தமிழகத்திற்கு ஜெ போட்ட பட்டை 111 நாமம்.: கவிஞர் தணிகை
இந்த தேர்தலில் வென்றால் மதுவிலக்கு படிப்படியாக என்னும் ஜெ இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மிகவும் துணிச்சலாக நிற்கிறார். அது எந்த துணிச்சல் என்றுதான் தெரியவில்லை. இவர் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் முதல்வராக இருந்து எதையுமே மக்களுக்காக செய்யவில்லை. இவர் அளித்த இலவசங்கள் எல்லாமே குப்பையாக கிடக்க
டான்ஸி வழக்கின் போது போட்ட கையெழுத்தை தன்னுடையது இல்லை என்றவர். இப்படி ஏமாற்றுவாரை பொதுவாக 420 என்று சொல்வார்கள்.
பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி தற்போது உச்ச நீதிமன்ற வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இன்று தேர்தல் அறிவிப்பாக அடுத்து தேர்தலில் வென்று முதல்வராகும் கனவில் ஏதேதோ பிதற்றுகிறார்.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக இந்த நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய பதிவு இது. உலகறியாத செய்தி இது:எங்கள் இணைப்பில் உருவான சசிபெருமாள் மரணத்துக்கு ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வர் இன்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
நேற்று கூட தமிழக இலட்சியக் குடும்பம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம் ஆகிய இயக்கங்களை நிறுவிய சிற்பி. கொ.வேலாயுதம் அவர்களும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் நிலை பற்றி.
சசி பெருமாள் எங்கள் பயிற்சியில் வளர்ந்தவர். 1983லிருந்தே எம்மோடு இயைந்து இயக்கப் பணியில் இருந்தவர். அந்த இயக்கங்களில் நிறுவனருக்கு அடுத்த நிலையில் இருந்து பல்வேறுபட்ட பொறுப்புகளுடன் பயணம் செய்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். எம்மோடு இணைந்தவர்கள் பலர் பல்வேறு திசைகளில் பிரிந்தார்கள்.
என்றாலும் சசிபெருமாள் போன்றோர் கடைசியில் இயக்கப் பணியை விட தன்னை பிரதானமாக காட்டிக் கொண்டது ஒரு வகையில் உண்மை ஆனாலும் அதன்முடிவு தியாகத்துக்காக மதுவிலக்குக்காக முடிந்து போனது.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் சேலம் வடக்குத் தொகுதியில் மதுவிலக்கு வேட்பாளராக சின்ன பையன் என்பவரையும் நிறுத்திப் போராடினோம். சொற்ப வாக்குகளே கிடைத்தன.
பா.ம. க நிறுவனர் கூட 30 ஆண்டுக்கும் மேலாக நாங்கள் மதுவுக்காக போராடிய கட்சி என்கிறார். ஆனால் அவர்களுக்கும் முன்பிருந்தே எமது இயக்கம் பல்வேறுபட்ட தியாகங்களை போராட்ட உத்திகளை செய்தது. கலைஞர் வீட்டு முன் கூட உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடத்தியது குழுவாக.மதுவிலக்குக் கோரி.
5 இலட்சம் கையொப்பங்கள் பெற்று மதுவிற்கு எதிராக இன்றைய முதல்வர் அன்றைய முதல்வராக இருந்த இதே ஜெ விடம் மகஜர் சமர்ப்பித்தது. அடியேன் காவல் துறை நண்பர்களிடம் கூட கையெழுத்து கேட்டேன் நினைவிருக்கிறது. பொன் மாணிக்கவேல் ஐ.பி.எஸ் கூட நாங்கள் அரசு ஊழியர் , அரசின் கொள்கை முடிவுக்கு மாறாக நாங்கள் எப்படி கை ஒப்பம் இட முடியும் என்றார்?ஆனால் மூச்சும் இல்லை பேச்சும் இல்லை.
இப்போது அரசின் கொள்கை முடிவு மாறுகிறது. அடுத்து தேர்தலில் வென்றால் முதல்வர் ஆனால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவேன் என... ஜெவின் தகிடுதத்தம் எதுவுமே செய்யாமல் அராஜகம் செய்தபடி சென்னை வெள்ளத்தின் போது கால் எடுத்தும் வைத்து நிவாரணப் பணி செய்யாமல் இப்போது வாக்கு பொறுக்க கொள்கையை மாற்றுகிறது.
சட்டசபை வளாகத்துக்குள் புக மாட்டேன் என புதுக் கட்டடத்தை உதாசீனப்படுத்தியது, அண்ணா அறிவுப் பூங்கா நூலகத்தை மருத்துவ மனையாக மாற்றுவேன் என்றது இப்படி சிறு சிறு குரோத, பழி வாங்கிய செயல்பாடுகள் தவிர ஜெ ஒன்றுமே மக்களுக்காக செய்யவில்லை என்பது உண்மை.
அம்மா குடிநீரும், அம்மா உணவகமும் மிகப் பெரிய சாதனையாக சொல்லக் கூடாது சொல்ல முடியாது ஒரு மாபெரும் அரசுக்கு. அதை பேருக்காக செய்ததே.
இவர் செய்த ஆட்சிமுறையை விமர்சனம் செய்யப் புகுந்தால் நாமும் ஸ்டிக்கர் கலாச்சாரம், பீப், என்று போய் விட வேண்டியதுதான்...ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. நமக்கு நேரமில்லை.
இவர் ஆண்டது ஆட்சியே அல்ல. எனவே இந்த அரசை மக்கள் எடுத்து எறிந்து விடுவது ஒன்றுதான் தமிழகத்துக்கு நல்ல தீர்வு. பாடகர் கோவனின் மனசாட்சி, சசிபெருமாள், மற்றும் கலாம் ஆன்மாக்கள் தற்போதைய ஆட்சியின் அசூயையை பார்த்தபடிதான் இருக்கின்றன.
வெறும் 110 விதியின் கீழ் நிறைய சொல்லி இருக்கிறார். சட்டசபையில் ஆனால் உண்மையில் என்றும் இவர் தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் போட்டது 111 என்னும் பட்டை நாமம்தான்.
ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புவோமாக. ஏற்படுத்துவீராக.
வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான பதிவு. நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. இன்றைய தமிழகத்தின் நிலை பரிதாபமானது. நல்ல அரசியல்வாதிகள் அரிதாகிப்போன நிலையில், நல்லவர்களுக்கு ஆதரவும் கிடைப்பதில்லை.
ReplyDeletethanks for your comment and feedback on this post Sampath Kalyan.vanakkam. please keep contact.
ReplyDelete