Tuesday, April 9, 2019

இந்தியத் தேர்தலும் பி.எஸ்.என்.எல் சேவையும்: கவிஞர் தணிகை



 Related image

இந்திய ஜனநாயகம் தேர்தல் வித்தையில் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறதோ அப்படியே பி.எஸ்.என்.எல் சேவையும் தடுமாறிக் கொண்டிருக்கிறது வாடிக்கையாளர்களை அதிருப்திப் படுத்திக் கொண்டு.

கடந்த பல நாட்களாகவே இதன் நெட்வொர்க் படு வீழ்ச்சி அடைந்துள்ளது. தானாகவே  இணைப்பு துண்டிக்கப்படுவதும், மறுபடியும் திரும்பக் கிடைப்பதாக பாசாங்கு செய்வதும் மறுபடியும் கிடைக்காமல் போவதுமாக‌

மேலும் மோடத்தின் எல்லா குறிப்பு பட்டன் விளக்குகளும் எரிந்த போதிலுமே வலையத்தில் நாம் தேடும் பக்கத்துக்காக சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறதே ஒழிய  அந்தப் பக்கம் திறப்பதில்லை.

மேலும் புகார் அளிக்கும்போது அந்த இணைப்பில் வந்து பேசுகிறார்கள் அல்லது நேரிலும் வந்து லைன்மேன்கள் வந்து பார்க்கிறார்கள்

அவர்கள் பேசும்போது அல்லது வந்து பார்க்கும்போது டவுன்லோட் வேகம் 6 எம் பி ப்பி எஸ் 4 எம்.பி. ப்பி எஸ் இப்படியாக  வித்தை காட்டுகிறது ஆனால் அவர்கள் சென்றதும் பழைய படி இரண்டு என இறங்கி மேலும் ஒன்றுக்கும் குறைவாகி சுழியத்தின் பின்னக் கணக்கீட்டில் ஜீரோ புள்ளி 44 என்ற கண்க்கிற்கும் கீழ் செல்கிறது அப்லோட் பற்றி சொல்லவே வேண்டாம் ஜீரோ புள்ளி 13 இப்படித்தான் கிடைக்கிறது.

இந்த இலட்சணத்தில் 4 ஆம் தலைமுறைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால்தான் இப்படி நடக்கிறது...முதல் தலைமுறையே இங்கு ஒழுங்கில்லாதபோது உங்களுக்கு எல்லாம் எதற்கு 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை...இருப்பதை ஒழுங்காக பிரித்துக் கொடுத்து  அதில் நல்ல பேர் வாங்கி அதன் சேவையை  மேம்படுத்திய பிறகல்லவா அடுத்த தலைமுறை பற்றி யோசிக்க வேண்டும்

இது பற்றி புகார் மேல் புகார் பதிவு செய்தாலும் நிலை இதுதான். மாறவே இல்லை. பின் எப்படி இப்படி இருந்தால் பில் கட்டுவது என்றால் அது மட்டும் தேதிக்குள் கட்டி விட வேண்டும்....

ஒன்று சரியாக சேவை தரவேண்டும் அல்லது அந்த நாட்களுக்கான தொகையை மாதாந்திர சேவைக்கட்டணத்திலிருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் நியாயம் நேர்மை.

என்னவோ சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் வங்கியில் நாம் சென்று ஏ.டி.எம் சென்டரில் பணம் கேட்க அங்கு இல்லையெனில் அதற்கு வங்கி அபராதத் தொகை தரவேண்டுமல்லவா,,, வாடிக்கையாளரின் பணம் குறைந்த பட்ச இருப்புத் தொகையை விடக் குறைந்தால் அதற்கு மட்டும் அபராதத் தொகை எனக் கழிப்பது என்ன நியாயம் என்று சொல்லியுள்ளதாக...

ஆனால் இது பற்றி ஏற்கெனவே வாட்ஸ் ஆப் உலவியில் நண்பர்கள் இதே கருத்தை பதிவிட்டு பகிர்ந்து கொண்டு பல மாதங்கள் ஆகிறது. அதைத்தான்... சினிமாவில் சேர்த்துள்ளார்கள்..

ஒரு பேருந்தில் ஒரு நிறுவனத்தில் அதாவது மின்கட்டணம், குடி நீர்க்கட்டணம் என்று கட்டுகிற இடத்தில் ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் வாங்க மறுக்கும் அதே நிறுவனத்தார் பல நேரங்களில் சில்லறை இல்லை என எவ்வளவோ பேருக்கு ஒரு ரூபாய் கொடுப்பதேயில்லையே அது என்ன நியாயம்...

குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயை ஓவ்வொருவருக்கும் பிடித்து வைத்திருக்கும் வங்கிகள் எத்தனை வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறதோ அத்தனை பணத்தை சேர்த்து வட்டி இல்லாமல் பயன்படுத்தி வருகிறது...அவர்கள் அனுமதியின்றியே அவர்கள் பணமானது பயன்படுத்தப்படுகிறது...இது தான் மோடியின் கேடி வேலைகள்...

இல்லை இல்லை ஜீரோ பேஸ்ட் அக்கவுண்ட் என்று ஒன்றாமே அதில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லையாமே என்று கேட்டால  ஊஹூம் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தட்டிக் கழித்து விடுகிறார்கள்....

என்னய்யா நிறுவனங்கள் இந்தியாவில் மக்களுக்கு சேவை செய்யுது அவர்கள் வருவாயை பிடிங்கித் தின்றபடி...

இதில் எல்லாம் நெட்மயம்தான் நெட் இருந்தால் தான் வேலையாம். ஏண்டா எல்லாமே ஆன்லைன் என்கிறீர் எவனாவது இலஞ்சம் இல்லாமல் ஆன்லைன் பதிவின் படி நேர்மையாய் வேலையை செய்து கொடுக்கிறீர்களா...ஏன் அந்த இலஞ்சத்தையும் ஆன்லைனிலேயே பெற்று அக்கவுண்ட்ஸ் மெய்ன்டெய்ன் செய்ய வேண்டியதுதானே....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment