Monday, April 8, 2019

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும்: கவிஞர் தணிகை.

Image result for election commission of india
எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து தங்கத்தையும், பணத்தையும் பிடித்து வருவதாகவும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இப்போதைய தேர்தலின் போது மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலின் போதும் சொல்லப்படுவதுதான்.

ஆளும் கட்சி ஆம்புலன்ஸ் காவல் துறை ஆகியவற்றை பயனபடுத்தி தமது நடவடிக்கையை நடத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணி மற்றும் பணம், பொருள், தங்கம் ஆகியவற்றின் நடவடிக்கையை முடக்கி வைப்பதாகவும் அதன் மூலம் தங்களது வெற்றி வாய்ப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.

உண்மையிலேயே நூற்றுக் கணக்கான செய்திகள் எதிர்க்கட்சி முடக்கத்தை செய்தியாக ஊடகம் வெளியிட்டால் இரண்டு அல்லது ஒன்று ஆளும் கட்சியின் குற்ற நடவடிக்கையையும் சொல்கிறது அந்த அளவுதான் ஊடகங்களுக்கு செய்தியாகும் அளவு ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் அரசின் அங்கங்களும் ஊடகங்களும் மூழ்கி உள்ளன.

இப்போதைய காலக் கட்டத்தில் அங்கே இவ்வளவு தங்கம், பணம் பிடித்தோம், இங்கே இவ்வளவு பிடித்தோம் என்று சொல்வதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிவடைந்துவிடுவதில்லை.

 மாறாக சட்டமன்றத் தேர்தல்களையும், பராளுமன்றத் தேர்தல்களையும் காபந்த் சர்க்கார் என்ற பேரில் ஏற்கெனவே ஆளும் கட்சியாக இருந்தார்  தொடர முடியாமல் குடியரசுத்தலைவரின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்து விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்ற சட்ட வரைவை என்ற திட்டத்தை குடியரசுத்தலைவர்' பாராளுமன்றம், உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்து அதை அமலுக்கு கொண்டு வர வேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

இதை தேர்தல் ஆணையத்தைத் தவிர மற்ற அரசின் அமைப்புகள் மேற்கொள்ளும் என்றோ, மக்கள் அதை அமல்படுத்த கோரிக்கை வைப்பார் என்றோ சொல்வது தமது கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறுவது என்றே சொல்ல முடியும்.

எலிக்கறி தின்று, கோவணத்தை அவிழ்த்து தவழ்ந்து டில்லி வீதிகளில் சாலைகளில் திரிந்த விவசாயிகள் பற்றி எல்லாம் கவலை கொள்ளா மோடி அரசின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், விவசாயிகள் பெறும் கடனுக்கு வட்டி இல்லை என்றும் இன்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் என்றால் அதற்காக எதையும் சொல்வார்கள் செய்வார்கள், நாளை ஆட்சிக்கு வந்தவுடன் மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்?

எட்டு வழிச்சாலைக்கு நில ஆர்ஜிதம் செய்ததும் தவறு, ஆர்ஜிதம் செய்வதும் தவறு என உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில் மாநிலக் ஆளும் கட்சிக்கு நாட்கள் நெருங்கி வருவது போல அறிகுறிகள்

ஏன் எனில் ஸ்டெரிலைட் காப்பர் போராட்டத்தில் வாயிலும், காதிலும், உடலின் மேற்பகுதியில் எல்லாம் குண்டுகளை பாய்ச்சி இறந்திருந்த 13 உயிரற்ற உடலை போராட்டக்காரர்களை  முதல்வர் என்ற முறையில் அனுதாபத்துடன் கூட எட்டிப்பாராதிருந்த எடப்பாடி அரசு எந்த மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது என்றே விள்ங்க வில்லை. எல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள்...வாக்கு வங்கி இருக்க பயமேன் என கூட்டணி தர்மம் நமைக் காப்பாற்றி விடும் என்றெல்லாம் நம்புகிறார்போலும். ஒருவர் என்ன வென்றால் பூத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டேன் என்கிறார். இவர் இத்தனைக்கும் மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்து எம்.பியாக இருந்து அந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என அந்தக் கட்சிக்காரர் பெருமை பேச, ஆளும்கட்சியிடம் இருந்து பொற்குவியல் பெற்றமைக்கு ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள் அதன் அடிமட்டத் தொண்டர்கள்...

இதை எல்லாம் சீர் தூக்கிப் பார்க்கும்போது ஆளும் கட்சி கூட்டணி தமது வெ(ற்)றிக்காக எதையும் செய்யும் சொல்லும் என்பது எல்லாம் கவனித்து உன்னித்துப் பார்க்காமல் மேலோட்டமாகப் பார்த்தாலே விளங்கும்...

எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்யுங்கள் தேர்தல் நடத்தியே தீருவோம் முடிவுகள் வெளியான பின் நீங்கள் நீதிமன்றத்தை அணுகி நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என பேசுவது சரியான நியாயமாகத் தெரியவில்லை.
Image result for president of india
தேர்தல் ஆணையம் சரியாக பணிபுரிய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment