாமைக்கு பல காரணம்...உடல் நலமின்மையும், மனநலமின்மையும் என்றும் சொல்லலாம்....

இடையில் எத்தனையோ தலைகளின் மறைவுகள்: இந்த தமிழ் நாடு இந்த தலைவர் தலை எடுத்தது முதல்தாம் பாதை மாறி திசை திரும்பியது. அங்கே மத்தியில் இந்திரா தலை எடுத்தது முதல் ஆனால் ஜெவின் மக்களாட்சி நல்லதா இவரின் சுயநல குடும்ப ஆட்சியும் மக்களுக்கு செய்த நல்லதும் நல்லதா என்றால் சற்று இவரது சில புள்ளிகள் கூட பெறும்...

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்.

என்ற குறளின் வழி நின்றுதான் இந்த தலைவரை எல்லாம் எடை போட முடியும் எழுத முடியும்...இந்த இருகட்சிகளின் பின்னால் இவ்வளவு கூட்டம் எப்படி திரள்கிறது சுய சிந்தனையின்றி என்று நினைத்தால் மட்டுமே இந்த நாட்டின் மாநில மத்திய ஆட்சிகளின் விவரம் புரியும்...

சில நாட்களில் எழுதுவதை விட எழுதாதிருப்பதும் நல்லது நண்பர்களே...
சில வேளைகளில் பேசாதிருப்பது பேசுவதை விட நல்லது நண்பர்களே...

இதுதான் எனது இன்றைய பதிவு.
 எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதிருக்கக் கூடாது
மக்களும், குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணக் கூடாது
கீழ்த்தட்டு மக்களுக்கு  அவர் தம் மேன்மைக்கு சேவை செய்திருக்கவும் கூடாது

எந்த விஷயமுமே தமக்குத் தெரிந்தது, தெரியாதது எனக் காட்டிக் கொள்ளக் கூடாது...

அப்படி எல்லாம் இருந்தால் மக்கள் வாக்கு வங்கியை ஈட்டவும் முடியாது சுலபமாக வாழவும் முடியாது...

நமது முதல்வர்களில் மெத்தப்படித்தவர் அறிஞர் அண்ணா காலத்துக்கும் பிறகு எவருமே இல்லை...கலைஞர் கருணாநிதி பள்ளி இறுதி படிப்பைத் தாண்டாதவர், எம்.ஜி.ஆர். பள்ளியே செல்லாதவர், ஜெ ஆங்கில வழிப் பள்ளியில் மட்டுமே பயின்றவர், இப்போது இருக்கும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் இப்படி.. அரசியலுக்கு அளவு கோல் இல்லை... கட்சி  பெரும்பான்மை இருந்தால் போதும்.. கோட்டையில் கொடி ஏற்றலாம். அடுத்தவரை எப்படி ஏமாற்றுவது எப்படி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

பெருந்தலைவர் காமராசரும், அறிஞர் அண்ணாவும் தோற்றவர்கள்...கலைஞர் கருணாநிதி எல்லாவற்றிலும் எல்லாத் தேர்தல்களிலும் வென்றவர்... ஆம் அரசியலும் தேர்தலும் ஒரு அயோக்யத்தனமாக ஆகிவிட்டது...அதை வென்றாக வேண்டும்..

அதே போல அங்கே மோடி...


அடையாளமின்றி இலஞ்சம் கொடுக்கவும், வாங்கவும் தெரிந்திருக்கவும் வேண்டும்...இலஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை என மத்திய அரசின் சமோதா சமர்ப்பித்து சட்டமாகி விட்டதாமே....

இன்று நீங்கள் கொண்டாடும் எவருமே நல்ல தலைவரோ நல்ல தலைமையோ இல்லையடா மாக்களே....நீங்கள் மக்களாக இருந்தால் ஒன்று சொல்வேன் இவர்களை எல்லாம் விட நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் இவ்ர்களை எல்லாம் விட நல்ல தலைமை வராததால் இவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்ல தலைவராகத் தெரிகிறார்கள்..

நீங்கள் நல்ல நல்ல தலைவர்களை என்று ஏற்றுக் கொள்கிறீர்களோ அன்று கலாம் கண்ட பாரதம் தாமாகவே மலரும். அவர் இலஞ்சம் பற்றி எனக்கு எழுதும்போது...உங்கள் வீடுகளில் இருந்து ஆரம்பியுங்கள் என்றார் சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம் CHARITY BEGINS AT HOME... என்பது போல...எண்ணிப் பாருங்கள் எதற்கெல்லாம் இலஞ்சம் கொடுத்திருப்பீர் என...
விட்டு விட்டு பணத்தின் பின்னே ஓடுவதை தவறான வழிகளில் சொத்து சுகம் பின்னே ஓடுவதை நிறுத்துங்கள் எல்லாவற்றையும் மாற்றலாம். மாறும்.

பொருளாதார சுதந்திரம் அது வரை வரப்போவதில்லை இந்தியாவில்.
உண்மையை பேசுவதால் கடைப்பிடிப்பதால் நேரும் தியாகத்தின் பிடியில் சிக்கிய என் வாழ்வும் கடந்து போய் 3 வது சுழியில் அடித்து சென்றபடி இருக்கிறது...

நாங்கள் கேவலமாகக் கருதப்படுகிற வரையில்...பணமும் பதவியும் அரசியலும் கட்சிகளும், சட்டம் ஒழுங்கு போன்றவற்றை மீறி பிரதானமாக கோலோச்சும் வரையில் ஒழுக்கமும் கிடையாது...மாறுதலும் வராது...

எங்கள் சுதந்திரம் எல்லாம் பொருளாதார முடைக்குள் முடங்கிப் போய்விட்டது...
Related image
மறுபடியும் பூக்கும் வரை;
கவிஞர் தணிகை.

2 comments:

  1. நல்ல பதிவு வாழ்த்துகள் அசத்தி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. thanks Kadhaikkalam Rajasekar. for your feedback on this post vanakkam. plese keep contact

      Delete