Saturday, April 20, 2019

WHAT IS THE VALUE OF VOTING? வாட் ஈஸ் த வேல்யூ ஆப் வோட்டிங்?,,,கவிஞர் தணிகை.

ஜனநாயகக் கடமை வாக்களிப்பது, வாக்களிக்காதார் குடிமகனே அல்ல  குற்றவாளிகளே....ஹா ஹா ஹா: கவிஞர் தணிகை.

Image result for indian election 2019


நோய்வாய்ப்பட்டிருக்கும் நடக்க முடியாதார் ஒருவரை கசக்கி தூக்கி ஆட்டோவிலும் மற்றொருவரை டாக்ஸியிலும் வாக்களிக்க கொண்டு வந்திருந்தனர் சில கட்சி ஆர்வலர்கள்.

பெங்களூரிலிருந்து வாக்களிக்க எனது பக்கத்து வீட்டுக் குடும்பம் ஒன்று வந்திருந்தது. அதிலும் ஒருவர் முதிய நீரிழிவு வியாதி உடையோர்

சென்னையிலிருந்து தங்கை மகனும், தங்கை மகளும் அவரது குடும்பமும் வாக்களிக்க வந்திருந்தனர். பல மணி நேரப் பயணங்கள்...ஏன் சில பேர் அமர இடம் இல்லாமல் நின்றபடியே கூட...

சென்னையிலிருந்து 70 வயதுக்கும் மிக்க எனது அணுக்கமான நண்பர் ஒருவர் தனது வாக்களிக்க வந்திருந்தார். (இவர் ஏற்கெனவே நாங்கள் நடத்திய நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் இயக்கம் போன்றவற்றிற்கு நிறுவனர்....இந்த இயக்கமே சசிபெருமாள், சின்ன பையன் சேலம் வடக்குத் தொகுதியின் ஒரு காலத்தில் மதுவிலக்கு வேட்பாளாராக நின்று வெறும் 800 சில்லறை வாக்கு பெற்றவர் போன்றவர்களை எல்லாம் தயாரித்தளித்தது என்பதெல்லாம் நான் உலகெங்கும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்)...

இப்படி உயிரைக் கொடுத்து ரிஸ்க் எடுத்து வடிவேலு பாணியில் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல என்று பேருந்துகளிலும் தொடர்வண்டியிலும் நமது சீமான் சொல்வது போல தமிழ் தேசம் நோக்கி படை படையாக நமது மக்கள் வந்து வாக்களித்தனர். அந்தக் காலத்தில் சுதந்திரப் போர் நடந்தபோது கலந்து கொண்ட விடுதலைப் போர் தியாகிகள் போல...

இவ்வளவு உடலை வருத்திக் கொண்டு முக்கியத்துவம் தந்து வந்து வாக்களிக்க வேண்டுமா என்ன? இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து அளிக்கும் வாக்குகளைப் பெற்ற  வேட்பாளர் அல்லது  வென்ற வேட்பாளர் உங்களுக்கு அந்தளவு நன்மை செய்யப் போகிறார்களா என்ன?

பாப்பாரப்பட்டியில் நான் 6 வாக்களித்தேன் நீ, என்றதற்கு அந்த இன்னொருவர் நான் நாலு போட்டேன் என்றாராம். அந்த தொகுதியில் வன்னியர் தவிர வேறு எவருமே சென்று வாக்களிக்க முடியாது என்று பெருமை படச் சொன்னாராம் மற்றொருவர்... அரசு அலுவலர்களும் பாதுகாப்புப் படையினரும் அங்கே எதற்கு என்ன செய்தார்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.. தி.மு.க வேட்பாளர் டாக்ட‌ர் செந்தில் குமார் மறு தேர்தலுக்கு அந்த வாக்குச் சாவடிக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தமிழ் இந்து நாளிதழ் நேற்று செய்திகளை வெளியிட்டதை  படித்து அறிந்தேன். இன்னும் எப்படி அய்யா இப்படியே இருக்கிறீர்? இன்னும் எப்படி அய்யா இப்படி எல்லாம் நடக்கிறது? இன்னும் எப்படி அய்யா இப்படி எல்லாம் நடக்க அனுமதிக்கிறீர்...>?
Related image
ஒரு புறம் வாக்களிப்பது ஜனநாயகக் கடமையாக கமல், சீமான் கேட்பது போன்றும் மறுபுறம் முன்னால் மத்திய சுகாதார மந்திரி சொன்னது போலவும் இரு வேறு துருவங்க‌ளில் தேர்தல் பயணம் செய்து கொண்டிருக்கிறது

ஒரு தேர்தல்  கட்சியின் ஆர்வலர் சொல்கிறார்: எல்லாம் பணம் தான் சார். இந்திய வரலாற்றில் ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தளவு வாக்கு சதவீதம் பெற்றது இதுவே முதல் முறை. இனி தேர்தல் எல்லாம் இப்படித்தான் சார் இருக்கும் என்கிறார். அவர் பார்த்த வாக்குச்சாவடியில் இரவு 8.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்ததாம்.

சென்னையில் வாக்குப்பதிவு 54 சதவீதமாகவும் தர்மபுரியில் 80.49 சதவீதமாக அதிக பட்சமாகவும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சேலத்தில் மொத்த வாக்குப்பதிவு 66க்கும் மேல் இருந்த போதும் ஸ்வர்ணபுரியில் சேலத்தின் இதயப்பகுதியும் மேல்தட்டு மனிதர்கள் வாழும்பகுதியான வாக்குச் சாவடியில் சுமார் 1180 வாக்குள்ள பகுதியில் சுமார் 540 வாக்குகள் ( தோராயமாகச் சொல்கிறேன் கேட்ட செய்தியில் சரியான எண்ணிக்கையை மறந்து விட்டேன்) பதிவு இருந்ததாக அறிந்தேன்.

பேசாமல் ஏலம் விட்டு விடலாம் தொகுதியை பதவியை... யார் அதிக ஏலம் கேட்கிறாரகளோ அவர்களுக்கு கொடுத்து விடலாம் என்று வேடிக்கைக்காக சொன்னாலும் அது பற்றி சிந்திக்க வேண்டி இருக்கிறது...
Image result for indian election 2019
தேர்தல் ஆணையம் பணி செய்திருக்கிறது...எங்கும் சுவர் எழுத்து விளம்பரம் இல்லை. பிரச்சாரக் கட்டுப்பாடுகள் இருந்தன இவை பாராட்டப்படவேண்டியவை. மேலும் ரொக்கப்பணம் தங்கம் எல்லாம் நிறைய கோடிகளில் பிடித்திருக்கிறார்கள் என்ற போதும் ஆளும் கட்சிக்கு சாதகமாக பயன்பட்டிருப்பதாகவும் புகார்கள் இல்லாமல் இல்லை. என்றாலும் மேலும் மேலும் அடுத்தடுத்த தேர்தல்களில் மேலும் நல்ல மேலான மக்களுக்கு சாதகமான சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறோம்.
Related image
ஏன் வீடுகளில் இருந்தே வாக்களிக்கலாம் என்பதை, சின்னம் இனி இருக்கக் கூடாது என்பதை, காபந்து சர்க்கார் இருப்பதற்கு மாறாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் நேரடியாக தேர்தல் நடத்தும் முறையை, பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி ஆகிய் 3 தேர்தல்களையும் ஒரே காலத்தில் நடத்த வேண்டிய முறைகளை, விகிதாசார முறைகளில் வாக்களிப்புக்கேற்ப பதவியேற்கும் முறைகளை தவறு செய்யும் பதவியில் இருப்பாரை திரும்ப அழைக்கும் உரிமை வாக்களர்களுக்கு வருவதுமாக‌ இப்படி நிறைய தொலைவு போக வேண்டிய பணி தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி அக்கறை உள்ளார்க்கும் இருக்கிறது...

 அதுவரை வாக்களிக்காதார் ஒன்றும் குற்றவாளியுமல்ல, வாக்களிக்காதது குற்றமுமல்ல....ஏன் எனில் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் மக்களுக்கானவர்களாக மாறாதவரை இந்த நாடகத்தில் நடிப்பது நடப்பது யாவுமே வெளி புனை வேடத்திற்காக மட்டுமே... குறைந்த பட்சம் வாக்கு பெற்றார் வெற்றி பெற்றதாகவும் அதை விட அதிகம் வாக்களித்தாரின் வாக்கு தோல்வி பெற்றதாகவும் விரயமாகும் வரை இந்த தேர்தல் எல்லாம் சரியாக இல்லை, சரியாக இருக்காது என்பதே நியதியாக இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment