Saturday, April 9, 2016

தூங்கா வனம்: சினிமா விமர்சனம்: கவிஞர் தணிகை



கடந்த ஒரு வருட காலமாக மகன் மணியத்துக்காக அவரது மேனிலைப் பள்ளித் தேர்வு முடியும் வரை சினிமா பார்ப்பதில்லை என்ற விரதம் முடித்து மறுபடியும் வாய்ப்பு அமையும்போது நல்ல சினிமா பார்க்கலாம் என்றும் அது பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இருந்த காலம் முடிந்து மறுபடியும் ஒரு புதுக்
காலத்தின் பயணம் ஆரம்பம்.

புதுப் படம் தான் பார்த்து எழுத வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பார்த்த படத்தை நாம் எழுதலாம் அதில் தவறு ஒன்றும் இல்லை. இந்தப் படம் ஸ்லீப்லஸ் நைட் என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலாம் 2011ல் வந்த அதை 2916ல் கமல் செய்துள்ளது நமக்கு விருந்து.

எனக்கும் இந்த சினிமா நாயகனுக்கும் அவரது கதா மகனுக்கும், எனது மகனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. திஸ் டைம் ஹி ஈஸ் ஃபைட்டிங் பார் ஹிஸ் டாட்டர், சன் என்பது போல ஆர்னால்ட் படம் செய்தபோதும், கமல் சினிமாவை வாழ்வாக சித்தரித்த போதும், எனது வாழ்க்கையோடு அவை ஒன்றும் ஈடாகா என்ற போதும் எனது வாழ்வில் 3 ஆம் பகுதி மகனுக்காக ஆரம்பித்து விட்டது. அவரது நடிப்பு. எனது வாழ்க்கை.

அது போல போதை மருந்து ஒழிப்புப்  பிரிவில் காவல் துறை அதிகாரியாக (அதிகாரி என்ற வார்த்தைக்குப் பதிலாக அலுவலர் என்ற வார்த்தை சரியானதுதான் ஆனால் அதிகாரி ஒரு பழைய வார்த்தை ஆனாலும் அது சொல்லிப் பழகி ஒரு மிடுக்குடன் இருக்கிறது ஒரு அதிகாரத் தோரணையை காண்பிக்கிறது. ஆனால் பொதுவுடமை மக்கட் சமுதாயத்துக்கு அது பொருந்தாத வார்த்தை அலுவல் என்றால் ஊழியம்)வருபவரை போதை மருந்து கடத்தல் கும்பல் முடித்து விட நினைக்கிறது நய வஞ்சகமாக.

ஆங்கிலப்படம் போல் இருக்கிறது,  தழுவல் , காப்பி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கமல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் செய்துள்ளார்.ஒரு திரைப்படமாகத் தெரியவில்லை.காட்சி ஓட்டமும் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஓடி நம்மை சித்ரவதைக்குள்ளாக்கி விடுகிறது அடுத்த அடுத்த காட்சிகளாக. ஆனால் அந்த பிரகாஷ் ராஜ் கிளப்பில்தான் எந்நேரமும் ஒரு கூட்டம் பெரும் கூட்டம் குடித்துக்கொண்டு ஆடிக்கொண்டே இருக்கிறது.பார்க்க தெவிட்ட.



ஒரே இரவில் நடக்கும் கதை என்று தோன்றினாலும் இந்த 168 மணித்துளிகளும்(128 நிமிடங்களும்) படம் நகர்வதாகத் தோன்றவில்லை. த்ரிஷாவுக்கு காவல் அதிகாரியாக ஒரு நல்ல ரோல்.பிரகாஷ் ராஜ் எப்போதும் போல அவரது பாணியில் வில்லனாக இருந்து இடைத்தர கடத்தல் கும்பல், கூலிக்கார மாபியா வாக இருந்து கடைசியில்  நெற்றியில் குண்டடிபட்டு இறக்கிறார்.

புரிந்து கொள்ளாத பிரிந்து வாழும் மனைவி, மகன் இருவரிடமும் தவணை முறையில் வளர, இந்த போலீஸ்காரர் கதை குடும்பத்துடன் பின்னிப் பிணைந்து கதை.




 பணயக் கைதியாக மகனைக் கடத்துகிறார்கள். கடத்தல் போதை மருந்தை திருடியதற்காக பிரகாஷ் ராஜ் கும்பல்.. யூகி சேது, கிஷோர் போன்றவர்கள் உளவாளிகள் போல இருபக்கமும் ஊடுருவி விளையாடி இருக்கிறார்கள். யூகி சேது இறக்கும்போது தெரிந்து கொள்கிறார் யார் தோழன், யார் எதிரி என....

அடிப்படையில் அந்த கொக்கையின் போதை மருந்து கை மாறி சென்றாலும் பணம் குவிப்பது என்பது எல்லாரிடமும் குறிக்கோளாக இருக்கிறது எந்த சமுதாயம் எப்படி ஆனாலும், யார் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன என்ற போக்கில்.

டாய்லெட்டில் கூரையில் மறைக்கப்படும், கொக்கெய்ன் சரக்கை த்ரிசா எடுத்து ஆண்கள் கழிப்பகத்திலிருந்து எடுத்து பெண்கள் கழிப்பகத்துக்கு மாற்றுவது கடைசிவரை தெரியாமல் போலி(ஸ்) ஆக வேடமிட்ட கிஷோரிடம் அது சென்று மாட்டிக் கொள்வது, திவாகரின் மகன்(கமல் திவாகராகவும், அவரது மகன் வாசுவாக அமன் அப்துல்லாவும்) கடத்தப்படுவது அந்தக் கடத்தல் பேர்வழிகளிடமிருந்து மகனை நாயகன் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படம். அதற்குள்தான் எத்தனை திருப்பங்கள்.

படம் பார்க்க முடியும் நேரம், படம் பார்க்க‌ வேண்டும் என்ற அவா இப்படி ஏதுமில்லா சூழலில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்க பார்த்தேன் ஆனாலும் இந்தப் படம் பற்றி சொல்ல வேண்டும் என்றே சொல்லி இருக்கிறேன். அதில் இருந்த மகனுக்கும் அப்பாவுக்குமான ஒரு பந்தம் எனது மகன் கடைசித் தேர்வு எழுதி முடித்து இந்த படத்தை எங்கு எப்படி எப்போது தேடிப் பிடித்து வைத்திருந்து பார்த்தாரோ அப்படிப் பார்த்து விட்டு என்னையும் பார்க்க சொன்னார்.

இரண்டு மகன்களும், இரண்டு அப்பாக்களும் ஒன்று போலவே இருந்தது. அது சினிமா, இது வாழ்வு. அது போதை மருந்து கடத்தல் மகன் கடத்தல் கதை. எங்களுடையது இனி எப்படி வாழப்போகிறோம் இந்த சமூக அமைப்பில் எப்படி போராடப் போகிறோம் எனச் சொல்லாமல் சொன்னது....

பல்லாண்டு கழித்து பணிக்கு போக ஆரம்பித்த உணர்வு என்னுள் எனது மகனுக்கு என்னால் ஆனதை செய்யும் பொருட்டு...

இந்தப் படம் எமது வாழ்வை ஒட்டி இருக்கிறது...யாம் அதிகம் இரவுகளில் தூக்கமின்றி தவிப்பது போல இந்தப் படத்திலும் தான் எத்தனை வித தவிப்புகள்...கமல் வரிசையில் மற்றொரு நல்ல படம்.

இதற்கு  மதிப்பெண் நாம் கொடுக்க அவசியமில்லை நவம்பர் 10ல் 2015ல் வெளிவந்திருக்கிறது. கமலின் உதவியாளர் ராஜேஸ் இயக்க திரைக்கதை கமலால் செதுக்கப் பட்டிருக்கிறது. தயாரிப்பு கமல் உட்பட ஒரு குழுவாக இருக்கிறது.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment