வரும் முன் காப்போம்: கவிஞர்
தணிகை
மருத்துவம்.
விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல்
மருத்துவக் கல்லூரி அரியானூர், சேலம்.636308. கோடை விடுமுறைக் காலச் சிறப்பு பல்
மருத்துவ முகாம் நடத்துகிறது. உங்கள்
அனைவரின் கவனத்திற்கும்~~ அது பற்றிய ஒரு
அறிவிப்பை கல்லூரி வெளியிட்டுள்ளது. அனைவர்க்கும்
மிகவும் பயன்படுமே என அதை இங்கு
பதிவாக்குகிறோம்.
கோடை விடுமுறைக் காலச் சிறப்பு பல்
மருத்துவ முகாம்.
வாய் நமது உடலின் வாசல்....
வாய் சுகாதாரத்தை பேணிக் காத்து நமது
உடல் நலத்தைக் காப்பாற்றுவோம்.
வரும் கோடை விடுமுறைக் காலத்தில்
எங்களது பல் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் பள்ளிக் குழந்தைகள் அவர்களது
பெற்றோர்,இளையவர்கள் அனைவர்க்கும் பல் பராமரிப்பு முறையை
இலவசமாகக் கற்றுத் .தருகிறது.
மேலும்
அவர்களுக்கு பற்கள், ஈறு மற்றும்
வாய் தொடர்பான நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும்
சிறப்புக் கட்டணச் சலுகையில் சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
அனைவரும்
இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி வாய் , பற்கள்,மற்றும்
ஈறு சுகாதாரத்தைப் பேணி காக்குமாறு வேண்டிக்
கொள்கிறோம்.
குறிப்பு:
இந்த அட்டையை கொண்டு வருபவர்களுக்கு
மருத்துவரை சந்திக்க முன்னுரிமையும் சிறப்புக் கட்டணச் சலுகையும் உண்டு.
(என ஒரு பதிவுக்கான அட்டையை
வெளியிட்டிருக்கிறார்கள்)
அதில் மிகவும் முக்கியமாக 6 மாதத்துக்கு
ஒரு முறையாவது பல் மருத்துவ ஆலோசனை
அவசியம் என்று பற் சுகாதாரம்
பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
காலை 9
மணி முதல் மதியம் 1மணி
வரை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற பதிவு செய்து கொள்க என்றும், 0427~2477318,0427~2477723 ஆகிய தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளவும் அந்தக் கையேட்டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய் வழி நோய் இயல்,
நுண்ணியிரியல், ஈறு நோய் சிகிச்சைத்
துறை, பல் சீரமைப்புத் துறை,குழந்தைகள் பல் மருத்துவம், பல்
கட்டும் பிரிவு, பல் தாடை
மற்றும் முக அறுவை சிகிச்சைத்
துறை, சமுதாயப் பல் மருத்துவத் துறை
ஆகிய பல்வேறுபட்ட சீரிய துறைகளின் கை
கோர்ப்புடன இந்த முகாம் சிறப்பாக
நடைபெற உள்ளது.
இந்த முகாம் கல்லூரியின்
முதல்வர் பேராசிரியர் மருத்துவர். J.பேபிஜான் M.D.S அவர்களின் சீரிய தலைமையில்
சமுதாயப் பல் மருத்துவத் துறைத்
தலைவர் பேராசிரியர் மருத்துவர் N.சரவணன் M.D.S அவர்களின் வழிகாட்டுதலுடன்
மருத்துவர் .துர்கா B.D.S, மருத்துவர் கார்த்திகேயன் B.D.S., ஆகியோர்
முன்னெடுத்துச் செல்ல முகாம் அலுவலராக
சு.தணிகாசலம் இருந்து முகாம் பணிகளை
கவனமுடன் ஏற்பாடு செய்து வருவது
குறிப்பிடத் தகுந்தது.
முகாமின் இலக்கு யாவும் மக்கள்
நலனுக்காகவே.எதிர்கால இளைய இந்தியா பல் வலிமை பெறுவதற்கே.
.பல் வைத்தியம் மிகவும்
பொருட்செலவை ஏற்படுத்தும் இந்தக் காலக் கட்டத்தில்
இது போன்ற நிகழ்வுகள் வரலாற்று
நிகழ்வாக்கப் பட வேண்டியது அவசியம்.
எனவே இதைப் படிக்கும் அன்பர்கள்
அனைவரும் தக்க முறையில் பயன்படுத்திக்
கொள்ளவும், அனைவர்க்கும் இதை எடுத்துச் செல்லவும்
எடுத்துச் சொல்லவும்,சிகிச்சை மற்றும் பல் தொடர்பான
விழிப்புணர்வை பெறவும் அன்புடன் அழைக்கப் படுகிறார்கள். தேவையானவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்தவும் கோரப்படுகிறார்கள்.
வெண் முத்தை விட உன்
பல் பெரும்
சொத்து.
பற்களை
வைரக் கற்களாய்க் காத்திடுவீர்.
மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை.
பி.கு: விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி சேலத்திலிருந்து 8.கி.மீ தொலைவில் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூரில் உள்ளது.
இணைப்பு:
தணிகை எழிலன் ட்விட்டர்
.காம்
தணிகை எழிலன் மணியம்
முகநூல். காம்
தணிகை ப்ளஸ்.காம்(கூகுள் ப்ளஸ்.)
No comments:
Post a Comment