Wednesday, April 10, 2019

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

விடுதலை என்றால் முழுப் பொறுப்பு: கவிஞர் தணிகை

Image result for freedom means total responsibility

விடுதலை என்றல் முழுப்   பொறுப்புடன் இருப்பது என்றும் ஏழ்மை வறுமை சொரணை இல்லாத் தனத்தை தோற்றுவிக்கும் என்றும் அறிஞர்கள் கூற்று. உண்மைதான் பசி வந்தால் பற்றும் பறந்திடும் என்கிறது தமிழ் மொழி

எனவே தான் பொறுப்பே இல்லாமல் இந்திய விடுதலையை அனுபவிப்பவர்கள் பசி, பஞ்சம், போதை, சாதி, மதம் போன்றவற்றுடன் பொது மக்களை சாதாரண மக்களை அடித்தட்டு மக்களை பின்னிப் பிணைத்து விட்டு தாங்கள் மேலும் மேலும் மேல் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அரசியல் என்னும் ஆய்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆளுமை அடிமை  மேன்மை கீழ்மை என அரசும் ஆட்சி முறைகளும் இருப்பவை இன்னும் அனைத்து மக்கள் தொகைக்குமான வசதி வாய்ப்புகளை சமமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிச்சுவடே ஆரம்பிக்காத ஆட்சி முறைகளே இன்னும் நீடிக்கிறது. எனவே  மது எங்கும் கிடைக்க குடி நீர் எங்கும் கிடைக்கவில்லை...செல்பேசி எல்லார் கைகளுள்ளும் இருக்க கழிப்பறைகள் இல்லை,அடிப்படைத்தேவைகளான உணவு உடை உறையுள்ளுக்கான உத்தரவாதம் அளிக்கும் வேலைவாய்ப்புகள் உணவு தானிய உற்பத்திக்கான விவசாயம் காலம் செல்லச் செல்ல நசிந்து வருகின்றன.

பொதுமக்களின் ஜனநாயகப் பார்வையை திசை திருப்ப அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன. மக்களுக்கும் ஜனநாயகம் மேல் எந்தவித நம்பிக்கையும் இல்லை எனவேதான் காசு பணம் பிரியாணி குவாட்டர் பாட்டல் மது போன்றவற்றிற்காக தமது வாக்குரிமையை கீழ் தட்டு மக்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

எழுச்சி மிக்காரின் கருத்துகளை, ஏன் அவர்களையே புறக்கணிப்பு செய்யும் மக்கள் ஆட்சி, அதிகாரம், இவற்றின் பால் எந்தவித பிடிப்பும் இல்லாதிருக்கின்றனர்

சட்டம் நீதி நியாயம் ஒழுங்கு இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறுபட்டே விளங்கிட மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றங்களோ சிறிய விஷயங்களில் நீதியை நிலைநாட்டுவதாக பாசாங்கு செய்துவிட்டு பெரிய பெரிய முக்கியமான நடவடிக்கைகளில் கோட்டை விட்டு விடுகின்றன...அதற்காக சுயநலப் பலிகடாவாகும் நீதிபதிகளும் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

எடுத்துக் காட்டாக : குன்ஹா வழங்கிய தீர்ப்பை ஓரங்கட்டிய குமாரசாமி தீர்ப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதவிகளுக்காக நல் செல்வ மிகுதி வாழ்வுக்காக பலிகடாவாகப் போய்விடுவதும்...

எனவேதான் ஆங்கிலேயர்களே இருந்திருந்தாலும் பரவாயில்லை, விடுதலை என்பதை பொறுப்புணருமுன்னே இந்தியர்கள் அடைந்து விட்டு பாடாய் படுத்தி வருகின்றனர் என நல் உள்ளங்கள் சலிப்பாக பேசி வருகின்றன.

அட, பொதுக்கழிப்பறையை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டமாகவே இருக்கிறார்களே...எங்கும் காணுமிடங்கள் எங்கும் அது சாலையாக ரெயில்வே சாலையாக பொது இடமாக இருந்தாலும் எச்சிலும், சிறு நீரும், மலமும், குப்பையும் கூளமுமாக ஆக்கி நீர் நிலையை எல்லாம் பாழாக்கி இன்று பாட்டிலில் அடைத்த குடி நீரை விலைக்கு வாங்க கம்பெனி முதலாளிகளுக்கு விற்க அனுமதி வழங்கி  நாட்டை கூறு போட்டு விற்று விட்டனரே...
Image result for freedom means total responsibility
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாளர்க்கு கொடுக்க மாத ஊதியச் சம்பளம் இல்லையாம்...ஜியோ ரிலையன்ஸ் சக்கை போடு போடுகிறதாம்...மோடியை முகேஷ் அம்பானிமார்களைத்தான் வெற்றியின் தாரக மந்திரங்களின் சூட்சமம் பற்றி சொல்லித் தரச் சொல்ல வேண்டும்.
Image result for freedom means total responsibility
இந்நிலையில் தன்னிலை உணரா மக்களிடையே மாக்களாய் உள்ளார்க்கான தேர்தல் ஒரு கேடு, திருவிழாக் கூத்து...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment