யாமறிந்த மனிதரிலே
இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்:
கவிஞர் தணிகை
விரும்பியவாறே
நீ இறந்தாய் தலைவா!
யமனையும்
உன் செயல் அழகால்
மயங்கச்
செய்தாய்!
1931 அக்.15
முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட
சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...
என்றாலும்
ஒன்று சொல்லலாம்...
நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக்
கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.
மேடையிலேயே
கைத்தடி
தடுக்கி
கீழே விழுந்தாற்போல...
உழைப்பில்
அந்த உடல்
ஓய்ந்தது
அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை
நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும்
நீ இருக்க உதவியது...
நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு
மீறிய புரட்சி அல்ல
என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...
எங்கிருந்து
அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத்
தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து
ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை அங்கே
விதைத்தாய்
எண்ணத்தை
அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர்
பற்றி கவலைப்படாமல்..
நீ வாசித்த வீணை
படித்த
நூல்கள்
பிடித்த
குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய
எழுத்துகள்
எல்லாம்
ஒளி பெற...
அட இந்த வரம் கூட
வாய்க்காமல் சிலர் சிலராகவே...
பெரும்போக்கு பயணத்தில்.
பெரு நோக்கை தொலைத்தபடி
ஒரு நோக்கில் அலைந்தபடி
ஒரு நோக்கம் அலைந்து படிக்க
பெரு நீர்த்தேக்கம் ஒரு வடிகாலாக
ஒரு சிறு வாய்க் காலாக கால் வாயாக...
யாமறிந்த மனிதரிலே கலாம் போல
காந்தி போல
தெரஸா போல ஒருவரும் காணோம்
எனவே அவர்களோடு போனோம்
வெகு காலம்....
வருவாய் வரும் வாய்
ஒரு வாய் மூடிப் போக
புத்தரை மனைவி கேட்டது போல
காலம் கை நீட்டிக் கேட்டது
மறுபடியும்
சோற்றுப் பையை
எடுத்துக்கொண்டேன்
எல்லாம் மறு உற்பத்தி
மண்ணில் வெற்று விதையாய்
வீழ்ந்து விடக்கூடாதென்று....
கவிஞர் தணிகை.
மறுபடியும் பூக்கும் வரை
No comments:
Post a Comment