Wednesday, August 22, 2018

வாழ்வியல் வழிகாட்டி: கவிஞர் தணிகை

 வாழ்வியல் வழிகாட்டி: கவிஞர் தணிகை

கடந்த ஜுன் மாதம் 24 ஆம் நாள் திண்டுக்கல் நகரில் விடியல் சிறப்பு சந்திப்பு நடைபெற்றது அதற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டு " புறம் கட கடவுள் பார்க்க" என்ற தலைப்பில் உரை வீச்சு செய்தேன் . அந்த அவையில் வந்திருந்த பொறுக்குத்தரமான நீதிபதிகள், மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள், கோட்ட வட்டாட்சியர் மற்றும் வழக்கறிஞர்கள் சபையும் அவர் தமைச் சார்ந்த குடும்பத்தினரும் கலந்து கொண்ட விழா அது . அதில் முத்தமிழ் மன்றம் சார்பாக அதன் தலைவர் இரண்டாம் இளங்கோ முன்னிலையில் உங்கள் நண்பரான கவிஞர் தணிகைக்கு வாழ்வியல் வழிகாட்டி என்ற பட்டமும், விருதும் வழங்கப்பட்டன.

அப்போது ஒரு பக்கம் பாலமலை உறைவிடப் பயிற்சி முகாம் வேறு மிகவும் கடின உழைப்புடன் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் இந்த விருதையும் பெற திண்டுக்கல் வரை சென்று திரும்பி மறுநாள் முகாம் பணிகளை மேற்கொள்ள பாலமலைக்கும் செல்ல வேண்டியிருந்தது. என்றாலும் ஏற்றுக் கொண்டோம். ஏன் எனில் இது போன்று முற்காலத்தில் பல முறைகளில் நல்ல நல்ல வாய்ப்புகளை காலத்தின் இறுக்கம் கருதி கை நழுவி விட்டதன் அனுபவம் இன்று இதையும் ஏற்றுக் கொள்ள வைத்தது.




வீட்டில் என்னை பிழைக்கத் தெரியாதவன் என்றே சொல்கிறார்கள், உங்களுக்கு எப்படி தெரிந்தது நான் வாழ்வியல் வழிகாட்டி என்பது என்றே ஆரம்பித்தேன்...

பாலியல் விழிப்புணர்வு நூல்: அளவுக்கு மிஞ்சினால் வெளியிட்டபோது பாலியல் வல்லுனர், செக்ஸாலஜிஸ்ட் என்றார்கள்...ஆனால் அதை முறிக்கவே அடுத்த நூலை இயல்பை விட விரைவாக வெளியிட வேண்டி வந்தது யார் எப்படி அழைத்தாலும் சேவையை நான் விட்டுப் பிரிய நினைத்தாலும் நான் உண்மையாக நடந்து கொண்டு, உண்மையைப் பேசி, உன்மையாகவே வாழ்ந்து வருவதால் சேவை என்னைவிட்டுப் பிரியவே மறுக்கிறது உயிரை விட்டு உடல் பிரியும்போதும் அதற்கும் மேலும் சேவை தொடரலாமோ என்னவோ...எனக்கு உடலை இழந்த பின் உயிர் இருக்கும் உணர்வுகளில் நம்பிக்கை அனுபவங்கள் உண்டு என்பதால் இந்த வார்த்தைகள் இல்லையேல் அது இப்படி முடிந்திருக்கும்: உடலை விட்டு உயிர் போகும் வரை சேவை தொடர்ந்திருக்கும் என்று...

No automatic alt text available.


