Monday, August 20, 2018

சேர நன்னாட்டின் வெள்ளத்துடனே: கவிஞர் தணிகை

சேர நன்னாட்டின் வெள்ளத்துடனே: கவிஞர் தணிகை

Related image


எவ்வளவு நாளைக்குத்தான் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டு இருப்பார்கள்? இயற்கை வென்ற காட்சிகளைத்தான் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் ஓரிரு வாரங்களாக கண்டு வருகின்றன.

விடியற்காலத்திலும் சற்று மேடான பகுதியிலும் சென்று நின்றால் வெள்ளம் எங்களது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் சத்தப் பேரிரைச்சல் இரண்டு கிலோமீட்டருக்கும் அப்பால் கூட கேட்கிறது.

மாபெரும் சக்திகளான‌...நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களை பகைத்துக் கொண்டதால் நிகழும் அழிவுகளையே இப்போது நாம் பார்த்து வருகிறோம்.

கேரளத்தில் உள்ள நிலையை மிகவும் அதிகபடியாக காட்டி பணக் குவிப்பு செய்து வருவதாகவும், இப்போது அங்கே தேவை பணமோ, உணவோ, பழந்துணிகளோ அல்ல தேவை எல்லாம் மின் பணியாளர்கள், நீர்ப்போக்கு வரத்து சாதனப் பணியாளர்கள்...பிளம்பர்ஸ், மரவேலை செய்வோர் போன்ற  தொழில் விற்பன்னர்கள்தாமே அன்றி வேறு யாவும் அத்தியாவசியமல்லாதன என அங்கிருந்தே ஒரு நபர் பேட்டி கொடுத்த செய்தி வாட்ஸ் அப் எங்கும் பிரபலமாகிவிட்டது.

உண்மையிலேயே கேரளா கடவுளின் பூமிதான். எனவேதான் அவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டித்து விட்டது.

எனக்கு கேரளத்தவர், அல்லது மலையை ஆளும் மலையாளிகள், அதிலும் கிறித்தவப் பெருமக்கள் பல்வேறுபட்ட நிலைகளில் சில மாநிலங்களில் எனக்குப் பேருதவி புரிந்தனர்.

அதில் கொச்சியைச் சார்ந்த எர்ணாகுளத்து கிறித்தவ கன்னியாஸ்த்ரி ஒருவரும் அவர் ஒரு சில நாட்கள் நடந்த கருத்தரங்கில் எனக்கு ஒருவனுக்கு மட்டும் மரக்கறி உணவு சமைத்து மனங்கோணாமல் என்னையும் மாமிச உணவு உண்பர்க்கு ஈடாக நடத்தியவர்

ஒரிஸ்ஸாவில் இருக்கும்போது முரளிதர்ன் கிடாவ் என்னும் செக்சன் ஆபிசர் ஒருவர் வாரத்தில் விடுமுறி ஞாயிற்றுக்கிழமையில் உணவு விருந்து அளித்து பெருமை பெற்றவர்.

Related image

மற்றொருவர் எனக்கு மலேரியாவாக இருக்குமா என்றிந்த காலக்கட்டத்தில் கொஞ்ச்ம் கூட யோசிக்காமல் தமது வீட்டில் தங்க வைத்து என்னை வீட்டில் விட்டு விட்டு பணிக்குச் சென்றவர், நோயாளியாய் இருந்த எனக்கு முழு ஓய்வு அளிக்க அவரது வீட்டை அடைக்கலமாக கொடுத்தவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் என் வாழ்வில் இன்றியமையாத நன்றிக்கு வித்தானவர்கள் இந்த கிறித்தவ மற்றும் மலையாள நண்பர்கள்...அவர்கள் சாதாரண வாழ்வுக்கு திரும்ப எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன்.





மனிதத்தவறுகளே காரணம்
கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளம் குறித்து கட்கலிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளேஅனைத்துக்கும் காரணம்.

வெள்ளத்தில் இருக்கும் மதுபானபாட்டில்களை எடுக்கும் காட்சியும் கேரளாவின் கலாச்சாரம் காண்பிப்ப்தாகவே...

மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம்”தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கல்குவாரிகளையும், மண்குவாரிகளையும்செயல்பட அனுமதித்ததும், பணம் ஈட்டும் நோக்கத்துடனும், வர்த்தக நோக்கிலும் வனங்களையும், இயற்கையையும் அழித்து ஹோட்டல்களையும், ரிசார்ட்களையும் கட்டியதும் சூழல் கெடுவதற்கும், இத்தகைய பேரழிவு ஏற்படுவற்கு முக்கியக் காரணமாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.
இயற்கை ஆர்வலர்களும், சூழலியல் வல்லுநர்களும் கூறிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்புறந்தள்ளி செயல்பட்டதன் விளைவை இப்போது கேரள மாநிலம்அனுபவித்து வருகிறது. இனிமேலாவதுகட்கில் அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு கேரள தள்ளப்படலாம்.
விழிக்குமா தமிழகம் ?
கேரள மாநிலத்துக்கு வந்த நிலைமை தமிழகத்துக்கும் வராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும்இல்லை. ஏனென்றால், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்திருக்கும் தேனி, நெல்லை, கோவை, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால் நிலச்சரிவுஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதலால், தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கூறும் நல்ல கருத்துக்களை ஏற்று அரசு செயல்படுவது சிறப்பாகும்.

thanks: Tamil Hindu.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment