Sunday, April 21, 2019

மேட்டூரில் நள்ளிரவில் பெரு மழை...கவிஞர் தணிகை

இயற்கையின் கொடை மழை: கவிஞர் தணிகை
 Image result for heavy rain in summer

நீண்ட காலம், நீண்ட நாட்களுக்கும் பிறகு நேற்று இரவு அதாவது ஏப்ரல் 20, சித்திரை 7 இரவில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி எவருக்கும் எந்தவிதமன தொந்தரவும் இன்றி மழை எங்கள் மேட்டூரில் பெய்தது. அது பெருமழை என்று விடிந்த பின் தான் நாங்கள் அறிந்தோம். அது 7 செ.மீ இருக்கும் என செய்தி வழி அறிந்தோம்.

இவ்வளவு ஒரு கடும் கோடையில் எல்லா இடங்களிலுமே நீர் தேங்குமளவு இருந்தது. எல்லார் வாயிலுமே ஒரு நல்ல வலுவான மழை என்றே பெயர் பெற்றது.

கடும் கோடையின் தாக்கத்தை தாளமுடியாமல் இயற்கையை பல முறை இது போல மழை வந்து அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை.

மனிதமே ஏமாற்றுகிறது . இயற்கை ஏமாற்றுவதில்லை.

பசும்புல் தலை காண்பது அரிது என்பார் வள்ளுவர்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது ... குறள்
Related image
இந்த பெருமழை கூட போதாத பூமிச் சூடு. இன்னும் சாலைகளில் சூடு அடங்கவில்லை.

ஆனால் எல்லா உயிரினங்களுமே புத்துயிர் பெற்றன.

பறவைகளும், பூச்சியினங்களும் குதூகலித்து அதன் கத்தலிலேயே ஒரு மகிழ்வை தெரிவிப்பதை அதன் சத்தத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

மரங்களும் செடி கொடிகளும் பிழைத்துக் கொண்டோம் என பெருமகிழ்வில் மிதந்தபடி இருக்கின்றன...
Image result for heavy rain in summer
இந்த மழைக்கே நமக்கு இது போன்ற புத்துணர்வு இருக்கும்போது அந்தக் காலத்தில் மன்னர் காலத்தில் அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா என்பாராம் ... மாதம் மூன்று முறை பெய்து வந்த நாளில் உலகும் ஊரும் நாடும் எப்படி செழித்திருக்கும், எப்படி தாவரங்கள் செழித்திருந்திருக்கும், எவ்வளவு சத்தான உணவும் உயிர்களும் இருந்திருக்கும் என்ற கற்பனையே நம்மால் செய்ய முடியவில்லை.

இயற்கையின் கொடை மழை
செயற்கையின் பிழை மின் தடை

அன்று இரவு முழுதும் மின் தடையை ஏற்படுத்தி....தேர்தல் முடிவுக்குப் பின் குடிநீர், மின் தடை யாவும் அமலுக்கு வந்தநிலையில்...

இயற்கையின் கொடை இந்த மழையை வணங்கி வாழ்த்தி பிரார்த்திக்கிறோம்.

இது போல்  பல மழையை இயற்கை வாரி வழங்கட்டும்.

பூமிச் சூட்டுடன் தொடர்புடைய நமது உடலும் சற்று சூடு குறைந்தது மகிழ்வானது என்பதை எத்தனை வார்த்தையில் சொன்னாலும் அது மிகையாகாது

நிலை இப்படி இயற்கையுடன் சார்ந்திருக்கையிலேயே இந்த மனிதம் மட்டும் எப்படி இப்படி பேராசையுடன் அழித்து அழிந்து வருகிறது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
 பி.கு: இலங்கை குண்டு வெடிப்புகளும் உயிர்ச்சேதங்களும், ஐ.பி.எல் கிரிக்கெட் கூட்ட விழாக்களும் விளையாட்டுகளும், விஜய் டிவியின் வீடும், 25 இலட்ச தங்க நகைகளும், 10 இலட்சங்களும் பரிசாக போகும் நிகழ்வுகளுக்கிடையில் இந்த மழை பற்றி நான் நேற்றிலிருந்தே குறிப்பிட விரும்பினேன். ஏன் எங்கள் இயக்க நண்பர் மணி மறைவுக்கும் பின்னும் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு முக்கியமானது மழை.  அத்துடன் நிழலற்ற நாளையும் மறந்தோம் அந்த 12 மணியளவில் வெயிலில் நின்று பார்க்கவும்...

No comments:

Post a Comment