 அந்த சான்றோர் நிரம்பிய சபைக்காக இது வரை நாலைந்து முறை பேசி இருக்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு மைல்கல்தான்.  சேலம் நேரு யுவக்கேந்திராவின் இளைஞர் ஒருங்கிணைப்பாளராக இருந்த அதன் பின் இந்தியாவில் அதன் படிகளில் பலவாறு உயர்ந்த எனது நணபர் கொ.வேலாயுதம் அவர்கள் என்னை பலவாறாக உபயோகித்த பின் இந்த விடியல் நண்பர் குகனும், அதை அடுத்து விநாயகா மிஷன் தற்போதைய சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வரான பேராசிரியர் டாக்டர் பேபிஜானும் என்னை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். அல்லது இந்த வைரத்தை பட்டை தீட்டி வருகின்றனர். அல்லது துருப்பிடிக்காமல் இந்த ஆய்தத்தை பதப்படுத்தி கூர்மை படுத்தியே வருகின்றனர் அவர்களுக்கு எனது வாழ்வில் ஒரு பகுதி நன்றிகடப்பாடு உண்டு. அதிலும் விடியல் குகன் எனது எல்லா முக்கியான கட்டத்திலும் அதாவது கல்லூரிப்பருவமான 1978ல் அறிமுகமாகியது முதல் எனது வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் பங்காற்றியது கண்டால் அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்மத் தொடர்பு இருந்திருக்கும் போலும்... மேலும் பொருள் இல்லா நிலையில் நான் மார்க்ஸ் ஆகவும் அவர் ஏங்கெல்ஸ் ஆகவும் இருப்பது போன்ற உணர்வு எனக்குள் என்றும் உண்டு.



உரை வீச்சு மிக நன்கமைந்திருந்து அனைவரும் ஒரெ சேர பாராட்டும்படிஅனைவர்க்கும் பயன்படும்படி அமைந்திருந்தது கண்டு எமக்கும் மகிழ்வே.

இந்த உரை வீச்சுக்கும் முன் நமது அறிமுகத்தை வழக்கம்போல் எதுவும் சொல்லாமல் ஆரம்பித்ததை விட பின் வரும் சிறு குறிப்புகளை வழங்கி ஆரம்பித்தேன் அதனால் நல்ல கவன ஈர்ப்பு கிடைத்தது. இடையில் அவர்களை புத்துணர்வு செய்து கொள்ள, சிறிது புத்தாக்கப் பயிற்சியும் கொடுத்தேன்.

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து (Puthu Samballi)

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த…. ¦¾Õ  ºó¾¢ôÀ¢ø °¡¢ý Ó츢 «¨¼Â¡ÇÁ¡¸ò ¾¢¸Øõ ¦¾öÅ¡ ¾¢Â¡Éô À¢üº¢
¸Õõ ÀĨ¸Â¢ø ¦À¡ý¦Á¡Æ¢¸û ÀøÄ¡ñθǡ¸ ±Ø¾¢ ÅÕõ Ҹؼý ....
 ¯Õš츢 ¯ÕÅ¡¸¢.

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...
3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,Tree plantation,A.P.J.Movement etc.

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்... மது விலக்குப் போராளி சசிபெருமாள் போன்ற இளைஞர்களின் தயாரிப்புக்கு உறு துணையாகி...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...visit:www.marubadiyumpookkum.blogspot.com  www.thanigaihaiku.blogspot.com

www.dawnpages.wordpress.com Having Bible,Quran,Geeta with equal status.


இவை மட்டுமல்லாது: சசிபெருமாள், சின்ன பையன் போன்ற மதுவிலக்கப் போராளிகளை கட்டி உருவாக்கிய இயக்கங்களின்: 1. நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் , 2. காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம்,3. தமிழக இலட்சியக் குடும்பங்கள் ஆகியவற்றை விதைத்த நிறுவனர் எனது சகோதர நண்பர் ச.மே.சிற்பி  எனப்படும் சமூக மேம்பாட்டு சிற்பி என்ற கொ. வேலாயுதத்துக்கும் அடுத்த நிலையில் இயக்கத்தின் முகமாக முன்னணி படைத்தலைவனாக இருந்து வழி நடத்தியவன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்...இதை எல்லாம் நான் சொல்ல வில்லையெனில் காலம் நீரில் கிழித்த கோடாக்கி விடும் என்பதால்..



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

1 comment: